search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siruvapuri Murugan"

    • சன்னதியில் தரும் மாலையை திருமண மாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தை சுற்றி வர வேண்டும்.
    • பின்னர் மாலையை வீட்டிற்கு எடுத்து சென்று திருமணம் நடைபெறும் வரை பாதுகாத்து வணங்கி வர வேண்டும்.

    திருமணம் தடை பட்டாலோ அல்லது நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருந்தாலோ, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை நாடினால் பலன் உண்டாகும்.

    நம் பிரார்த்தனை நிறைவேற சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரமும் ஏதாவது ஒரு கிழமையில் (முதல் வாரம் வந்த கிழமையிலேயே தொடர்ந்து அடுத்த 5 வாரமும்) வர வேண்டும்.

    வரும் நேரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

    காலை என்றால் ஒவ்வொரு வாரமும் காலையிலேயே வர வேண்டும்.

    மாலை என்றால் ஒவ்வொரு வாரமும் மாலையிலேயே வர வேண்டும்.

    திருமணம் ஆகவேண்டிய பெண்கள் ஆறு வாரமும், வாரம் ஒருநாள் என்று ஆறு தடவைகள் தொடர்ந்து வந்து சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டால் திருமணம் விரைவில் நடைபெறும்.

    திருமணம் ஆக வேண்டி ஆண்டவனிடம் பிரார்த்திக்க வருபவர்கள் வள்ளி மணவாள பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.

    ஆறாவது வாரம் ஆறு அர்ச்சனைக்கு உரிய பொருட்களுடன் வந்து மரகத விநாயகர், மூலவர், வள்ளி மணவாளப் பெருமான், அண்ணாமலையார், உண்ணா முலையம்மை, ஆதிமூலவர் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

    வள்ளி மணவாளப்பெருமான் சன்னதியில் தரும் மாலையை திருமண மாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தை சுற்றி வர வேண்டும்.

    பின்னர் மாலையை வீட்டிற்கு எடுத்து சென்று திருமணம் நடைபெறும் வரை பாதுகாத்து வணங்கி வர வேண்டும்.

    திருமணம் முடிந்ததும் தம்பதி சமேதராய் இத்தலம் வந்து ஆறு தெய்வ சந்நிதிகளுக்கும் அர்ச்சனை செய்து பழைய மாலையை கோவிலில் உள்ள மரத்தில் கட்ட வேண்டும்.

    • இந்த அற்புதக் கோலத்தை வழிபாடு செய்பவர்கள் இனிமையான இல்லற வாழ்கையைப் பெற்று இன்பமடைவர்.
    • தடைபட்ட திருமணத் தடைகள் நீங்கப் பெற்று மனம் நிறைந்த மங்கல வாழ்வுப் பேறு கிடைக்கும்.

    சந்தமும் அடியார்கள் சிந்தையது குடியான தன் சிறுவைதனில் மேவும் பெருமான் வள்ளி மணவாளனாக அருட்காட்சியளிக்கும் அற்புதக் கோலத்தை வழிபாடு செய்பவர்கள் இனிமையான இல்லற வாழ்கையைப் பெற்று இன்பமடைவர்.

    தடைபட்ட திருமணத் தடைகள் நீங்கப் பெற்று மனம் நிறைந்த மங்கல வாழ்வுப் பேறு கிடைக்கும்.

    ஒவ்வொரு மாதமும், பூரம், உத்திரம், விசாகம் ஆகிய நட்சத்திரங்களிலும் பவுர்ணமி, சுக்லது விதியை, சுக்ல சஷ்டி, செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களிலும் விசேஷ வழிபாடு செய்தல் வேண்டும்.

