search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100341"

    காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எஸ்.முகம்மது இஸ்மாயில் நீக்கப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #Congress
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மண்ணிவாக்கத்தை சேர்ந்த எஸ்.முகம்மது இஸ்மாயில், தமிழ்நாடு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக எக்காலத்திலும் அறிவிக்கப்படவில்லை. அவர் தன்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் என்று கூறிக் கொண்டு தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக கருத்துக்களை தெரிவித்து செயல்படுவதால், காங்கிரஸ் கட்சியின் எந்த பதவியிலும் இல்லாத எஸ்.முகம்மது இஸ்மாயில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்.

    இவரோடு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ஊடகத்துறை நண்பர்கள் கட்சி ரீதியாக எவரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    முகமது இஸ்மாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநாவுக்கரசருக்கும் குஷ்புவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டபோது குஷ்புவுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Thirunavukkarasar #Congress
    சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. #Congress #Thirunavukkarasar
    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஒப்புதல் அளித்துள்ளார். புதிய நிர்வாகிகள் பட்டியலை சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜசேகரன் வெளியிட்டுள்ளார்.

    கந்தன், ஆரோக்கியதாஸ், துறைமுகம் எஸ்.குமார், துறைமுகம் ஆர்.பாண்டியன், கொண்டல்தாசன், ஏ.பி.சத்யா, எஸ்.வி.விஸ்வநாதன், பி.கருணாகரன், என்.ரமேஷ், எஸ்.ஹெளஸ், ஏ.எஸ்.ராஜேந்திரன், எம்.வெங்கடேசன், எஸ்.பி.சாரதி, முருகேசன், புலவர் ஆறுமுகம், பி.செல்வம், வைத்தி ஆறுமுகம், எஸ்.எம்.டி.மீரான், ஜி.கலையரசன், வரதை மனோகர், ஏ.ஷேக் தாவூத்.

    பிராட்வே எம்.பி.நாகராஜ், துறைமுகம் எம்.முஹம்மத் பாரூக், வக்கீல் விக்டர், பொன்வண்டு ஜி.ரவிச்சந்திரன், சிவாஜி நாதன், பொன். துளசிக்குமார், சி.சண்முகம், டன்லப் ராமசுந்தரம், மின்ட் முஹம்மத் பாரித், எம்.அன்பழகன், சி.கண்ணன், கே.என்.நேரு, டி.கே.பாணி, கே.ஜெகதீஷ், சதீஷ்குமார், ஜமீல், பட்டுகிரிபபபு, ஜெ.ஹென்1, கொடி.பரமேஸ்வரன், நூர்பேகம், ஜாஹீருதீன், எல்டம்ஸ்பாபு, ஜான் கென்னடி, நாஞ்சில் சுந்தரராஜன், எஸ்.ராமு, பன்னீர்செல்வம், டி.சத்தியநாதன்.

    அசோக்குமார், வி.கலைச் செல்வன், ஏ.சிராஜுதீன், வக்கீல் அருண்காந்தி, எம்.ஏ. தண்டபாணி, பி.ஜெயபால், எம்.சுப்பிரமணி, ஜெ.உமாபதி, டி.ராஜா, டி.ரவிச்சந்திரன், கே.எஸ்.ஸ்ரீனிவாசன், ஜி.சயீத்ரபிக், கே.தமிழரசு, ஈ.கலைச்செல்வி, ஏ.அன்புசெல்வம், எஸ்.தெய்வசிகாமணி, ஆர்.முனுசாமி, கிபலாஅஜீஸ், ஜெ.மோகன், பி.ஜெயராமன், கங்காதரன், எம்.முஹம்மத் ஹாஜா மொஹைதீன், ஜெ.நவாஸ், கே.தமிழரசு.

    திருநாவுக்கரசு, பாளை.அக்பர், பி.தேவராஜ், எஸ்.எம்.பாரூக், தம்பையா, பி.ஆர்.தட்சிணாமூர்த்தி, சக்தி ஆர்.சிவகுமார், பி.சக்திவேல், விஜயராஜ், நளாயினி, கமலாபுருசோத்தமன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ராயப்பேட்டை பாஸ்கர், சி.ஜெத்தன்ராஜ் பாக்மார், வி.எல்.கெளதமன், எஸ்.எம்.சுகிர்தன், எம்.குணசேகரன்.

