search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100153"

    பெட்ரோல் டீசல் விலை தினமும் உயர்ந்து வரும் நிலையில் கர்நாடகத்தில் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். #PetrolDieselPrice #Karnataka
    பெங்களூரு:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில், விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 10-ந் தேதி நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    எனினும் விலையை குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை. இன்றும் விலை உயர்ந்தது. இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.85.31 ஆகவும், டீசல் ரூ.78 ஆகவும் விற்பனையானது. மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் 90 ரூபாயைத் தாண்டியது. இப்படியே போனால் விரைவில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டும் என தெரிகிறது. எனவே, சில மாநிலங்கள் பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைத்து விலையைக் குறைக்கத் தொடங்கி உள்ளன. 

    அவ்வகையில் கர்நாடாகவில் பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி ரூ.2 குறைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி இன்று அறிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் எரிபொருள் விலை உயர்ந்து வருவதால், மாநில அரசு வரியைக் குறைத்து அதன்மூலம் விலையை குறைக்க முடியும் என பொதுமக்கள் விரும்பினர். எனவே, குறைந்தது 2 ரூபாய் அளவில் வரியைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது என குமாரசாமி தெரிவித்தார்.

    ஏற்கனவே, ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #PetrolDieselPrice #Karnataka
    கூட்டணி ஆட்சியை நாங்கள் கவிழ்க்க முயற்சி செய்யவில்லை, அது தானாகவே கவிழ்ந்து விடும் என்று எடியூரப்பா கூறியுள்ளார். #Yeddyurappa #BJP
    துமகூரு :

    துமகூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசுவாமியை நேற்று கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இந்த சந்திப்புக்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் உள்பட அனைத்து வளர்ச்சி பணிகளும் முடங்கிவிட்டன. மாநிலத்தில் மக்களின் நலனை இந்த அரசு மறந்துவிட்டது. தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி கூறுகிறார்.

    ஆனால் தேசிய வங்கிகள், கடனை திரும்ப செலுத்தும்படி விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்புகின்றன. 4 ஆண்டுகளில் 4 தவணைகளில் இந்த கடன் தள்ளுபடி தொகையை வங்கிகளுக்கு செலுத்துவதாக குமாரசாமி சொல்கிறார். 4 ஆண்டுகள் வரை எந்த வங்கிகள் தான் காத்திருக்கும்?.

    விவசாயிகளின் நலனில் அக்கறை இருந்திருந்தால், தேசிய வங்கிகளின் விவசாய கடனை இந்த அரசு உடனடியாக தள்ளுபடி செய்திருக்கலாம். அந்த அக்கறை இந்த கூட்டணி அரசுக்கு இல்லை. கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த வங்கிகளுக்கு கடன் தள்ளுபடி தொகையை இந்த அரசு இன்னும் வழங்கவில்லை. அதனால் கூட்டுறவு வங்கிகள் திவாலாகி இருக்கின்றன.



    நிலைமை இவ்வாறு மோசமாக இருந்தாலும் மக்களுக்கு குமாரசாமி பொய் வாக்குறுதிகள் கூறுவதை நிறுத்தவில்லை. கர்நாடகத்தில் மிடுக்கான திட்டத்திற்கு மத்திய அரசு ரூ1,500 கோடி நிதி வழங்கியுள்ளது. ஆனால் வெறும் ரூ.40 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டு உள்ளது.

    ஈடுபாட்டு உணர்வு இல்லாத இந்த அரசால், கர்நாடகத்தின் வளர்ச்சி சாத்தியமாகுமா?. ஜார்கிகோளி சகோதரர்கள் பா.ஜனதாவில் சேருவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி என்னுடன் யாரும் பேசவில்லை. அது காங்கிரசின் உட்கட்சி பிரச்சினை.

