என் மலர்
நீங்கள் தேடியது "shop"
- ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் வந்தது.
- மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கோவை,
கோவை காந்திபுரத்தில் மாநகர பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து உக்கடம், சிங்காநல்லூர், ரெயில் நிலையம், காந்தி பார்க், வடவள்ளி, மருதமலை, சுந்தராபுரம் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் செல்கின்றன.
இதனால் எப்போதுமே காந்திபுரம் மாநகர பஸ் நிலையம் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாகவே காணப்படும். பொதுமக்கள் வருவதும், போவதுமாகவே இருப்பார்கள்.
இந்த பஸ் நிலையத்தில் நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்தது.
இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் வந்தது.
புகாரின் பேரில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில் மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் மாநகர பஸ் நிலையத்திற்கு வந்தனர்.
அவர்கள் அங்கு நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த டீக்கடை, செல்போன் கடை, செருப்பு கடை உள்பட 25 கடைகளை அகற்றினர். இதனையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
காந்திபுரம் மாநகர பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த 25 கடைகள் அகற்றப்பட்டது.
தொடர்ந்து அங்கு மீண்டும் கடைகள் வைக்காதவாறு கண்காணிக்கப்படும். நடைபாதையை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் கடைகள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கல்லாவில் இருந்த ரூ.70 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
- ஜவுளி கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை உடைத்து விட்டு தப்பி சென்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியின் பிரதான பகுதியான கடைவீதியில் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் வாழைப்பழம் கடை வைத்து நடத்தி வருபவர் நல்லமுத்து.
நேற்று வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.இன்று காலை கடையை திறக்க வந்தார்.அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 70 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் அதே மார்க்கெட் பகுதியில் உள்ள பாஸ்கரன் என்பவரது பூக்கடை கதவினை உடைத்து மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.
அருகில் காமராஜர் வீதி உள்ள ராகுல் பழக்கடையில் புகுந்த மர்ம நபர்கள் அங்கே கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 8000 யை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அருகில் இருந்த நாராயணன் பூக்கடையில் இருந்த கல்லாப்பெட்டி எடுத்து சென்று சில மீட்டர் தூரத்தில் வீசிவிட்டு அதில் இருந்து செல்போனை திருடிய நபர்கள் அதன் அருகாமையில் இருந்த பேன்சி கடையில் புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.
இதைப்போல் கடைவீதியில் இருந்த மற்றொரு பழக்கடையிலும் கல்லாப் பெட்டியில் இருந்த பணத்தையும் அருகில் இருந்த துணிக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்தும் தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடைபெற்ற கடைகளில் விசாரணை நடத்தினார்.
மேலும் அப்பகுதியில் இருந்த சி சி டிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சீர்காழியின் பிரதான மக்கள் அதிகம் கூடும் மையப் பகுதியில் அடுத்தடுத்து 6 கடைகளில் மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் வணிகர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கடைக்கு பிளாஸ்டிக் பைப் வாங்குவது போல் ஒரு வாலிபர் வந்துள்ளார்.
- கல்லாவில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை திருடி விட்டு தப்பி சென்றார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (61). இவர் சிதம்பரம் - சீர்காழி பிரதான சாலையில் இரும்பு கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று இவர் கடைக்கு பிளாஸ்டிக் பைப் வாங்குவது போல் ஒரு டிப்டாப் வாலிபர் வந்துள்ளார் பொருளின் விலையை கேட்டு கடையில் அமர்ந்து உள்ளார்.
அப்போது சேகர் வியாபாரம் வியா பாரம் செய்து கொண்டி ருந்தார். விற்பனை செய்த ரூ 20 ஆயிரத்து கல்லாவில் வைத்துவிட்டு, சிமெண்டு மூட்டை வாகனத்தில் ஏற்றுவதை சென்று கண்கா ணித்து கொண்டிருந்தார்.
அப்போது பொருள் வாங்குவது போல் கடையில் அமர்ந்திருந்த டிப்டாப் வாலிபர் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூபாய் 20 ஆயிரத்தை திருடிக் கொண்டு தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
சேகர் சிமெண்ட் மூட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு கடைக்கு வந்தபோது டிப் டாப் வாலிபரை காணவில்லை.
உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டி திறந்து கிடந்தது அதிலிருந்து பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக மாநகராட்சி பணியாளர்கள் வந்தனர்.
- கடை முன்பு ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வாசல் உள்ளிட்டவற்றை அகற்றினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாட்டு மேஸ்திரி சந்து உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் ஆணையர் சரவணகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டு கடைக்கு வெளியே மேற்கூரை, கடையின் விளம்பர போர்டு உள்ளிட்ட எதையும் ஆக்கிரமிப்பு செய்து அமைக்க கூடாது.
மழைநீர் செல்லும் வடிகால் பகுதியை ஆக்கிரமிக்க கூடாது.
மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் கடைகளுக்கு வெளியே மற்றும் நடைபா தையே ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள மேற்கூரை சீட், பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கனவே கடை உரிமையா ளர்களுக்கு அறிவுறுத்தப்ப ட்டது.
