என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Silambam"
- ஆண்களுக்கு இணையாக பெண்களும், மாற்றுத்திறனாளிகளும், பயிற்சி ஆசிரியர்களும் விடாமல் சிலம்பம் சுழற்றி ராயல்புக் உலக சாதனையில் இடம்பிடித்தனர்.
- குன்னூர் சிலம்ப சாதனை நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் மைதானத்தில் தேசிய சிலம்ப பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் வஜ்ரம் விளையாட்டு மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் சிலம்பத்தை ஊக்குவிக்கும் விதமாக 78-வது சுதந்திர தினத்தை ஒட்டி 78 நிமிடங்கள் விடாமல் சிலம்பம் சுழற்றி ராயல்புக் உலக சாதனை நிகழ்த்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
வெலிங்டன் கண்டோன் மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் லோட்டே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவருக்கு பேண்ட் வாத்தியம் முழங்க சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து சுமார் 1200 மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு 78 நிமிடங்கள் சிலம்பம் சுழற்றி சாதனை நிகழ்த்தினர்.
அப்போது வீரர்-வீராங்கனைகள் கண்ணை கட்டியும், பானைகள் மீது நின்றும் சிலம்பம் சுழற்றியது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும், மாற்றுத்திறனாளிகளும், பயிற்சி ஆசிரியர்களும் விடாமல் சிலம்பம் சுழற்றி ராயல்புக் உலக சாதனையில் இடம்பிடித்தனர்.
குன்னூர் சிலம்ப சாதனை நிகழ்ச்சியில் பரத நாட்டியம், கராத்தே, கேரம் போர்டு, ஓவியம், சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது. பின்னர் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள், கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- கோலிவுட் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.
- விக்ரமின் தங்கலான் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கோலிவுட் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'பேட்ட' படம் மூலம் தமிழில் களமிறங்கினார். இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மக்கள் கவனத்தை பெற்றார்.
இவர் தனுஷூடன் இணைந்து நடித்து வெளியான மாறன் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது விக்ரமின் தங்கலான் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படத்திற்காக சிலம்பம் தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டார். சிலம்பத்திற்காகப் பயிற்சி எடுக்கும் காணொளிகளையும் அவ்வப்போது இணையத்தளத்தில் பகிர்ந்து வந்தார் மாளவிகா.
இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்த பிறகும் தொடர்ந்து சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாளவிகா மோகன் நேற்று அவரது இன்ஸ்டாகிராமில் போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்தார். இது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மாணவ-மாணவிகளுக்கு சண்முகசுந்தரம் சிலம்பம் கற்றுக்கொடுத்தார்.
- பிரான்ஸ் நாட்டினர் தங்களுக்கும் சிலம்ப கலையை கற்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திரு நகரியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். (வயது 70).
இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது ஆழ்வார்திருநகரியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறார்.
நேற்று ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி பகுதியில் மழை பெய்த காரணத்தினால் அங்குள்ள சிறு அரங்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாதலங்களை பார்வையிடுவதற்காக வருகை தந்தனர். அவர்கள் ஏரல் அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் திடீரென மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் சொல்லி கொடுப்பது குறித்து அறிந்த அவர்கள் நேரடியாக 20 பேரும் வருகை தந்தனர்.
காலையில் மழை அதிகமாக பெய்த காரணத்தினால் அரங்கத்திற்குள் நுழைந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை சிலம்ப ஆசான் சண்முகசுந்தரம் வரவேற்றார்.
பிரான்ஸ் நாட்டினர் முன்னிலையில் மாணவ-மாணவிகளுக்கு சண்முகசுந்தரம் சிலம்பம் கற்றுக்கொடுத்தார்.
அதை பார்த்து ஆச்சரியப்பட்ட பிரான்ஸ் நாட்டினர் தங்களுக்கும் சிலம்ப கலையை கற்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
உடனே அதே இடத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நெடுங்கம்பு, நடுகம்பு மற்றும் ரெங்கராட்டினத்தைச்சுற்றி பயிற்சி அளித்தார். சிறிது நேரத்திலேயே சிலம்ப கலையைக்கற்றுக்கொண்ட பிரான்ஸ் நாட்டினர், ரெங்கராட்டினத்தை தானாகவே சுற்றி அசத்தினர்.
அப்போது உடன் இருந்த மாணவ-மாணவிகளும், அங்கு வந்த பிரான்ஸ் நாட்டினரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
- யோகா பயிற்சியாளரான சுதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
- நிறைமாத கர்ப்பத்துடன் சிலம்பம் சுற்றி சாதனை படைக்க ஆசைப்பட்டேன்.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது 36). யோகா பயிற்சியாளரான சுதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். யோகா கற்றுக்கொண்ட போதிலும் சிறு வயது முதலே சிலம்பம் மீது பற்றுக்கொண்ட அவர் அதில் சாதனை படைக்க விரும்பினார்.
தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரை 1 மணி நேரம் நிறைமாத கர்ப்பிணியான சுதா இடைவிடாது சிலம்பம் சுற்றி அசத்தினார். இவரது இச்சாதனை நோபல் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது.
இதுகுறித்து சுதா கூறுகையில், 'கடந்த 3 ஆண்டுகளாக சிலம்பம் கற்றுக்கொண்டேன். எனக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி பிரசவத்திற்கான தேதி கொடுத்தனர். நிறைமாத கர்ப்பத்துடன் சிலம்பம் சுற்றி சாதனை படைக்க ஆசைப்பட்டேன். இதற்கு பயிற்சியாளர் பரசுராம், கணவர் வல்லபன் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.
இதையடுத்து 1 மணி நேரம் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள்வாள், மான்கொம்பு ஆகியவற்றை சுழற்றினேன். இந்த சாதனை நோபல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது' என்றார்.
- மாநில அளவில் நடந்த சிலம்ப போட்டியில் மதுரை அணி 2-ம் இடம் பெற்றது.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
மதுரை
மாநில அளவிலான சிலம்ப தொடுமுறை போட்டி கார்த்திக் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. போட்டியை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். போட்டியில் 16 மாநிலங்களில் இருந்து ஏராளமான போட்டி யாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மதுரை பதி னெட்டாம்படி சிலம்ப அகடாமியின் மாரிமுத்து சிலம்ப குழுவினர் 2-ம் மற்றும் 3-ம் இடம் பிடித்த னர். வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளை ஏராளமானோர் பாராட்டினர்.
- தொடர்ந்து, 2 மணிநேரம் மிதித்து கொண்டே ஒற்றை கையில் சிலம்பம் சுற்றி சாதித்தனர்.
- வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று 14 மாணவ -மாணவிகள் கண்கள் இரண்டையும் துணியால் கட்டியவாறு சுருள்வாள் சுற்றி புதிய உலக சோழன் சாதனை படைத்தனர்.
அதன் பற்றிய விவரம் வருமாறு :-
பார்வையிழந்தும் தன்னம்பிக்கையோடு நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக பல இன்னல்களையும் இடர்களையும் சந்தித்து வரும் பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகளின் வாழ்வியல் பற்றிய விழிப்புணர்வை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தும் நோக்கத்தில் 14 மாணவ-மாணவிகள் தொடர்ந்து 2 மணிநேரம் கண்கள் இரண்டையும் கட்டியவாறு சுருள்வாள் சுற்றி அனை வரையும் மெய்சிலிர்க்க வைத்து புதிய சோழன் உலக சாதனை படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவி வந்தனா என்பவர் தொடர்ந்து 2 மணிநேரம் ஒற்றைக் கையில் சுருள்வாள் சுற்றி புதிய சோழன் உலக சாதனை படைத்தார் . பின்னர் 4 மாணவர்கள் சைக்கிள்களை தொடர்ந்து 2 மணிநேரம் மிதித்துக் கொண்டே ஒற்றைக் கையில் சிலம்பம் சுற்றி சாதித்தனர். இந்த மூன்று சாதனை நிகழ்ச்சிகளும் தஞ்சை சண்முகநாதன் நகரில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வை யோவான் சிலம்பாட்ட பயிற்சிப் பள்ளியின் ஆசான் ராமநாதன் ஒருங்கிணைத்து நடத்தினார். மேலும், சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் சார்பாக அதன் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், பொதுச் செயலாளர் ஆர்த்திகா நிமலன், தஞ்சை மாவட்டப் பொதுத் தலைவர் முனைவர் சந்தானசாமி மற்றும் தஞ்சை மாவட்டப் பொதுச் செயலாளர் நல்லாசிரியர் குழந்தைசாமி போன்றோர் நடுவர்களாக பங்கு கொண்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவர்களை கண்காணித்து உறுதி செய்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவற்றை வழங்கி பாராட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் யோவான் சிலம்பப் பயிற்சிப் பள்ளியின் தலைமை ஆசான் யோவான், தன்னார்வ லர்கள் நீலமேகம், சஞ்சய், எஸ்தர் ராணி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சாதனை படைத்த மாணவ- மாண விகளை பாராட்டினர்.
- சர்வதேச சிலம்ப போட்டியில் ராமநாதபுரம் மாணவி சாதனை படைத்தார்.
- வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம்
கர்நாடக மாநிலம் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் வோல்டு யூனியன் சிலம்ப பெடரேஷன் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.
இதில் சப்ஜூனியர் ஒற்றை கம்பு பிரிவில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவி கனிஷ்கா முதல் பரிசான தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த போட்டியில் இந்தியா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, இலங்ைக ஆகிய 5 நாடுகளில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
மாணவியுடன் சிலம்ப மாஸ்டர் மேத்யு இம்மானுவேலும் உடனிருந்தார். ராமநாதபுரம் திரும்பிய மாணவிக்கு பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- 2 நாட்கள் தொடர்ந்து சிலம்பம் களரி பயிற்சி அளித்து வந்தார்.
- ஆதிதிராவிட விடுதி பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டது.
உடுமலை :
உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஆதிதிராவிட விடுதி பள்ளி கல்லூரி மாணவி களுக்கு உடுமலை பகத்சிங் சிலம்பம் களரி மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை ஆசானும் தமிழ்நாடு களரி பைட் அசோசியேசன் மாநில செயலாளருமான சி.வீரமணி வாரத்தில் 2 நாட்கள் தொடர்ந்து சிலம்பம் களரி பயிற்சி அளித்து வந்தார். இவரது இலவச சேவையை பாராட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், காங்கேயம் தனி வட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை யின் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினர். மாணவிகளுக்கு சிறப்பாக இலவச சிலம்பபயிற்சி அளித்து வருவதாக பரிந்துரை செய்த தாராபுரம் மகளிர் விடுதி காப்பாளர் சாந்தகுமாரி, அலுவலக கண்காணி ப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சிலம்ப பயிற்சியாளர் வீரமணிக்கு உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தலைவர் இளமுருகு தலைமையில் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- ஒற்றை கம்பு சுற்றுதல், இரட்டை கம்பு சுற்றுதல், சிலம்ப சண்டை என்று 3 விதமாக நடைபெற்றது.
- வயதின் அடிப்படையிலும், விளையாட்டின் அடிப்படையிலும் 2 பிரிவுகளாக நடைபெற்றது.
சுவாமிமலை:
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. போட்டியில் கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிடிவுகளாக ஒற்றை கம்பு சுற்றுதல், இரட்டை கம்பு சுற்றுதல், சிலம்ப சண்டை என்று 3 விதமாக நடைபெற்றது. மேலும், வயதின் அடிப்படையிலும், விளையாட்டின் அடிப்படையிலும் 2 பிரிவுகளாக நடைபெற்றது.
போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழையும் பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார். விளையாட்டுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் கார்த்திகேயன் செய்திருந்தார்.
- மாணவ-மாணவிகள் கடற்கரையில் நீண்ட வரிசையில் நின்றபடி தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.
- விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி:
புதுவை கடற்கரையில் ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக 1200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அபுல்கலாம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி ராஜ், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாணவ-மாணவிகள் கடற்கரையில் நீண்ட வரிசையில் நின்றபடி தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.
இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் புதுவையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் சிலம்பாட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
- கையுந்துபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது.
- ஒவ்வொருவரும் ஆதார் கார்டு பதிவேற்றம் செய்வது அவசியம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
2022-23-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல் -அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இந்த மாத இறுதி மற்றும் அடுத்த மாதத்தில் நடைபெற உள்ளது.
இதில் பொது பிரிவினர் ( 15 முதல் 35 வயது வரை ) கபடி, சிலம்பம், தடகளம், இறகு பந்து, கையுந்துபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது.
இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு (12 வயது முதல் 19 வயது வரை ) கபடி, சிலம்பம், தடகளம் , கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து , நீச்சல் , கையுந்துபந்து, மேசைபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ( 17 வயது முதல் 25 வயது வரை ) கபடி, சிலம்பம், தடகளம் , கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து , நீச்சல் , கையுந்துபந்து, மேசைபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ( வயது வரம்பு இல்லை ) 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், கையுந்து பந்து, கபடி, எறிபந்து போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு ( வயது வரம்பு இல்லை ) கபடி, செஸ், தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் நடக்க உள்ளது.
மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்து பந்து ஆகிய போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் முகவரியான www.sdat. tn.gov.in என்ற இணையதளத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பதிவில் பதிவு செய்யலாம்.
ஒவ்வொருவரும் ஆதார் கார்டு பதிவேற்றம் செய்வது அவசியம்.
இதில் பதிவு செய்வதற்கு நாளை ( ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாளாகும்.
எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் அதிக அளவில் பதிவு செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகளில் பெருமளவில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்