    மாவட்ட அலுவலக செயலாளர்களாக எஸ்.சரவணன், எஸ்.இப்ராஹிம்ஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த கட்சியின் வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபட மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar
    சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ்கட்சியின் தலைவராக க.வீரபாண்டியன் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி கட்சியின் சாதனை மலரை திருநாவுக்கரசர் வெளியிட்டார். #Thirunavukkarasar #Congress
    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் க.வீரபாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ்கட்சியின் தலைவராக க.வீரபாண்டியன் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி கட்சியின் சாதனை சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதனை திருநாவுக்கரசர் வெளியிட மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பெற்றுக் கொண்டார். முன்னதாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த திருநாவுக்கரசருக்கு குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #Congress #Thirunavukkarasar
    தமிழக முதல்வராக காமராஜரின் தொண்டர் வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress

    போரூர்:

    சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் திருமங்கலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடை பெற்றது.

    கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    நான் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நமது கட்சியில் இதுவரை 28 லட்சம் உறுப்பினர்களை நாம் சேர்த்துள்ளோம்.

    வெகு விரைவில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 50 லட்சமாக உயர வேண்டும் இந்தியாவிலேயே ஜாதி மதம் இல்லாத ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி மட்டும் தான். மத்தியில் மோடி தலைமையில் நடைபெறுகின்ற காவி ஆட்சியையும் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. ஆவி ஆட்சியையும் விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

    ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்தில் காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. ஆனால் தற்போது அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து கிடப்பதால் இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி தான். 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு விரைவில் வர இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.

    ஆகவே நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு ராகுல்காந்தி பிரதமராக வருவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் பக்கத்து மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிசேரி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்திருக்கிறது.

    விரைவில் தமிழ்நாட்டில் காமராஜரின் தொண்டன் முதல்வராக வர வேண்டும் அதுவே எனது ஆசை

    இவ்வாறு திருநாவுக்கரசர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் குமரிஅனந்தன், முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ஜேஎம் ஆருண், ராணி மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, மாவட்ட தலைவர்கள் திரவியம், சிவ ராஜசேகரன், மகேந்திரன், நிர்வாகிகள் சிரஞ்சீவி, ஐடி அரசன்,கராத்தே ரவி, டி.பெனட், ஐயப்பன் டிராவல்ஸ் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #Thirunavukkarasar #Congress

    சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டார். #congress #Thirunavukkarasar

    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அனுமதியுடன் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    மாவட்ட துணை தலைவர்களாக எஸ்.மோகனரங்கம், சூளை.எஸ்.ராமலிங்கம், சூளை.கோ.நாராயணன், எஸ். முனீர்பாஷா, எஸ்.எம். கமல், எ.எம். விஸ்வம், வி.விஜய், ஆர்.டி.குமார், ஆர்.வி.பாலசுந்தரம், ஜி.துரைராஜ், தேவசண்முகம், யு.ராஜேஷ், அயன்புரம் சரவணன், பி.அரிரங்கன், இ.சுதர்சன், சி.எஸ்.சாவித்திரி, கெளரிசங்கர், கோபாலபுரம். புருஷோத்தமன், வி.எஸ். லாவாமுரளி, பி.வி.சந்திரன், வழக்காறிஞ்சர். அருள் நடராஜன், எ.டி.செல்வராஜன், எம்.எஸ். சக்திதயாளன், எஸ். சுப்பையா, எம்.சந்தன், ஆர் ரவிமதி, ஜி.வாஞ்சிநாதன், ஜிம். பாபு, திவாகர் செல்வியின்.

    பொதுசெயளாளர்களாக புல்லாபுரம் குமார், எ.எஸ். ஜீவன் பிரசாத், பி.சுரேஷ்பாபு, எஸ்.குமரவேலு, எம்.நித்தியானந்தம், எம்.எல்.கே.ரமேஷ், நூருல்அமீன், பி. ஜெ.வின்சென்ட், எ.வி.அப்ரோஸ் அகமது, டி.மணி, புளியம்பதி ரஜேந்திரன், கே.பரசுராமன், பரசை கிருஷ்ணமூர்த்தி, விஜயாக் ஸ்ரீராமுலு, எஸ்.எம்.காமேஷ், பீ.ருக்குமாங்கதன், கே.விஜயகுமார், ஜெ.சாந்தா ராமன், எ.பிருத்விராஜ், பீ.புருஷோத்தமன், வி.மோகன் குமார், சௌந்தர்ராஜன், பாலவிஜய்குமார், பி.அரிபாபு, எம்.கே.காதர்மொய்தீன், ஐ.ஜான்சன், எஸ். சுந்தர், எஸ்.ஜான்சன், த.தயாநிதி, சர்வதுல்லா, சி.துளசிராமன், கே.எஸ். நந்தகோபால், புரிசி.பாலு, எஸ்.புண்ணியககோட்டி.