    நெய் அல்லது இலுப்பை எண்ணைய் விளக்கு ஏற்றியும், பழங்கள், தேன், சுத்தமான (கலப்படமற்ற) சந்தனம், பச்சைக் கற்பூரம் முதலான அபிஷேகங்கள் செய்தும், சிவப்பு பச்சை வஸ்திரங்கள் அணிவித்தும், தேன் கலந்த தினைமாவிளக்கு ஏற்றியும் ரோஜா, சண்முகம், சிவப்புத்தாமரை, சிவப்பு அரளி, மகிழம்பூ முதலிய ஏதாவதொரு மலர்மாலை அணிவித்து ஷடாக்ஷர அஷ்டோத்ரம், ஷடாக்ஷரத்ரிசதி வள்ளி மணவாளப் பெருமான் திருப்புகழ் போற்றி 108 ஆகிய ஏதாவதொரு அர்ச்சனை செய்தல் வேண்டும்.

    (பூக்களை கிள்ளி அர்ச்சனை செய்தல் கூடாது, முழுப்பூவாகத்தான் அர்ச்சிக்க வேண்டும்) வெண்பொங்கல், தேன்குழல், கடலைப்பருப்பு பாயாசம் முதலிய ஏதாவதொரு நைவேத்தியம் செய்தால் எல்லா நலன்களும் பெற்று இன்பமயமான இல்லற வாழ்வை அடையலாம்.

    • முருகர் சன்னதியின் வலதுபுறம் அண்ணாமலையார், உண்ணாமலை அம்பாள் சன்னதி உள்ளது.
    • இவர்களுக்கு நடுவில் கல்யாண கோலத்தில் வள்ளியும், முருகனும் கைகோர்த்து நிற்பது அற்புதச் சிறப்பாகும்.

    சிறுவாபுரி முருகன் கோவில் அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

    ராமபிரான் தன் பட்டாபிஷேகத்திற்கு பிறகு கர்ப்பிணியான மனைவி சீதை மீது ஊரார் பழிபோட்டதால் காட்டிற்கு அனுப்பிவிட்டார்.

    அங்கு லவனும், குசனும் பிறந்தனர். இதன் பிறகு ராமர் அஸ்வமேத யாகம் செய்தார்.

    மனைவியின்றி யாகம் செய்வது விதிக்கு புறம்பானது என்பதால் அவர் பல நாடுகளுக்கும் அனுப்பிய யாக குதிரையை லவனும், குசனும் இத்தலத்தில் கட்டிப்போட்டுவிட்டனர்.

    குதிரை திரும்பி வராமல் போகவே, அதை மீட்டு வர லட்சுமணனை அனுப்பினார்.

    லட்சுமணனால் குதிரையை மீட்க முடியவில்லை.

    இதனால் ராமரே நேரில் சென்று மீட்டு சென்றார் என்பது ராமயண கால செய்தியாகும்.

    இந்த வரலாற்று செய்தியை "சிறுவராகி இருவர் கரிபதாதி கொடுஞ்சொல் சிலை ராமன் உடன் எதிர்த்து ஜெயமதானநகர்" என்ற திருப்புகழ் பாடல் மூலம் அறிய முடிகிறது.

    ராமனிடம் லவனும், குசனும் சண்டை போட்டதாகவும் அந்த இடமே சிறுவாபுரி என்ற சின்னம்பேடு என்றும் இத்தல வரலாறு கூறுகிறது.

    சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடு. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும்.

    இக்கோவிலில் அமைந்துள்ள ஆதிமூலவர் சிலா விக்கிரகம் பல்லவர் காலத்தை சேர்ந்தது.

    கடந்த 1968-ம் ஆண்டு உபயதாரர்களால் 5 நிலை ராஜகோபுரம் புதியதாக கட்டப்பட்டது.

    இக்கோவில் பிரார்த்தனை தலமாக உள்ளது.

    இத்திருக்கோவிலில் மரகத பச்சைக் கற்களால் ஆன சிவன், அம்பாள், விநாயகர், நந்தி, மயில் மற்றும் பைரவர் விக்கிரகங்கள் உள்ளன.

    முருகர் சன்னதியின் வலதுபுறம் அண்ணாமலையார், உண்ணாமலை அம்பாள் சன்னதி உள்ளது.

