search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம்"

    வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் வீடுகளில் உள்ள மின் சாதனங்களில் இணைப்பு பழுது ஏற்பட்டு மின்சார அதிர்ச்சிக்கு பலரும் உள்ளாகும் சம்பவங்கள் பல இடங்களில் நடந்து விடுகின்றன.
    வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் அனைத்திலும் தக்க இணைப்புகள் மற்றும் ஒயர்கள் மூலம் மின்சார பயன்பாடு இருந்து வருகிறது. அவற்றில் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பொதுவாக அனைத்து இடங்களிலும் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் வீடுகளில் உள்ள மின் சாதனங்களில் இணைப்பு பழுது ஏற்பட்டு மின்சார அதிர்ச்சிக்கு பலரும் உள்ளாகும் சம்பவங்கள் பல இடங்களில் நடந்து விடுகின்றன.

    எச்சரிக்கை குறிப்புகள்

    மின்சாரம் மூலம் இயங்கும் வீட்டு உபயோக பொருட்களில் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பினும், பாதிப்புகளை தவிர்க்க அவற்றில் எந்த விதங்களில் பழுது ஏற்படலாம் என்பதை அறிந்து கொண்டு எச்சரிக்கையாக செயல்பட மின்பொறியியல் வல்லுனர்கள் மற்றும் எலக்ட்ரிஷியன்கள் ஆகியோர் அளிக்கும் குறிப்புகளை இங்கே காணலாம்.

    மூன்று விதங்கள்

    பொதுவாக, மின்சாரம் சம்பந்தப்பட்ட பழுதுகள் மூன்று விதங்களாக உள்ளன. அதாவது, ஒப்பன் சர்க்கியூட் பால்ட் (Open Circuit Fault), சார்ட் சர்க்கியூட் பால்ட் (Short Circuit Fault) மற்றும் எர்த் அல்லது லீக்கேஜ் பால்ட் (Earth fault and Leakage Fault) ஆகியயனவாகும்.



    மின் சுற்றில் தடை (Open Circuit Fault)

    மின் கடத்தா பொருட்கள் மூலம் தக்க பாதுகாப்பு உறைகள் கொண்டு மூடப்பட்ட ஒயர்கள் மூலம் மின்சாரம் வீடுகளுக்குள் பயன்படுத்தப்படுகிறது. அந்த ஒயர்கள் ஏதாவது காரணங்களால் பாதிக்கப்படும்போது மின் பாதையில் தடை ஏற்பட்டு, மேற்கொண்டு மின்சாரம் செல்வதில்லை. சம்பந்தப்பட்ட உபகரணங்களை இணைக்கும் ஒயர்கள் துண்டிக்கப்படுவது, எரிந்து விடுவது, துரு போன்ற காரணங்களால் பாதிக்கப்படுவது அல்லது தளர்வான இணைப்பு ஆகியவற்றால் மின் சுற்றில் தடை ஏற்படலாம்.

    குறை மின்னழுத்த பாதிப்பு (Short Circuit Fault)

    இரண்டு புள்ளிகளுக்கு இடையில் தேவையான அளவை விடவும் குறைவான அழுத்தத்தில் அல்லது கூடுதலான அழுத்தத்தில் மின்சாரம் செல்லும்போது, அதற்கான பியூஸ் இணைப்பு எரிந்து, மின்சார இணைப்பு தடுக்கப்படுகிறது. பொதுவாக, தளர்வான இணைப்புகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் பாதிப்பு ஆகியவற்றால் குறை மின்னழுத்த பாதிப்பு ஏற்படுத்துகிறது.

    தரை இணைப்பு மற்றும் மின்கசிவு

    பொதுவாக, கிரைண்டர் போன்ற சாதனங்களுக்கு ‘எர்த்திங்’ எனப்படும் தரை இணைப்பு அவசியமானது. அவ்வாறு தரை இணைப்பு கொடுக்கப்படாத சமயங்களில் பியூஸ் இணைப்பில் பாதிப்பு உண்டாகும்போது மின் சாதனங்கள் மின் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மின் சாதனங்களில் உள்ள ஒயர் இணைப்புகள் பாதிக்கப்பட்டு, தொடர்ச்சியான மின்னோட்டம் காரணமாக அதை தொடுபவர்களுக்கு மின் அதிர்ச்சி ஏற்படுகிறது. 
    திருமருகல் அருகே மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்ட முத்துகுமாரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருமருகல்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே ஆதினக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தனபாலன். இவருடைய மகன் முத்துகுமாரன் (வயது35). இவர் திருமருகல் துணை மின் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிடாமங்கலம் உள்ள உயர் மின் அழுத்த பாதையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முத்துகுமாரனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கிவீசப்பட்ட முத்துகுமாரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துகுமாரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    அரியலூர், வி.கைகாட்டி, செந்துறை துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    அரியலூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மற்றும் தேளுர் ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் அரியலூரில் ஒரு சில பகுதிகள், கயர்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், கொளப்பாடி.

    ராஜீவ்நகர் மற்றும் மணக் குடி, குறிச்சிநத்தம், புதுப்பாளையம், சிறுவளூர், ஜெமீன்ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி, வி.கைகாட்டி, ரெட்டிபாளையம், விளாங்குடி, தேளூர், நாகமங்கலம், நெரிஞ்சிக்கோரை, வெளிப்பிரிங்கியம், நாயக்கர்பாளையம், பெரியதிருக்கோணம், செட்டித்திருக்கோணம், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, நாச்சியார்பேட்டை, ஆச்சனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    இதேபோல் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நடுவலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் சுத்தமல்லி, பருக்கல், காக்காப்பாளையம், சுந்தரேசபுரம், வெண்மாண்கொண்டான், உல்லியக்குடி, சாத்தம்பாடி, காசாங்கோட்டை, தத்தனூர், பொட்டக்கொல்லை மற்றும் மூர்த்தியான் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செந்துறை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் செந்துறை, இலங்கைச்சேரி, ஆதிகுடிக்காடு, உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன்குறிச்சி, ஆனந்தவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன்குடிக்காடு.

    மருவத்தூர், சேடக்குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், அயன்தத்தனூர், முல்லையூர், நத்தகுழி, உகந்தநாயகன்குடிக்காடு, பெரியாகுறிச்சி, இலைக்கடம்பூர், நிண்ணியூர், பிலாக்குறிச்சி, வீராக்கன், செதலவாடி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    ×