என் மலர்
நீங்கள் தேடியது "shop"
- 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.
- வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.
உடுமலை :
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் திருவிழா சுற்றுவட்டார கிராமங்களின் திருவிழாவாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.வரும் 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.இதனையடுத்து ஏப்ரல் 4 ந் தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்வுடன் திருவிழா தொடங்குகிறது.விழாவின் உச்ச நிகழ்வான தேர்த்திருவிழா ஏப்ரல் 13 -ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.மேலும் 14 -ந் தேதி இரவு 10 மணிக்கு குட்டை திடலில் வாண வேடிக்கை நடைபெறவுள்ளது.
அத்துடன் திருவிழா நாட்களில் வருவாய்துறைக்கு சொந்தமான 91 சென்ட் பரப்பளவுள்ள குட்டை திடலில் ராட்டினம்,மரணக்கிணறு உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் ஏராளமான கடைகள் அமைக்கப்படும்.இவ்வாறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்கான உரிமம் வழங்கும் வகையில் ஆண்டுதோறும் வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.அந்தவகையில் நடப்பு ஆண்டில் வரும் ஏப்ரல் 7 ந் தேதி முதல் 14ந் தேதி வரை பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்காக குட்டை திடல் ஏலம் வரும் 27 ந் தேதி மதியம் 12 மணிக்கு உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த ஏலத்துக்காக அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த பட்ச ஏலத்தொகையாக ரூ. 46 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பங்குத்தொகையான ரூ .11 லட்சத்து 50 ஆயிரத்தை அச்சார தொகையாக இன்று காலை 11 மணி முதல் 12 மணிக்குள் கேட்பு வரைவோலையாக (டி டி)செலுத்த வேண்டும்.கடந்த ஆண்டில் அரசு நிர்ணயித்த தொகை அதிகமாக இருப்பதாகக் கூறி பல முறை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.நடப்பு ஆண்டில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கோவில் திருவிழாவில் கடைகளை திடீரென அடைக்க சொல்லி போலீசார் பதட்டத்தை ஏற்படுத்தினர்.
- போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டார்.
விருதுநகர்
விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 1 வாரமாக நடந்து வருகிறது. இதில் விருதுநகர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நேற்று முன்தினம் திருவிழா வில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான அக்னிசட்டி, பால்குடம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று காலை முதல் நள்ளிரவு வரை விடிய விடிய 21,101 பக்தர்கள் அக்னிசட்டிகளை எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் பெண்கள் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இதுபோன்று பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
இதன் காரணமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கோவில் அமைந்துள்ள பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் கடைகள் 24 மணி நேரமும் திறக்கப் பட்டிருந்தன. மேலும் திருவிழாவை முன்னிட்டு பல புதிய கடைகளும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களை கூறி விருதுநகர் கோட்ட போலீஸ் அதிகாரி திடீரென நேற்று இரவு கடைகளை அடைக்க கோரி வியாபாரிகளை வற்புறுத்தியதாக தெரிகிறது. ஒவ்வொரு வருடமும் திருவிழா வியாபாரத்தை நம்பி விடிய, விடிய கடை திறப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு போலீசாரின் திடீர் கெடு பிடியால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை திருவிழா நடந்த பகுதியில் பதட்டத்தை உருவாக்கியது. விருதுநகர் கோட்ட போலீஸ் அதிகாரியின் நடவடிக்கை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடைகளை திறந்து வைக்க அனுமதி அளித்தார்.
மேலும் அதற்குரிய பாதுகாப்பு அளிக்குமாறும் போலீசாருக்கு உத்தர விட்டார்.
- புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் பார் நடத்த தேவையான இடத்தை, மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
- டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைத்தால் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மன் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் பார் நடத்த தேவையான இடத்தை, மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடை அமைக்க பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், அம்மன் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைத்தால் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் டாஸ்மாக் கடை அமைக்க பூமி பூஜை போட வந்தவர்களையும், பொக்லைன் எந்திரத்தையும் முற்றுகையிட்டனர். இதையடுத்து, பூமி பூஜை போடும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
- குப்பன் (வயது 48). நரிக்குறவர். இவர் 17-ந்தேதி மாலை தனது 5 வயது பேரனுடன் டீ குடிப்ப தற்காக மங்கலம்பேட்டையில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார்.