    இவர்களுக்கு நடுவில் கல்யாண கோலத்தில் வள்ளியும், முருகனும் கைகோர்த்து நிற்பது அற்புதச் சிறப்பாகும். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொடர்ந்து 6 வாரம் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
    • அதிலும் சொந்த வீடு மற்றும் திருமண தடை நீங்க இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தான் அதிகம்.

    சின்னஞ்சிறு கிராமமாக இருந்தாலும் இந்த கோவிலை நோக்கி படையெடுக்கும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை கண்கூடாக பார்க்கலாம்.

    அதுவும் முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படும் செவ்வாய்க்கிழமைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும்.

    அன்றைய தினம் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலையாக தான் காட்சி அளிக்கும்.

    தொடர்ந்து 6 வாரம் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

    அதிலும் சொந்த வீடு மற்றும் திருமண தடை நீங்க இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தான் அதிகம்.

    தாங்கள் நினைப்பதை சிறுவாபுரி முருகன் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

    அழகு மயிலில் ஆடி வந்து முருகன் அருணகிரியாருக்கு காட்சிஅளித்த இந்த தலத்திற்கு நான்கு திருப்புகழ் பாடல்கள் உள்ளன.

    புது வீடு கட்டுபவர்கள், புது வீட்டில் குடியேற விரும்புவோர்,சிறுவாபுரி திருப்புகழை ஓதி சிறுவாபுரி முருகனை தரிசித்து மரகத கல்லில் மாட்சியுடன் விளங்கும் மயிலையும், மற்ற மூர்த்திகளையும் வழிபட்டு வாழ்வில் சொந்த வீடு கட்டி மகிழ்ச்சியாக வாழலாம் என்பது உறுதி.

    முருகனால் வாழ்வு பெற்று, முருகனின் வேலால் நாவில் தமிழ் எழுதப்பட்டு, முருகனின் அருளால் பாடல் பாடும் திறமை பெற்ற அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலங்கள் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

    அந்த வகையில் அருணகிரியாரால் நான்கு திருப்புகழ்கள் பாடப்பட்ட சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கேட்ட வரம் அருளும் வல்லமை உடை யவராக கருதப்படுகிறார்.

    • கோவிலின் உயரமான கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொழுவாக வீற்று இருக்கிறது.
    • இக்கோவிலின் தல விருட்சமாக மகிழம் மரம் திகழ்கிறது.

    இங்குள்ள சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி , ஆதிமூலவர் நவக்கிரகம் தவிர மற்ற சிலைகள் அனைத்தும் பச்சைக்கற்களால் ஆனது என்பது தான் விசேஷம்.

    கோவிலின் உயரமான கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொழுவாக வீற்று இருக்கிறது.

    இக்கோவிலின் தல விருட்சமாக மகிழம் மரம் திகழ்கிறது.

    இங்குள்ள முருகனை மனமுறுகி வேண்டினால் பூமி சம்பந்தமாக அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும் , குழந்தை பேறு இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும் கடன் தொல்லை நீங்கவும் சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.

    தை மாதத்தில் கிரகப்பிரவேசத்திற்கு நாள் குறித்து விட்டு நம்பிக்கையுடன் சிறுவாபுரிக்கு 6 வாரம் தொடர்ந்து சென்று வந்தால் சொந்த வீட்டில் குடியேறும் யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இது மட்டும் அல்லாது கல்வி செல்வம் , செல்வ செழிப்பான வாழ்க்கை, கடன் பிரச்சினை தீருதல் என அனைத்து பிரார்த்தனைகளையும் இந்த முருகன் நிறைவேற்றி தருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுவாபுரியில் தங்கி அமுது உண்ட இந்திரன் முதலான தேவர்களுக்கு வீடு பேறு கிடைக்க முருகன் அருளினான்.
    • இத்தலத்து சுப்பிரமணியரை வழிபாட்டால் நல்ல குடும்பம், சிறந்த வீடு அமையும் என்பது ஐதீகம்.

