என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sexual harassment"

    • இளம்பெண் ஒருவர் வழக்கம் போல் தான் தங்கும் விடுதியில் இருந்து அலுவலத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
    • நடந்து சென்ற இளம் பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ லவ் யூ செல்லம் என அந்த வாலிபர் கூறியுள்ளார்.

    சென்னை தி.நகரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

    ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் வழக்கம் போல் தான் தங்கும் விடுதியில் இருந்து அலுவலத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தி.நகரை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் நடந்து சென்ற இளம் பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ லவ் யூ செல்லம் என கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே அருகில் இருந்து பொதுமக்கள் அந்த இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

    பின்னர் தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடந்து சென்ற இளம் பெண்ணிடம் அத்துமீறிய வாலிபரால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • அப்பெண் ஜப்பான் திரும்பியதும் இதுகுறித்து முறையாக புகார் அளித்துள்ளார்.
    • ஜப்பான் தூதரகத்தின் மூலம் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

    ஜப்பான் தூதரக பெண் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மூத்த பேராசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

    சில மாதங்களுக்கு முன் ஜப்பான் தூதரக பெண் அதிகாரி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் (International Studies) துறையில் பணியாற்றி வந்த மூத்த பேராசிரியர் ஸ்வரன் சிங்கை அணுகியபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்காட்டார்.

    அப்பெண் ஜப்பான் திரும்பியதும் இதுகுறித்து முறையாக புகார் அளித்துள்ளார். இந்த புகார் ஜப்பான் தூதரகத்தின் மூலம் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. பேராசிரியர் ஸ்வரன் சிங் மீது ஏற்கனவே இதுபோன்ற பல புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த புதன்கிழமை நடந்த ஜேஎன்யு நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பல்கலைக்கழகத்தின் உள் புகார்கள் குழு (ஐசிசி) நடத்திய விசாரணையின் முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பேராசிரியர் ஸ்வரன் சிங் பணி ஓய்வுக்கு ஒரு வருடம் முன்னதாகவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என பல்கலைக்கழகத்தின் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இளம்பெண் வந்த பஸ்சை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    நெல்லை:

    கோயம்புத்தூரில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பயணம் செய்தார்.

    அந்த இளம்பெண் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அந்த பஸ்சில் கண்டக்டராக கோவையை சேர்ந்த மகாலிங்கம் (வயது 43) என்பவர் பணியில் இருந்தார்.

    இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அந்த ஐ.டி. நிறுவன பெண்ணுக்கு பஸ் கண்டக்டர் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், செல்போனில் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் உறவினர்களுடன் புறப்பட்டு நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

    இந்நிலையில் பஸ் இன்று அதிகாலை 4 மணி அளவில் நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. உடனே இளம்பெண் வந்த பஸ்சை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு புறக்காவல் நிலைய பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்தனர். கண்டக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அதில் கண்டக்டர் மகாலிங்கம் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மகாலிங்கத்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு அரசு பஸ் கண்டக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தனது வீட்டில் 2 சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாக புகார் எழுந்தது.
    • ஜான் ஜெபராஜை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள கிறிஸ்தவ சபையை சேர்ந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது பாலியல் புகார் தொடுக்கப்பட்டுள்ளது.

    புகாரின் பேரில் கேவை மத்திய அனைத்து மகளிர் காவல் துறையினர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு மே மாதம் 21ம் தேதி, கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் 2 சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாக புகார் எழுந்தது.

    இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செக் குடியரசைச் சேர்ந்த 28 வயது பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • நடந்து செல்லும்போது மர்ம நபரால் தகாத முறையில் தொட்டு துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

    உத்தரப் பிரதேசத்தில்  தாஜ்மகாலைப் பார்வையிட வந்த செக் குடியரசைச் சேர்ந்த 28 வயது பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட செக் நாடு பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் தாஜ்மகாலை பார்வையிட ஷாம்ஷான் காட் சாலையில் நடந்து செல்லும்போது மர்ம நபரால் தகாத முறையில் தொட்டு துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சி.சி.டி.வி கேமரா பதிவை ஆராய்ந்ததில் அந்த நபர் ஆக்ராவை சேர்ந்த கரண் ரத்தோர் என்று தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை தேட பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக துணை கமிஷ்னர் சையத் அரீப் அகமது தெரிவித்தார்.

