search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குபதிவு"

    ராஜபாளையம் அருகே நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்த மணமகன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவரது மகள் ரேவதி (வயது 25). இவருக்கும் சென்னை கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த மாடசாமியின் மகன் சண்முகராஜுக்கும் (31) கடந்த ஜனவரி 21-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இந்த திருமணம் கடந்த 10-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் நிச்சயிக்கப்பட்ட ரேவதியை திருமணம் செய்ய மணமகன் வீட்டார் மறுத்து விட்டனர்.

    இதுகுறித்து ரேவதியின் தந்தை வெள்ளையப்பன் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சண்முகராஜ், அவரது தந்தை மாடசாமி, தாயார் கலாவதி, சகோதரிகள் அறிவுமதி, வளர்மதி ஆகிய 5 பேர் மீது இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருபுவனை அருகே நர்சிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருபுவனை:

    திருபுவனை அருகே கலிதீர்த்தாள் குப்பம் வி.வி. நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் உளுந்தூர்பேட்டையில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரேமாவதி. இவர்களது மூத்த மகள் சிந்துஜா. (வயது 18). இவர் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தொடக்கத்தில் இருந்தே சிந்துஜாவுக்கு நர்சிங் படிக்க விருப்பம் இல்லை. இதனை பெற்றோரிடம் தெரிவித்தும் அவர்கள் ஏற்காமல் கட்டாயப்படுத்தியதால் சிந்துஜா விருப்பமின்றி படித்து வந்தார். 

    இந்த நிலையில் மன உளைச்சலுடன் கல்லூரிக்கு சென்று வந்த சிந்துஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பிரேமாவதி, மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிந்துஜாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை சிந்துஜா பரிதாபமாக இறந்து போனார். 

    இது குறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குபதிவு செய்து விசாரண நடத்தி வருகிறார்.
    கொடைக்கானலில் வேன் கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா வந்த டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பெரும்பாறை:

    ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 11 பேர் ஒரு வேனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பினர்.

    கொடைக்கானல்- வத்தலக்குண்டு மைலைச் சாலையில் உள்ள மச்சூர் அருகே வந்த போது திடீரென வேன் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் வந்த டாக்டர் வினோத்கண்ணன் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி வினோத்கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த வீட்டு புரோக்கர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேலவீதி நாயக்கன் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 55). இவர் வீட்டு புரோக்கராக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக ராமச்சந்திரனுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.

    நேற்று மாலை பக்கத்து வீட்டின் மாடி அறைக்கு சென்றார். அங்கு கேபிள் வயரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தஞ்சை மேற்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராமசந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுப்பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் மல்லயகவுண்டன் பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் பிரவீன்குமார். இவருக்கும் பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணம் குறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி, குழந்தைகள் நல உறுப்பினர் பிரேமா விசாரணை நடத்தியதில் அந்த பெண் மைனர் என்பது தெரிய வந்தது. இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் பிரேமா புகார் அளித்தார்.

    போலீசார் மைனர் பெண்ணை திருமணம் செய்த பிரவீன்குமார், அவரது தந்தை மகேந்திரன், தாய் செல்லம்மாள் மற்றும் மைனர் பெண்ணின் பெற்றோர் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே வேலியில் இருந்த கல்லை அகற்றிய போது விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் அருகே உள்ள கோடாங்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 50). விவசாயி. இவர் தனது தோட்டத்து பகுதியில் விலங்குகள் உள்ளே வராமல் இருப்பதற்காக கல் ஊன்றி வேலி அமைத்திருந்தார். இன்று காலை அந்த கல்லை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு கல் அவர் மீது சரிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இஸ்மாயில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி சபுராபீவி அளித்த புகாரின் பேரில் நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நிலக்கோட்டை அருகே திருமண ஆசை காட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே ஸ்ரீரங்கபட்டியை சேர்ந்த மைனர் பெண்ணிடம் அதே ஊரைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது22) என்பவர் பழகி வந்தார். நாளடைவில் காதலிப்பதாக கூறி அந்த பெண்ணிடம் நெருங்கி பேசி பழகி உள்ளார்.

    மேலும் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைனர் பெண்ணுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சோதனை செய்ததில் அவர் 9 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் சந்திரசேகரிடம் தங்கள் மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி உள்ளனர்.

    ஆனால் சந்திரசேகர் திருமணத்திற்கு மறுத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு அவரது தாய் சந்திரிகா, தந்தை செல்வக்குமார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பேபி மைனர் பெண்ணை ஏமாற்றிய சந்திரசேகர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராணிப்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கெடுத்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராமதாஸ் (வயது 25),எலக்ட்ரீசியன், இவர் மலைமேடு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுபற்றி சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் ராமதாஸ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மார்த்தாண்டம் அருகே படிப்புக்கு ஏற்றார்போல் அரசு வேலை கிடைக்காததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் பாகோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 50). இவரது மகன் அருனேஸ் (22). இவர் ஐ.ஆர்.டி. படித்து முடித்துள்ளார்.