ஆனால் சில கடைகளின் உரிமை யாளர்கள் ஆக்கிரமி ப்பை அகற்றவி ல்லை.
இந்த நிலையில் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவ தற்காக மாநகராட்சி பணியா ளர்கள் வந்தனர்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் ஒன்று திரண்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நேரில் வந்து கடை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது உரிமையாளர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கால அவகாசம் வேண்டும் என ஆணையரிடம் கேட்டனர். அதற்கு அவர் ஏற்கனவே உங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு அதற்கான நாள் முடிந்து விட்டது.
எனவே இன்று ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதிப்பட கூறினார்.
இதை தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் கடையின் வெளியே ஆக்கிரமித்து மேலே வைக்கப்பட்டிருந்த மேற்கூரை, பெயர் பலகை, கடை முன்பு ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வாசல் உள்ளிட்ட வற்றை அகற்றினர்.
தங்கு தடையின்றி வடிகாலில் மழைநீர் செல்வதற்கு நடவடி க்கை மேற்கொ ண்டனர்.
அப்போது மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அறநிலைய துறையிடம் ஒப்படைக்க வேண்டு மென்று கூடுதல் நகர உரிமையியல் கோர்ட்டு உத்தரவிட்டது.
- ரூ.1½ கோடி சொத்துக்களை மீட்டு அங்கு குடியிருந்தவர்களையும் பொருட்களையும் ராயபுரம் போலீசாரின் உதவியோடு வெளியேற்றினர்.
ராயபுரம்:
ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் இந்து அறநிலையதுறைக்கு சொந்தமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்து உள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான 1200 சதுர அடி பரப்பளவு உள்ள இடத்தை தனியார் நபர் ஆக்கிரமித்து முதல் தளத்தோடு 9 கடைகள் மற்றும் 3 வீடுகள் இருந்தன.
இதில் நீண்ட காலமாக அங்கு வசித்து வரும் சங்கர் என்பவர் பராமரிப்பில் அற நிலையத்துறை ஒப்படைத்த தாகவும் கீழ்தளத்தில் உள்ள கடைகளுக்கு வரும் வாடகை மட்டும் அவர் எடுத்து கொள்ளலாம் என்றும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தரை தளம் மட்டும் அல்லாமல் மேல் தளத்திலும் சங்கர் வசிக்கும் 3 வீடுகள் உட்பட 9 கடைகளையும் அதற்கான வாடகையையும் 25 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தமாக குத்தகைக்கு விட்டு சங்கர் அனுபவித்து வந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அன்று இந்த சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அறநிலைய துறையிடம் ஒப்படைக்க வேண்டு மென்று கூடுதல் நகர உரிமையியல் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி நேற்று அற நிலைய துறை அதிகாரிகள் ரூ.1½ கோடி சொத்துக்களை மீட்டு அங்கு குடியிருந்தவர்களையும் பொருட்களையும் ராயபுரம் போலீசாரின் உதவியோடு வெளியேற்றினர். தொடர்ந்து வீடு, கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
- பலமுறை நேரில் சென்று அறிவுறுத்தியும் கடை வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர்.
- கடைகளை கண்டறிந்து அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி க்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்த மான 50-க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகள் அமைந்துள்ளது.
இதன் வணிக வளாக கடை குத்தகைதாரர்களுக்கு பலமுறை அறிவிப்பு வழங்கியும், பலமுறை நேரில் சென்று அறிவுறுத்தியும் கடை வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர்.
இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் குமரன் உத்தரவின் பெயரில், பட்டுக்கோட்டை நகராட்சியின் மேலாளர் விஜயாஸ்ரீ தலைமையில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் குழுவாக சென்று வடகை பாக்கி அதிகம் உள்ள கடைகளை கண்டறிந்து அதிரடியாக கடைகளை சூட்டி சீல் வைத்தனர். மேலும் வாடகை முறையாக செலுத்தாத கடைகள் மீது இந்த நடவடிக்கைகள் தொடரும் அன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த தொகையினை முழுவதுமாக முறைப்படி செலுத்தினால் மட்டுமே கடைகளின் சீல் அகற்றப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வாடகை செலுத்தாததால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
- காய்கறி மார்க்கெட்டில்
அரியலூர்
அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான காந்தி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 52 கடைகள் உள்ளன. அதில் பல கடை உரிமையாளர்கள் வாடகை பாக்கி அதிகளவில் வைத்துள்ளதால் அவர்களுக்கு நேரடியாகவும், கடிதம் மூலமும் பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிலுவைத்தொகை கட்டத்தவறினால் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஒரு கடையின் உரிமையாளர் தவிர மற்ற அனைவரும் நிலுவைத்தொகையை செலுத்தி விட்டனர். இதனைதொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் அந்த கடையை பூட்டி 'சீல்' வைத்தனர்.