    காங்கிரசின் உட்கட்சி பிரச்சினைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை. காங்கிரசின் உட்கட்சி பிரச்சினையில் பா.ஜனதா இருப்பதாக கூறுவது சரியல்ல. மாநில மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் காங்கிரசார் இந்த குற்றச்சாட்டை கூறுகிறார்கள்.

    கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், கந்துவட்டி தொழில் செய்பவர்கள் மூலம் பா.ஜனதா முயற்சி செய்வதாக முதல்-மந்திரி கூறி இருப்பது சரியல்ல. இது அவரது பொறுப்பற்றத் தனத்தை காட்டுகிறது.

    இதுகுறித்து தகவல் இருந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?. அதை விடுத்து தேவை இல்லாமல் பா.ஜனதா மீது குறை சொல்வதை ஏற்க முடியாது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நாங்கள் முயற்சி செய்ய மாட்டோம். இந்த அரசு தானாகவே கவிழ்ந்துவிடும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa #BJP
    கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று முதல்-மந்திரி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். #CMKumaraswamy
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. கூட்டணி ஆட்சியின் முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனுமான குமாரசாமி இருந்து வருகிறார். துணை முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் உள்ளார்.

    இந்த நிலையில் மந்திரி பதவி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி இருப்பதால், இதனை சாதகமாக பயன்படுத்தி கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா முயற்சி செய்வதாக காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மகதாயி நதிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளேன். மகதாயி பிரச்சினையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை விரைவில் கூட்டுவேன். தர்மஸ்தலா மஞ்சுநாத கோவில் நிர்வாகம் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது.

    அதில் ரூ.8 கோடி நிதியை அந்த கோவில் நிர்வாகம் சார்பில் நேரடியாக மக்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. மேலும் அந்த கோவில் நிர்வாகம் ரூ.2 கோடி, முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்இந்திய முதல்-மந்திரிகள் மாநாடு வருகிற 18-ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தென்இந்திய மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள். எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சியின் பின்னணியில் யார்-யார் இருக்கிறார்கள் என்பது பற்றி அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும்.

    பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது எடுத்தபடம்.

    லாட்டரியில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பவர்கள், 2010-ம் ஆண்டு பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் ஆவணங்களுக்கு தீவைத்தவர்கள் உள்பட யார்-யார் மூலமாக பேரம் பேசுகிறார்கள் என்ற விஷயமும் எனக்கு தெரியும். அனைத்து தகவல்களையும் நான் சேகரித்து உள்ளேன்.

    அத்தகையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை பாயும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் நான் தயாராகி வருகிறேன். ஆட்சியை கவிழ்க்க முடியாது. எனது கூட்டணி ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை நான் செய்கிறேன். நான் ஒன்றும் அமைதியாக உட்கார்ந்து இருக்கமாட்டேன்.

    ஜனாதிபதி நாளை (அதாவது இன்று) பெலகாவிக்கு வருகிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் பெலகாவிக்கு செல்கிறேன். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அங்கு ஜனதா தரிசனம் நடத்தவும் முடிவு செய்துள்ளேன். அனைத்து மந்திரிகளும் என்பக்கம் தான் உள்ளனர். எந்த மந்திரியும் எனக்கு எதிராக செயல்படவில்லை.

    பா.ஜனதாவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் எனது தொடர்பில் உள்ளனர். அவர்கள் மைசூரு பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை. மாநிலத்தின் பிற பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொன்னார்கள்.

    இப்போது விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. ஆட்சி கவிழவில்லை. அடுத்து அக்டோபர் மாதம் 2-ந் தேதிக்குள் ஆட்சி கவிழும் என்று கெடு விதிப்பார்கள். அதன் பிறகு தசரா பண்டிகைக்குள் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று தேதி முடிவு செய்வார் கள். ஆனால் கூட்டணி ஆட்சி கவிழாது.

    கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று செய்திகள் வெளியாவதால், அதிகாரிகள் மத்தியில் ஒருவித குழப்பம் மற்றும் சுறுசுறுப்பு குறைவு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் விதமாக அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளேன்.

