search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SharadPawar"

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். #NCPchief #SharadPawar #LokSabhapolls
    புனே:

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்பவார் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மதா தொகுதியில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என புனே நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத்பவார் குறிப்பிட்டுள்ளார்.



    இதுவரை 14 தேர்தல்களில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றிருக்கிறேன். என்னை தலைவராக உறுதிப்படுத்த 15-வது தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. மேலும், என் குடும்பத்தை சேர்ந்த இருவர் இந்த தேர்தலில் போட்டியிடுவதால் நான் போட்டியிட வேண்டாம் என்று தீர்மானித்துள்ளேன் எனவும் சரத்பவார் தெரிவித்தார். #NCPchief #SharadPawar #LokSabhapolls
    மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து ஒருங்கிணைந்து போட்டியிட்டால் மத்தியில் பா.ஜனதாவை வீழ்த்த இயலும் என்று சரத்பவார் கூறியுள்ளார். #SharadPawar #BJP #ParliamentElection

    அவுரங்காபாத்:

    அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

    மராட்டிய மாநிலத்தில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 48 தொகுதிகள் இருக்கிறது.

    இதில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டது. மீதியுள்ள 8 இடங்களில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதை அந்த கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

     


    மராட்டிய மாநிலத்தில் காங்கிரசுக்கும், தேசியவாத காங்கிரசுக்கும் இடையே எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் 40 தொகுதிகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. மீதியுள்ள 8 இடங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    அவுரங்காபாத், புனே இடங்கள் குறித்து இன்னும் முடிவாகவில்லை. இங்கு காங்கிரசுடன் செயல்பாடு சரியில்லாததால் எங்கள் கட்சி நிர்வாகிகள் இந்த தொகுதியில் டிக்கெட் கேட்கிறார்கள்.

    மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து ஒருங்கிணைந்து போட்டியிட்டால் மத்தியில் பா.ஜனதாவை வீழ்த்த இயலும். மாநிலங்களில் ஒவ்வொரு கட்சிகளும் வலிமை வாய்ந்தவை.

    கூட்டணிக்கு யார்? தலைமை தாங்குவது என்பது குறித்து பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே முடிவு செய்யலாம். தமிழகத்தில் தி.மு.க. பலம் பெற்றது. கர்நாடகா, குஜராத்தில் காங்கிரஸ் தலைமை வகிக்கலாம்.

    உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் பலம் வாய்ந்தவை. இதனால் காங்கிரஸ் அதற்கு ஏற்ற வகையில் அனைத்து எதிர்க் கட்சிகளையும் கவனத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும்.

    இவ்வாறு சரத்பவார் கூறியுள்ளார். #SharadPawar #BJP #ParliamentElection

    ×