search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100341"

    தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் விரைவில் உறுதியாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே கும்மனூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மோடி அரசு கடந்த நான்கரை ஆண்டு காலம் தூங்கி விட்டு தற்போது புதிய திட்டங்களை செயல்படுத்துவது முழுமையாக நிறைவேறாது. இது தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம். அதை மோடியும் தற்போது செய்து வருகிறார்.

    ரூ.3.50லட்சம் கோடி முதலீடு உலக முதலீட்டாளர் மாநாட்டில் வந்ததாக கூறியதால் நீதிமன்றத்துக்கே சந்தேகம் வந்துள்ளது. இதனால்தான் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க கோர்ட்டு கூறியிருக்கிறது.

    தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்படுகிறது, அவமானம் படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு சவால் விடும் வகையில் கோவணத்துடன் விவசாயிகள் உருவத்தை குடியரசு தினவிழாவில் கொண்டுவந்து கண்டனத்துக்கு உரியது. தமிழ்நாடு மக்கள் சார்பாக இதனை கண்டிக்கிறேன்.

    தமிழ்நாட்டிற்கு வெள்ளம் புயல் பாதிப்பு காலங்களில் மத்திய அரசு முறையாக நிவாரணங்கள் வழங்கவில்லை.

    தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி உறுதிசெய்யப்பட்டுவிட்டது. யார் யாருக்கு என்ன தொகுதி என்பது குறித்து விரைவில் பின்னர் உறுதி செய்யப்படும்.

    அரசு ஊழியர் போராட்டத்தை அச்சுறுத்தி பயமுறுத்தி ஒடுக்க கூடாது. அவர்களை அழைத்துப் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

    காங்கிரசின் சக்தி அமைப்பில் 10 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar

    பிரியங்கா காந்தியின் வருகை கட்சிக்கு பலம் சேர்க்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar
    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து விலகிய பதர்சயீத் இன்று சத்தியமூர்த்தி பவன் வந்தார். அங்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருக்கு உடனடியாக மாநில செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:

    வருங்காலத்தில் நாட்டை ஆள தகுதியான கட்சி காங்கிரஸ்தான் என்பதை உணர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து காங்கிரசுக்கு வருபவர்களை வரவேற்கிறேன். தற்போது தமிழ்நாட்டில் நடந்துவரும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதை விட்டுவிட்டு எதிரான நடவடிக்கை எடுப்பது தொழிலாளர் விரோத போக்கு.

    கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அவர் பதவி விலகி குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும்.

    பிரியங்கா காந்தி பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு அரசியல் கற்றுக்கொடுக்க வேண்டியது இல்லை. அவரது வருகை கட்சிக்கு பலம் சேர்க்கும். ராகுல் பிரதமர் ஆவதற்கு உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சத்தியமூர்த்தி பவனில் குடியரசு தினவிழா நடந்தது. இதில் திருநாவுக்கரசர் தேசியக்கொடி ஏற்றி வைத்து சேவாதள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

    நிகழ்ச்சியில் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, செல்லகுமார், தணிகாசலம், தாமோதரன், உ.பலராமன், டி.ஏ.நவீன், கஜநாதன், ஜான்சிராணி, அசன் ஆரூண், ரூபி மனோகரன், சிவராஜ சேகர், எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், மைதிலிதேவி, எஸ்.கே.நவாஸ், சுமதி அன்பரசு, குங்பு விஜயன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தி.நகர் பகுதி காங்கிரஸ் தலைவர் நாச்சிகுளம் சரவணன் தலைமையில் மேற்கு மாம்பலத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாம்பலம் ராஜேந்திரன், டாக்டர் பாண்டியராஜ், தி.நகர் ஜெயராஜ், ராஜசேகர், பாலகிருஷ்ணன், தி.நகர் விக்னேஷ்வரன் கலந்து கொண்டனர். #Congress  #Thirunavukkarasar
    கிராமசபை கூட்டங்கள் நடக்காமல் ஆளுங்கட்சி தடுக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டியுள்ளார். #Congress #Thirunavukkarasar

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய-மாநில அரசுகளுக்கு இணையாக மக்களுக்கே அதிகாரம் அளிக்கும் வகையில் அமரர் ராஜீவ்காந்தி கண்ட கனவிற்கேற்ப 73-வது சட்டத் திருத்தத்தின்படி பஞ்சாயத்து ராஜ் மசோதா நிறை வேற்றப்பட்டு 1993-ம் ஆண்டு சட்டமாக்கப்பட்டு, 25 ஆண்டுகள் முடிவுற்ற போதிலும், தமிழகத்தில் தற்போது பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்தால் கடும் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.