    ஆட்சியின் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தாமல், வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்துவேன். எனக்கு மாநிலத்தின் வளர்ச்சி தான் முக்கியம். நான் சுதந்திரமாக உள்ளேன். எதை பற்றியும் கவலைப்படமாட்டேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #CMKumaraswamy
    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி, பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். #Cauvery #Mekedatu #Kumaraswamy #PMModi
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றில் 5-வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியிருந்தது.
     
    ஏற்கனவே கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுவதில்லை. மேகதாது அணை கட்டினால் உபரி நீர் திறந்து விடுவது சந்தேகம்தான். எனவே கர்நாடகாவை மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

    இந்நிலையில், மேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு பிரதமர் மோடியிடம் குமாரசாமி நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக, கர்நாடக அரசுகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

    காலதாமதம் செய்யாமல் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும், தமிழக அரசுடனான அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

    சமீபத்தில் இதுகுறித்து பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசுகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை பெற அவசியம் இல்லை என கூறியிருந்தார்.
    கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி, பிரதமர் மோடியை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்தார். #Kumaraswamy #NarendraModi #KarnatakaFloods
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் கடந்த மாதம் கடும் மழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு கடும் சேதம் ஏற்பட்டது. இந்த சேதத்தை சரிசெய்ய உள்துறை மந்திரியிடம் ஏற்கனவே நிதியுதவி கேட்டு கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்து இருந்தார்.

    அவரது கோரிக்கையை ஏற்ற உள்துறை மந்திரி மத்திய ஆய்வுக்குழு வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்ய விரைவில் கர்நாடகா அனுப்பிவைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆய்வுக்குழுவின் முடிவை பொருத்து எவ்வளவு நிதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது.



    இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்தார். அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். இந்த சந்திப்பில், முன்னாள் பிரதமர் தேவ கவுடா மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு உடன் இருந்தனர். #Kumaraswamy #NarendraModi #KarnatakaFloods
    கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    இந்த தேர்தல் முடிவு குறித்து கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கூறியதாவது:-

    வழக்கமாக நகர் பகுதிகளில் பாரதிய ஜனதா தான் அதிக இடங்களில் வெற்றி பெறும். ஆனால் இந்த தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

    காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கூட்டணி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 2013-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 1960 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகள் தலா 905 இடங்களில் வெற்றி பெற்றன.

    தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 982 இடங்களையும், பாரதிய ஜனதா 929 இடங்களையும், ஜே.டி.எஸ். கட்சி 373 இடங்களையும் பிடித்துள்ளன.

    சுயேட்சை வேட்பாளர்கள் 329 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி ஒட்டுமொத்தமாக 1357 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் எந்த குழப்பமும் இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியுள்ளார். #DeveGowda
    பெங்களூரு :

    முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள இல்லத்தில் இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. அது தொடர்பாக இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் என்னை சந்தித்து விவாதித்தனர். அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் என்னிடம் இருந்து சில தகவல்களை பெற்று சென்றனர். சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் இன்று (அதாவது நேற்று) நடக்கும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனைத்து விஷயங்களும் விவாதிக்கப்படும்.

    காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தற்போதைய சூழ்நிலையில் பா.ஜனதாவுடன் செல்ல தயாராக இல்லை. அதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் எந்த குழப்பமும் இல்லை. தரம்சிங் முதல்-மந்திரி ஆகும்போதே, அந்த பதவிக்கு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டேவின் பெயரும் அடிபட்டது.

    அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. அதனால் முதல்-மந்திரி பதவிக்கு தற்போது ஆர்.வி.தேஷ்பாண்டே பெயர் அடிபடுகிறது. இதில் என்ன தவறு உள்ளது?. ராமகிருஷ்ண ஹெக்டே மந்திரிசபையில் நானும், ஆர்.வி.தேஷ்பாண்டேவும் ஒன்றாக பணியாற்றினோம்.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார்.  #DeveGowda #kumaraswamy
    கூட்டணி அரசு பிழைக்குமா? என்பது குறித்தே கவலைப்படுகிறார் என்றும், 100 நாட்களில் கண்ணீர் சிந்தியது தான் சாதனை என்றும் குமாரசாமி மீது பா.ஜனதா கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. #kumaraswamy #BJP
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) ஆட்சி நேற்றுடன் 100 நாட்களை நிறைவு செய்தது. இந்த 100 நாட்களில் முக்கியமாக விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளதாக முதல்-மந்திரி குமாரசாமி பெருமிதமாக கூறி இருக்கிறார். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா குமாரசாமியை கடுமையாக விமர்சித்து கருத்தை வெளியிட்டுள்ளது. அக்கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    முதல்-மந்திரி குமாரசாமியின் கூட்டணி அரசு 100 நாட்களை கடந்துள்ளது. ஆனால் அதை கொண்டாடும் மனநிலையில் குமாரசாமி இல்லை. இந்த கூட்டணி அரசு பிழைக்குமா?, பிழைக்காதா? என்ற கவலையிலேயே அவர் உள்ளார். இந்த 100 நாட்களில் குமாரசாமி செல்லும் இடங்களில் எல்லாம் கண்ணீர் சிந்தியது தான் சாதனை. எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.



    விவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டதாக குமாரசாமி சொல்கிறார். ஆனால் இதுவரை ஒரு விவசாயிக்கு கூட கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கவில்லை. சாதி மற்றும் பணத்தின் அடிப்படையில் மக்கள் ஓட்டுப்போட்டதாக குமாரசாமி கூறினார். இதன் மூலம் வாக்களித்த மக்களை முதல்-மந்திரி அவமதித்துவிட்டார்.

    இந்த கூட்டணி ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் தூய்மை நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 216-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்வது மற்றும் வேலைக்கு ஆட்களை நியமிக்கும் தொழிலில் மந்திரிகள் ஈடுபட்டுள்ளனர். வளர்ச்சி பணிகளில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தங்களின் கவலைகளை தீர்த்துக்கொள்ளவே கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்துள்ளன. இது சுயசேவையாற்றும் அரசு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #kumaraswamy #BJP
    கர்நாடகாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ஆயிரத்து 118 கோடி ரூபாய் நிதி வேண்டும் என மத்திய உள்துறை மந்திரியிடம் கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். #Karnataka #RajnathSingh #CMKumaraswami
    புதுடெல்லி:

    கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 7 மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இப்பகுதியில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    மழை ஓய்ந்துவிட்ட நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்யும் பணியில் மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில், மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய ஆயிரத்து 118 கோடி ரூபாய் மத்திய அரசு அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, முதற்கட்ட ஆய்வில் 3,435.80 கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், இது இடைக்கால ஆய்வில் கணக்கிடப்பட்ட தொகை என்றும், ஆய்வு முழுமையடைந்த பிறகு முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    இந்த சந்திப்பின் போது கர்நாடக மாநில துணை மந்திரி பரமேஸ்வரா, வருவாய்த்துறை மந்திரி தேஸ்பாண்டே, கூட்டுறவுத்துறை பண்டேப்பா காஷெம்புர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதையடுத்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முதற்கட்ட நிவாரணத்தொகை விரைவில் வழங்கப்படும் எனவும், மத்திய ஆய்வுக்குழு சேதங்களை ஆய்வு செய்ய விரைவில் அனுப்பப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார். #Karnataka #RajnathSingh #CMKumaraswami
    கர்நாடக கூட்டணி அரசு விரைவில் கவிழும் என்று மத்திய மந்திரி அனந்தகுமார் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Kumaraswamy #JDS

    பெங்களூரு:

    மத்திய மந்திரி அனந்த குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி அரசால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. அரசு செயல்படாமல் இருப்பதால் அந்த கட்சியினரே அதிருப்தி அடைந்து உள்ளனர். இதனையே முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா வெளிப்படுத்தி உள்ளார். அவர் மீண்டும் முதல் மந்திரியாக துடிக்கிறார்.

