என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Siddaramaiah supporter"
- சி.கே.ரவிச்சந்திரன் என்பவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துகொண்டிருந்தார்.
- இந்த சமயத்தில் திடீரென்று அவர் மயங்கி கீழே விழுந்தார்.
பெங்களூரு:
பெங்களூரு விதானசவுதா அருகே பத்திரிகையாளர் கூட்ட அரங்கம் உள்ளது. இங்கு முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர உத்தரவிட்ட கவர்னரை கண்டித்து கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்க நிர்வாகியும், சித்தராமையாவின் ஆதரவாளருமான சி.கே.ரவிச்சந்திரன் என்பவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்துகொண்டிருந்தார்.
இந்த சமயத்தில் திடீரென்று அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை கன்னிங்காம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் காங்கிரசார் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Karnataka: Congress Leader Dies of Heart Attack While Speaking at Live Press Conference in Bengaluru, Video Surfaces#Presseclub #ckramchandran #heartattack pic.twitter.com/JDsVGX8OV0
— NewsTanksVoiceofSea (@NewsTanksind) August 19, 2024
அவர் மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோல் யாதகிரி டவுனில் சுபாஷ் சர்க்கிளில் நேற்று முன்தினம் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்ட சித்தராமையா ஆதரவாளரான ராஜ்குமார் கணேஷ் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று மத்திய பிரதேசத்தில் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நபர் மருத்துவரின் கண்முன்னே மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sudden Death Caught on Camera in Indore: Man Dies of Heart Attack in Front of Doctor During Visit to Private Hospital; Disturbing Video Surfaces#CCTV #heartattack #viralvideo pic.twitter.com/GMPvdLCQ64
— Kaushik Kanthecha (@Kaushikdd) August 18, 2024
இப்படி இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்