    தமிழகத்தில் கிராம சபைகளை செயல்படவிடாமல் ஆளுங்கட்சியினர் தடுத்து வருகின்றனர். மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படாமல் அ.தி.மு.க. அரசு மக்களை வஞ்சித்து வருகிறது.

    நாளை (26-ந்தேதி) குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவது சட்டத்தின்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

    ஆகவே, மாவட்டத் தலைவர்கள் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் நாளைய தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்த வேண்டும்.

    நாளை காலை 8 மணி முதல் 12 மணி வரை தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் முன்னணித் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பிரிவுகளின் மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநில பொதுக் குழு உறுப்பினர்கள், ஆகியோர் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட கிராம பஞ்சாயத்து சபைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். #Congress #Thirunavukkarasar

    போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார். #Congress #Thirunavukkarasar
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டிருப்பதை தமிழக காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். பிரியங்கா இப்போது அரசியலுக்கு வரவில்லை. அவருக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே இந்திரா காந்தியுடனும், சோனியா காந்தியுடனும் உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு வெற்றியும் பெற்று தந்திருக்கிறார்.

    ராகுல் காந்திக்கு பக்க பலமாக பிரியங்கா இருப்பார். பிரியங்காவுக்கு பதவி வழங்கியதால் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் பிரியங்காவை கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். பிரியங்காவை குடும்ப வாரிசு, திடீரென்று அரசியலுக்கு வந்து விட்டார் என்று சொல்கிறார்கள்.

    ஆனால் பா.ஜனதாவில் சீரியல், சினிமா நடிகைகளான ஸ்மிரிதிஇரானி, ஹேமமாலினி ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.


    தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூஸ் சாமுவேல் தனக்கு கிடைத்த தகவலின் பேரில் முதல்-அமைச்சர் எடப்படி பழனிசாமி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

    ஏற்கனவே மேத்யூஸ், பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான பங்காரு லட்சுமண் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினார். அதை ஏற்றுக்கொண்டு அவரை நீக்கினார்கள். அதேபோல் மேத்யூஸ், எடப்பாடி பழனிசாமி மீது சொல்லி இருக்கும் ஆதாரங்களை வைத்து அவரை கவர்னர் ஏன் பதவி விலக சொல்லவில்லை.

    போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்திருக்கிறார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அவர்களை அழைத்து முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar
    பிரதமர் மோடி கூட்டணி கதவு திறந்து இருப்பதாக கூறியிருந்தும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க யாரும் முன்வரவில்லை என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #PMModi #BJP #Congress #Thirunavukkarasar
    ஆலந்தூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    கொடநாடு விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்ககோரி, நாளை கவர்னர் மாளிகை முன்பு தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதற்கு காங்கிரசும் ஆதரவு அளிக்கும். இந்த பிரச்சினை குறித்து உடனடி நடவடிக்கை தேவை.

    மாநில அரசு குறித்து யாராவது குற்றம் சாட்டினால் தி.மு.க. பின்னணியில் இருக்கிறது என்கிறார்கள். மத்திய அரசு பற்றி குற்றம் சாட்டினால் காங்கிரஸ் பின்னணியில் உள்ளது என்று கூறுகிறார்கள். இது பிரச்சினையை திசை திருப்பும் செயல். மக்களை ஏமாற்றும் நாடகம்.

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விரைவில் இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தமிழ்நாட்டின் உண்மை நிலையை அறியாமல் கூட்டணி பற்றி கருத்து கூறி இருக்கிறார். அ.தி.மு.க., தினகரன் கட்சிகள் இணைந்து பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பம் நிறைவேற வாய்ப்பு இல்லை.