    ஒரு முகமும், நான்கு கரங்களும் விளங்கும்படியாக மூலவர் உள்ளார்.

    வலது கரத்தில் அபயம் அளித்து பின்பக்க வலது கரத்தில் ஜபமாலையும் முன்பக்க இடது கரம் இடுப்பிலும் பின்பக்க இடது கரத்தில் கமண்டலமும் ஏந்தி தம்மைத் தொழுவோர்க்கு அபயம் அளித்துக் காக்கும் பொருட்டு எழுந்தருளி உள்ளார்.

    சூரனை அழித்து வெற்றி பெற்ற முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்ய செல்லும் வழியில் சிறுவாபுரியில் சற்று இளைப்பாறி பிறகு இப்பசுமைச் சோலையில் பாலசுப்பிரமணியராய் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

    சிறுவாபுரியில் தங்கி அமுது உண்ட இந்திரன் முதலான தேவர்களுக்கு வீடு பேறு கிடைக்க முருகன் அருளினான்.

    இத்தலத்து சுப்பிரமணியரை வழிபாட்டால் நல்ல குடும்பம், சிறந்த வீடு அமையும் என்பது ஐதீகம்.

    இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி நாதர் பாடி உள்ளார்.

    இவரை தரிசனம் செய்வதால் வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.

    மணக்கோலத்தில் காட்சி தரும் முருகன் இது போன்று வேறு எங்கும் கிடையாது என்பது சிறப்பு அம்சமாகும்.

    இந்த முருகப்பெருமானை வணங்குவோருக்கு திருமண தடை நீங்கி மனம் போல வாழ்க்கை துணை அமையும் என பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த வேலுக்கு சூடம் ஏற்றி வழிபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
    • இதை தவிர நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் செல்வோரும் இந்த வேலை வணங்கி விட்டு செல்கின்றனர்.

    சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாபுரிக்கு நுழையும் ரோட்டில் முதலில் நம்மை வரவேற்து முருகனின் பிரமாண்ட வேல்தான்.

    ஊரின் நுழைவு வாயிலில் இடதுபுறம் மிக உயரமான அளவில் பிரமாண்ட வேல் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்து அமைப்புகள் சார்பாக இந்த வேல் சுமார் 17 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த வேலுக்கு சூடம் ஏற்றி வழிபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இதை தவிர நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் செல்வோரும் இந்த வேலை வணங்கி விட்டு செல்கின்றனர்.

    • சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த தலத்தில் முருகன் பிரம்ம சாந்த மூர்த்தி தோற்றத்தில் உள்ளார்.
    • பிரம்மனின் செருக்கை அடக்கி, படைத்தல் தொழிலை மேற்கொள்வதற்காக அடைந்த தோற்றமாகும்.

    சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள முருகன் திருத்தலங்களில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தனி சிறப்பு வாய்ந்ததாக திகழ்ந்து வருகிறது.

    சென்னையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இடது பக்கம் (மேற்கு) பிரியும் சாலையில் இருந்து 3 கிலோ மீட்டர் சென்றால் இயற்கை எழில் சூழ்ந்த சிறுவாபுரி என்ற அழகிய கிராமம் வரும்.

    சின்னம் பேடு என்று அழைக்கப்படும் இந்த கிராமத்தின் நடுநாயகமாக பால சுப்பிரமணிய சுவாமி கோவில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ளது.

    இக்கோவிலின் மூலவர் பாலசுப்பிரமணியர் ஆவார்.

    இங்கு முருகர் 4 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் கருணை உள்ளத்தோடு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த தலத்தில் முருகன் பிரம்ம சாந்த மூர்த்தி தோற்றத்தில் உள்ளார்.

    பிரம்மனின் செருக்கை அடக்கி, படைத்தல் தொழிலை மேற்கொள்வதற்காக அடைந்த தோற்றமாகும்.

    ×