search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100387"

    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தடையால் பெரும் பொருளாதாரச் சரிவை ஈரான் சந்தித்துள்ள நிலையில் அந்நாட்டு நிதி மந்திரியை பாராளுமன்றம் இன்று பதவி நிக்கம் செய்தது. #Iranianparliament
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஈரான் நாட்டு நாணயத்தின் மதிப்பு ஒரேநாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

    கடந்த ஆண்டுவாக்கில் 42,890 ரியால்களாக இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாக கூடிக்கொண்டே போய் கடந்த மாத இறுதியில் 57,500 ரியால்களாக உயர்ந்து கடந்த மே மாதவாக்கில் 80 ஆயிரம் ரியால்களுக்கு விலைபோனது. இதனால், ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாக நிலைகுலைந்து காணப்படுகிறது.

    நிலைமை மேலும் மோசம் அடைவதை தவிர்க்கும் வகையில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பொருளாதார நிபுனர்களும், எதிர்க்கட்சியினரும் எச்சரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஈரான் நாட்டு பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித்துறை மந்திரி மசவுத் கர்பாசியன்-ஐ அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர்.

    இதேபோல், சமீபத்தில் அந்நாட்டின் மத்திய வங்கி தலைவரை நீக்கம் செய்து அதிபர் ஹசன் ரவுகானி உத்தரவிட்டதும், தொழிலாளர் நலத்துறை மந்திரியை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றம் வாக்களித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. #Iranianparliament #Iranfinanceremoved #MasoudKarbasian
    ஈரான் நாட்டில் குடியிருப்பு பகுதியில் பாய்லர் ஒன்று வெடித்து சிதறியதில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    டெஹ்ரான்’

    ஈரான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ளது மஷாத் நகரம். இங்குள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்பு ஒன்றின் அருகில் இன்று காலை திடீரென பாய்லர் வெடித்து சிதறியது.

    இந்த விபத்தில் அங்கிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், பாய்லர் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த மூன்றுக்கு மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.

    தகவலறிந்து அங்கு வந்த மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலியானவர்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக உள்ளூர் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அமெரிக்காவின் கடும் பொருளாதார தடையையும் மீறி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர் விமானத்தை ஈரான் இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என அமெரிக்கா நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையில், சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான ஜனநாயக அரசை நிலைநிறுத்துவதற்காக ஈரான் அரசு ராணுவ உதவிகளை செய்து வருகிறது.

    பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் மீது ஈரான் விமானப்படைகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு முன்னர் கடந்த 1979-ம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற புரட்சிக்கு முன்னர் ரஷியா மற்றும் அமெரிக்காவிடம் வாங்கப்பட்ட போர் விமானங்களைதான் ஈரான் பயன்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், அணு ஆயுதம் தயாரிப்பதாக ஈரான் மீது குற்றம்சாட்டிய உலக நாடுகள் ஈரானுக்கு போர் ஆயுதங்களையும், விமானங்களையும் விற்க மறுத்து விட்டன. இந்த புறக்கணிப்புக்கு இடையில் ராணுவ பலத்தை அதிகரிக்க ஈரான் சபதம் ஏற்றது. தேவையான போராயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதுடன் அதிநவீன போர் விமானங்களையும் தயாரிக்க கடந்த 2013-ம் ஆண்டில் திட்டம் தீட்டப்பட்டது.

    இந்த திட்டத்தின்படி, தயாரிக்கப்பட்ட ‘கவுசர்’ என்னும் போர் விமானத்தை ஈரான் இன்று சோதனை வெள்ளட்டோத்தின் மூலம் வெற்றிகரமாக பரிசோதித்தது. #Iranfighter jet
    ஈரானில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரும் சென்னை வந்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். #TamilmaduFishermen
    ஆலந்தூர்:

    ஈரானில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரும் சென்னை வந்தனர். பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீண்டும் தொழில் செய்ய தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார், ஆரோக்கியராஜ், சகாய மைக்கேல் பார்த்திபன், ஜோசப், சேவியர் ஜெபமாலை, சூசை, சேவியர், ஜேசுதாசன், திருநெல்வேலியை சேர்ந்த செல்வகஸ்பர், விஜய், ஜேசுஇக்னேடிஸ், மார்க்வார்க், அந்தோணி மைக்கேல், அந்தோணி ராயப்பன், மரியஜோசப் கென்னடி, தூத்துக்குடியை சேர்ந்த பெனிடோ, சேவியர், சுஜய்பெர்ணான்டஸ், விக்டர், பிரசாந்த், அஜிடன் ஆகிய 21 மீனவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரான் நாட்டுக்கு மீன்பிடி தொழிலுக்காக சென்றனர்.