    பா.ஜனதாவுடன் அ.தி.மு.க., தினகரன் கட்சி கூட்டணி சேர வேண்டும் என்று அச்சுறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தம்பிதுரை போன்றவர்கள் தங்கள் கருத்துக்களை பா.ஜனதாவுக்கு எதிராக கூறி வருகிறார்கள். தினகரனும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    கூட்டணி கதவு திறந்து இருப்பதாக பிரதமர் மோடி கூறி இருக்கிறார். ஆனால், பா.ஜனதாவில் கூட்டணி வைப்பதற்காக யாரும் இந்த கதவு வழியாக உள்ளே போகவில்லை. போக தயாராகவும் இல்லை. தற்போது பா.ஜனதா தனித்து விடப்பட்டுள்ளது.



    ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதாக சையது சுஜா என்ற மின்னணு நிபுணர் கூறி இருக்கிறார். இதை அறிந்த மத்திய பிரதேச மாநில பா.ஜனதா பிரமுகர் கோபிநாத் முண்டே, வாக்கு எந்திரங்களை வடிவமைத்த அரசு நிறுவன ஊழியர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதற்கு மத்திய பா.ஜனதா அரசு பதில் சொல்ல வேண்டும். மத்திய தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சாக்குப்போக்கு சொல்லி நழுவக்கூடாது. மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் வரும் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளனர். அதை நானும் வரவேற்கிறேன்.

    மம்தா பானர்ஜி நடத்திய எதிர்கட்சி தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் அங்கு பேசும் போது, பிரதமராக ராகுல்காந்தி வரவேண்டும் என்பதை ஏன் வற்புறுத்தவில்லை என்று எதிர் அணியினர் கேட்கிறார்கள்.

    ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் கருத்தை மு.க.ஸ்டாலின் பிரதிபலித்தார். மம்தா பானர்ஜி நடத்திய கூட்டத்தில் பிரதமர் குறித்து யாரும் கருத்து சொல்லவில்லை. எனவே, சபை நாகரீகம் கருதி ஸ்டாலினும் பிரதமர் வேட்பாளர் பற்றி குறிப்பிடவில்லை.

    தமிழக அரசு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்துகிறது. இதன்மூலம் எங்கு எல்லாம் தொழிற்சாலை வரும்? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை பட்டியலிட்டு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMModi #BJP #Congress #Thirunavukkarasar
    பாராளுமன்ற தேர்தல் வரை நான்தான் தலைவர் என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக ஆவேசமடைந்த அதிருப்தி கோஷ்டி தலைவர்கள் புகார் அளிக்க டெல்லி சென்றுள்ளனர். #Thirunavukkarasar #Congress
    சென்னை:

    மாநில தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசை மாற்ற வேண்டும் என்று எதிர்கோஷ்டிகள் வரிந்து கட்டி வருகிறார்கள்.

    இது தொடர்பாக பல முறை டெல்லிக்கு நேரில் சென்றும் புகார் அளித்தனர். இன்று நடைபெறும் நிகழ்வுகள் குறித்து மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத்தும் அறிக்கை அனுப்பினார். ஆனால் இதுவரை கட்சி மேலிடம் மவுனமாகவே இருந்து வருகிறது.

    விரைவில் திருநாவுக்கரசர் மாற்றப்படுவார் என்று மட்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சக்தி திட்ட தொடக்க விழா காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தனர்.

    மேலிட நிகழ்ச்சி என்பதால் அனைத்து தலைவர்களும் பங்கேற்று இருந்தனர். ஆனால் எல்லோரையும் பேச அனுமதித்தால் புகைச்சல் தெரிந்து விடும் என்பதற்காக அனைவரையும் பேச வைக்கும் நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டது.

    மேலிட நிர்வாகிகளும் திருநாவுக்கரசரும் மட்டுமே பேசினார்கள். திருநாவுக்கரசர் பேசும்போது, “தொண்டர்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். பாராளுமன்ற தேர்தல் வரை நான்தான் தலைவர் என்று நெத்தியடியாக கூறினார்.

