search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100153"

    குடகு மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்றும், நிவாரண முகாம்களிலும் வகுப்பு நடத்தப்படும் என்றும் குமாரசாமி அறிவித்துள்ளார். #Kodaguflood #kumarasamy
    பெங்களூரு :

    குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல்-மந்திரி குமாரசாமி அங்கு 2 நாட்கள் ஹெலிகாப்டரில் பறந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அங்கு மழை குறைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்புகிறது.

    இந்த நிலையில் குடகு மாவட்ட பொறுப்பு மந்திரி சா.ரா.மகேஷ் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரை குமாரசாமி நேற்று தொடர்பு கொண்டு நிவாரண பணிகள் குறித்த விவரங்களை கேட்டு அறிந்தார். இதுபற்றி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நிவாரண முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு வெந்நீர் வழங்க கியாஸ் மூலம் சுடுநீராக்கும் சாதனம், சமையல் கியாஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க குடகில் 5 இடங்களில் கிடங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்த கிடங்குகள் மூலம் 100 வாகனங்களில் நிவாரண பொருட்களை எடுத்துச் சென்று வினியோகம் செய்யப்படுகிறது.



    பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது தார்ப்பாய் மற்றும் பிளாஸ்டிக் பைகள் தேவைப்படுகிறது. இதுதவிர மற்ற பொருட்கள் பெருமளவில் வந்து சேர்ந்துள்ளன. குடகு மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல்-டீசல் மக்களுக்கு கிடைப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்படி உணவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    50 ஆயிரம் உணவுப்பொருள் தொகுப்பை மக்களுக்கு வழங்கும் பணியை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 61 பள்ளிகளை தவிர மற்ற இடங்களில் பள்ளிகளை இன்று(வியாழக்கிழமை) திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    பள்ளி குழந்தைகளுக்கு புதிதாக 5 ஆயிரம் பாடப்புத்தகங்களை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கும் அங்கேயே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்களை சரிசெய்யும்படி பொதுப்பணித்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இனி வரும் நாட்களில் சாலைகளில் இதுபோன்ற சேதங்களை தடுக்க பாதுகாப்பு சுவர்கள், மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வரும் நாட்களில் இயற்கை பேரிடர்களை தடுக்கும் வகையில் மழை நீர் எந்த பிரச்சினையும் இன்றி செல்ல திட்டமிட்டு கால்வாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்ய அதற்கான நிலத்தை அடையாளம் காணும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள், பயிர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில் நிவாரண உதவி வழங்கப்படும்.

    வெள்ளத்தால் நில ஆவணங்களை இழந்தவர்களுக்கு புதிய ஆவணங்கள் வழங்கப்படும். சாலைகள் சேதம் குறித்து பறக்கும் கேமரா மூலம் ஆய்வு நடத்தப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #Kodaguflood #kumarasamy
    கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளச்சேதங்களை ஹெலிகாப்டரில் பார்வையிடாமல் முதல்-மந்திரி குமாரசாமி பேப்பர் படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. #KarnatakaFloods #karnatakarain
    பெங்களூர்:

    கேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய தென்மேற்கு பருவமழை கர்நாடகத்திலும், மேற்கு தொடர்ச்சி மழை பகுதியிலும்கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும் உடுப்பி மாவட்டத்திலும் வெள்ளசேதம் ஏற்பட்டுள்ளது. மைசூர், மாண்டியா மாவட்டங்களில் காவிரி நீரை அணைகளில் இருந்து அதிக அளவு திறந்து விட்டதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சேதம் ஏற்பட்டது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடகு மாவட்டத்தின் மீது ஹெலிகாப்டர் பறந்து சென்றபோது அங்கு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை அதிகாரிகளும், விமானப்படை ஊழியர்களும் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டு இருந்தனர்.


    ஆனால் குமாரசாமி அதை கவனிக்காமல் பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார். இதனால் அதிகாரிகளும், விமானப்படையினரும் அதிர்ச்சி அடைந்தனர். குமாரசாமி நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை பார்க்காமலேயே அந்த இடத்தை விட்டு ஹெலிகாப்டர் கடந்து வேறு பகுதிக்கு சென்றுவிட்டது.