    தற்போது அங்குள்ள ஒரு லாரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் படிப்புக்கு ஏற்றார்போல் அரசு வேலை தேடிவந்தார். அவருக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. இதனால் மன வருத்தத்துடன் அருனேஸ் காணப்பட்டு வந்தார்.

    சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு நெய்யாற்றின் கரை பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக அருனேஸ் இறந்தார்.

    இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சொர்ணலதா, சப்-இன்ஸ் பெக்டர் ஜாண்விக்டர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அனுமதியின்றி கட்சி கொடி ஏற்றிய முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 26 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தில் கட்டபொம்மன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் தலைமையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் அங்குள்ள மாரியம்மன் கோவில் முன்பு பார்வர்டு பிளாக் கட்சி கொடியை ஏற்றினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

    இது குறித்து துள்ளுக்குட்டி நாயக்கனூர் கிராம நிர்வாக அதிகாரி ரகுபதி எம்.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    எவ்வித அனுமதியும் பெறாமல் கட்சிக்கொடியை ஏற்றியதாக முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் காசி, பாஸ்கரபாண்டி உள்ளிட்ட 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் கிருஷ்ணாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர் அருகே எல்லையம்மன் கோயில் அருகே சிவலிங்கம் உடைக்கப்பட்டிருந்ததுடன், நந்தி சிலையும் மாயமாகி இருந்தது. சிலையை சேதப்படுத்தியோரை கைது செய்ய கோரி மறியலில் ஈடுபட்ட 31 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் கிராமத்தில் எல்லையம்மன் கோயில் உள்ளது.

    இந்த கோவில் அருகே சர்வதீர்த்த குளக்கரையில் பழமை வாய்ந்த அஷ்டலிங்கம், நந்தி சிலை வைத்து பக்தர்கள் வழிபாடு செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை அஷ்டலிங்கத்தின் சிலை உடைக்கப்பட்டிருந்ததுடன், நந்தி சிலையும் மாயமாகி இருந்தது.

    இதையடுத்து, அஷ்டலிங்க சிலையை சேதப்படுத்தியோரை கைது செய்து, மாயமான நந்தி சிலையை மீட்டுத்தர வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் வினோத் கண்ணன் தலைமையில் ஏராளமானோர் திருவள்ளூர் -ஸ்ரீபெரும்புதூர் சாலையில் திடீரென ஆர்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் வினோத் கண்ணன் மற்றும் 10 பெண்கள் உள்பட 31 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    மாயமான நந்தி சிலையை மர்ம நபர்கள் அருகில் உள்ள குளத்தில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதில் தேடி வருகின்றனர். மேலும் சிலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    திருச்சி அருகே பெண் ஏட்டுவுடன் போலீஸ் நிலையத்தில் அத்துமீறி நடந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது, மிரட்டி பாலியலில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. #womanpolicemolestation
    திருச்சி

    திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலசுப்பிரமணி (வயது 51). இவர் கடந்த 10-ந்தேதி இரவுப்பணியில் இருந்த போது அதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் 32 வயதுள்ள பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தகவல் வந்தது. இந்த சம்பவம் நடந்த போது நேரில் பார்த்த உளவுத்துறை போலீஸ்காரர் ஒருவர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் இதனை நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெண் ஏட்டும் போலீசில் புகார் செய்தார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக், எஸ்.எஸ்.ஐ. பாலசுப்பி ரமணியனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். சம்பவம் நடந்தபோது இருவரும் பணியில் இருந்ததால் துறை ரீதிகயாவும் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சுமார் 2 நிமிடம் 50 விநாடிகள் உள்ள அந்த வீடியோவில் எஸ்.எஸ்.ஐ. காவல் நிலையத்திற்கு வந்தததும் பெண் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதுபோல் பதிவாகியிருந்தது.

    ஆனால் பெண் ஏட்டு தன் இருக்கையை விட்டு எழும்பாமல் அமர்ந்தபடியே இருந்திருந்தார். இதனால் அவரின் சம்மதத்துடனேயே இது நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். புகார் அளித்த பெண் ஏட்டு மருத்துவ விடுப்பு பெற்றுக் கொண்டு விடுமுறையில் சென்று விட்டார்.

    டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, பெண் ஏட்டுவின் வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறிய தகவல்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் தெரிவிக்கப்பட்டது.
    பெண் ஏட்டு அளித்த தகவலின் அடிப்படையில் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ. பாலசுப் பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    பெண் போலீசை பணி செய்யவிடாமல் தடுத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், மிரட்டல் விடுத்தல் என்ற 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆனால் தன் மீது மட்டும் நடவடிக்கை ஏன்? அவரின் சம்மதத்துடன் தான் முத்தம் கொடுத்தேன் என பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அவர் எதிராக புகார் ஏதும் செய்யாததால் பெண் போலீசின் புகார் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது. மேலும் காவல் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #womanpolicemolestation
    ×