    இது மேடையில் அமர்ந்திருந்த அதிருப்தி கோஷ்டிகளை ஆவேசம் அடைய வைத்தது. இதுபற்றி மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் நேரடியாகவே புகார் தெரிவித்தனர்.

    அவர் மேடையில் பேசும்போது, இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்களை மேற்கோள்காட்டி பேச தவறவில்லை.

    ஆவேசமடைந்த அதிருப்தி கோஷ்டி தலைவர்கள் இன்று காலை அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றனர். இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, பீட்டர் அல்போன்ஸ், நடிகை குஷ்பு, காங்கிரஸ் பொறுப்பாளர் நாசே ராமச்சந்திரன் உள்பட பலர் டெல்லி சென்று உள்ளனர்.



    இன்று அவர்கள் ராகுல் காந்தியை சந்தித்து திருநாவுக்கரசரை மாற்ற வலியுறுத்த உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் திருநாவுக்கரசர் தரப்பு இதைபற்றி கண்டு கொள்ளவில்லை.

    நாளை திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மாநாட்டில் கொடி குன்னல் சுரேஷ் எம்.பி., திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். #Thirunavukkarasar #Congress

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் இல்லை என்றும், ராகுல்காந்தி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் என்றும் திருநாவுக்கரசர் கூறினார். #Thirunavukkarasar #RahulGandhi
    சென்னை:

    காங்கிரஸ் கட்சியில் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை குறைக்கும் வகையில் ‘சக்தி’ திட்டம் ஒன்றை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு தொடங்கிவைத்தார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் செயல்பட்டு வரும் நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ‘சக்தி’ திட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், தகவல் ஆய்வுத்துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, தேசிய செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவெல்ல பிரசாத், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் ‘சக்தி’ திட்டத்தை தொடங்கி வைத்தனர். வாக்காளர் அடையாள அட்டை எண்ணை 8828843022 என்ற செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக(எஸ்.எம்.எஸ்.) அனுப்புவதன் மூலம் ‘சக்தி’ திட்டத்தில் இணையலாம்.

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய மந்திரிகள் சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், தேசிய செயலாளர்கள் டாக்டர் செல்லகுமார், சி.டி.மெய்யப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் நாசே ஜெ.ராமச்சந்திரன், பொதுச்செயலாளர்கள் கே.தணிகாசலம், கே.சிரஞ்சீவி, மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அப்சரா ரெட்டி, தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, எம்.எல்.ஏ.க்கள் எச்.வசந்தகுமார், பிரின்ஸ், விஜயதரணி மற்றும் பல்வேறு அணி தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர்.

    விழாவில் முன்னதாக தகவல் ஆய்வுத்துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் டி.செல்வம் வரவேற்புரையாற்றினார். முடிவில் இணை ஒருங்கிணைப்பாளர் லட்சுமி ராமச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.

    விழாவில் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    ‘சக்தி’ திட்டத்தின் மூலம் ராகுல்காந்தியுடன் நேரடி தொடர்பு கொள்ளலாம். பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வேட்பாளரை தேர்வு செய்ய கருத்து தெரிவிக்கலாம் என்பனவற்றை மனதில் கொண்டு கட்சியினர் அனைவரும் ‘சக்தி’ திட்டத்தில் இணைய வேண்டும். முதல் கட்டமாக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 10 லட்சம் பேரை ‘சக்தி’ திட்டத்தில் சேர்க்க வேண்டும். பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாவட்டம் தோறும் வாக்குச்சாவடி அளவில் கட்சியின் பலத்தை அதிகரிக்க அதிக அளவில் மக்களை ‘சக்தி’ திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

    தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே ராகுல்காந்தி மாநிலங்கள் தோறும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி, வருகிற பிப்ரவரி 15 முதல் 20-ந்தேதிக்குள் ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் வலுமையாக அமைந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலின் போது நான்(திருநாவுக்கரசர்) தான் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருப்பேன். அதில் மாற்றம் எதுவும் இல்லை. எனவே எல்லோரும் வதந்திகளை நம்பாமல் ஒற்றுமையாக செயல்பட்டு தமிழகம் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ராகுல்காந்தியை பிரதமராக்குவது ஒன்றையே இலக்காக வைத்து செயல்படுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #Thirunavukkarasar #RahulGandhi
    தொண்டர்கள் கருத்தை அறிய ராகுல் காந்தி உருவாக்கிய ‘சக்தி’ திட்டத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் 21-ந்தேதி தொடங்கி வைக்கிறார். #Thirunavukkarasar
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி “சக்தி” என்னும் சிறப்புத் திட்டத்தை நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தி, மாவட்ட, வட்டார, கிராம மற்றும் வாக்குச் சாவடி அளவில் செயல்படும் கோடிக்கணக்கான கட்சி தொண்டர்களை இணைக்கும் முயற்சியை தொடங்கி உள்ளார்.

    இந்த சக்தி திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 2018-ல் துவங்கப்பட்டு, இதுவரை 53 லட்சம் உறுப்பினர்கள் சக்தியில் வெற்றிகரமாக இணைந்துள்ளார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், நடப்பு செய்திகளையும், தகவல்களையும் உடனுக்குடன் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சக காங்கிரஸ் தொண்டர்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சக்தியாக இத்திட்டம் விளங்குகிறது.

    எனது தலைமையில் சக்தி திட்டத் தொடக்கவிழா வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தகவல் ஆய்வுத்துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், டாக்டர் சிரி வல்ல பிரசாத், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் சக்தி திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுவார்கள்.

    விழாவில், மாநில நிர்வாகிகள், பாராளுமன்ற, சட்டமன்ற முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் தங்களை இணைத்துக் கொள்வார்கள்.

    தமிழகத்தில் உள்ளவர்கள் சக்தியில் இணைய விரும்பினால், தங்களுடைய கைபேசி வழியாக அவர்களது வாக்காளர் அடையாள எண்ணை தமிழகத்திற்கான பிரத்யேகமான எண்ணிற்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலமாக சுலபமாக சக்தியில் இணைந்துவிடலாம்.

    சக்தியில் இணைபவர்கள் நேரடியாக கட்சி தலைமையுடன் ஒரு தொடர்பை உருவாக்கிக் கொள்ள முடியும்.

    உள்ளூர் தலைவர்கள் வாக்குச்சாவடி அளவில் உள்ள தொண்டர்களின் மூலமாக நேரடியாக அப்பகுதி மக்களிடம் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண தேவையான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

    தொண்டர்களின் கருத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிந்து கொள்வதற்கும், காங்கிரஸ் கட்சியினரிடையே கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்துவதற்கும், செயல்திட்டங்கள் வகுப்பதற்கும் மிகப்பெரிய வாய்ப்பு உருவாக்கப்பட இருக்கிறது.

    சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படுகிற அவதூறு பிரசாரங்களை முளையிலேயே முறியடிப்பதற்கு சக்தி திட்டம் ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.

    எதிர்காலத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்கிற பொழுது சக்தி திட்டத்தின் பங்களிப்பு பிரதானமாக இருக்கும். எனவே சக்தி திட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக உருவாக்கி காங்கிரஸ் கட்சியினரிடையே இதனை ஒரு இணைப்புப்பாலமாக அமைத்திட இதில் பெருமளவில் தங்களை பதிவு செய்து பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Thirunavukkarasar

    மோடியின் கூட்டணியில் யாரும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் குழுக்கள் அமைப்பதற்காக தமிழக பொறுப்பாளர்களை சந்திக்க டெல்லி செல்கிறேன். இறுதி முடிவை ராகுல்காந்தி அறிவிப்பார்.

    எந்த மாநிலத்திலும் மோடியின் அலை இல்லை. குறிப்பாக தமிழகத்தில் 5 சதவீதம் கூட மோடிக்கு ஆதரவு இல்லை. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதில் இருந்து மோடிக்கு எதிர்ப்பு இருப்பது தெரிகிறது.