    குமாரசாமி ஹெலிகாப்டரில் பேப்பர் படிக்கும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ‘‘இந்த நாட்டின் முதல்-மந்திரிகளில் ஒருவர் வெள்ளச்சேதத்தை பார்வையிடுவதை பாருங்கள்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குமாரசாமி பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாக கர்நாடக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  #KarnatakaFloods #karnatakarain #KodaguFloods #kumaraswamy 
    குடகில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு தலா ரூ.3,800 நிதி உதவி வழங்கப்படும் என்று கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். #KarnatakaRain #FloodHitKodagu
    பெங்களூரு:

    ‘கர்நாடகத்தின் ஸ்காட்லாந்து‘ என்று அழைக்கப்படும் குடகில் கடந்த ஒருவாரமாக மழை கோரதாண்டவமாடியது.

    இதனால் மடிகேரி, சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை ஆகிய தாலுகாக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மடிகேரி தாலுகா நாகபொக்லு, முக்கொட்லு, சுண்டிகொப்பா, மக்கந்தூர், பாடக்கேரி, தொட்டபெலகுந்தா, பாலூர், கல்லூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் சிக்கி நாசமாகியுள்ளன. இதன் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பரிதவித்து வருகிறார்கள்.



    மொத்தத்தில் மழையின் கோரபசிக்கு குடகு மாவட்டம் உருக்குலைந்து போய் கிடக்கிறது. கனமழையின் கோரதாண்டவத்தில் சிக்கிய குடகு மாவட்டத்தில் மீட்பு பணிகளை கர்நாடக அரசு முடுக்கிவிட்டுள்ளது. மேலும் அரசு சார்பில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் குடகு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்கள் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தில் நான் 2 நாட்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டேன். பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழைக்கு இதுவரை 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். 845 வீடுகள் முழுவதுமாகவும், 773 வீடுகள் பாதி அளவும் சேதம் அடைந்துள்ளன. 123 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

    58 பாலங்கள், 278 அரசு கட்டிடங்கள், 3,800 மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. சில சாலைகள் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளன. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களில் இன்று (அதாவது நேற்று) காலை 10 மணி வரை 4,320 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளதால் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    குடகு மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை, கர்நாடக போலீஸ் ஆயுதப்படை, ராணுவம், விமானப்படை, கடற்படை, தேசிய இயற்கை பேரிடர் மீட்பு குழு, மாநில அரசின் வருவாய்த்துறை, ஊர்க்காவல் படையை சேர்ந்த 1,725 பேர் சிறப்பு பயிற்சி பெற்று போர்க்கால அடிப்படையில் 24 மணி நேரமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மக்களை மீட்கும் பணிக்காக வந்துள்ளன.

    கர்நாடக அரசின் தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வெள்ள சேதங்கள் மற்றும் நிவாரண பணிகள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறார்கள். ஜனாதிபதி, பிரதமர், மத்திய ராணுவ மந்திரி ஆகியோர் என்னிடம் பேசி விவரங்களை கேட்டு பெற்றனர். தலைமை செயலாளர் இன்று (அதாவது நேற்று) குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் கூட்டம் நடத்தி விவரங்களை பெற்றார். நிவாரண பணிகள் குறித்து சில உத்தரவுகளை தலைமை செயலாளர் பிறப்பித்துள்ளார்.

    தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி ஆகிய மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புகிறது. குடகு மாவட்டத்தில் மழை சிறிதளவுக்கு குறைந்திருந்தபோதும், அங்கு நிவாரண பணிகளை மேற்கொள்வதில் சவாலாக உள்ளது. மாவட்ட பொறுப்பு மந்திரி, பொறுப்பு செயலாளர், தீயணைப்புத்துறை டி.ஜி.பி., கூடுதல் தலைமை செயலாளர்கள் 2 பேர் குடகு மாவட்டத்திலேயே தங்கி நிவாரண பணிகளை நிர்வகித்து வருகிறார்கள்.

