என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 100272
நீங்கள் தேடியது "ஹெக்டார்"
எம்.ஜி. மோட்டார் இந்தியா சமீபத்தில் அறிமுகம் செய்த ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகள் ஜூன் 4 ஆம் தேதி துவங்கும் என அறிவித்துள்ளது. முன்பதிவுகள் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சரியாக மதியம் 12.00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட முன்பதிவுகள் இந்தியா முழுக்க 120 மையங்களில் நடைபெறும். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுக்க 250 மையங்களை எட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய ஹெக்டார் எஸ்.யு.வி. மாடல்கள் அந்நிறுவனத்தின் ஹலோல் தயாரிப்பு ஆலையில் நடைபெறுகிறது. இந்த ஆலையில் அந்நிறுவனம் ரூ.2,200 கோடி முதலீடு செய்துள்ளது.
"எம்.ஜி. ஹெக்டார் கார் அதிகளவு உள்நாட்டு பாகங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய தலைமுறை இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும். இந்தியாவின் முதல் இண்டர்நெட் கார் என்ற வகையில் 50-க்கும் அதிக கனெக்ட்டெட் அம்சங்களையும், எஸ்.யு.வி. பிரிவில் 19 பிரத்யேக அம்சங்களையும் ஹெக்டார் கொண்டிருக்கிறது" என எம்.ஜி. மோட்டார் இந்தியா தலைவர் ராஜீவ் சப்பா தெரிவித்தார்.
என்ஜின் அம்சங்களை பொருத்தவரை புதிய எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.
இத்துடன் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4-சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதேபோன்ற என்ஜின் ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹேரியர் போன்ற கார்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் இந்த என்ஜின் லிட்டருக்கு 17.41 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X