search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒரு மணிநேரம் சிலம்பம் சுற்றி கர்ப்பிணி பெண் சாதனை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஒரு மணிநேரம் சிலம்பம் சுற்றி கர்ப்பிணி பெண் சாதனை

    • யோகா பயிற்சியாளரான சுதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
    • நிறைமாத கர்ப்பத்துடன் சிலம்பம் சுற்றி சாதனை படைக்க ஆசைப்பட்டேன்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது 36). யோகா பயிற்சியாளரான சுதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். யோகா கற்றுக்கொண்ட போதிலும் சிறு வயது முதலே சிலம்பம் மீது பற்றுக்கொண்ட அவர் அதில் சாதனை படைக்க விரும்பினார்.

    தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரை 1 மணி நேரம் நிறைமாத கர்ப்பிணியான சுதா இடைவிடாது சிலம்பம் சுற்றி அசத்தினார். இவரது இச்சாதனை நோபல் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது.

    இதுகுறித்து சுதா கூறுகையில், 'கடந்த 3 ஆண்டுகளாக சிலம்பம் கற்றுக்கொண்டேன். எனக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி பிரசவத்திற்கான தேதி கொடுத்தனர். நிறைமாத கர்ப்பத்துடன் சிலம்பம் சுற்றி சாதனை படைக்க ஆசைப்பட்டேன். இதற்கு பயிற்சியாளர் பரசுராம், கணவர் வல்லபன் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.

    இதையடுத்து 1 மணி நேரம் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள்வாள், மான்கொம்பு ஆகியவற்றை சுழற்றினேன். இந்த சாதனை நோபல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது' என்றார்.

    Next Story
    ×