    மைசூரு, தட்சிண கன்னடா மாவட்டங்களை சேர்ந்த சில அதிகாரிகளையும் குடகுக்கு அனுப்பி இருக்கிறோம். குடகு மாவட்டத்தில் 41 நிவாரண முகாம்கள், தட்சிண கன்னடா மாவட்டத்தில் 9 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் 6,620 பேர் இந்த நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த நிவாரண முகாம்களுக்கு பால், உணவு வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

    மாநிலம் முழுவதும் இருந்து வரும் நிவாரண பொருட்கள் குடகு மாவட்ட நிர்வாகம் சார்பில் பெறப்படுகிறது. அந்த நிவாரண பொருட்கள் கிராம பஞ்சாயத்து வாரியாக பிரித்து மக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 5 மருத்துவ குழுக்கள், 10 வருவாய்த்துறை குழுக்களை குடகுக்கு அனுப்பி இருக்கிறோம். 60 பொக்லைன் எந்திரங்கள், 20 ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு அடுத்த 10 நாட்களில் தற்காலிக அலுமினியம் கொட்டகைகள் அமைத்து கொடுக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குசால்நகரில் 3 லே-அவுட்டுகள் முழுவதுமாக நீரில் மூழ்கி இருக்கின்றன. அங்கிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்த வெள்ளம் வடிந்த பிறகு அடுத்து வரும் சவால் என்னவென்றால், மக்களின் உடல் ஆரோக்கியம். தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் குழுக்களை குடகுக்கு அனுப்பி இருக்கிறோம். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மழையால் ஏற்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

    குடகு மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் வெள்ளத்தில் சிக்கி சேதம் அடைந்துவிட்டதால், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு புதிதாக பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும். குடகு மாவட்டத்தில் நிவாரண முகாம் களில் உள்ளவர்களுக்கு உடனடியாக ஒரு குடும்பத்திற்கு ரூ.3,800 வீதம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் பாதிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் குடும்பங்களுக்கு தினசரி உணவு பொருட்களை வழங்க 10 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பாகமண்டலா- நாபொக்லு, அய்யங்கேரி, சுள்ளியா-மடிகேரி சாலையில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குடகு மாவட்டத்தில் மின் வினியோகத்தை சரிசெய்ய கர்நாடக மின்சார கழகம் மற்றும் பெங்களூரு மின் வினியோக கழகங்கள் மூலம் மின் ஊழியர்கள் அடங்கிய குழுக்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன.

    குடகு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 20 நாட்கள் விடுமுறை விடப்பட்டன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த உத்தரவிட்டுள்ளேன். குடகு மாவட்டத்தில் அரசு துறைகளில் காலியாக பணியிடங்களை நிரப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கு பணி இடமாறுதல் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளோம்.

    அந்த மாவட்டத்தில் தாலுகா வாரியாக ஏற்பட்டுள்ள சேதம் குறித்த அறிக்கையை தயாரிக்கவும், வீடுகளை கட்டி கொடுக்கும் பணிகளை நிர்வகிக்கவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ விரும்புவோர் முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பலாம்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.  #KarnatakaRain #FloodHitKodagu
    கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். #KarnatakaFlood #Landslide #Kumaraswamy
    குடகு:

    கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது, குடகு மாவட்டம். இந்த மாவட்டத்தில் கனமழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. இதன்காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால், பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.



    இங்குள்ள முக்கொட்லு, காட்டக்கேரி, ஆலேறி, மக்கந்தூர் ஆகிய கிராமங்களில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மண்சரிவால் ஏற்கனவே குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் ஜோடுபாலா பகுதியில் நேற்று முன்தினம் 6 பேர் மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் 6 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் கருதுகிறார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

    குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், கடலோர காவல்படையினர், மாநில மீட்பு குழுவினர், நீச்சல் வீரர்கள், தீயணைப்பு படையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர், மின்வாரிய அதிகாரிகள் என 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டு உள்ளனர்.

    குடகு மாவட்டத்தில் ஆபத்தான பகுதியில் சிக்கி தவித்த சுமார் 3,500 பேரை ராணுவத்தினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். மேடான பகுதியில் இருந்தவர்களை ராணுவத்தினர், கயிறு கட்டியும், செயற்கை பாலம் அமைத்தும் பத்திரமாக மீட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டர் மூலம் குடகு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முன்னதாக, மத்திய மந்திரி சதானந்த கவுடாவும் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும் அவர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.  #KarnatakaFlood #Landslide #Kumaraswamy 
    குடகு மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து குமாரசாமி தலைமையில் இன்று(சனிக்கிழமை) உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது. #KarnatakaRains
    பெங்களூரு :

