search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோக்கியா"

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை மே 29-ம் தேதி வெளியிட இருக்கிறது. இதற்கான டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை மே 29-ம் தேதி வெளியிட இருப்பதை புதிய டீசர்களின் மூலம் தெரிவித்துள்ளது. புதிய டீசருடன் #ChargedUp என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருப்பதால் புதிய சாதனம் அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்துடன் புதிய சாதனம் நோக்கியா X6 சர்வதேச மாடலாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா X6 ஸ்மார்ட்போனில் க்விக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருந்தது, இது ஸ்மார்ட்போனினை 0-50% சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே எடுத்துக் கொள்கிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் நோக்கியா 2, நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்களை ஹெச்எம்டி குளோபல் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கபக்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.



    நோக்கியா மொபைல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் மே 29-ம் தேதி மாஸ்கோவில் நடைபெற இருக்கும் விழாவில் புதிய நோக்கியா சாதனம் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வு மாஸ்கோ நேரப்படி இரவு 7.40 மணி (இந்திய நேரப்படி இரவு 10.10 மணி) துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் படி மே 29-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் நோக்கியா X6 ஸ்மார்ட்போனின் சர்வேதச மாடல் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் சர்விகாஸ் நோக்கியா X6 சர்வதேச மாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கேட்டிருந்தார்.



    நோக்கியா X6 சிறப்பம்சங்கள்:

    - 5.8 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 19:9 ரக டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஆன்ட்ராய்டு பி அப்டேட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3060 எம்ஏஹெச் பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

    நோக்கியா X6 ஸ்மார்ட்போன் புளு, பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் நோக்கியா X6 (4 ஜிபி ரேம்+ 32 ஜிபி மெமரி) விலை 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,830) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா X6 (4 ஜிபி ரேம்+ 64 ஜிபி மெமரி) விலை 1499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.15,980) என்றும், நோக்கியா X6 (6 ஜிபி ரேம்+ 64 ஜிபி மெமரி) விலை 1699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.18,090) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சீனாவில் இதுவரை இரண்டு முறை ஃபிளாஷ் விற்பனை செய்யப்பட்டு இருக்கும் நோக்கியா X6 நொடிகளில் விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சீன சந்தையில் புதிய நோக்கியா X6 ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது தெளிவாக தெரிகிறது.

    நோக்கியா X6 சர்வதேச மாடல் மட்டுமின்றி நோக்கியா 2, நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களும் மே 29-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டூயல் கேமரா செட்டப் கொண்ட நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனும் இதே விழாவில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.
    ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையுடன் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கியுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு எளிய மாத தவனை முறை வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்களுக்கு எளிய மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.

    அதன்படி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை வாங்க குறைந்தபட்சம் ரூ.3799 முன்பணமாக செலுத்தினால் போதும். இந்த ஸ்மார்ட்போன்கள் ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் (www.airtel.in/onlinestore) கிடைக்கிறது. இவற்றுடன் போஸ்ட்பெயிட் சலுகையும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதன் மாத தவனை முறையில் குறைந்தபட்சம் மாதம் ரூ.1499 முதல் துவங்குகிறது.



    3 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனினை ஏர்டெல் வலைத்தளத்தில் ரூ.3799 முன்பணம் செலுத்தி வாங்க முடியும். இதன் பின் 12 மாதங்களுக்கு ரூ.1,499 மாத தவனையாக செலுத்த வேண்டும். இவற்றுடன் பில்ட்-இன் போஸ்ட்பெயிட் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகைகளில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 30 ஜிபி டேட்டா மற்றும் ரோல்ஓவர் வசதி, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், இலவச ஏர்டெல் டிவி சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. நோக்கியா 6.1 (4 ஜிபி ரேம்) ஸ்மார்ட்போன் வாங்க ரூ.5,799 முன்பணமாக செலுத்தி, 12 மாதங்களுக்கு ரூ.1,499 செலுத்த வேண்டும்.