    • பெண்ணுக்கு பாலியல் தொல்லை; தாய், மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சேந்தமங்கலம், காட்டுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சரவணகுமார்(வயது 30), டிரைவரான இவர், அதே பகுதியை சேர்ந்த, 26 வயது பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின், திருமணம் செய்துகொள்ள, சரவணகுமார் மறுத்துவிட்டதோடு, தனது தாய் செல்வி உடன் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் கரூர் மகளிர் போலீசார், சரவணகுமார், அவரது தாய் செல்வி ஆகியோர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • செங்கோட்டை தெற்கு மேடு கிராமம் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்த ராஜ்குமார் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்
    • மாணவியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    தென்காசி:

    செங்கோட்டை அருகே உள்ள தெற்கு மேடு கிராமம் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்தவர் பிச்சையா. இவரது மகன் ராஜ்குமார் (வயது 28). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் 7-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேல்கனி(பொறுப்பு) ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • மாணவன்(வயது12) ஒருவரை, தனியாக அழைத்துசென்று, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததார்.
    • பெற்றோர்கள் காரைக்கால் கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    காரைக்கால், நவ.16-

    காரைக்கால் கோட்டுச்சேரி அருகே உள்ள இராயன்பாளையத்தில், மத்திய அரசின் நவோதயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் பலர் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர். பள்ளி காவலாளியாக, நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச்சேர்ந்த முகம்மது அலி(வயது54) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் மாலை, பள்ளி விடுதியில் இருந்த 8-ம் வகுப்பு மாணவன்(வயது12) ஒருவரை, தனியாக அழைத்துசென்று, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததார். இது குறித்து, மாணவன் தன் பெற்றோரிடம் போன் மூலம் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் காரைக்கால் கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார், முகம்மது அலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மாணிக்கம்பாளையம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அருண் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஜெயா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மாணிக்கம்பாளையம் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி ஜெயா (வயது 38). இவர்களது மகன் அருண் (20) கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த சிறுமி பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அருண் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஜெயா ஆகியோர் மீது புகார் செய்தார். அதன்பேரில் பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி, அருண், ஜெயா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 17 வயது சிறுமி ஒருத்தி வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி வி.ஆண்டிக்கு ப்பம் ஜாகீர் உசைன் தெருவை சேர்ந்த முகமதீன் அன்சாரி (வயது 56) இவர் அதே பகுதியை சேர்ந்த சற்று மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருத்தி வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்க ப்பட்ட சிறுமியின் பெற்றோர்பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர். இதனை தொடர்ந்துபண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி இது குறித்து வழக்குபதிவு செய்து முகமதீன் அன்சாரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துபண்ருட்டி நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல் செய்தார்.
    • தலைமறைவான சோழனை தேடி வருகின்றனர்.

    கடலூார்:

    பண்ருட்டி அருகே புலவன்குப்பத்தை சேர்ந்த 14 வயதுசிறுமி வீட்டில் தனியாக இருந்த போது இவரது தந்தையின் நண்பர் பக்கத்து ஊரானகாட்டுக்கூடலூரை சேர்ந்த சோழன்(32 என்பவர் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல் செய்தார். அதிர்ச்ச்சி அடைந்த சிறுமி அவனை தள்ளிவிட்டு வெளியேஓடி வந்துள்ளார்.

    இது குறித்து சிறுமியின்தந்தை பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில்இன்ஸ்பெக்டர்(பெ) நந்தகுமார், மகளிர் சப் இன்ஸ்பெக்டர் சுடர்மதி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து தலைமறைவான சோழனை தேடி வருகின்றனர்

    • விஸ்வநாதன் (வயது 38). இவர் நாமக்கலில் பிரேம் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • 14 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, விஸ்வநாதன் கடத்தி சென்றுள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் வகுரம்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 38). இவர் நாமக்கலில் பிரேம் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, விஸ்வநாதன் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அந்த சிறுமியை, அந்த பகுதியில் உள்ள அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி, விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.பின்னர் நாமக்கல் சிறையில் அடைத்தனர். 

    ×