    அகிலேஷ் யாதவ், மாயவாதி கூட்டணி பா.ஜனததாவுக்கு எதிரான கூட்டணி. மதம், ஜாதி, மொழி ஆகியவற்றை வைத்து மக்களை பிரித்து ஆளும் வழக்கம் உடையவர் மோடி. அப்படித்தான் சபரிமலை, முத்தலாக் போன்ற வி‌ஷயங்களில் தலையிட்டுள்ளார்.

    தமிழகத்தில் கூட்டணி கதவு திறந்து இருக்கிறது என்று மோடி கூறி இருக்கிறார். அந்த கதவுக்குள் நுழைய யாரும் இல்லை. பா.ஜனதா கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியே வருகிறது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது.

    கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். அவர் வைத்துள்ள போலீஸ் துறையை வேறு யாருக்காவது கொடுக்க வேண்டும். கொடநாடு விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். அல்லது பணியில் இருக்கும் நீதிபதியை வைத்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நாட்டு மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நாளில், கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #newyear2019 #partyleaders

    சென்னை:

    புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:-

    உலக ஜனத்தொகையில் அதிகப்படியான இளைஞர்களை கொண்ட நமது நாட்டில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை வள மாக்கி உலகை வெல்லும் வல்லமை படைத்தவர்களாக ஒவ்வொரு இந்திய இளைஞனும் உருவாகும் காலத்திற்கான துவக்கம் 2019. இந்த நல்ல நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக இந்திய மக்கள் ஒவ்வொருவரும் நல்லமுடி வினை எடுத்து, நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு பக்கபலமாக துணைநிற்க வேண்டும் என்ற எனது அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    இந்திய நாடு மதச்சார்பற்ற நாடு. ஜாதி, மத, மொழி வேற்றுமைகளை மறந்து நாம் அனைவரும் இந்தியத் தாயின் புதல்வர்களாக பல்வேற்றுமைகளிலும் ஒற்றுமை உள்ளவர்களாக வாழ்ந்து வரும் நிலை ஏற்பட வேண்டும். வெறுப்பு அரசியல் அகன்றிட வேண்டும். ஆட்சிகள் ஊழல் அற்றதாக, ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை பெற்றதாக இருந்திட வேண்டும்.

    இப்புத்தாண்டில் மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர்ந்திட வேண்டும். மாற்றங்கள் நிகழ்த்தப்பட மக்கள் இந்நாளில் சபதம் ஏற்க வேண்டும்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன்:-


    ஊழல் இல்லாத ஆட்சி நடத்தி காட்டிய சாதனை நாயகன், மெய் வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், ஓய்வின்றி நாட்டு மக்களுக்காக உழைத்த நம் பாரதப் பிரதமர் மோடியின் ஆட்சி மீண்டும் அமைய இப்புத்தாண்டில் நாம் அனைவரும் சபதமேற்போம்.

    2019-ம் ஆண்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்ற வேண்டும். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக் கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டு மென எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    இந்த புத்தாண்டாவது சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திட வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    2019-ம் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். அல்லவை அகன்று நல்லவை நிறைந்த ஆண்டாக 2019-ம் ஆண்டு அமைய வேண்டும். தமிழ் நாடு இதுவரை சந்தித்த ஏமாற்றங்கள் அனைத்தும் பழங்கதையாகி மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட வேண்டும். அதன் பயனாக தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் வளர்ச்சியும், மலர்ச்சியும் மட்டுமே தொடர்கதையாக வேண்டும். அதற்காக இப்போதிலிருந்தே உழைக்க ஆங்கிலப் புத்தாண்டு நாளில் தமிழக மக்கள் அனைவரும் சபதம் ஏற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன்:-

    மீண்டும் அம்மாவின் உண்மையான நல்லாட் சியை தமிழகத்தில் இப்புத் தாண்டில் படைத்திட நம் இதயங்களும், கரங்களும் ஒன்றிணையட்டும்.

