என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 100464
நீங்கள் தேடியது "மாரிமுத்து"
பேட்ட படத்திற்கு பிறகு தனது அடுத்தடுத்த படங்களில் பிசியாகியிருக்கும் சசிகுமார், அடுத்ததாக ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேட்ட படத்திற்கு பிறகு சசிகுமார் நாடோடிகள் 2, கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் கென்னடி கிளப் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது ராஜவம்சம் என்ற படத்தில் நடித்து வருகிறார். என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்த நிலையில், சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில், குருசோமசுந்தரம், இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப், மஞ்சுபெத்து ரோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Announcement: The versatile @SasikumarDir plays the lead in our #ProductionNo14! We're really excited to have you on board sir. #JabaksMoviesNext@proyuvraajpic.twitter.com/McK0Q8Vueo
— Nemichand Jhabak (@JabaksMovies) May 29, 2019
ஜெபக் மூவிஸ் சார்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இந்த படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாகிறது. படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜெபக்கின் 14-வது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்திற்கு ரோனி ராப்பில் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவையும், வெங்கட் ரமணன் படத்தொகுப்பையும், சிவகுமார் யாதவ் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் உருவாகும் ‘சேலஞ்ஜ்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இந்த ஆண்டின் இந்திய அழகி பட்டத்தை வென்ற அனு கீர்த்திவாஸ் நடிக்கிறார். #Challenge #Prashanth #AnuKeerthyVas
ஜானி படத்தை அடுத்து நடிகர் தியாகராஜனின் ஸ்டார் மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்துக்கு, ‘சேலஞ்ஜ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில், பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்த ஆண்டின் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனு கிரீத்திவாஸ் நடிக்கிறார். இவர், திருச்சியை சேர்ந்த தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நாசர், பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே, நரேன், சுப்பு பஞ்சு, மாரிமுத்து, ஹரிஸ் உத்தமன், உமாபத்மநாபன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
பிரஷாந்த் நடித்த ‘சாக்லெட்’ படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ், இந்த படத்தின் இயக்குகிறார். மனோகரன்-ஷங்கர் ஆகிய இருவரும் வசனம் எழுதியிருக்கிறார்கள். இந்தி பட உலகின் முன்னணி இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்ஜி, இசையமைக்க, வேல்ராஜிடம் இணை ஒளிப்பதிவாளராக இருந்த ஷிவக்குமார், ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.
பிரஷாந்தின் பிறந்தநாளான இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. சென்னை, தென்காசி, தூத்துக்குடி, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. ‘‘முன்பின் தெரியாத கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் இடையேயான மோதலில், இருவரும் சவால் விட்டுக் கொள்கிறார்கள். வெற்றி யாருக்கு? என்பதே ‘சேலஞ்ஜ்’ படத்தின் கதை’’ என்கிறார், இயக்குநர் ஏ.வெங்கடேஷ். #Challenge #Prashanth #AnuKeerthyVas
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ரெஜினா கசாண்ட்ரா - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் விமர்சனம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal
தனது பாட்டியுடன் வாழ்ந்து வரும் விஷ்ணு விஷாலுக்கு சிபாரிசில் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் சேர்கிறார். எந்த பிரச்சனைக்கும் போகாமல், எந்த வழக்கையும் பார்க்காமல் பயம்கொள்ளியாக இருக்கும் விஷ்ணு விஷால், சின்ன எடுபிடி வேலைகளை மட்டுமே செய்துவிட்டு சந்தோஷமாக காலத்தை ஓட்ட எண்ணுகிறார்.
இதற்கிடையே விஷ்ணு விஷாலும், அவரது மாமா பெண்ணான ரெஜினாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மாமா மாரிமுத்து, விஷ்ணுவின் கோழைத்தனத்தை சுட்டிக்காட்டி பெண் தர மறுக்கிறார்.
மறுபக்கம் சென்னையையே கலக்கிக் கொண்டிருந்த தாதாவான சாய் ரவியை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு போலீசார் அவரைத் தேடுகிறார்கள். தன்னை என்கவுண்டர் செய்ய வந்த போலீசை கொன்றுவிட்டு தலைமறைவாகும் சாய் ரவி, விஷ்ணு விஷாலிடம் சிக்கிக் கொள்கிறார்.
எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு, சாய் ரவி பெரிய ரவுடி என்பது தெரியாமல் ஓட்டலில் நடக்கும் ஒரு பிரச்சனையால், சாய் ரவியை அடித்து சிறையில் அடைத்துவிடுகிறார். இதையடுத்து சாய் ரவியின் ஆட்களான அவரை சிறையை உடைத்து வெளியே அழைத்துச் செல்கின்றனர். தன்னை கைது செய்து சிறையில் அடைத்த விஷ்ணுவை கொல்லாமல், இந்த ஊரை விட்டு போகமாட்டேன் என்று சாய் ரவி சபதமிடுகிறார். சாய்யிடம் இருந்து தப்பிக்க, வித்தியாசமான கெட்அப்புகளை போட்டுக் கொண்டு ஊரை சுற்றிவருகிறார் விஷ்ணு விஷால்.
கடைசியில், சாய் ரவியிடம் இருந்து விஷ்ணு எப்படி தப்பித்தார்? ரெஜினாவாவை கரம்பிடித்தாரா? எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு விஷால் சாய் ரவியை அடித்தது ஏன்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே நகைச்சுவையான மீதிக்கதை.
ராட்சசன் படத்தில் ஒருவித பயம், தயக்கம் என பரபரப்பாக இயங்கிய விஷ்ணு விஷால் இந்த படத்தில் முற்றிலுமாக மாறி காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார். சாய்ரவிக்கு பயந்து அவர் போடும் கெட்டப்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படத்தின் கலர்புல்லுக்கு ரெஜினா உத்தரவாதம் தருகிறார். காதலன் என்ன சொன்னாலும், அப்படியே நம்பிவிடும் ரெஜினா போன்ற பெண் கிடைத்தால் இந்த காலத்து இளைஞர்களுக்கு பிரச்சினையே இருக்காது. அழகாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.