    குடகு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் இயற்கை பேரிடர் குழு மற்றும் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தலைமை செயலாளர் விஜயபாஸ்கருடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இதுபற்றி குமாரசாமி ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க ராணுவத்தினர், இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தி விவரங்களை கேட்டு பெற்றேன். மைசூரு, மண்டியா, ராமநகர், ஹாசன் மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை மற்றும் வனத்துறை ஊழியர்கள் குடகிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    நிவாரண முகாம்களில் தேவையான உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 200 தன்னார்வ தொண்டர்கள் குடகு மாவட்டத்திற்கு மைசூருவில் இருந்து செல்கிறார்கள். மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, எச்.டி.ரேவண்ணா, சா.ரா.மகேஷ் ஆகியோர் குடகிலேயே தங்கி நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குடகு மாவட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து எனது தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நாளை(அதாவது இன்று) காலை 11.30 மணிக்கு பெங்களூருவில் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #KarnatakaRains
    கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #KarnatakaRains
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதிகப்படியாக கொட்டி தீர்த்ததை அடுத்து, அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் மழையால் பாதிக்கப்பட்டு, மக்கள் தங்கள் இயல்பு வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட தக்‌ஷினா கன்னடா, உடுப்பி, ஹஸன், ஷிமோகா, சிக்கமகலரு மற்றும் உத்தர கன்னடா உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண பகுதிகளுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக கர்நாடக மாநில முதல்மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். #KarnatakaRains
    கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலைக்கு முடிவுகட்டி, நம்பிக்கையூட்டும் வகையில், கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி இன்று வயலில் இறங்கி நாற்று நட்டார். #KarnatakaCM #Kumaraswami
    பெங்களூரு:

    இந்தியா முழுவதும் நலிவடையும் தொழில்களில் விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு விதங்களிலும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதும், தற்கொலை செய்வதுமான விபரீத முடிவுகளை விவசாயிகள் எடுத்துவருகின்றனர்.

    தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகா, தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் இருந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்ற குமாரசாமி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், சீதாபுரா கிராமத்துக்கு இன்று சென்ற கர்நாடக முதல்மந்திரி அங்கு விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகளை நேரில் சந்தித்தார்.

    அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக தாம் அணிந்திருந்த பேண்ட்டை மாற்றிவிட்டு வேட்டி கட்டிய முதல்மந்திரி நிலத்தில் இறங்கி நாற்று நட துவங்கினார். இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனினும் முதல்மந்திரி ஒரு சாதாரண விவசாயி போல வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு நாற்று நட்ட நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    இதைத்தொடர்ந்து பேசிய குமாரசாமி, இங்கு தாம் நாற்று நட்டது யாரிடமும் தம்மை நிரூபிப்பதற்காக இல்லை என்றும், விவசாயிகளுடன் என்றும் தாம் இருப்பேன் என்பதை நிரூபிக்கவே இவ்வாறு தாம் செய்ததாக தெரிவித்தார். மேலும், விவசாயிகள் தற்கொலை போன்ற எவ்வித தவறான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், இனி மாதத்தில் ஒரு நாள் அனைத்து மாவட்ட விவசாயிகளுடனும் தாம் இருப்பதாகவும், அவர்களின் குறையை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். #KarnatakaCM #Kumaraswami
    கர்நாடக முதல்வர் குமாரசாமியை கீழ்த்தரமாக விமர்சனம் செய்து மீம்ஸ் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். #Kumaraswamy #TrollingKumaraswamy
    மங்களூர்:

    கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு எதிராக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் மிகவும் மோசமான விமர்சனங்களும், மீம்ஸ்களும் வெளியாகின. இது காவல்துறையின் கவனத்திற்கு வந்ததும், மங்களூர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

    இந்நிலையில், முதல்வர் குமாரசாமியை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டதாக, தக்சின கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் புஜாரி (வயது 25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் முதல்வரை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து புஜாரி மீம்ஸ் போட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Kumaraswamy #TrollingKumaraswamy

    கர்நாடகத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்த பிறகும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? என்பதற்கான காரணத்தை கண்டறியும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டார். #Kumaraswamy
    பெங்களூரு:

    முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அவர் மாவட்ட கலெக்டர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் விவரம் வருமாறு:-

    1. பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளுக்கு உட்பட்டு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    2. பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை இருப்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வழங்க வேண்டும். அந்த பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    3. கர்நாடகத்தில் 12 மாவட்டங்களில் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. அங்கு வறட்சி ஏற்பட்டால் நிவாரண பணிகளை மேற்கொள்ள தேவையான அறிக்கையை தயாரிக்க வேண்டும்.

    4. ரூ.48ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி மற்றும் பிற உதவிகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு இருந்தும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடப்பது ஏன்?. இதற்கு காரணம் என்ன என்பதை கலெக்டர்கள், அதிகாரிகள் கண்டறிய வேண்டும்.

    5. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால், பிரேத பரிசோதனை அறிக்கையை விரைவாக பெற்று அவர்களின் குடும்பங்களுக்கு அரசின் உதவிகளை விரைவாக வழங்க வேண்டும்.

    6. கர்நாடகத்தில் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் 67 லட்சம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில் சில பிரச்சினைகள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அந்த பயனாளிகளின் ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து அடுத்த 3 மாதங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

    7. ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அனைத்து கிராமங்களிலும் மயான வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

    8. ‘அக்ரம-சக்ரம’ திட்டத்தில் வரும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    9. வன உரிமை சட்டத்தின்படி வரும் மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வசதியாக சட்ட திருத்தம் செய்ய சமூக நலத்துறை அதிகாரிகள் ஒரு அறிக்கையை தயாரித்து வழங்க வேண்டும்.

    10. நில பிரச்சினைகளை தீர்க்க நில அளவையாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இந்த பற்றாக்குறையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    11. பயிர் விளைச்சல் குறித்து விவரங்களை தெரிவிக்க தனியாக ஒரு செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளே தங்களின் செல்போனில் புகைப்படம் எடுத்து அதை அந்த செயலியில் பதிவேற்றம் செய்ய கலெக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    12. மண்டியா, ராமநகர், பெலகாவி ஆகிய மாவட்டங்களில் வருவாய் குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகளவில் நிலுவையில் உள்ளன. அந்த மனுக்கள் மீது அடுத்த ஒரு மாதத்தில் கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    13. கொப்பல் மாவட்டத்தில் ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான முகாம் நடத்தப்பட்டது. 2 முறை இந்த முகாம் நடத்தப்பட்டும், அந்த மாவட்ட மக்கள் மனு கொடுக்க முன்வராதது ஏன்?. இதுபற்றி சம்பந்தப்பட்ட கலெக்டர் அறிக்கை வழங்க வேண்டும்.

    14. புதிதாக அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களை அமைக்கும் பணியை அடுத்த 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

    15. 14 தாலுகாக்களில் மினி விதான சவுதா கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    16. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக கர்நாடகத்தை அறிவிக்க வேண்டும். இன்னும் 10 மாவட்டங்களில் கழிவறை கட்டும் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. அந்த பணிகளை அடுத்த ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். வருகிற அக்டோபர் 2-ந் தேதி திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக கர்நாடகம் அறிவிக்கப்பட வேண்டும். இதை மனதில் வைத்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.

    17. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அங்கன்வாடி கட்டிடங்கள், பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை மேற்கொள்ள முடியும். இதற்கு கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி உத்தரவிட்டார்.  #Kumaraswamy

    மேகதாது அணையை கட்டும் கோரிக்கையை முன்வைத்து தமிழக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி திட்டமிட்டுள்ளார். #Kumaraswamy #MekedatuDam
    பெங்களூரு:

    காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 4 அணைகள் உள்ளன.

    இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் தமிழகத்திற்கு அனுப்ப வேண்டிய பங்கை சரியாக திறந்து விடுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    மழை அதிகமாக பெய்து உபரி நீர் வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் காவிரியின் குறுக்கே தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.

    இந்த அணையை 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் கட்ட உள்ளனர். கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளிலேயே இது மிகப்பெரியதாக இருக்கும்.

    பெரிய அணையான கிருஷ்ணராஜசாகரில் 45 டி.எம்.சி. தேக்கப்படுகிறது. மேகதாது அணையை 67 டி.எம்.சி. தண்ணீரை தேக்கும் வகையில் கட்ட திட்டமிட்டுள்ளனர்.

    ஆனால் மேகதாது ஆணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் வருவது முற்றிலும் நின்றுவிடும் என்று தமிழகம் அச்சத்தில் உள்ளது. ஏற்கனவே உள்ள அணைகளில் இருந்தே சரியாக தண்ணீர் திறப்பது இல்லை. புதிய அணை கட்டினால் வருகிற தண்ணீரும் நின்றுவிடும் என்ற பயம் தமிழகத்தில் இருக்கிறது.