    குமாரசாமி அரசு வளராத குழந்தையாக இருக்கிறது. மந்திரி சபை விரிவாக்கம், துறை ஒதுக்கீடு உள்ளிட்டவை இன்னும் நடைபெறாமல் இருக்கின்றன.

    காங்கிரஸ்-ஜே.டி.எஸ். ஆகிய 2 கட்சிகளுக்கு இடையே வெளிப்படையாகவே மோதல் நடந்து வருகிறது. இந்த கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. எனவே தான் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

     


    இந்த கூட்டணி விரைவில் கவிழ்ந்தவுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. தேர்தலில் மக்களின் ஆதரவை பெற்ற பாரதிய ஜனதா ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில், சிறப்பாக ஆட்சி நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி இன்னும் 15 நாட்களில் கவிழும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா ஆரூடம் தெரிவித்துள்ளார். #sadanandagowda #kumaraswamy
    மங்களூரு :

    மத்திய மந்திரி சதானந்த கவுடா மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கிடையாது. அவர்களாகவே உருவாக்கிய ஆட்சி. மக்கள் பா.ஜனதாவை ஆதரித்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக மக்கள் விரும்பாத கூட்டணி ஆட்சி அமைந்துவிட்டது. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி மேலிடம் கூறியதால், அதற்கு அடிபணிந்து சித்தராமையா, கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டார்.

    ஆனால் குமாரசாமி முதல்மந்திரியாக இருப்பதை சித்தராமையா விரும்பவில்லை. கூட்டணி ஆட்சியை சித்தராமையா கவிழ்க்க முயன்றது அனைவருக்கும் தெரியும். தற்போது சித்தராமையா, தான் மீண்டும் முதல்மந்திரி ஆவேன் என்று கூறியுள்ளதன் மூலம் அது நிரூபணமாகி உள்ளது. இன்னும் ஒரு மாதம் அல்லது 15 நாட்களில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும். கூட்டணி ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டாம். அது தானாகவே கவிழ்ந்துவிடும்.

    ஆனால் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் பா.ஜனதா மீது தேவையில்லாத குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். மீண்டும் முதல்மந்திரி ஆவேன் என்று சித்தராமையா கூறி வருகிறார். சித்தராமையாவின் பகல் கனவு பலிக்காது. தற்போது உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அவருடைய தலைமையில் ஆட்சியை அமைக்க தயாராக இல்லை. அவருக்கு ஆதரவும் அளிக்கப்போவது இல்லை.



    ரபேல் விமான கொள்முதல் விஷயத்தில் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இந்த விஷயத்தில் தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்கள். ராகுல்காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது. அவர் எந்தவித ஆதாரமும் இன்றி மோடி மீது குற்றம்சாட்டி வருகிறார். இது சரியல்ல.

    கர்நாடகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக குடகு, தட்சிண கன்னடா மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பாக்கு மரங்கள், காபி தோட்டங்கள், மிளகு செடிகள் நாசமாகி உள்ளன. அந்த தோட்டங்களின் உரிமையாளர்கள் கூலி வேலைக்கு செல்லும் அவலநிலை உள்ளது. இதற்கு முன்பு நான் முதல்மந்திரியாக இருந்தபோது, பாக்கு மரங்களை நோய் தாக்கியதால் ஏராளமான விவசாயிகள் நஷ்டமடைந்தனர். அவர்களுக்கு நான் தக்க நிவாரணம் வழங்கினேன்.