- கடைக்குள் சென்று பார்த்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
- ஒரு கடையில் இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலமம் கொல்லம் சாமக்கடை வீதியில் ஏராளமான கடைகள் வரிசையாக இருக்கின்றன. அவற்றில் அடுத்தடுத்து இருந்த 4 கடைகளில் சம்பவத்தன்று இரவு யாரோ மர்மநபர் புகுந்து கைவரிசை காட்டியுள்ளார்.
கடைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர், கடைகளின் பூட்டை உடைத்து, கடைக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார். திருட்டு நடந்த சம்பவம், மறுநாள் கடைக்காரர்கள் கடையை திறக்க வந்தபிறகே தெரியவந்தது.
பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்ததை பார்த்து அதர்ச்சியடைந்த அவர்கள், கடைக்குள் சென்று பார்த்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், கடையில் கட்டுக் கட்டாக வைக்கப்பட்டிருந்த பணம் அப்படியே இருந்தது. அதே நேரத்தில் கடையில் இருந்த சில்லறை காசுகள் அனைத்தும் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், திருட்டு நடந்த 4 கடைகளிலும் சோதனை செய்தனர். அப்போது ஒரு கடையில் இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு நபர் பூட்டை உடைத்து கடைக்குள் செல்வதும், அந்த நபர் கடையின் உள்ளே டேபிளிள் வைக்கப்பட்டிருந்த பணக்கட்டை தனியாக எடுத்து டேபிளில் வைத்து விட்டு, சில்லறை காசுகளை மட்டும் திருடிச்சென்றது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.
அந்த காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். பொதுவாக திருட்டில் ஈடுபடக்கூடிய நபர்கள், திருடச்செல்லும் இடத்தில் பணம் மற்றும் அதிக விலை உள்ள பொருட்கள் சிக்கினால் அவற்றை விட்டு வைப்பதில்லை.
அனைத்தையும் வாரி சுருட்டி எடுத்துச் சென்று விடுவார்கள். ஆனால் கொல்லம் கடைகளில் கை வரிசை காட்டிய நபரோ, வித்தியாசமாக பணக்கட்டுகளை வைத்துவிட்டு சில்லறை காசுகளை மட்டும் திருடிச் சென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- துறையூர் தொகுதியில்பகுதிநேர ரேஷன் கடை
- சேனப்பநல்லூர் புதூர் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சேனப்பநல்லூர் புதூர் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேனப்பநல்லூர் கிராமத்திற்கு சென்று அங்குள்ள ரேஷன் கடையில் பொருட்களை பெற்று வந்தனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தங்களது பகுதியிலேயே, பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தருமாறு துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமாரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ. பகுதி நேர ரேஷன் கடையை தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமதாஸ், காவிரி கணேசன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், ஆதிதிராவிடர் நலக்குழு கஸ்டம்ஸ் மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் சரண்யா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ,அரசு அலுவலர்கள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஜெயன் (45). சம்பவத்தன்று இரவு பேக்கரியை மூடிவிட்டு ஜெயன் வீட்டிற்கு சென்று விட்டார்.
- மறுநாள் காலை வழக்கம் போல் பேக்கரியை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையில் இருந்த கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே பேக்கரி வைத்து நடத்தி வருபவர் ஜெயன் (45). சம்பவத்தன்று இரவு பேக்கரியை மூடிவிட்டு ஜெயன் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் மறுநாள் காலை வழக்கம் போல் பேக்கரியை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையில் இருந்த கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதிலிருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயன் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கடையின் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மர்ம நபர் ஒருவர் கடையின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவிலிருந்த பணத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது.
இந்த பதிவுகளை வைத்து பேக்கரியில் திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் அருகில் நின்றிருந்த குட்டி மற்றும் சிவகாசி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
- திடீரென மோட்டார் வைத்திருந்த வெடி மருந்து வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் சிவகாசி, குட்டி. இவர்கள் வேட்டைக்காக வெடிமருந்தை தங்களுடைய மோட்டார் சைக்கிளில் வைத்திருந்தனர். இந்த வண்டியை இன்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள ஒரு மளிகை கடையின் முன்பு நிறுத்தி இருந்தனர். திடீரென இதிலிருந்த வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் மோட்டார் சைக்கிள் மற்றும் மளிகை கடையிலிருந்த கண்ணாடி, திண்பண்டங்கள் சேதமடைந்தன. மோட்டார் சைக்கிளில் அருகில் நின்றிருந்த குட்டி மற்றும் சிவகாசி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திடீரென மோட்டார் வைத்திருந்த வெடி மருந்து வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- புதுக்கோட்டையில் கூட்டுறவு மெகா பட்டாசு கடை
- சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்த விற்பனை பண்டகசாலை, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி கூட்டுறவு பண்டகசாலை ஆகிய கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் இந்தாண்டு புதிய தயாரிப்பு பட்டாசு வகைகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.80 லட்சத்துக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு பட்டாசுகள் விற்பனை இலக்கு ரூ.1 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டுறவு மெகா பட்டாசு கடையில் தரமான பட்டாசுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ கவிதை பித்தன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற துணை தலைவர் லியாகத்அலி, நகர்மன்ற உறுப்பினர்கள் சரவணன், சந்தோஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.