என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sister"

    • 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஏமாந்ததை உணர்ந்த சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • கிறிஸ் கெயில் தான் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரதாரர் என்று அவர் என்னிடம் கூறினார்.

    ஐதராபாத்தில் கிரிக்கெட் வீரர் க்றிஸ் கெயில் பெயரை வைத்து ரூ.2.8 கோடி மோசடி செய்ததாக சகோதரன் மீது சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார். 

    அவரது புகாரில், "2019-ல் காபி தூள் தயாரிக்கும் தொழிலை தொடங்கவுள்ளதாகவும், லாபத்தில் 4% பங்கு கொடுப்பதாகவும் சகோதரன் என்னிடம் உறுதியளித்தான். மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தான் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரதாரர் என்று அவர் என்னிடம் கூறினார்.

    சகோதரனின் பேச்சை நம்பி நானும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தேன். மேலும், தனது சுற்றுவட்டாரத்தில் இருந்தும் மொத்தம் ரூ.5.7 கோடி திரட்டிக் கொடுத்தேன்.

    ஆரம்பத்தில் எனக்கு லாபம் என பணம் கொடுத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதை சகோதரன் நிறுத்தியுள்ளான். பல நாட்கள் ஆகியும் பணம் வரவில்லையே என நான் சகோதரனிடம் கேட்டபோது, என்னை தகாத வார்த்தைகளில் அவன் திட்டினான். மொத்தமாக ரூ.5.7 கோடி கொடுத்ததில் ரூ.90 லட்சம் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு நன் ஆளாகியுள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • தருண் டவுன் சாப்டர் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த தருண், திடீரென அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் தைக்கா தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு தருண்(வயது 13) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    தற்கொலை

    இதில் மகள் கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தருண் டவுன் சாப்டர் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்கேல்ராஜ் இறந்துவிட்டார்.

    இதனால் மேரி தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த தருண், திடீரென அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    உடனே அவரது பெற்றோர் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொ டர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் தருண் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தினர்.

    நேற்று தருணுக்கும், அவரது சகோதரிக்கும் இடையே செல்போன் பயன்படுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த தருண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கடந்த 22-ந் தேதி நானும், எனது மனைவி செல்வியும் கூலி வேலைக்காக வெளியே சென்றோம்.
    • திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த, எனது மூத்த மகள் பிரியதர்ஷினி (வயது 17), 2-வது மகள் கீர்த்திகா (15) ஆகிய இருவரையும் காணவில்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, தும்மங்குறிச்சி யைச் சேர்ந்த கேசவன் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ண னிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

    நான், எனது மனைவி செல்வி மற்றும் 2 மகள்கள், 1 மகனுடன் தும்மங்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கேரளாவில் மண் வெட்டி எடுக்கும் வேலை, செய்து வருகிறேன்.

    தற்போது அங்கு மழைக்காலம் என்பதால் வேலை இல்லை. எனவே தும்மங்குறிச்சியில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.

    இந்நிலையில் கடந்த 22-ந் தேதி நானும், எனது மனைவி செல்வியும் கூலி வேலைக்காக வெளியே சென்றோம். திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த, எனது மூத்த மகள் பிரியதர்ஷினி (வயது 17), 2-வது மகள் கீர்த்திகா (15) ஆகிய இருவரையும் காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.

    இதுதொடர்பாக நல்லிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். அங்கு பெண் குழந்தைகள் காணவில்லை என வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. எனினும், இதுவரை எனது 2 மகள் களும் மீட்கப்படவில்லை.

    அவர்கள் காணாமல் போய் 10 நாட்களுக்கு மேல் ஆனதால், இருவருக்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளோம். எனவே எங்களின் 2 மகள்களையும் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். 

    • கிருஷ்ண மூர்த்தியின் காதல் மனைவி தொட்டியம் போலீசில் புகார் செய்தார்.
    • முன்னதாக மனைவியை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு நீதிமன்றத்திற்கு வந்தார்.

    தொட்டியம்:

    கரூர் மாவட்டம் தான் தோன்றி மலை கருப்பம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 25) கோவையில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கரூர் வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்த கோபிகா (வயது 19) என்பவரை கடந்த 11ந் தேதி காதலித்து திருமணம் செய்தார். கிருஷ்ண மூர்த்திக்கு அந்தப் பெண் தங்கை உறவு முறை என்பதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இருவரையும் எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்று கோபிகாவின் உறவினர்கள் கங்கணம் கட்டினர்.

    பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடன் கோபிகாவை பிரித்தனர்.

    இருப்பினும் அவர் காதல் கணவருடன் வாழ்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து சில தினங்களில் பெற்றோரின் பிடியிலிருந்து தப்பி கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து கொண்டார்.

    பின்னர் அவர் காதல் மனைவியை கோவைக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்த தொடங்கினார். இந்நிலையில் ஏற்கனவே நடந்த ஒரு அடிதடி வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டம் தொட்டியம் நீதி மன்றத்திற்கு கிருஷ்ண மூர்த்தி ஆஜராக வந்தார்.

    முன்னதாக மனைவியை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு நீதிமன்றத்திற்கு வந்தார். இதனை மோப்பம் பிடித்துக் கொண்ட கோபிகாவின் உறவினர்கள் மீண்டும் அவர்களை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என திட்டமிட்டு நீதிமன்றத்தில் இருந்து வீடு திரும்பிய கிருஷ்ண மூர்த்தியை காரில் கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து கிருஷ்ண மூர்த்தியின் காதல் மனைவி தொட்டியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி கரூர் மாவட்டம் ஆர். புதுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீநாத் (24), அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் (25), கரூர் கோயம்பள்ளி பகுதியை சேர்ந்த சரவணன் (29), அதே ஊரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, கோபிகாவை கடத்திச் செல்லும் முடிவில் கடத்தல் புள்ளிகள் வந்தனர். ஆனால் கிருஷ்ணமூர்த்தி அவரை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு வந்ததால் வேறு வழியில்லாமல் கிருஷ்ண மூர்த்தியை கடத்தியுள்ளனர்.

    கைதான நான்கு பேரும் கோபிகாவின் நெருங்கிய உறவினர்கள் என்றனர்.

    தங்கை உறவுமுறை கொண்ட இளம் பெண்ணை காதல் திருமணம் செய்த விவகாரத்தில் புது மாப்பிள்ளை கடத்தப்பட்ட சம்பவம் தொட்டியம் மற்றும் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குழந்தை அனந்துவை அங்குள்ள அங்கன்வாடி மையத்தின் அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசியுள்ளார்.
    • தகவலறிந்த குழந்தையின் தாய் சிந்து மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கொன்னியூர் பகுதியை சேர்ந்த தம்பதி ஸ்ரீகண்டன்-சிந்து. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது குழந்தை அனந்து (வயது 1½).

    சம்பவத்தன்று சிந்து தனது வீட்டுக்கு வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவரது குழந்தை அனந்து வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த குழந்தையை, சிந்துவின் சகோதரியான பிந்து வீட்டுக்குள் இருந்து வெளியே தூக்கிச் சென்றிருக்கிறார்.

    பின்பு குழந்தை அனந்துவை அங்குள்ள அங்கன்வாடி மையத்தின் அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசியுள்ளார். குழந்தையை கிணற்றில் வீசியது குறித்து அந்த பகுதியில் இருந்த தொழிலாளர்களிடம் பிந்து தெரிவித்திருக்கிறார்.

    அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், கிணற்றுக்குள் பார்ததனர். அப்போது கிணற்றுக்குள் குழந்தை அனந்து பிணமாக கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த குழந்தையின் தாய் சிந்து மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    குழந்தையின் பிணத்தை பார்த்து தாய் சிந்து கதறினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். குழந்தையை கிணற்றில வீசி கொன்ற பிந்துவை கைது செய்தனர்.

    அவர் எதற்காக குழந்தையை கொன்றார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிந்து மனநலம் பாதித்தவர் என்ப தும், மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. 1½ வயது குழந்தையை தாயின் சகோதரியே கிணற்றில வீசி கொன்ற சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • பள்ளி விடுமுறையை ஒட்டி தனது மகளை ஆந்திராவின் ஹிந்தூர்பூர் நகரில் வசித்து வரும் சகோதரி வீட்டிற்கு தாய் அனுப்பி வைத்துள்ளார்.
    • குழந்தையை காசு கொடுத்து வங்கியுள்ளதாக பண்ணையார் கூறியுள்ளார்

    கர்நாடகாவின் தும்கூரு நகரைச் சேர்ந்த சகோதரியின் 11 வயது மகளை விற்று பெண் ஒருவர் தனது கடனை அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறையை ஒட்டி தனது மகளை ஆந்திராவின் ஹிந்தூர்பூர் நகரில் வசித்து வரும் சகோதரி வீட்டிற்கு தாய் அனுப்பி வைத்துள்ளார்.