    மலர்ந்திடும் இப்புத்தாண்டில் மதநல்லிணக்கமும், சகோதர நேசமும் மேலோங்கிடும் மகிழ்ச்சியின் ஆண்டாக, செழிப்பின் ஆண்டாக, சாதனைகளை நாம் செதுக்கிடும் ஆண்டாக அமைந்திடட்டும் என வாழ்த்தி மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித் தாக்குகிறேன்.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையமாக ஆக்கி, அதற்கு முன்பும்பின்பும் இரண்டாகப் பகுக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குப் பின் தற்போது இரண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து, இந்த நாளில் 2019-ல், உலகம் அடி எடுத்து வைக்கின்றது.

    தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற வாக்காளப் பெருமக்கள் இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டுகின்றேன்.

    அதன் தொடர் விளைவாக, தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க தமிழக வாக்காளப் பெருமக்கள் கடமை ஆற்ற வேண்டும். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-

    மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்தி ஒன்றுபட்டு விரிவான பரந்துப்பட்ட, மக்கள் மேடை அமைப்பதும், மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்து வகுப்புவாத சக்திகளையும், நிதிமூலதன சக்திகளையும் அகற்றுவதும் 2019-ம் ஆண்டு முன்நிறுத்தும் கடமையாகும்.

    காலம் முன்னிறுத்தும் கடமையினை நிறைவேற்ற புத்தாண்டில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-


    ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கஜா புயலால் கடும் துயரத்தை சந்திக்க நேர்ந்தது. தூத்துக்குடி பயங்கரம் நிகழ்ந்தது. ஆற்றுநீர் பிரச்சினைகள் நம் அமைதியை சீர்குலைத்தது. இவ்வாறு பல இன்னல்களை சுமந்த ஆண்டாக 2018 கடந்து இருகிறது.

    புதிய ஆண்டு 2019 இயற்கை பேரிடர் இல்லாத ஆண்டாக, இன்னல்கள் நம்மை சூழாத ஆண்டாக, ஜனநாயகம் தழைக்கும் ஆண்டாக மலர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது.

    தமிழகத்திலும் அகில இந்திய அளவிலும் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு ஆட்சி அதிகாரத்தை வெல்லும் ஆண்டாக அமைய வேண்டும், அதற்கு ஏதுவாக புத்தாண்டு அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்கும் தமிழ் மக்களாகிய நாமெல்லாம் தமிழ்நாட்டில் இனி ஒரு போதும் லஞ்ச லாவன்யத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம், நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடிய நல்லோர்களை தேர்ந்தெடுப்போம், வளமான தமிழகத்தையும் வலிமையான பாரதத்தையும் படைப்போம் என்று உறுதி ஏற்போம்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பகுதிநேர ஊழியர்கள், அனைவருக்கும் வரும் புத்தாண்டில் விடிவு காலம் பிறந்திட வேண்டும். மத்தியில் உள்ள சர்வாதிகார ஆட்சியும், மாநிலத்தில் உள்ள செயல்படாத ஆட்சியும் முழுமையாக அகன்றிட வரும் புத்தாண்டு வழிவிடட்டும்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இந்திய இறையாண்மைக்கும், சகிப்புத்தன்மைக்கும் சவால்விட்டு ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் அதிகாரத்தை தகர்க்கும் விதமாகவும், தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தும் 2019-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    புதிய நீதிக்கட்சித் தலை வர் ஏ.சி.சண்முகம்:-

    ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தொடங்கிவிட்டால் இல்லாமை, இயலாமை போன்ற தீமைகளை நம் தேசத்தைவிட்டே விரட்டி விடலாம். ஒவ்வொரு குடும்பமும் வளமானால் ஒட்டுமொத்த தேசமும் வளமாகும். இந்த நாடும் யாராலும் அசைக்க முடியாத வல்லரசாகும். நம்நாட்டை உயர்த்த நாட்டுமக்கள் அனை வரும் கரங்கள் கோர்ப்போம். இந்த இனிய புத்தாண்டு தினத்தில் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    இந்த புத்தாண்டில் சாதி, சமய, மொழி வேறுபாடுகளை மறந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற சகோதர எண்ணத்துடன் செயல்பட வேண்டும்.