    அதேபோல, தற்போது உள்ள அரசும், இந்த விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க கூடுதல் நிவாரணம் வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுத்தால், அதனை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #sadanandagowda #kumaraswamy
    சித்தராமையாவுக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்கி அவரது ஆதரவாளர்களின் ஆதரவுடன் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா புது வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #BJP #Siddaramaiah #kumaraswamy
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் முன்பு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. சித்தராமையா 5 ஆண்டுகள் பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்தார். ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாததாலும், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தியதாலும், சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரசே வெற்றி பெறும் என்று பெரும்பாலானவர்கள் கணித்தனர்.

    ஆனால் தேர்தல் முடிவுகள் அவ்வாறு அமையவில்லை. இந்த தோல்வியில் இருந்து சித்தராமையாவால் மீள முடியவில்லை. 2 தொகுதிகளில் போட்டியிட்ட அவர் சொந்த தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பாதாமி தொகுதியிலும் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை எட்டி பறித்தார்.

    எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. ஜனதா தளம்(எஸ்) கட்சி முன்னாள் தலைவர் குமாரசாமி முதல்-மந்திரி பதவியில் அமர்ந்துள்ளார். தேவேகவுடாவும், சித்தராமையாவும் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக உள்ளனர். அவர்கள் அவ்வப்போது பேசிக்கொண்டாலும் இருவரும் அரசியலில் பரம எதிரிகளாகவே பார்க்கப்படுகிறார்கள்.

    குமாரசாமி முதல்-மந்திரி ஆனதை சித்தராமையா சிறிதளவும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து இந்த அரசின் செயல்பாடுகள் பற்றியோ அல்லது அரசியல் பற்றியோ அதிகம் பேசாமல் சித்தராமையா சற்று ஒதுங்கியே இருக்கிறார். தனது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கைவிடும் முடிவை எதிர்த்து குமாரசாமிக்கு 4, 5 கடிதங்களை சித்தராமையா எழுதினார். கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவராக சித்தராமையா இருக்கிறார். இந்த குழுவின் கூட்டம் நடந்து ஏறத்தாழ ஒரு மாதம் ஆகிவிட்டது.

    இந்த நிலையில் சித்தராமையா தனது குடும்பத்தினருடன் வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். அந்த நேரத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியின் பெரும்பான்மை பலம் குறைந்துவிடும். இதனால் குமாரசாமியின் கூட்டணி ஆட்சி நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.



    அதே நேரத்தில் பா.ஜனதாவுக்கு தன்னிச்சையாகவே பெரும்பான்மை கிடைத்துவிடும். இதன் மூலம் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் என்று சொல்கிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்து வைத்துள்ள குமாரசாமி, அந்த திட்டத்தை முறியடிக்க தன்னிடம் ஒரு திட்டத்தை தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலரை இழுத்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சித்தராமையா ஏன் முயற்சி செய்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுகிறது. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்தபோதும், அந்த ஆட்சி அமைந்த பிறகும் சித்தராமையாவை காங்கிரஸ் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பேசப்படுகிறது. தன்னை புறக்கணித்த காங்கிரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பது தான் சித்தராமையாவின் எண்ணமாக உள்ளதாக சொல்லப்படுகின்றன.

    பா.ஜனதா சார்பில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், சித்தராமையாவை தொடர்பு கொண்டு பேசியதாகவும், 2022-ம் ஆண்டில் துணை ஜனாதிபதி பதவியை வழங்க பா.ஜனதா தயாராக இருப்பதாகவும் கூறியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

    பா.ஜனதா மதவாத கொள்கையை பின்பற்றி வருவதாக மேடைக்கு மேடை பேசி வரும் சித்தராமையா அக்கட்சியை கடுமையாக குறை கூறுகிறார். அப்படிப்பட்ட மதசார்பற்ற கொள்கையை கொண்ட பா.ஜனதாவுக்கு சாதகமாக அவர் செயல்படுவாரா? என்ற கேள்வி மதசார்பற்ற கொள்கையை பின்பற்றும் அரசியல் வாதிகள் இடையே எழுந்துள்ளது.  #BJP #Siddaramaiah #kumaraswamy
    ×