search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100153"

    மேற்கு வங்காள முதல்வர், ஆந்திர முதல்வர், தெலுங்கானா முதல்வர், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆகியோர் பா.ஜனதாவுக்கு எதிராக இணைய வேண்டும் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி கூறினார்.
    பெங்களூர்:

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எடியூரப்பாவை முதல்வராக பதவி ஏற்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. கர்நாடக விவகாரத்தில் மத்திய அரசு தவறாக நடந்து கொள்கிறது. நாட்டில் ஜனநாயகத்தை அழிப்பதற்கு மத்திய அரசு விரும்புகிறது.

    கவர்னரை சந்தித்து எங்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பது தொடர்பான பட்டியலை அளித்தேன். ஆனால் எங்களை ஆட்சியமைக்க அவர் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாதோருக்கு ஆட்சி அமைக்க அவர் வாய்ப்பு அளித்துள்ளார். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் அளித்துள்ளார். நம் நாட்டில் இதுபோல நடந்திருப்பது இதுதான் முதல்முறை.

    கவர்னர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்தது வியாபாரம் பேசுவதற்கு வழிவகுக்கும். அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. எம்.எல்.ஏ.க்களை மிரட்டுவதற்கும், நிர்பந்தம் அளிப்பதற்கும் தான் விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனந்த்சிங்குக்கு எதிராக வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இதனால் அமலாக்கத்துறையை கொண்டு அவரை மிரட்டுகிறது. அனந்த்சிங்குடன் நான் பேசவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் தான் இதை என்னிடம் தெரிவித்தார். எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களையும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மூலம் மத்திய அரசு மிரட்டுகிறது.

    பா.ஜனதா அல்லாத கட்சிகள் இந்த விவகாரத்தில் கரம் கோர்க்க வேண்டும். இதற்கான முயற்சியை எனது தந்தை தேவேகவுடா முன்னெடுக்க வேண்டும். மாநில கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்களை அவர் ஒருங்கிணைக்க வேண்டும்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோர் பா.ஜனதாவுக்கு எதிராக இணைய வேண்டும்.

    தேசத்தின் பாதுகாப்பை அவர்கள் பாதுகாக்க வேண்டும். தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை மறக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    குதிரை பேரம் நடத்துவதற்கு வசதியாக 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாகவும் அரசியலமைப்புச் சட்டத்தை மோடி அரசு மீறி விட்டதாகவும் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa #Kumarasamy
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து எடியூரப்பா முதல்- மந்திரியாக இன்று பதவி ஏற்றார்.

    எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த வி‌ஷயத்தை நாங்கள் எளிதாக விட்டுவிட மாட்டோம். ஏனெனில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை நாங்கள் அளித்துள்ளோம். ஆனால் எங்கள் கூட்டணிக்கு பதிலாக பெரும்பான்மை இல்லாத பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.



    மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 3 அல்லது 4 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தால் கூட பரவாயில்லை. அவர்கள் குதிரை பேரம் நடத்துவதற்கு வசதியாக 15 நாட்கள் அவகாசம் அளித்து உள்ளார்.

    கவர்னரை பயன்படுத்தி இந்த நாடகத்தை நடத்தியதன் மூலம் மோடி தலைமையிலான மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளது.

    எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுப்போம்.

    இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa #Kumarasamy
    கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி தருவதாகவும், ரூ.100 கோடி வரை ரொக்கமாக தருவதாகவும் ஆசை காட்டி பா.ஜனதா ஆட்சியை பிடிக்க பார்ப்பதாக குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார். #KarnatakaElection #Kumaraswamy
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதாவும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி காங்கிரசுடன் இணைந்தும் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன.

    இந்த நிலையில் பெங்களூரில் இன்று மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவராக குமாரசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த கூட்டத்துக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்து விட்டோம். இதன் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இந்த முடிவை மாற்றுவது குறித்த கேள்விக்கே இடமில்லை.



    பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை. அந்த கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்.

    மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது. இதற்காக ரூ.100 கோடியும், 3 கேபினட் மந்திரி பதவியையும் பா.ஜனதா பேரம் பேசி வருகிறது. எங்கள் கட்சியை உடைக்க கருப்பு பணத்தை பயன்படுத்த முயற்சிக்கிறது.

    அதிகாரத்துக்கு ஆசைப்படுவன் நான் இல்லை. எங்கள் குடும்பம் நாட்டு நலனுக்காக பிரதமர் பதவியை துறந்தது.

    பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். குதிரை பேரம் நடைபெறுவதை வருமானவரித்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதா? ஜனாதிபதியும், கவர்னரும் தலையிட்டு குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்க வேண்டும்.

    எங்கள் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரை நீங்கள் இழுக்க முயன்றால் உங்களிடமிருந்து 2 பேரை நாங்கள் இழுப்போம். 10 பேரை இழுத்தால் 20 பேரை இழுப்போம்.

    பா.ஜனதாவில் இருந்து 10 முதல் 20 எம்.எல்.ஏ.க்கள் வரை எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். எங்கள் அணிக்கு வர தயாராக இருக்கிறார்கள். “ஆபரே‌ஷன் கமலா” வெற்றிகரமாக நடந்ததை பா.ஜனதா மறந்து விடக் கூடாது.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    அவரது இந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. #KarnatakaElection #Kumaraswamy
    பாஜக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று குமாரசாமி நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Kumaraswamy #KarnatakaAssemblyelection

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதாவும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி காங்கிரசுடன் இணைந்தும் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன.

    இந்த நிலையில் பெங்களூரில் இன்று மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவராக குமாரசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த கூட்டத்துக்கு முன்னதாக குமாரசாமி நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்து விட்டோம். இதன் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இந்த முடிவை மாற்றுவது குறித்த கேள்விக்கே இடமில்லை.

    பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை. அந்த கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #KarnatakaAssemblyelection

    காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டு கொள்வதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். #KarnatakaElection2018
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் நான்கு மணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 82 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 51 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    மீதமுள்ள தொகுதிகளின் முடிவுகளும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டு கொள்வதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். #KarnatakaElection2018 #KumarasamyformingGovernment
    கர்நாடக மாநிலத்தில் அமையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியின் முதல் மந்திரியாக பொறுப்பேற்கவுள்ள குமாரசாமி ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். #Kumaraswamywins
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி சன்னப்பட்னா, ராமநகரம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

    இந்நிலையில், ராமநகரம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் பாஷா என்பவரைவிட கூடுதலாக 22 ஆயிரத்து 636 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். சன்னப்பட்னா தொகுதியில் தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ.க. வேட்பாளர் யோகேஸ்வாராவை விட சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். எனவே, இந்த தொகுதியிலும் அவர் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. #Karnatakelection #karnatakaverdict #Kumaraswamywins
    ×