என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » shoolagiri
நீங்கள் தேடியது "Shoolagiri"
சூளகிரியை அடுத்த சாமல்பள்ளம் முனீஸ்வரன் கோவில் அருகே கோதண்டராமர் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் தற்காலிக சாலை அமைக்க சிலை அமைப்பு குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #Vishnustatue
சூளகிரி:
கர்நாடகா மாநிலம் ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர். சிலை செய்ய 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறையை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை மலையில் இரந்து 350 டன் எடையில் பாறை வெட்டி எடுக்கப்பட்டது. இதில் முகம் மற்றும் இரண்டு கைகள் மட்டும் வடிவமைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் புறப்பட்டது. இந்த லாரி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது. பின்னர் போச்சம்பள்ளி, மத்தூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூர் நோக்கி சென்றது.
கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே உள்ள மார்கண்டேயன் நதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் இந்த கார்கோ லாரி செல்ல முடியாது என்பதால், நதியிலேயே தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டது. அதன் வழியாக சிலை ஏற்றப்பட்ட 2 என்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கோ லாரி சென்றது. ஆனால் லாரியின் டயர்கள் அந்த மண்ணில் புதைந்து தொடர்ந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் அந்த சாலையில் மீண்டும் ஜல்லிக்கற்கள் மற்றும் மண்ணை கொட்டி சிறிது மேடாக்கினர். அதன்பின், 4 என்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கோ லாரி புறப்பட்டது. ஆனால் சாலை முடியும் இடத்தில் அதிக அளவில் மேடாக இருந்ததால் தொடர்ந்து சிலை ஏற்றப்பட்ட லாரி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மீண்டும் அந்த லாரி அங்கேயே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு கார்கோ என்ஜின்கள் 3 மற்றும் 5 ராட்சத டிப்பர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, சிலை ஏற்றப்பட்ட லாரியுடன் இணைக்கப்பட்ட பின்னர் லாரி புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையை சென்றடைந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பினர். அங்கிருந்து புறப்பட்ட லாரி மேலுமலை கணவாய் வழியாக சாமல்பள்ளம் வரை சென்றது. அங்கு முனீஸ்வரன் கோவில் அருகே சிலை உள்ள கார்கோ லாரி நிறுத்தப்பட்டு உள்ளது.
இன்று (9-ந் தேதி) காலை ஓசூர் மற்றும் சூளகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நேரில் வந்து கோதண்ட ராமரை வழிபட்டனர். இன்னும் இந்த சிலை சாமல் பள்ளம் மற்றும் சின்னாறு ஆகிய பகுதிகளில் உள்ள 2 பாலங்களை கடக்க வேண்டியது உள்ளது. இந்த பாலங்கள் வழியாக சிலை உள்ள கார்கோ லாரி சென்றால் பாலங்கள் இடிந்து விழும் என்றும், எனவே மாற்றுப்பாதை அமைத்து சிலையை கொண்டு செல்ல வேண்டும் என்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து இன்று சிலை அமைப்பு குழுவினர் சாமல்பள்ளம் மற்றும் சின்னாறு பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள ஓடைகளில் தற்காலிக பாதை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். தற்காலிக பாதை அமைத்த பிறகு சிலை உள்ள லாரி பெங்களூரு நோக்கி புறப்படும் என்று சிலை அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
சாமல்பள்ளத்தில் இருந்து சிலை புறப்பட இன்னும் 4 நாட்களுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Vishnustatue

×

X