    இந்த புத்தாண்டு மக்களுக்கு நன்மைகளையும், நம்பிக்கைகளையுமே வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும். ஊழலயற்ற, பொதுநலன் காக்கும் அரசு அமைய வேண்டும்.

    தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் அருள்தாஸ்:-

    2019-ம் ஆண்டு தமிழக மக்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிதரும் ஆண்டாகவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையக்கூடிய ஆண்டாக அமைந்திடவும், ஜாதி, மதம் கடந்து தமிழக மக்கள் அனைவரும் தமிழன் என்ற உணர்வோடும், அன்பு, அமைதி, சகோதரத்துவத் துடன் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ் வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

    மேலும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் விவரம் வருமாறு:-

    பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், மக்கள் தேசிய கட்சித் தலைவர், சேம.நாராயணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #newyear2019 #partyleaders

    தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு குறைத்துள்ளதற்கு திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #NutritionCenter

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காமராஜரால்1955ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டு, 1956 ம் ஆண்டு முதல் அரசு தொடக்க பள்ளியில் படித்த குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    இத்திட்டம் 1982ம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தால் இன்று 43 ஆயிரத்து 203 சத்துணவு மையங்களும், சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர்கள் என 90 ஆயிரம் பேர் பணியாற்றி, நாள்தோறும் 52 லட்சம் பள்ளிக் குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

    தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டத்திற்கு 1995 ம் ஆண்டு முதல் மத்திய காங்கிரஸ் அரசு மானியம் வழங்கியது. 60 சதவீதம் மத்திய அரசு நிதியும், மாநிலஅரசு 40 சதவீத நிதியும் ஒதுக்கி இத்திட்டம் செயல்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து தமிழக மக்களை புறக்கணிக்கின்ற மத்திய பா.ஜக. மோடி அரசு இதுவரை அளித்து வந்த 60 சதவீத நிதியை 40 சதவிதமாக குறைத்துள்ளது பெரும் கண்டனத்திற்குரியது.

    மத்திய அரசு நிதி குறைத்துள்ளது எனும் காரணம் காட்டி 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏழை எளிய மாணவர்களின் நலனில் இந்த அரசு அக்கறை காட்டாத அரசாக செயல்படுகிறது என்பதையும், 8000 சத்துணவு மையங்களை மூடுவதால், 24000 சத்துணவு ஊழியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில் கொள்ளாத மாநில அ.தி.மு.க. அரசு, இத்திட்டத்திற்கு மத்திய அரசிடம் நிதி கோர உரிய அழுத்தத்தை காட்டாமல், மாறாக 8000 சத்துணவு மையங்களுக்கு மூடு விழா எடுக்க நினைக்கும் நிலை மாநில அ.தி.மு.க.வின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது.

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதை செயல்படுத்தாமல், கூடுதலாக கடைகளை திறக்க முயலும் அ.தி.மு.க. அரசு ஏழை எளிய மாணவர்களின் பசியை போக்கும் சத்துணவு மையங்களுக்கு மூடுவிழா நடத்தும் போக்கு கண்டிக்கத்தது.

    ஒரே கல்வித் தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு இருவிதமாக ஊதியம் வழங்காமல் ஒரே ஊதியம் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை தமிழக முதல்வர் அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும்.

    இதுபோல் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தினையும் மனதில் கொண்டு ஏழை எளிய கல்விப் பயிலும் மாணவர்களின் நிலைப்பாட்டினையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறி உள்ளார். #Congress #Thirunavukkarasar #NutritionCenter
    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் பிறந்தநாளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Nallakannu #Thirunavukkarasar
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இன்று பிறந்தநாள் காணும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை எனது சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன். நல்லக்கண்ணு அரசியலில் நேர்மையானவர், தூய்மையானவர். அனைவரிடத்திலும் அன்பாக பழகும் சிறந்த பண்பாளர்.

    அவர் நல்ல உடல்நலத்துடன் நூற்றாண்டுக்கும் மேலாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, தொடர்ந்து அவர் அவரது கட்சிக்கும், பொது மக்களுக்கும் தொண்டாற்றிட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Nallakannu #Thirunavukkarasar
    ×