search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "signature bridge inaugural"

    டெல்லியில் புனரமைக்கப்பட்ட சிக்னேச்சர் பாலம் திறப்பு விழாவில் டெல்லி பா.ஜ.க. தலைவரை போலீசார் அனுமதிக்க மறுத்ததாக ஆம் ஆத்மி - பா.ஜ.க. தொண்டர்கள் இடையே இன்று வாக்குவாதம் ஏற்பட்டது. #Signaturebridge #Signaturebridgeinaugural #DelhiBJP #ManojTiwari
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள சிக்னேச்சர் (Signature) பிரிட்ஜ் எனப்படும் மேம்பாலம் சுமார் 1500 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்.

    இன்று மாலை திறப்புவிழா நடைபெறவுள்ள நிலையில் டெல்லி பா.ஜ.க. தலைவரான மனோஜ் திவாரி விழா நடைபெறும் பகுதிக்கு வந்தார். அவருடன் பா.ஜ.க. முக்கிய பிரமுகர்கள் சிலரும் வந்தனர்.

    அவரிடம் அழைப்பிதழ் இல்லாததால் மேடைக்கு செல்லவிடாதவாறு போலீசார் மனோஜ் திவாரியை தடுத்து விட்டதாக கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் பா.ஜ.க.வினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

    இந்த மேம்பாலம் அமைந்துள்ள வடக்கு டெல்லி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் மனோஜ் திவாரி, ஒரு கிரிமினலை நடத்துவதைப்போல்  போலீசார் என்னை அவமதித்து விட்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த இந்த பாலத்தை புதுப்பிக்க நான்தான் பெருமுயற்சி எடுத்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில், டெல்லி கவர்னரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீசார், தேவையில்லாமல் அங்கே பிரச்சனையை உருவாக்க முயற்சிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். #Signaturebridge #Signaturebridgeinaugural #DelhiBJP #ManojTiwari
    ×