- நரிக்குறவர் எல்லாம் இங்கே வரக்கூடாது: என கூறி விரட்டியுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் குப்பன் (வயது 48). நரிக்குறவர். இவர் 17-ந்தேதி மாலை தனது 5 வயது பேரனுடன் டீ குடிப்ப தற்காக மங்கலம்பேட்டையில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுவனுக்கு குடிநீர் தாகம் எடுத்ததால் அந்த கடையில் ஜக்கில் வைக்கப்பட்டிருந்த நீரை எடுத்து குடித்தார். அதனை கண்ட டீ கடை உரிமையாளர் அண்ணாதுரை (59) தண்ணீர் குடித்த சிறுவன் சித்தார்த்தை திட்டியுள்ளார். இதனை கேட்ட சிறுவனின் தாத்தா வையும் விரட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் குப்பன், அவரது பேரன் சித்தார்த் ஆகியோர் டீக்கடைக்கு சென்று டீ கேட்டுள்ளனர். அப்பொழுது கடையின் உரிமையாளர் அண்ணாதுரை என்பவர் 'நேற்று தானே உங்களை விரட்டினேன் மீண்டும் ஏன் இங்கே வர்ரீங்க, நரிக்குறவர் எல்லாம் இங்கே வரக்கூடாது: என கூறி விரட்டியுள்ளார்,
இதனைத் தொடர்ந்து மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குப்பன், பின்னர் மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் டீக்கடையின் உரிமையாளர் அண்ணாதுரை மீது வன்கொடுமை தடுப்புத் திட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- ஒரு ஆண்டுக்கும் மேலாக தற்காலிகமாக அங்காடி செயல்பட்டு வருகிறது.
- புதிய கட்டிடத்தை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமரு கல் ஊராட்சியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் உள்ள கண்ணுடையான் தோப்பு, கல்லுளி திருவாசல், சன்னதி தெரு,வடக்கு தெரு,தெற்கு தெரு,அக்ரகாரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி திருமருகல் அம்மாகுள தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2018-19 நிதியாண்டில் ரூ.11 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்காடி கட்டிடம் உள்ளது.
இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 1 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்படாமல் திறக்கப்படாமல் உள்ளது.
இதற்கு மாற்றாக அருகில் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 1 ஆண்டுக்கு மேலாக தற்காலிகமாக அங்காடி செயல்பட்டு வருகிறது.
இந்த தற்காலிக கட்டிடம் இருப்பதால் புதிய கட்டிடத்தை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
எனவே சம்பந்த ப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காண காத்திருக்கும் அங்காடி கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அன்ன தானப்பட்டி ஆத்துக்கா ரன்காடு பகுதியில் சில்லி சிக்கன் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று இவர்களது கடைக்கு வந்தவர்கள், கடை முன்பாக சாலையை அடைத்தபடி இருசக்கர வாகனங்களை அதிகமாக நிறுத்தி இருந்தனர்.
சேலம்:
சேலம் அன்ன தானப்பட்டி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64). இவரது மகன் விஷ்ணுகுமார் (37). இருவரும் அன்ன தானப்பட்டி ஆத்துக்கா ரன்காடு பகுதியில் சில்லி சிக்கன் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தன்று இவர்களது கடைக்கு வந்தவர்கள், கடை முன்பாக சாலையை அடைத்தபடி இருசக்கர வாகனங்களை அதிகமாக நிறுத்தி இருந்தனர். அப்போது அந்த வழியாக ஆத்துகாரன் காடு பகுதியைச் சேர்ந்த லலித்குமார் (23) என்பவர் காரில் அந்த வழியாக வந்தார்.
வாகனங்கள் வழியில் நின்றதால் காரில் செல்ல முடியாத அவர் வெங்கடேசன் மற்றும் விஷ்ணுகுமாரிடம் ஏன் இப்படி சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்களை நிறுத்தினீர்கள் என கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் தந்தை, மகன் இருவரும் சேர்ந்து லலித்குமாரை இரும்பு கரண்டியால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த லலித்குமார், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேசன், விஷ்ணுகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- ெபரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பனை-காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி திறக்கப்பட்டது
- அங்காடியினை கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம்-கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியின் திறப்பு விழா நேற்று நடந்தது. அங்காடியினை கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் கற்பகம் பேசுகையில், இந்த அங்காடியில் பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், பனம்பழ சாறு, சுக்கு காபி, பனை ஓலை பொருட்கள், சுக்கு காபி தூள், பனங்கிழங்கு பொடி, பதநீர், பனங்கருப்பட்டி, கதர் பொருட்கள், காதி சோப்பு வகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கையாக விளையும் பனை பொருட்களை கொண்டு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி இந்த அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார். இதில் கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர் (திருச்சி) ரவிக்குமார், கண்காணிப்பாளர் மணிகண்டன், புதுக்கோட்டை மண்டல திட்ட அலுவலர் ஆறுமுகம், தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கேரளாவில் இருந்து கொப்பரை தேங்காய் ஏற்றிக்கொண்டு காங்கேயம் செல்வதற்காக வந்துள்ளார்.