    நோக்கியா 7 பிளஸ் வாங்குவோர் ரூ.5,599 முன்பணமாக செலுத்தி, 12 மாதங்களுக்கு ரூ.2,099 செலுத்த வேண்டும். முந்தைய நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் அதே போஸ்ட்பெயிட் சலுகைகள் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கும் வழங்கப்படுகிறது.



    நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் வாங்க ரூ.8,599 முன்பணம் செலுத்தி, 18 மாதங்களுக்கு ரூ.2,799 செலுத்த வேண்டும். இந்த ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் போஸ்ட்பெயிட் சலுகைகளில் மாதம் 50 ஜிபி டேட்டா, ரோல்ஓவர் சலுகை, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு ஆண்டு அமேசான் பிரைம் சந்தா, இலவச ஏர்டெல் டிவி சந்தா மற்றும் ஏர்டெல் செக்யூர் டிவைஸ் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஏர்டெல் டிவி செயலிக்கான இலவச சந்தா டிசம்பர் 31, 2018 வரை வழங்கப்படுகிறது.

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவோர், அதிகாரப்பூர்வ ஏர்டெல் வலைத்தளத்துக்கு சென்று சாதனத்தை தேர்வு செய்து, முன்பணம் செலுத்தலாம். ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்பட்டு, ஆக்டிவேட் ஆனதும் போஸ்ட்பெயிட் சலுகை தானாக ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும்.
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் மே 29-ம் தேதி ரஷ்யாவில் ஊடக விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது, இதில் புதிய நோக்கியா போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இம்மாத இறுதுயில் ஊடக விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான அழைப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், இவ்விழாவில் அந்நிறுவனம் புதிய நோக்கியா போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஹெச்எம்டி குளோபல் ஊடக விழாவில் அந்நிறுவனத்தின் ஃப்ளோரியன் செய்ச், பெக்கா ரன்டாலா மற்றும் ஜூஹோ சர்விகாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஹெச்எம்டி குளோபல் அழைப்பிதழில் புதிய நோக்கியா போன்களுக்கான சர்வதேச வெளியீட்டுக்கு வரவேற்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.



    சர்வதேச வெளியீடு என்பதால் புதிய நோக்கியா போன்களின் விவரங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் TA-1075, TA-1105 மற்றும் TA-1116 மாடல் நம்பர் கொண்ட நோக்கியா போன்கள் ரஷ்யாவில் சான்றளிக்கப்பட்டன. இவற்றின் பெயர்களும் இதுவரை அறியப்படவில்லை.

    நோக்கியா 8 சிரோக்கோ மற்றும் நோக்கியா 8110 4ஜி தவிர நோக்கியாவின் 2018 மாடல்கள் ஏற்கனவே ரஷ்யாவில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் மே 29-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் நோக்கியா 2, நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்களின் 2018 வெர்ஷன் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா X6 ஸ்மார்ட்போனினை சீனாவில் வெளியிட்டது. ஐபோன் X தோற்றம் கொண்ட நோக்கியா X6 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. புதிய நோக்கியா X6 மற்ற நாடுகளில் வெளியாவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நோக்கியா X சீரிஸ் இன் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். புதிய நோக்கியா X6 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, நாட்ச், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது. 

    ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் நோக்கியா X6 ஸ்மார்ட்போனில் 16 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமராக்கள், 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருப்பதோடு டூயல் வோல்ட்இ சப்போர்ட், 3060 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    நோக்கியா X6 சிறப்பம்சங்கள்:

    - 5.8 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 19:9 ரக டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஆன்ட்ராய்டு பி அப்டேட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3060 எம்ஏஹெச் பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

    நோக்கியா X6 ஸ்மார்ட்போன் புளு, பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் நோக்கியா X6 (4 ஜிபி ரேம்+ 32 ஜிபி மெமரி) விலை 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,830) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா X6 (4 ஜிபி ரேம்+ 64 ஜிபி மெமரி) விலை 1499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.15,980) என்றும், நோக்கியா X6 (6 ஜிபி ரேம்+ 64 ஜிபி மெமரி) விலை 1699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.18,090) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடல் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் இந்திய விற்பனை இன்று முதல் துவங்கி்யது. அமேசான் இந்தியா வலைத்தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் முன்னதாக 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விற்பனை செய்யப்பட்டது. 