    இவர்கள், வேலைக்கான விசாவில் இல்லாமல் சுற்றுலா விசாவில் அழைத்து செல்லப்பட்டதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளானார் கள். இவர்களை பணிக்கு அமர்த்தியவர்களும் உரிய சம்பளம், உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தினர்.

    இதுபற்றி அவர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜஸ்டின் ஆண்டனிக்கு தகவல் கொடுத்தனர். இதுபற்றி அவர் மத்திய மந்திரிகள் சுஷ்மாசுவராஜ், பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கவனத்துக்கு கொண்டு சென்றார். தி.மு.க. எம்.பி. கனிமொழியும் இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை மந்திரியிடம் நேரில் வலியுறுத்தினார்.

    அதைதொடர்ந்து ஈரான் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக ஈரானில் தவித்த தமிழக மீனவர்கள் 21 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நேற்று அதிகாலை அவர்கள் அனைவரும் ஈரானில் இருந்து தோகா வழியாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தனர்.

    அவர்களை, அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

    பின்னர் மீனவர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் வாகனங்களில் அனுப்பி வைத்தனர். அத்துடன் அவர்கள், உணவு சாப்பிட தமிழக அரசின் சார்பில் 21 பேருக்கும் தலா ரூ.500 வழங்கப்பட்டது.

    முன்னதாக கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர் குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரானில் தவித்த எங்களை மீட்டுவர நடவடிக்கை எடுத்த மத்திய-மாநில அரசுகளுக்கும், எங்களுக்கு உதவியவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தமிழகத்தில் இருந்து எங்களிடம் இருந்த மீன்பிடி தொழிலுக்கு தேவையான பொருட்களை விற்று அந்த பணத்தில்தான் ஈரான் சென்றோம்.

    ஆனால் கடந்த 7 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் எங்கள் குடும்பம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நாங்கள் மீண்டும் தொழில் செய்ய எங்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோர் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilmaduFishermen
    ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால் ஏற்பட்டுள்ள தற்போதைய பிரச்சனைக்கு காரணமான அமெரிக்கா, தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது. #TrumpmeetRouhani #TrumpRouhani
    டெஹ்ரான் :

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    இதனால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீப காலமாக வார்த்தைப் போர் அதிகரித்து ஒருவித மோதல் போக்கு உருவாகியுள்ளது.

    இதற்கிடையே, ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானியுடன் எவ்வித முன்நிபந்தனைகளும் இல்லாமல் அமைதி பேச்சுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா வந்துள்ள இத்தாலி பிரதமர் கியுசெப்பு கோன்ட்டேவுடன் வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது, ஈரான் அதிபர் ரவுகானியை சந்திக்கும் எண்ணம் உள்ளதா? என்னும் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நான் சந்திப்புகளில் நம்பிக்கை கொண்டவன். ஈரான் அதிபர் என்னை சந்திக்க விரும்பினால் நான் நிச்சயமாக சந்திப்பேன்.

    இதற்கு ஈரான் தயாரா? என்பது எனக்கு தெரியவில்லை. அணு ஒப்பந்தத்தில் இருந்து நான் விலகியதும் அவர்கள் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளனர். எனவே, அவர்கள் சந்திப்புக்கு முன்வருவார்கள் என நான் நம்புகிறேன். அவர்கள் எப்போது விரும்பினாலும் நான் சந்தித்துப் பேச தயாராகவே இருக்கிறேன்.

    இந்நிலையில், ரவுகானியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ள ட்ரம்பின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜரிப், தற்போதைய பிரச்சனைகளுக்கு காரணமான அமெரிக்கா தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.



