search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shiv Sena MP"

    பாபர் மசூதி 17 நிமிடங்களில் இடிக்கப்பட்டது. ஆனால், ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வருவதற்கு எவ்வளவு நாளாகும் என்று சிவசேனா எம்.பி. கேள்வி விடுத்தார். #ShivSena #RamarTemple
    அயோத்தி:

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா இடம் பெற்றுள்ளது. இருப்பினும், பா.ஜனதாவை அடிக்கடி விமர்சித்து வருகிறது. அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட வேண்டும் என்று சிவசேனா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. தற்போது, இந்த கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அயோத்தி செல்கிறார்.

    அதற்கு முன்பாக, அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று அயோத்தி சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை ராம பக்தர்கள் வெறும் 17 நிமிடங்களில் இடித்து விட்டனர். என்ன செய்ய வேண்டுமோ, அதை அரை மணி நேரத்துக்குள் செய்து முடித்து விட்டனர்.



    ஆனால், அங்கு ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வருவதற்கு எவ்வளவு நாளாகும்? ஜனாதிபதி மாளிகையில் இருந்து உத்தரபிரதேச சட்டசபை வரை இதற்கான ஏற்பாடுகளை செய்ய எவ்வளவு காலம் ஆகும்? இரண்டு இடங்களிலும் பா.ஜனதா அரசுகள்தான் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் பா.ஜனதாவை மறைமுகமாக விமர்சித்து தலையங்கம் எழுதப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பால்தாக்கரே உத்தரவுப்படி, அயோத்தியில் பாபர் ராஜ்யத்தை சிவசேனா தொண்டர்கள் அகற்றினர். அவர்களை பார்த்து ஆட்சியில் இருப்பவர்கள் பயமோ, பொறாமையோ கொள்ள வேண்டாம். பெருமைப்படுங்கள். நாங்கள் ராமர் பெயரை சொல்லி, ஓட்டுக்காக பிச்சை பாத்திரம் ஏந்தியது இல்லை. தேர்தலின்போது, வார்த்தை ஜாலத்தில் ஈடுபட்டது இல்லை. ஆனால், நாங்கள் அயோத்திக்கு செல்கிறோம் என்றவுடன், இந்துத்துவா ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுவது ஏன்? நாங்கள் அரசியல் நோக்கத்துடன் அங்கு செல்லவில்லை.

    அது, எவருடைய தனிப்பட்ட இடமும் அல்ல. எனவே, எங்கள் மீது சந்தேகப்படுவதை விட்டுவிட்டு, ராமர் கோவில் கட்ட தேதியை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ShivSena #RamarTemple
    ×