    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், ஆன்ட்ரய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    மெட்டல் யுனிபாடி வடிவைப்பு கொண்டிருக்கும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் நோக்கியாவின் டூயல் சைட் / போத்தி அம்சம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஃபேஸ் அன்லாக் OTA அப்டேட் மூலம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    நோக்கியா 6.1 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630
    - அட்ரினோ 508 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், PDAF, 1.0um பிக்சல், f/2.0
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, 1.12 பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    இந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் விலை ரூ.18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 3 ஜிபி ரேம் மாடல் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    நோக்கியா 6.1 அறிமுக சலுகைகள்:

    - ஏர்டெல் 4ஜி சந்தாதாரர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக்
    - டிசம்பர் 31, 2018 வரை இலவச ஏர்டெல் டிவி சந்தா
    - சர்விஃபை வழங்கும் 12 மாதங்களுக்கான டேமேஜ் இன்சூரன்ஸ்
    - மேக்மைட்ரிப் சார்பில் உள்நாட்டு முன்பதிவுகளுக்கு 25% தள்ளுபடி
    - வட்டியில்லா மாத தவனை முறை வசதி
    சீனாவில் மே 16-ம் தேதி வெளியாக இருக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் நோக்கியா X6 என அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    சீனாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஹெச்எம்டி குளோபல் சமீபத்தில் அறிவித்து ஸ்மார்ட்போனினை சேன்லிடன் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரில் காட்சிப்படுத்தியது.

    நோக்கியா TA-1099 ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்தது. தற்சமயம் நோக்கியா X6 என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன் ப்ளூடூத் சான்று பெற்றிருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0 மற்றும் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் கொண்டுள்ளது.



    இதுதவிர நோக்கியா TA-1075, TA-1105 மற்றும் TA-1116 மூன்று மாடல்கள் ரஷ்யாவில் சான்றளிக்கப்பட்டுள்ளது. எனினும் புதிய ஸ்மார்ட்போன்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.



    நோக்கியா X6 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.8 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 3ஜிபி / 4ஜிபி / 6ஜிபி ரேம்
    - 32ஜிபி / 64ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், ஸ்மார்ட்போன் அறிமுக தினத்தில் முழு விவரங்களும் தெரியவரும்.
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    புதுடெல்லி:

    நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மாடல் நோக்கியா 6.1 என அழைக்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மே 13-ம் தேதி விற்பனைக்கும் வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஹெச்எம்டி குளோபல் புதிய ஸ்மார்ட்போனின் விலையை அறிவித்துள்ளது.

    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், ஆன்ட்ரய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    மெட்டல் யுனிபாடி வடிவைப்பு கொண்டிருக்கும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் நோக்கியாவின் டூயல் சைட் / போத்தி அம்சம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஃபேஸ் அன்லாக் OTA அப்டேட் மூலம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    நோக்கியா 6.1 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630
    - அட்ரினோ 508 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், PDAF, 1.0um பிக்சல், f/2.0
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, 1.12 பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி



    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் பிளாக்/காப்பர், வைட்/ஐயன் மற்றும் புளு/கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. மே 13-ம் தேதி முதல் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் நோக்கியா 6.1 விலை இந்தியாவில் ரூ.18,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தற்சமயம் விற்பனையாகும் நோக்கியா 6 (2018) 3 ஜிபி ரேம் / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    நோக்கியா 6.1 அறிமுக சலுகைகள்:

    - ஏர்டெல் 4ஜி சந்தாதாரர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக்
    - டிசம்பர் 31, 2018 வரை இலவச ஏர்டெல் டிவி சந்தா
    - சர்விஃபை வழங்கும் 12 மாதங்களுக்கான டேமேஜ் இன்சூரன்ஸ்
    - மேக்மைட்ரிப் சார்பில் உள்நாட்டு முன்பதிவுகளுக்கு 25% தள்ளுபடி
    - வட்டியில்லா மாத தவனை முறை வசதி
    ×