    இதன் காரணமாக மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் அணை கட்ட மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை. கட்டுமான பணிகளை நடத்த முடியாமல் கர்நாடகா உள்ளது.



    தற்போது கர்நாடகாவில் அதிக மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணை இன்று நிரம்புகிறது. சுமார் 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்து விடப்படும். மேட்டூருக்கு பிறகு காவிரியில் தண்ணீர் தேக்கி வைப்பதற்கு அணை இல்லை. இதனால் பெருமளவு தண்ணீர் கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேகதாது அணையை கட்டும் கோரிக்கையை முன்வைத்து தமிழக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.

    கர்நாடகாவில் அதிக மழை பெய்திருப்பதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் அதிக அளவில் சென்று கொண்டிருக்கிறது. அணை நிரம்ப போகிறது. கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து தண்ணீர் செல்லும் பவானி அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. இரு ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அதிக அளவில் இருக்கும் என்பதால் அந்த தண்ணீர் கடலில் கலந்து வீணாவதற்கு வாய்ப்பு உள்ளது.

    இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போது வீணாகும் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு மேகதாது ஆணை பொருத்தமாக இருக்கும். அவ்வாறு அணை கட்டினால் அதில் தண்ணீர் தேக்கி வைத்து கடும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பெங்களூருக்கு அனுப்ப முடியும். மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்திற்கும் தேவைப்படும் காலங்களில் தண்ணீர் திறந்து விடுவதற்கும் வசதியாக இருக்கும். எனவே இதற்கு தமிழகம் அனுமதிக்க வேண்டும்.

    இதற்காக நான் சென்னை சென்று தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேச உள்ளேன். மேலும் விவசாய பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுவேன். காவிரி நீர் கடலில் கலப்பதை தடுப்பதற்கு இதுதான் ஒரே வழி. இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழகத்தை கேட்டுக் கொள்கிறேன்.

    மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு எந்த நேரத்தில் தண்ணீர் வழங்கும் பிக்சட் டெபாசிட் போல இங்கு தண்ணீர் இருந்து கொண்டிருக்கும். இப்போது தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே 85 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.

    இயற்கை இன்னும் கை கொடுத்தால் அதிக தண்ணீரை திறந்து விடுவோம். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயிகள் கஷ்டம் எனக்கு தெரியும். மேகதாது அணை மூலம் இன்னும் தமிழக விவசாயிகளுக்கு அதிகமாக எங்களால் உதவ முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #MekedatuDam
    கர்நாடக சட்டசபையில் 11 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. #KarnatakaAssembly
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில், முதல்மந்திரியாக குமாரசாமி பதவியேற்று நடைபெறும் முதல் பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் இந்த மாதம் துவங்கியது. இந்த கூட்டத்தில் முதல் மந்திரி குமாரசாமி, 2018-19-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டாக சுமார் 2.18 கோடி ரூபாயை அறிவித்திருந்தார்.

    மேலும், விவசாயிகளின் சுமார் 40 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். இதையடுத்து, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், சுமார் 11 நாட்கள் நடைபெற்ற கர்நாடக மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. மேலும், வரும் நவம்பர் மாதத்தில் அடுத்தகட்ட கூட்டத்தொடர் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #KarnatakaAssembly
    கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது ரூ.34 ஆயிரம் கோடி அளவிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். #KarnatakaBudget2018 #KarnatakaFarmLoanWaives
    பெங்களூரு:

    கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்தால் முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக பிரச்சாரத்தின்போது குமாரசாமி வாக்குறுதி அளித்தார். ஆனால் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலையில், காங்கிரசுடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. குமாரசாமி முதல்வராக பதவியேற்றார்.

    ஆனால், குமாரசாமி தான் அளித்த வாக்குறுதியின்படி விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று பா.ஜனதா குற்றம்சாட்டி வந்தது.  இதற்கு பதில் அளித்த குமாரசாமி, தற்போது கூட்டணி ஆட்சி நடந்து வருவதால், விவசாய கடன் தள்ளுபடி பற்றி காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறினார்.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் குமாரசாமி இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது 34 ஆயிரம் கோடி அளவிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதனால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். #KarnatakaBudget2018 #KarnatakaFarmLoanWaives
    ×