    ஆனால் இப்போது மகளை திருப்பி அழைத்துசெல்ல தாய் வந்தபோது அவ்வூர் பண்ணையாரிடம் வாங்கிய தனது ரூ.35,000 கடனை அடைப்பதற்காக சகோதரி தனது குழந்தையை அவரிடம் விற்றுள்ளதை அறிந்து அதிர்ச்சியில் உரைத்தார். அந்த நிலக்கிழார், 11 வயது சிறுமியை வீட்டு வேலைகள் செய்யவைத்து கொடுமைஇப் படுத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில் குழந்தையின் தாய் வந்து கேட்டும், தான் குழந்தையை காசு கொடுத்து வங்கியுள்ளதாகவும், தனது பணத்தை கொடுத்துவிட்டு குழந்தையை அழைத்துசெல்லும்படி கூறியுள்ளார். இதனால தாய் சென்று போலீசில் புகார் அளிக்கவே, குழந்தையை மீது போலீசார் தாயுடன் அனுப்பி வைத்தனர் இதுதொடர்பாக வழக்கு பதித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • ஷ்ரவ்யா என்ற இளம்பெண் (19) தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • அவரது அக்காவுடன் ஷ்ரவ்யா பெட்ஷீட்டுக்காக சண்டை போட்டுள்ளார்.

    பெங்களூரு நகரின் சாமராஜ் பேட்டை பகுதியில் அக்காவுடன் பெட்ஷீட்டுக்காக சண்டைபோட்ட தங்கை தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஷ்ரவ்யா என்ற இளம்பெண் (19) தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 18 ஆம் தேதி அவரது அக்காவுடன் ஷ்ரவ்யா பெட்ஷீட்டுக்காக சண்டை போட்டுள்ளார்.

    நேற்று காலை ஷ்ரவ்யா தனது அறையின் கதவை பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது ஷ்ரவ்யா தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    • கழுத்து மற்றும் பிற உடல் பாகங்களில் பலமுறை குத்தி கொலை செய்துள்ளார்.
    • அதன்பின் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    தன்னை விட சகோதரி மீது அதிகம் அன்பு செலுத்திய வயதான தாயை மகள் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கிழக்கு குர்லாவின் குரேஷி நகரில் வசித்து வந்தவர் சபீரா பானு ஷேக் (71). இவரது 41 வயது மகள் மகள் ரேஷ்மா முஃபர் காசி[ Reshma Muffar Qazi]. கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டில் இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது.

    அப்போது சமையலறை காய்கறி வெட்டும் கத்தியால் தாய் சபீராவை வயிறு, மார்பு, கழுத்து மற்றும் பிற உடல் பாகங்களில் பலமுறை குத்தி கொலை செய்துள்ளார். அதன்பின் அருகில் உள்ள சுனாபாட்டி[Chunabhatti] காவல் நிலையத்துக்கு சென்று குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

     

    காசி தனது மூத்த சகோதரியை அவர்களின் தாய் அதிகமாக நேசிப்பதாக நினைத்து பொறாமை கொண்டு இந்த கொலையை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து குற்றத்தை உறுதி செய்த பின்னர் காசியை போலீஸ் கைது செய்துள்ளது. 

    மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை தான் பெற்றுக்கொள்ளப்போவது இல்லை என்று நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேதா அறிவித்து உள்ளார். #PadmaShriAward #GitaMehta #NaveenPatnaik
    புவனேசுவரம்:

    மத்திய அரசு நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட 94 பேரில் 76 வயதான எழுத்தாளர் கீதா மேதாவும் ஒருவர். ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரியான இவர் ஆவண படங்களையும் தயாரித்து இயக்கி இருக்கிறார். இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய சேவைக்காக கீதா மேதாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால், தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை தான் பெற்றுக்கொள்ளப்போவது இல்லை என்று கீதா மேதா அறிவித்து உள்ளார்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் அவர், இது தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், “பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியானவர் என கருதி மத்திய அரசு என்னை தேர்ந்தெடுத்து கவுரவித்து இருக்கிறது. ஆனால் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் எனக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருப்பது தவறாக புரிந்து கொள்ளப்படலாம். இதனால் எனக்கும், அரசுக்கும் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும் என்பதால், விருதை நான் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறி உள்ளார். #PadmaShriAward #GitaMehta #NaveenPatnaik

    தங்கையை கணவர் கடத்திச் சென்றதால் வேதனையடைந்த மனைவி 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றார்.

