என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » shiva thapa
நீங்கள் தேடியது "Shiva Thapa"
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஷிவ தபா தொடர்ந்து 4-வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். #ShivaThapa #AsianChampionship
பாங்காக்:
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியர்களின் ஆதிக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஷிவ தபா (60 கிலோ உடல் எடைப்பிரிவு) தாய்லாந்தின் ருஜக்ரன் ஜன்ட்ராங்கை 5-0 என்ற புள்ளி கணக்கில் துவம்சம் செய்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் 25 வயதான ஷிவ தபாவுக்கு குறைந்தது வெண்கலப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. ஆசிய குத்துச்சண்டை போட்டியில் அவர் தொடர்ந்து 4-வது முறையாக பதக்கத்தை (2013-ல் தங்கம், 2015-ல் வெண்கலம், 2017-ல் வெள்ளிப்பதக்கம்) கைப்பற்றுகிறார். இச்சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற மகத்தான பெருமையை பெற்றுள்ள ஷிவ தபா அடுத்து கஜகஸ்தான் வீரர் ஜாகிர் சபியுலினை சந்திக்கிறார்.
பெண்கள் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான எல்.சரிதாதேவி (60 கிலோ) கஜகஸ்தான் வீராங்கனை ரிமா வோலோஸ்சென்கோவை தோற்கடித்து 9 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதியை எட்டினார். இதே போல் முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான இந்திய மங்கை நிகாத் ஜரீன் (51 கிலோ) 5-0 என்ற புள்ளி கணக்கில் 2 முறை உலக சாம்பியனான நஸிம் கஸாபேவுக்கு (கஜகஸ்தான்) அதிர்ச்சி அளித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்த போட்டியில் மொத்தம் 13 இந்தியர்கள் பல்வேறு எடைப் பிரிவுகளில் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர். #ShivaThapa #AsianChampionship
மங்கோலியாவில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் ஷிவா தபா, சல்மான் ஷேக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
மங்கோலியாவில் உலான்பாட்டார் கோப்பை குத்துச்சண்டை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 60 கிலோ எடைப்பிரிவில் ஷிவா தபா கலந்து கொண்டார். இவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியாவின் ஒயுன்பிலெக் முங்க்சைகானை எதிர்கொண்டார். இதில் ஷிவா தபா எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
அதேபோல் 52 கிலோ எடைப்பிரிவில் சல்மான் சேக் கொரியாவின் யங் சிக் பயே-வை எதிர்கொண்டார். இதில் சல்மான் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் ஷிவா தபா கிர்கிஸ்தான் வீரர் ரவ்ஷன்பெக்கையும், சல்மான் உள்ளூர் வீரரான காங்குயக் கான்-எர்டேனை எதிர்கொள்கிறார்.

×

X