search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shanmugasundaram MP"

    • பாலக்காடு ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் எம்.பி.,க்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது.
    • கோவை-மதுரை இடையிலான ரெயில் வழித்தடத்தில் இப்போது நான்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

    உடுமலை :

    பாலக்காடு ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் அந்த கோட்டத்துக்கு உட்பட்ட எம்.பி.,க்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது. தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை வகித்தார். கிணத்துக்கடவு-பொள்ளாச்சி இடையிலான 24 கி.மீ., ெரயில் வழித்தடம் பாலக்காடு கோட்டத்தில் இடம் பெறுவதால் பொள்ளாச்சி எம்.பி.,க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அந்த கூட்டத்தில் பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் பேசியதாவது:-

    கோவை-பொள்ளாச்சி-பழனி-மதுரை இடையிலான ரெயில் வழித்தடத்தில் இப்போது நான்கு ெரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆனால் 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே வழித்தடத்தில் 9 ரெயில்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 1,200 கோடி ரூபாய் இந்த வழித்தடத்தை அகலப்படுத்த அரசு செலவிட்டுள்ளது. இவ்வளவு செலவழித்தும் பழைய ரெயில்களை இயக்காததால் மக்களுக்கும் பயனில்லை. ரெயில்வே துறைக்கும் வருவாய் இல்லாமல் உள்ளது. எனவே, பழைய ரெயில்கள் அனைத்தையும் மீண்டும் இயக்க வேண்டும்.

    அதேபோன்று பொள்ளாச்சி -பழனி வழித்தடத்தில், கோவை-மதுரை இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை காலையில் கோவையில் புறப்படும் வகையில் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை வழியாக பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ெரயில், பாலக்காட்டிலிருந்து 'லோகோ பைலட்' தாமதமாக வருவதால் ஒவ்வொரு வாரமும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்படுகிறது. அதை உரிய நேரத்தில் இயக்குவதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ×