search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100430"

    ஆந்திராவில் ரூ.10 லட்சத்துக்கு வாங்கப்பட்ட மண்ணுளி பாம்பு மற்றும் 3 செப்பு தகடுகள் பறிமுதல் செய்த போலீசார் 4 பேர் கைது செய்துள்ளனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் சாலக்குடியில் இருந்து திருச்சூருக்கு அரசு பஸ்சில் கஞ்சா கடத்துவதாக சாலக்குடி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீசார் ஆம்பலூர் என்ற இடத்தில் குறிப்பிட்ட பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் சந்தேகப்படும்படி இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.

    இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 148 செ.மீட்டர் நீளமுள்ள ஒரு மண்ணுளி பாம்பு இருந்தது. மேலும் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த 3 செப்பு பட்டயமும் சிக்கியது.

    அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெசீர் (வயது 34), அப்துல்லா (46), சம்சுதீன் (49), அலி (58) ஆகியோர் என்பது தெரியவந்தது. மண்ணுளி பாம்பு, 3 செப்பு பட்டயங்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்தவர்களை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கூறும்போது, ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஒருவரிடம் ரூ.10 லட்சம் கொடுத்து மண்ணுளி பாம்பு மற்றும் பட்டயங்களை வாங்கி வருகிறோம். அதனை திருச்சூரில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க கொண்டு செல்லும்போது பிடிபட்டோம் என்று கூறினர்.

    இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கப்பட்ட மண்ணுளி பாம்பு எதற்காக கடத்தப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டிட்லி புயல் தீவிரமாக வலுப்பெற்று ஒடிசா - ஆந்திரா இடையே, கோபால்பூரில் 140-150 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. #TitliCyclone
    வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல், கோபால்பூருக்கும் (ஒடிசா), கலிங்கப்பட்டினத்துக்கும் (ஆந்திரம்) இடையே இன்று காலை கரையைக்கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயலின் தாக்கம் காரணமாக ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மரங்கள் முறிந்து விழுந்தன. புயலின் தாக்கம் அடுத்த மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக புயல் எச்சரிக்க விடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஒடிசாவின் கடலோர மாவட்டங்களான புரி, கேந்தரபரா, ஜகத்சிங்பூர், குர்டா, கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.



    மேலும், ஒடிசா, ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு 1,000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது. ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் ஒரு வாலிபர் கொண்டு வந்த ரூ.1 கோடியே 5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். #AndhraPradesh #Chennai #OneCrore
    சென்னை:

    ஆந்திரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்திவருவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் தலைமையிலான போலீசார் நேற்று காலை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை வந்த ஆந்திர மாநில பஸ்சை சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் சூட்கேசில் கட்டுக்கட்டாக ரூ.1 கோடியே 5 லட்சத்தை 24 பண்டல்களாக கொண்டுவந்ததை கண்டுபிடித்தனர்.

    போலீசார் அந்த வாலிபரை அவர் கொண்டுவந்த பணத்துடன் பிடித்து செங்குன்றம் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் பணத்தை கொண்டுவந்த வாலிபர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், பாவகாபுரம் கிராமத்தை சேர்ந்த துர்காராவ் (வயது 35) என்பது தெரிந்தது.

    சென்னை சவுகார்பேட்டையில் நகைகள் வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டுவந்ததாக அவர் தெரிவித்தார். செங்குன்றம் போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். அந்த பணம் பாதுகாப்பாக செங்குன்றம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. #AndhraPradesh #Chennai #OneCrore
    ஆந்திர பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் சேதம் அடைந்து இருக்கிறது. சித்தூர் மாவட்டம் பொட்டம்மேடு, தில்லமேடு மற்றும் பல பகுதிகளில் கால்வாய் ஓரம் உள்ள சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து சிதறி கிடக்கிறது.
    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தில் ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும்.

    இதற்காக கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இதற்காக வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது. இதில் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர், தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய் உள்ளது.

    தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டிலிருந்து பூண்டி ஏரி இடையே உள்ள 25 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

    இந்த நிலையில் ஆந்திர பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் சேதம் அடைந்து இருக்கிறது. சித்தூர் மாவட்டம் பொட்டம்மேடு, தில்லமேடு மற்றும் பல பகுதிகளில் கால்வாய் ஓரம் உள்ள சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து சிதறி கிடக்கிறது.

    இதேபோல் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. கற்கள், மணல்களும் கால்வாய்க்குள் கிடக்கிறது. இதனால் கால்வாயில் தண்ணீர் செல்வது கடுமையாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணா கால்வாயில் செல்லும் தண்ணீரை ஆந்திர விவசாயிகளும் பயன்படுத்துகிறார்கள். எனவே கிருஷ்ணா கால்வாயை விரைவில் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

    இதேபோல் தமிழக பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் கடந்து செல்ல சிறு பாலங்கள் உள்ளன. அந்த பாலங்களும் பழுதடைந்து கீழே இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. அதையும் உடனே சீர்செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். #NandamuriHarikrishna #NTR
    அமராவதி:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரி என்.டி ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி - அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்ற போது, ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.



    இந்த விபத்தில், படுகாயம் அடைந்துள்ள ஹரிகிருஷ்ணா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகவும் ஹரிகிருஷ்ணா பணியாற்றியுள்ளார். 
    ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் திருமண விழாவிற்கு சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #AndraAccident
    ஐதராபாத்:

    ஆந்திரப்பிரதேச மாநிலம் பேனுகொண்டா மண்டல் மாவட்டத்தில் உள்ளது சத்தாருபள்ளி கிராமம். இந்த பகுதியில் திருமண விழாவிற்கு சென்ற வேன் மீது மினி லாரி ஒன்று வேகமாக மோதியது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விசாரணையில், தர்மாவரம் பகுதியில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்க வேன் ஒன்றில் 22 பேர் சென்று கொண்டிருந்தனர். சத்தாருபள்ளி என்ற இடத்தில் வேன் சென்றபோது எதிரே வந்த மினி லாரி மோதியதில் வேன் தலைகீழாக கவிழ்ந்தது. காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக பேனுகொண்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்தது.

    இந்த விபத்தில் இறந்தவர்கள் குறித்த விவரம் தெரிய வரவில்லை. #AndraAccident
    ஆந்திராவில் வெள்ள சேத பகுதிகளை மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். #AndhraPradesh #Flood #ChandrababuNaidu
    காக்கிநாடா:

    ஆந்திராவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 200 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலைகள் அடியோடு துண்டிக்கப்பட்டு விட்டது.



    மேலும் இந்த 2 மாவட்டங்களிலும் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் முற்றிலுமாக நாசம் அடைந்துள்ளன. இதையடுத்து வெள்ள சேத பகுதிகளை மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பிறகு அதிகாரிகளுடன் வெள்ள நிலைமை குறித்து ஆய்வும் நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “2 மாவட்டங்களிலும் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டு உள்ளது. பயிர்கள் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். வெள்ளத்தில் முற்றிலுமாக சேதம் அடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும்” என்றார்.  #AndhraPradesh #Flood #ChandrababuNaidu 
    காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KauveryHospital #DMK #Karunanidhi #GetWellKarunanidhi #MKStalin #ChandrababuNaidu
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்ச்சி காரணமாக நோய்வாய்பட்டு தற்போது காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முழுநேர மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் கருணாநிதியின் உடல்நிலை தற்போது வெகுவாக முன்னேறியுள்ளது.

    இந்திய அரசியலின் உயிருடன் இருக்கும் மிக மூத்த தலைவர் ஆதலால் கருணாநிதியை சந்திக்க பல்வேறு அரசியல் தலைவர்களும் சென்னை காவிரி மருத்துவமனை வந்தடைந்தனர்.



    அதன்படி, இன்று முன்னாள் பிரதமர் தேவகவுடா சென்னை காவிரி மருத்துவமனை வந்தடைந்தார். முக ஸ்டாலினிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த தேவகவுடா, கருணாநிதி 100 ஆண்டுகள் கடந்தும் நலமுடன் வாழ்வார் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை சென்னை காவிரி மருத்துவமனை வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KauveryHospital #DMK #Karunanidhi #GetWellKarunanidhi #MKStalin #ChandrababuNaidu
    ஆந்திர மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த தனது மனைவியை ஊரார் உதவியுடன் காட்டுப்பாதை வழியே 12 கிலோ மீட்டர் தூரம் கணவர் தூக்கி சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #AndhraPradesh #NHRC
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் சாலை வசதிகள் முறையாக இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கலக்கமடைந்த கணவர் சாலை வசதி இல்லாததால் கிராமத்து மக்கள் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார். 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு தனது மனைவியை தூக்கிச் சென்றுள்ளார்.



    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களிலும் விமர்சிக்கப்பட்டது.

    இதையடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது. சாலை வசதி குறைபாட்டால் கர்ப்பிணிப் பெண் 12 கிலோ மீட்டர் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில அரசுக்கும், தலைமை செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. #AndhraPradesh #NHRC
    ஆந்திராவில் செம்மரம் வெட்டிய நான்கு தமிழர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSandalwood
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ஸ்ரீவாரி மெட்டு வனப்பகுதியில் சிலர் செம்மரம் வெட்டுவதாக போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் செம்மரங்களை வெட்டியவர்கள் போலீசார் மீது கற்களால் தாக்குதல் நடத்தினர்.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு செம்மரம் வெட்டிய நான்கு தமிழர்களை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் பலர் அங்கிருந்து தப்பியோடினர். கைதானவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். #RedSandalwood
    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து பிரதமருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டு உள்ளனர். #TDP #PrivilegeMotion #Modi
    புதுடெல்லி:

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் மீது கடந்த 20-ந்தேதி நடந்த விவாதத்துக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது என 14-வது நிதிக்குழு பரிந்துரைத்து இருப்பதாக கூறினார்.

    ஆனால் அப்படி ஒரு பரிந்துரையை 14-வது நிதிக்குழு வெளியிடவில்லை என தெலுங்குதேசம் கட்சித்தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருக்கும் தனது கட்சி எம்.பி.க்களுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியபோது இதை அவர்களிடம் கூறிய சந்திரபாபு நாயுடு, இதன் மூலம் பிரதமரும், மத்திய மந்திரிகளும் மக்களவையை தவறாக வழிநடத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

    எனவே பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பரிசீலிக்குமாறு தெலுங்குதேசம் எம்.பி.க்களுக்கு அவர் அறிவுறுத்தினார். அதன்பேரில் பிரதமருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க அந்த கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    முன்னதாக ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  #TDP #PrivilegeMotion #Modi 
    ஆந்திர மாநிலம் கவுதமி ஆற்றில் பயணிகள் படகு நீர்ச்சுழலில் சிக்கி பாலத்தின் தூணில் மோதிய விபத்தில் படகில் இருந்த 30 பேர் ஆற்றுக்குள் விழுந்தனர். இதில் 23 பேர் மீட்கப்பட்ட நிலையில் 7 பேர் காணவில்லை. #AndhraPradesh #EastGodavri
    அமராவதி:

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பசுவுல்லங்கா என்னும் இடத்தில் இருந்து சலாதிவரி பாலெம் என்னும் இடம் நோக்கி பயணிகள் ஒரு படகு நேற்று மாலை கவுதமி ஆற்றில் சென்று கொண்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர்.

    இந்த நிலையில் நீர்ச்சுழலில் சிக்கிய அந்த படகு ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் தூண் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த 30 பேரும் ஆற்றுக்குள் விழுந்து தத்தளித்தனர். இதையடுத்து விசாகப்பட்டினம் மற்றும் ராஜமகேந்திரவரம் நகரங்களில் இருந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களுடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து 23 பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    எனினும் மற்ற 7 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. அவர்களை தேடும்பணி தொடர்ந்து நீடித்து வருவதாக மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.  #AndhraPradesh #EastGodavri
    ×