என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sl19vind19
நீங்கள் தேடியது "SL19vIND19"
19 வயதிற்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. #U19Cricket #ArjunTendulkar
கொழும்பில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை இளைஞர்கள் 244 ரன்கள் சேர்த்தனர். சூரியபந்தாரா அதிகபட்சமாக 69 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் ஹர்ஷ் தியாகி, படோனி தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
பின்னர் இந்திய இளைஞர்கள் பேட்டிங் செய்தார்கள். டைட் (113), படோனி (185 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 589 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பில் செனாரத்னே 6 விக்கெட் வீழ்த்தினார்.
345 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை இளைஞர்கள் 2-வது இன்னிங்சை தொடங்கினார்கள். அந்த அணியின் தொடக்க வீரர் பெர்னாண்டோ 104 ரன்களும், நுவானிது பெர்னாண்டோ 78 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 324 ரன்கள் ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்திய இளைஞர்கள் அணி இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் ஜங்க்ரா 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் அறிமுகமானார். அவர் முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி 24-ந்தேதி ஹம்பன்டோடாவில் தொடங்குகிறது.

×

X