    பழனி:

    பழனி அருகே உள்ள கோதைமங்களத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 40). அ.தி.மு.கவைச் சேர்ந்த இவர் பழனி மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனராக உள்ளார். அவரது மனைவி தங்கவில்லம்மாள் (30). இவர்களுக்கு ஜெயராஜ் (5), அயன் சேவுககுமார் (4) ஆகிய மகன்கள் உள்ளனர்.

    தங்கவில்லம்மாளின் தங்கை சத்யா (25). இவருக்கு ராமமூர்த்தி என்பவருடன் திருமணம் ஆகி தனியாக வசித்து வந்தார். சத்யாவுக்கும் இளைராஜாவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

    இது குறித்து தங்க வில்லம்மாள் தனது கணவரை கண்டித்தார். அதற்கு இளையராஜா தகாத உறவு வைத்துக் கொள்வது தவறு இல்லை என்று கோர்ட்டிலேயே சொல்லப்பட்டு விட்டது என கூறி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று இளையராஜா யாருக்கும் தெரியாமல் சத்யாவை கடத்திச் சென்று விட்டார். இதனால் வேதனையடைந்த தங்கவில்லம்மாள் தனது 2 குழந்தைகளுக்கும் சாணிபவுடரை கொடுத்து தானும் அதனை குடித்தார். 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    தனது மனைவி வேறு நபருடன் சென்றதால் சத்யாவின் கணவர் ராமமூர்த்தியும் வி‌ஷம் குடித்து பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். வி‌ஷம் குடித்த 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஒரே நேரத்தில் 4 பேரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் நேற்றிரவு தனியாக சுற்றி திரிந்த அக்கா, தம்பியை ரெயில்வே போலீசார் மீட்டனர்.
    சேலம்:

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் நேற்றிரவு வழக்கம் போல பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது 1-வது பிளாட்பார்மில் ஒரு சிறுமியும், ஒரு சிறுவனும் தனியாக நீண்ட நேரமாக சுற்றி சுற்றி வந்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சேலம் மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த காளியப்பன் மகள் பிரியா (8) மற்றும் அவரது தம்பி அருள் (5) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் எதற்காக வீட்டில் இருந்து அப்போது ரெயில் நிலையத்திற்கு வந்தனர் என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் 2 பேரையும் சேலம் மாநகர சைல்ட் லைன் அமைப்பிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த சிறுமி மற்றும் சிறுவனை இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்கள்.

    கஜா புயல் நிவாரணத்துக்கு உண்டியல் பணத்தை வழங்கிய அண்ணன், தங்கையை அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி பாராட்டினார். #GajaCyclone
    அரியலூர்:

    அரியலூரை சேர்ந்த ஜெயக்குமார்-சுபாலதா தம்பதியரின் மகன் நிறை நெஞ்சன் (வயது 14), மகள் சாதனா (9). தாமரைக்குளத்தில் உள்ள ஒரு பள்ளியில் நிறைநெஞ்சன் 9-ம் வகுப்பும், சாதனா 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    மாணவர்களான இவர்களுக்கு பெற்றோர் தினந்தோறும் வழங்கும் பாக்கெட் மணியை உண்டியலில் சேமித்து வைத்து வந்தனர்.

    தற்போது கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட தகவலை அறிந்த இருவரும் உதவ முடிவு செய்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தினை எண்ணியுள்ளனர். மொத்தம் ரூ.7 ஆயிரத்து 200 இருந்தது. அதனை எடுத்துக்கொண்டு பெற்றோருடன் அரியலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் பணத்தினை ஒப்படைத்ததோடு, அதனை வைத்து தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கூறியுள்ளனர்.

    அதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் விஜயலட்சுமி, மாணவர்களான நிறை நெஞ்சன், சாதனா ஆகியோரை பாராட்டினார்.  #GajaCyclone
    ×