- இரும்பு மேற்கூரைகள் முழுவதுமாக சேதம் அடைந்தது.
பல்லடம் :
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பினோய்(வயது 38).சரக்கு லாரி ஓட்டுநர். நேற்று அதிகாலை கேரளாவில் இருந்து கொப்பரை தேங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு காங்கேயம் செல்வதற்காக பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் வந்துள்ளார்.
லாரி பல்லடம் - செட்டிபாளையம் ரோடு, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு அருகே வந்தபோது ஓட்டுநர் பினோய் தூக்க அசதியில் லாரியை இயக்கியதால் ரோட்டோரமாக இருந்த இயற்கை அங்காடி கடைக்குள் லாரி புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அங்கிருந்த இரண்டு கடைகளின் முன் பகுதியில் இருந்த இரும்பு மேற்கூரைகள் முழுவதுமாக சேதம் அடைந்தது. இந்த விபத்து காலை நேரத்தில் நடைபெற்றதால் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடைகளுக்கு வரவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை பிடித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- பனியன் ஆடை வாங்க வேண்டும் என்றாலே காதர்பேட்டை நம்பிக்கையான இடமாகத் தெரிகிறது.
- வியாபாரிகள் பனியன் வியாபாரத்தை துவக்க வசதியாக, தற்காலிக கடைகள் அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.
திருப்பூர்:
திருப்பூரை தேடி வரும் வெளி மாநிலத்தினர், வெளி மாவட்ட மக்கள் பனியன் ஆடை வாங்க வேண்டும் என்றாலே காதர்பேட்டை நம்பிக்கையான இடமாகத் தெரிகிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் வர்த்தகம் செய்யும் விற்பனையாளர் என 1,500 கடைகள் மூலம் இங்கு மொத்த வர்த்தகம் நடைபெறுகிறது. அதே சமயம் சில்லரை விற்பனையாளர் குறைவு. ரோட்டோரம் இருந்த வியாபாரிகள் ஒருங்கிணைந்து பனியன் பஜார் அமைத்து, சில்லரை வியாபாரம் செய்து வந்தனர். அங்கு நடந்த தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாயின. மீண்டும் ஒருங்கிணைந்த பனியன் பஜார் உருவாகுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.
பனியன் வியாபாரிகளின் கோரிக்கைப்படி நிரந்தரமான கடை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இதன் எதிரொலியாக குறு, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பனியன் வர்த்தகத்தை வளர்க்கவும் வசதியாக மாநகராட்சி நிர்வாகம் அதற்கான ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது. பனியன் விற்பனை கடைகள், ெரயில் நிலையம் அருகாமையில் இருந்தால் மட்டுமே வெளி மாவட்ட மக்களும், வியாபாரிகளும் கொள்முதல் செய்ய வசதியாக இருக்கும்.
பனியன் வியாபாரிகளின் 20 ஆண்டு கோரிக்கை நிறைவேறும் வகையில் காதர்பேட்டை பகுதியில் நிரந்தர கடைகள் அமைக்க உத்தேச திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடைகளை இழந்து நிர்கதியாய் நிற்கும் வியாபாரிகளுக்கு, தற்காலிகமாக கடைகளை அமைத்து கொடுக்கும் பணியும் வரும் வாரங்களில் துவங்குமென நம்பிக்கை பிறந்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்து பார்க்கிங் வசதியுடன் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, வியாபாரிகள் பனியன் வியாபாரத்தை துவக்க வசதியாக, தற்காலிக கடைகள் அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. போக்குவரத்து குறைவான, அகலமான ரோட்டின் ஒரு பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.
- இதே மின் கம்பத்திலிருந்து அருகில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கான மின் இணைப்புகளின் மூலம் மின் சப்ளையும் தொடர்கிறது.
