search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shakti Vinda Unit Darshan"

    • 49-வது குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபட்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவிலில் 49-வது குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடை பெற்றது.

    முன்னதாக குண்டம் திருவிழாவானது கடந்த 7-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் தொடங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், யாகசாலை பூஜை, மகாசிவராத்திரி, மயான பூஜை, சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

    நேற்று மாலை அக்னி குண்டம் வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 2 அடி அகலம்,45 அடி நீளம் கொண்ட குண்டத்தில் வேப்பமரங்களை போட்டு அக்னி வளர்க்கப்பட்டது.சுமார் 10 மணி நேரம் அக்னி வளர்த்து குண்டம் தயார் செய்யப்பட்டது.

     இன்று காலை 7 மணி முதல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் கோவில் பூசாரிகள் மற்றும் நிர்வாகிகள் குண்டத்தில் இறங்கினர். பின்னர் ஓம்சக்தி, பராசக்தி கோஷம் விண்ணதிர கைக்குழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபட்டனர்.

    காலை 8 மணிக்கு அக்னி அபிஷேகம், பொங்கல் வைத்தல், பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. பல்லடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×