    ’ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வருடங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், ஈரானுடனான அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதாலேயே இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

    எனவே, தற்போதைய பிரச்சனைக்கு காரணமான அமெரிக்கா தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும். மிரட்டல்கள் மற்றும் பொருளாதார தடைகள் வேலைக்கு ஆகாது. எனவே, மதிக்க முயற்சி செய்யுங்கள்’ என முகமது ஜாவத் ஜரிப் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், அமெரிக்கா நம்பிக்கைக்குறிய நாடு அல்ல. அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகிய அந்த நாட்டை எப்படி நம்ப முடியும்?.

    அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் போது ஏற்கனவே ஏற்பட்ட மோசமான அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும் போது டொனால்ட் ரவுகானியை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ள கருத்தால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என ஈரான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TrumpmeetRouhani #TrumpRouhani
    ஈரான் நாட்டில் ஊதியம் வழங்காமல் ஏமாற்றப்பட்டதால் ஆதரவின்றி தவித்து வந்த தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர், அவர்கள் 3-ம் தேதி தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj
    புதுடெல்லி :

    கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர்கள் ஈரான் நாட்டு முதலாளி ஒருவருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளில் கடந்த 6 மாதங்களாக ஈரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால், அவர்களுக்கு 6 மாதமாக மீன்பிடித்ததற்கான உரிய கூலியை முறையாக வழங்காமலும், போதுமான உணவு வழங்காமலும் ஈரான் நாட்டு முதலாளியால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

    இதனால், தங்க இடமின்றி, உணவு இன்றி அவர்கள் அங்கு கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த தகவலை மீனவர்கள் தமிழகத்தில் உள்ள அவர்களின் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய தூதரகம் தலையிட்டு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு கோரிக்கையும் வைத்தனர்.

    அதன்படி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியை கடந்த ஜூன் மாதம் வலியுறுத்தினார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் வெளியுறுவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்த்தித்து 21 மீனவர்கள் மீட்பு குறித்து பேசினார்.

    இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

    ஈரானில் தனித்து விடப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 21 இந்திய மீனவர்கள் இந்திய தூத்தரகத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 3-ம் தேதி தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #SushmaSwaraj
    ஈரானை அமெரிக்கா தாக்கினால், அமெரிக்கா வைத்திருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம் என்று ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. #USIranClash #IranNuclearDeal #Trump
    தெஹ்ரான்:

    ஈரானுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளையும் தொடங்கி உள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

    ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தனது நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசும்போது அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டுவிட்டரில், ஈரான் அதிபருக்கு எச்சரிக்கை விடுத்தார்.



    “இனி எந்தக் காலத்திலும் அமெரிக்காவை மிரட்டக்கூடாது. இதையும் மீறி மிரட்டினால், வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும். உங்களது மிரட்டல்களை நீண்டகாலமாக அமெரிக்கா பொறுத்துக்கொண்டு சும்மா இருக்காது. உங்களுடைய அறிவில்லாத வார்த்தைகள் வன்முறையையும், மரணத்தையும்தான் ஏற்படுத்தும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்” என்று காட்டமாக குறிப்பிட்டு இருந்தார் டிரம்ப்.

    டிரம்பின் இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் நாட்டினை தாக்க அமெரிக்க முயற்சி செய்தால், அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம் என ஈரான் சிறப்பு படை கமாண்டோ காசிம் சோலிமனி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

    ‘டிரம்ப் போரை தொடங்கினார் என்றால் இஸ்லாமிய குடியரசு அதனை முடித்து வைக்கும்’ என்று மேஜர் ஜெனரல் கசிம் சபதம் ஏற்றுள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனமான டாஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது. #USIranClash #IranNuclearDeal #Trump

    அமெரிக்கா - ஈரான் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ள நிலையில், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்தை நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கலாய்த்துள்ளார். #DonaldTrump #Siddharth
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சித்தார்த், சமூக வலைதளங்களில் எப்போதுமே சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். ரசிகர்களுடன் உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என பிசியாக இருக்கும் சித்தார்த் அவ்வப்போது பொதுவான கருத்துக்களை பகிர்ந்தும், கிண்டல் செய்தும் வருகிறார்.

    அந்த வகையில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அதிபருக்கு விடுத்த எச்சரிக்கையை குறிப்பிட்டு டொனால்ட் டிரம்ப்பை, சித்தார்த் ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.