சாய்ரவி வில்லனாக இருந்தாலும் தன்னை வைத்து சுற்றி இருப்பவர்கள் செய்யும் காமெடிகளை விட்டுக்கொடுத்து படத்துக்கு துணை நின்று இருக்கிறார். ஓவியா சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு. கருணாகரனுக்கு படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கும் வேடம். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
டோனியாக வரும் யோகி பாபுயும் நம்மை சிரிக்க வைக்கிறார். லொள்ளு சபா மனோகரின் ஐபோன் விளையாட்டு, ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானின் மூட்டை, சினேகா பிரதர்சின் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் லாக்கெப் காமெடி என்று படம் முழுக்க சிரிக்கும்படியாக இருக்கிறது.
லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி வழக்கமான நடிப்பின் மூலம் கவர்கின்றனர். கிளைமாக்சுக்கு பின்னும் கூட ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகானின் பழைய படங்களை பயன்படுத்தியது சிறப்பு.
இயக்குனர் செல்லா அய்யாவுக்கு படத்தை சீரியசாக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாதை மாறாமல் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் தேவையில்லாத காட்சிகள் இடம்பெறுகின்றன. அதுவும் அடுத்த காட்சிக்கான இடைவேளையாக இருப்பதால் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.
லியோன் ஜேம்சின் இசையில் டியோ ரியோ பாடல் சிறப்பாக உள்ளது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஜே.லெக்ஷ்மணின் ஒளிப்பதிவு படத்தை கமர்ஷியலாக காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' சிரிப்புக்கு உத்தரவாதம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal #ReginaCassandra
Silukkuvarpatti Singam Review Silukkuvarpatti Singam Chella Ayyavu Vishnu Vishal Regina Cassandra Oviyaa Anandaraj Marimuthu KarunaKaran Livingston Mansoor Ali Khan Singamuthu Vadivukkarasi Yogi Babu சிலுக்குவார்பட்டி சிங்கம் சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம் விஷ்ணு விஷால் ரெஜினிகா கசாண்ட்ரா செல்லா அய்யாவு ஆனந்த்ராஜ் மாரிமுத்து கருணாகரன் லிவிங்ஸ்டன் மன்சூர் அலி கான் சிங்கமுத்து வடிவுக்கரசி யோகி பாபு நடிகை ஓவியா
மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், பாலியலுக்கு பெண்ணை அழைப்பதில் தவறில்லை என்று நடிகர் மாரிமுத்து கூறியுள்ளார். #Marimuthu #MeToo
‘பரியேறும் பெருமாள்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் ‘மீ டூ’ விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக பேட்டி ஒன்று அளித்துள்ளார். இந்த பேட்டி பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒரு பெண்ணை அறைக்கு வா என்று கூப்பிட்டு இருக்கிறார். ஆண் தானே அவர். இதில் என்ன தப்பு இருக்கிறது?. கூப்பிடட்டும். உனக்கு விருப்பம் இருந்தால் போ, இல்லை என்றால் பத்திரிகையிடம் சொல்கிறார், சொல்லிவிட்டு போ. ஒரு ஆண் தானே அவர்.
அவருக்கும் ஆர்மோன்ஸ் இருக்கிறதல்லவா? ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து படுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் அல்லவா?. அதனால் தான் கூப்பிட்டு இருக்கிறார். அந்த பெண் வெளியே சொல்லியிருக்கிறாள். இதை கவிஞர் தாங்கி தான் ஆக வேண்டும். அதன் உண்மை நிலையை தேடி நான் போக விரும்பவில்லை. இன்னும் 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் கழித்து அது மறந்துவிடும். வேறு பிரச்சினை வந்துவிடும்.
இந்த விஷயத்தை மறந்துவிட்டு வேறு பிரச்சினை குறித்து பேச ஆரம்பித்துவிடுவோம். இதனால் கவிஞருக்கு இழுக்கு என்று நான் சொல்லவே மாட்டேன். ஒரு பெண்ணை தானே அறைக்கு வா என்று கூப்பிட்டார்?. ஒரு ஆம்பளையை கூப்பிட்டால் தான் அசிங்கம்.
காரில் செல்லும்போது ஒரு நாய் குறுக்கே வருகிறது. டக்கென்று பிரேக் போடும்போது பின்னால் வந்த சைக்கிள் காரன் இடித்து விட்டான். அவனுக்கு ஒரு சாரி சொல்லிவிட்டு நாய்க்கு ஒரு சாரி சொல்லிவிட்டு செல்வது போன்று தான் இந்த சம்பவம். இது ஒரு சின்ன தடுமாற்றம், அவ்வளவு தான்.
இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.
அவரது பேச்சு திரை உலகில் பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மாரிமுத்துவை நடிகர் சங்கத்தில் இருந்தே நீக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
I wish this small-minded, disappointing man #Marimuthu was not part of my favourite Tamil film of the decade. A classic about equality and change! Unfortunately he always will be. This interview hurt me and so many others so much. Sad! Paavam yen #Karuppi. @Mari_selvaraj@beemjihttps://t.co/XxyYpMQiR2
— Siddharth (@Actor_Siddharth) October 30, 2018
மாரிமுத்துவின் பேச்சு தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது ’இந்த அசிங்கம் புடிச்சவர் பரியேறும் பெருமாள்ல கெட்டவனா நல்லா நடிச்சார்னு நினைச்சேன். அவனே தானா நீ? சீ...” என்று பதிவிட்டுள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X