    கு.தனசேகர், எ.சுஜாதா எத்திராஜன், எ.ஸ்ரீவாணி, மேத்தநகர் டில்லி, எஸ். மாருதிராவ், டி.இளைய ராஜா, எ.சிவபிரபு, ஜி.முருகய்யன், டி.நிர்மலா, எம்.ஜி. கல்யாணசுந்தரம், ஆர். சபீர்பாஷா, பி.முரளிகிருஷ்ணன், எம். பி.சம்பத்குமார்.

    செயலாளர்களாக அண்ணாமலை, ஜி.எஸ்.சரவணன், எம்.எஸ்.ரபீர்முகம்மது, மேஸ்திரிதாஸ், எஸ்.எம். கருணா, சி.பி.நரேஷ்குமார், எஸ்.எம்.கருணாகரன், எஸ்.அந்தோணி, எஸ்.ஆர். கே.நடராஜன், எஸ். தேவர், எம். யவணக்குமார், அஸ்கர் பாஷா, சமுகபித்தன், எஸ்.தனலட்சுமி, எம்.துளசிவிஸ்வநாதன், எம். முருகன், எ.ஜி.ராஜ் குமார், எஸ்.கே.கிருபாகரன், எஸ்.ஜெயபால், என்.ரஞ்சித்குமார், எஸ்.பாலகிருஷ்ணன், கோட்டீஸ்வரன், பி.சினிவாசன், ஆர்.எம்.ரோஷிந்தர், ஆர். பி.கே.சண்முகசுந்தரம், ஏழுமாலை, டி.தினேஷ்குமார், விக்னேஷ், ஜெ.தினேஷ், மீதுன் சக்கரவர்த்தி, என்.செபஸ்டின், கே.கோபண்ணா, ஆர்.எஸ். தேவிசங்கர், பாதல், எம். என்.ரவிசந்திரன், விஜயரங்கன், ஆர்.வாசுகி, எ.பீ. பாத்திமா,

    மார்கெட். எம்.சத்யா, என்.ராஜேந்திரன், ஆர்.பாலாஜி, கலையரசன், சேட்ரவி, எ.சந்திரசேகரன், எ.சந்தானலாட்சுமி, பி.சீத்த ராமன், திரு.வி.க.சீனிவாசன், டெய்லர் கணேசன், எஸ். ராஜேஷ், எஸ்.சசிகலா, கோ.பார்த்திபன், எச்.நரசிம்மன், விஐய்கிருஷ்ணா, ஜி.அன்பழ கன், ஜெ.சுந்தர்ராஜன், கோட்டை ராஜன், ஜி.ராஜசேகர், யு.திலக், துரை.மதிவாணன், எ.ஒ.கிருஷ்ணன்.

    செயற்குழு உறுப்பினர்களாக பி.வி.நாராயணன், எ.ஆர்.தேவதாஸ், சம்பத், எம்.வேதாச்சலம், அன்பு ராஜன், எம்.சுப்பிரமணியன், எஸ்.வி.எ.சந்திரசேகரன், எம்.ஐ.சேக்அப்துல்லா, ஆர்.பத்மா, ஆர்.ஆதிலட்சுமி, டி.அருட்செல்வன், வி.கணே சன், முகமது இலியாஸ், பாலசுப்பு, செல்வராஜ், எ.சூரியபாபு, சி.பாலராமூர்த்தி, ஆர். லட்சுமிபதி, சாதிக் பாட்ஷா, சி.கே.பாலமூர்த்தி, எஸ்.கணேஷ், மாதவன், சதீஸ், ஆர்.சங்கர், கே.தர்ம ராஜ், எ.முத்துசாமி, ஆர்.சோம சுந்தரம், கமல்பாஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதிய நிர்வாகிகள் அனைவரும் சீரிய முறையில் பணியாற்றிட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.  #congress #Thirunavukkarasar

    மத்திய பாரதீய ஜனதா அரசின் ரபேல் போர் விமான பேர ஊழலை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கோவையில் காங்கிரசார் பேரணி- ஆர்ப்பாட்டம் நடத்தினர். #congressdemonstration

    கோவை:

    மத்திய பாரதீய ஜனதா அரசின் ரபேல் போர் விமான பேர ஊழலை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். கோவை மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் வரவேற்று பேசினார்.

    கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், மாநில துணை தலைவர்கள் எம்.என். கந்தசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான சஞ்சய்தத் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    இதில் மாநில பொது செயலாளர்கள் தணிகா சலம், வீனஸ் மணி, முன்னாள் மேயர் வெங்கடாசலம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் எஸ். கவிதா, சரவணக்குமார், மாநில துணை தலைவர் என்ஜினீயர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் மகேஷ்குமார், கணபதி சிவகுமார், சவுந்திரகுமார், ஐ.என்.டி.யூ.சி கோவை செல்வம்,இளைஞர் காங்கிரஸ் குமரேசன், மகிளா காங்கிரஸ் உமா மகேஸ்வரி, காயத்ரி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஹரிஹர சுதன், எச்.எம்.எஸ். ராஜாமணி, வக்கீல் கருப்பசாமி, எம்.எஸ். பார்த்தீபன், காட்டூர் சோமு, சின்னையன், ஹனிபா, ராயல் மணிகண்டன், வக்கீல் கிருஷ்ண குமார், ஜெயப்பிரகாஷ், பிரபாகரன், துளசிராஜ், ராம்கி, சாய் சாதிக், இருகூர் சுப்பிர மணியன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், சின்னராஜ், விஜயகுமார், ஆகாஷ், தங்கதுரை, மயில் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    முன்னதாக கோவை அண்ணா சிலை அருகில் இருந்து தெற்கு தாசில்தார் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர். #congressdemonstration

    ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #rajivkillers

    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து இன்னும் 2 நாட்களில் தமிழக மாவட்ட தலை நகரங்களில் கண்டன பேரணி நடத்தி மாவட்ட கலெக்டரிடம் மனுகொடுக்க உள்ளோம். இது நாடு முழுவதும் நடைபெறுகிறது. சென்னையில் கவர்னரை சந்தித்து இதுகுறித்து மனுகொடுக்க உள்ளோம். இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் கலந்து கொள்கிறார்.

    அகில இந்திய அளவில் பாரத் பந்த் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தமிழகத்திலும் வெற்றிகரமாக நடந்தது. இந்த பந்த்துக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வில்லை. அதனால் பந்த் தோல்வி என்று சொல்லக் கூடாது. கண்ணை மூடிக் கொண்டு தோல்வி என்று சொல்பவர்கள் சொல்லட்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா படுதோல்வி அடையும். பா.ஜனதா கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறி உள்ளன. தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்ற வில்லை. மக்களை ஏமாற்றியுள்ளார்.

    மக்கள் மோடி மீது கோபமாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது மோடி எப்படி அதிக இடங்களில் வெற்றி பெறுவார். மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் பகல் கனவு காண்கிறார். ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி.

    உலக அளவில் கச்சா எண்னை விலை குறைந்திருக்கும்போது தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்துள்ளது. மத்திய அரசுக்கு மக்கள் மீது அக்கறைஇல்லை. எதிர்க்கட்சிகள் மக்கள் மீது அக்கறை கொண்டு கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துகின்றன.

    அதைப்பற்றி கவலைப்படாமல் தினந்தோறும் மத்திய அரசு பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தி வருகிறது. விரைவில் பெட்ரோல்-டீசல் விலை 100 ரூபாயை எட்டிவிடும்.

    சுமார் 4½ ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசும், எண்ணை நிறுவனங்களும் லாபமாக பெற்று பலனடைந்துள்ளனர். இதற்கு பா.ஜனதா ஒரு விலை தர வேண்டி இருக்கும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடையும்.

    தமிழ்நாட்டில் எந்த கட்சி தலைவர்களுக்கும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அருகதை இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறி இருப்பது மிகவும் தவறானது. மக்களை அவமானப்படுத்தும் வகையில் அவரது பேச்சு இருக்கிறது. தமிழகத்தில் 50 எம்.பி.க்கள் இருக்கின்றனர். தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கின்றது என்று பொன்.ராதாகிருஷ்ணன் ஒத்துக் கொள்வாரா?


    ராஜீவ்காந்தி படுகொலையில் ஈடுபட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே ஒரு தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. காங்கிரஸ் சார்பில் அதை நான் எதிர்த்துள்ளேன். ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டபோது அங்கிருந்த பொதுமக்கள், காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். பலர் ஊனமுற்று உள்ளனர். அவர்கள் எல்லாம் விடுதலை செய்யக் கூடாது என்று தினமும் கூறி வருகின்றனர்.