    ஈரான் அதிபர் ரவுகானிக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப், ‘அமெரிக்காவை மீண்டும் மிரட்ட நினைத்தால் வரலாறு முழுக்க சில நாடுகள் அடைந்த வேதனையை எதிர்கொள்ள நேரிடும். வன்முறை மற்றும் மரணங்களை காட்டி நீங்கள் மிரட்டுவதை பொறுத்துக்கொள்ளும் நாடாக அமெரிக்கா இனி ஒருபோதும் இருக்காது. எச்சரிக்கையாக இருங்கள்’ என்று ஆங்கிலத்தின் பெரிய (கேப்பிட்டல்) எழுத்துகளில் பதிவிட்டிருந்தார். 

    டிரம்ப்பின் அந்த ட்விட்டை குறிப்பிட்டு கருத்து பதிவு செய்த சித்தார்த், ‘உங்களுடைய கேப்ஸ் லாக் பட்டன் ஆன் ஆகியிருக்கிறது’ என்று கிண்டல் செய்தார். #DonaldTrump #Siddharth

    ஈரான் நாட்டில் நேற்று மூன்று முறை தாக்கிய நிலநடுக்கம் இன்றும் தொடர்ந்ததால் இதுவரை 400 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #repeatedearthquakesinIran
    டெஹ்ரான்:

    ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் நேற்று இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.7 மற்றும் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் உண்டான பாதிப்பு தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    சில மணி நேரத்துக்கு பின்னர் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கேர்மன்ஷா மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 5.9 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் சுமார் 300 பேர் காயமடைந்ததாக கேர்மன்ஷா மாகாண கவர்னர் ஹவுஸாங் பஸ்வன்ட் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஈரான் தலைநகரான டெஹ்ரானில் இருந்து தெற்கே சுமார் 1100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கெர்மான் மாகாணத்துக்குட்பட்ட சிர்ச் கிராமத்தை இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுக்கோலில் 5.9 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தில் சுமார் நூறுபேர் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.

    சமீபகாலமாக ஈரான் நாட்டின் சில பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கேர்மன்ஷா மாகாணத்தில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் நிலநடுக்கத்துக்கு சுமார் 620 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #400injured #repeatedearthquakesinIran
    ஈரானில் கடந்த 2017-ம் ஆண்டு பாராளுமன்றம் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான 8 ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Iran
    தெஹ்ரான்:

    ஈரான் தலைநகர் தெஹ்ரானில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடந்த 2017-ம் ஆண்டு பாராளுமன்றம் மற்றும் வழிபாட்டுத்  தலம் மீது நடத்திய தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐ.எஸ் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த தாக்குதலில் சம்பந்தபட்ட ஐ.எஸ் அமைப்பினரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக சுமார் 8 பயங்கரவாதிகளுக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த வழக்கில் மேலும் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    ஈரான் நாட்டில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் அதிக அளவிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Iran
    துபாயில் நடைபெற்ற கபடி மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா 44-26 என்ற புள்ளிக்கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvIRN #IRNvIND

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் நடைபெற்றது. லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா, தென்கொரியாவையும், ஈரான், பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.



    இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 18-11 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 26 புள்ளிகளும், ஈரான் 15 புள்ளிகளும் எடுத்தன. இறுதியில் இந்தியா 44-26 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvIRN #IRNvIND
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #WorldCup2018 #PORIRA
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் 45-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் ரிகார்டோ குவாரஸ்மா ஒரு கோல் அடித்தார்.

    ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ பயன்படுத்தவில்லை. அவர் அடித்த பந்தை ஈரான் கோல் கீப்பர் தடுத்துவிட்டார். 

    ஆட்டம் முடியும் வரை ஈரான் அணி வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. எனவே போர்ச்சுக்கல் வெற்றி பெற்று விடும் நிலை இருந்தது.

    கூடுதலாக கிடைத்த நிமிடங்களை ஈரான் அணி பயன்படுத்திக் கொண்டது. ஆட்டத்தின் 93-வது நிமிடத்தில் ஈரான் அணியின் கரிம் அன்சரிபர்ட் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனிலை அடைந்தது. 

    அதன்பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    இதனால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் 3 ஆட்டங்களின் முடிவில் 5 புள்ளிகள் பெற்ற போர்ச்சுக்கல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
    ×