- கேபிள் வயர் தாழ்வாக கிடந்துள்ள நிலையில் அவ்வழியாக சென்ற மினி லாரி ஒன்றில் கேபிள் வயர் சிக்கி இழுக்கப்பட்டதால் இந்த மின் கம்பம் ஒடிந்து சரிந்தது தெரிய வந்துள்ளது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மெயின் பஜார் சாலை ஓரமாக மின் கம்பங்கள் உள்ளன. இவற்றில் மத்திய பஜார் சந்தைக்கு எதிர்ப்புறம் உள்ள கான்கிரீட் மின் கம்பம் ஒன்று நேற்று இரவு அடி பாகத்தில் முறிந்த நிலையில் அருகில் உள்ள கடை சுவரில் சாய்ந்தது. ஆனால் இதற்கான மின் கம்பியில் உயர் அழுத்த மின்சாரம் இன்னும் சென்று கொண்டிருக்கிறது.
மேலும் இதே மின் கம்பத்திலிருந்து அருகில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைக ளுக்கான மின் இணைப்புகளின் மூலம் மின் சப்ளையும் தொடர் கிறது.
பஸ் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் அபாயகரமான நிலையில் இருக்கும் இந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்ற மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் இந்த மின்கம்பத்தில் இருந்து அடுத்த மின் கம்பத்திற்கு இடையில் தடிமனான கேபிள் வயர் சென்றுள்ளது. அது தாழ்வாக கிடந்துள்ள நிலையில் அவ்வழியாக சென்ற மினி லாரி ஒன்றில் கேபிள் வயர் சிக்கி இழுக்கப்பட்டதால் இந்த மின் கம்பம் ஒடிந்து சரிந்தது தெரிய வந்துள்ளது.
இதே போல் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் பகுதிகளில் மின் கம்பங்கள் வழியாக தாழ்வாக செல்லும் கேபிள் வயர்களால் மேலும் பல விபத்துக்கள் நடக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு மின் கம்பங்கள் வழியாக இதுபோன்ற கேபிள் வயர்கள் செல்வதை அகற்றவும், தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
- காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில், திருப்பூர் மெயின் ரோட்டில் ஆனந்தராஜ் என்பவரது மகன்கள் பாக்கியநாதன்(34), பெரிய ராஜ்(32) ஆகியோர் மளிகை கடை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக போலீசார் அங்கிருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இதே போல உணவு பாதுகாப்புத் துறையினர் காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மற்றும் சட்டவிரோதமாக விற்பனை செய்த மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட புகையிலை பொருட்கள் தடுப்புக்குழுவின் பரிந்துரையின் பேரில், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் உள்ளிட்ட குழுவினர், தொடர் குற்றங்களில் ஈடுபட்ட மளிகை கடைக்கு சீல் வைத்தனர்.
- கைது செய்யப்பட்ட 6 பேரையும் தனிப்படை போலீசார் திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு பாராட்டினார்.
திருப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஹஜ் மந்த்சிங். இவர் திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பூர் மத்திய பஸ்நிலையம் பின்புறம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் ஹஜ் மந்த்சிங் தனியாக இருந்தபோது முகமூடி அணிந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென கடைக்குள் புகுந்தனர். அவர்கள் ஹஜ் மந்த்சிங்கை கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி கடையில் இருந்த ரூ.16 லட்சம் மற்றும் 4 செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கொள்ளை நடந்த கடை மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கொள்ளை கும்பல் வந்த கார் திருப்பூர்-பல்லடம் ரோடு வித்யாலயம் பகுதியில் கேட்பாரற்று நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் காரின் பதிவு எண்ணை கொண்டு நடத்திய விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசின் கணவர் சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் தனித்தனியாக பிரிந்து மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் மதுரையில் வைத்து 2 பேரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெண் போலீசின் கணவர் சக்திவேல், அழகர் உள்ளிட்ட 2 பேரை சிவகங்கையில் வைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேரையும் தனிப்படை போலீசார் திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இவர்கள் ஏற்கனவே இதுபோன்று பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்தது. மேலும் சென்னையில் உள்ள டாஸ்மாக்கில் ரூ.2 லட்சம் வழிப்பறி வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்கள் ஆறு பேரை பிடித்ததுடன் பணத்தையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு பாராட்டினார்.