    அந்த 7 பேரில் 4 பேர் வெளிநாட்டினர். தமிழக அரசு பரிந்துரை செய்தது தவறான முடிவு. ஆளுநர் முடிவு செய்வதில் சிரமம் என்பதால் தான் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளார். இதில் மத்திய அரசும், உள்துறையும் முடிவு எடுக்காது என்று நம்புகிறேன். அப்படி விடுதலை செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

    சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் விடுதலை செய்யவேண்டும் என்று சொல்வதால் விடுதலை செய்யக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #rajivkillers

    கோவையில் நாளை காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பேரணி தொடங்குகிறது. இதில் திருநாவுக்கரசர் - முகுல் வாஸ்னிக் பங்கேற்கிறார்கள். #congress #thirunavukkarasar

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தலின் படி கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சித்தாபுதூர் மகளிர் பாலிடெக்னிக்கில் இருந்து தொடங்குகிறது.

    பேரணி ஆர்.டி.ஓ. அலுவலகம் வழியாக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் சென்றடைகிறது.

    மத்திய பாரதீய ஜனதா அரசின் ரபேல் போர் விமான பேர ஊழலை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான சஞ்சய் தத் ஆகியோர் பேசுகிறார்கள்.

    இதில் மாநில ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, மாநில பொது செயலாளர் வீனஸ் மணி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் வட்டார தலைவர்கள்உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள். கோவை ராமநாதபுரம் வட்ட தலைவர் கணேசன் நன்றி கூறுகிறார்.

    ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்கிறார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #congress #thirunavukkarasar

    அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. வீட்டில் நடைபெற்ற சோதனையால் தமிழகத்துக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். #thirunavukkarasar #Congress
    அவனியாபுரம்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட பந்த் வெற்றி என்பது மோடி அரசை தோற் கடிக்க பெற்ற வெற்றியாக நினைக்கிறேன்.

    இன்றைய தேதி வரை பெட்ரோல் விலையை உயர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

    பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது அதன் விலையை மட்டும் உயர்த்தியதோடு அல்லாமல் அனைத்து போக்குவரத்து மற்றும் அத்தியாவாசிய பொருட்கள் விலைகளையும் உயர்த்தும்.

    அமைச்சர், டிஜி.பி போன்றவர்கள் வீட்டில் நடைபெற்றுள்ள சோதனையால் தமிழ்நாட்டிற்கு அவமானம் ஏற்பட்டுள்ளது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை என்பது மற்ற குற்றங்களுக்கு முன் உதாரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #Congress
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது போலீஸ் அனுமுதி பெறாமல் கூட்டம் திரட்டியதால் திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நேற்று பந்த் நடந்தது.

    தமிழகத்தில் நடந்த பொது வேலைநிறுத்தத்தையொட்டி சென்னையில் சேப்பாக்கத்தில் தமிழக காங்கிரஸ் தலைர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்து கட்சி சார்பில் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இந்த போராட்டம் போலீஸ் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் திருவல்லிக்கேணி போலீசார் போராட்டத்தை நடத்திய காங்கிரசார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    போலீஸ் அனுமதியின்றி திடீரென அரசியல் கட்சிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்திய திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 143, 188 மற்றும் சென்னை போலீஸ் சட்டப்பிரிவு 41 (6) ஆகிய மூன்று பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி பெற்றதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார். #BharatBandh #PetrolDieselPrice #Thirunavukkarasar
    சென்னை:

    பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் வெற்றி பெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சியும், தோல்வி அடைந்ததாக பாஜகவும் கூறி வருகின்றன.



    அவ்வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், ‘பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்திய முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது’ என்றார்.

    தமிழகத்தில் அதிமுக தவிர்த்து முழு அடைப்பில் பங்கேற்ற மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துக் கட்சிகள், வணிகர் அமைப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் திருநாவுக்கரசர் கூறினார். #BharatBandh #PetrolDieselPrice #Thirunavukkarasar
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது குறித்து திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார். #RajivAssassination #SC #Thirunavukkarasar
    புதுடெல்லி:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறதே? இதை நீங்கள் வரவேற்கிறீர்களா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-



    சட்டம் எதுவோ, சட்டப்படி நடக்கும். ராஜீவ்காந்தி தமிழ் மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். அது இன்னும் மக்கள் மனதில் காயமாக இருக்கும் விஷயம். அதேநேரத்தில் குற்றவாளிகள் 7 பேர் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். ராகுல்காந்தி கூட, என் அப்பா ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது எனக்கு வருத்தம் தான் என்று கூறியிருக்கிறார். அதற்காக யாரையும் பழி வாங்க வேண்டும் என்று ராகுல்காந்தி நினைப்பதில்லை. எனவே எது சட்டமோ, அரசாங்கம் என்ன நினைக்கிறதோ, அது நடக்கட்டும்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் பதில் அளித்தார்.  #RajivAssassination #SC #Thirunavukkarasar
    ×