search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிஷா"

    பிங்க் படத்தை தொடர்ந்து அமிதாப்பச்சன் - டாப்சி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பட்லா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Trisha
    அமிதாப்பச்சன் - டாப்சி நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படம் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித்குமார், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கின்றனர். எச்.வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

    இந்த படத்தில் அஜித்குமார் வக்கீல் வேடத்தில் வருகிறார். இந்த நிலையில் இந்தியில் வெற்றி பெற்ற இன்னொரு படமான ‘பட்லா’வும் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்திலும் அமிதாப்பச்சன், டாப்சி இணைந்து நடித்துள்ளனர். ரூ.10 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.90 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.



    இந்த படத்தின் தமிழ் பதிப்பில் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் டாப்சி வேடத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. திரிஷா நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த 96 படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆகிறது. மேலும் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். இப்போது கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, பரமபத விளையாட்டு ஆகிய 4 படங்கள் திரிஷா கைவசம் உள்ளன. #AmitabhBachchan #Taapsee #Trisha

    பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த 96 படத்திற்கு தெலுங்கில் விருது கிடைத்துள்ளது. #96TheMovie #VijaySethupathi #Trisha
    விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 96 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பல விருதுகளையும் வென்று வணிக ரீதியான வெற்றியும் பெற்றது. 

    சமந்தா, சர்வானந்த் நடிக்க ‘96’ தெலுங்கு ரீமேக் வேலைகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகரும், இயக்குநருமான மாருதி ராவ்வின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாகக் கொடுக்கப்படும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை 96 படத்திற்காக இயக்குநர் பிரேம் குமார் பெறவுள்ளார்.



    1992-ல் தனது முதல் படமான ‘பிரமேபுஸ்தகம்‘ என்னும் படத்தை இயக்கும்போது ஸ்ரீனிவாசன் காலமானார். அதைத் தொடர்ந்து அப்படத்தை மாருதி ராவ் இயக்கி முடித்தார். ஸ்ரீநிவாஸ் நினைவாக நடத்தப்படும் ‘கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது’ விழா கடந்த 21 வருடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு இவ்விருதை வெல்லும் முதல் தமிழ் படம் 96 என்பது குறிப்பிடத்தக்கது. #96TheMovie #VijaySethupathi #Trisha #PremKumar

    தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி தற்போது, திரிஷா - ராணா நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ராணாவை சாடியுள்ளார். #SriReddy #RanaDaggupati #AbhiramDaggupati
    தெலுங்கு திரையுலகில் நடிகர், இயக்குனர் என திரையுலகை சேர்ந்த பலரும் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. நிர்வாண போராட்டமும் நடத்தினார். இவரது பாலியல் குற்றச்சாட்டில் பிரபல இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் சிக்கினர்.

    தெலுங்கு நடிகர் ராணாவின் தம்பி அபிராம் தவறாக நடந்ததாகவும் குற்றம்சாட்டினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் புகார் கூறினார். ஐதராபாத்தில் அவருக்கு மிரட்டல்கள் வந்ததால் தற்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகி வருகிறது.


    இந்த நிலையில், தனது முகநூல் பக்கத்தில் திரிஷாவுடன் ராணா நெருக்கமாக இருந்து கன்னத்தில் முத்தமிடும் படத்தையும், அவரது தம்பி அபிராம் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் படத்தையும் தற்போது வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அந்த படங்களின் கீழே “ராணாவின் தந்தை சுரேஷ் பாபுவோ பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறிவருகிறார். ஆனால் அவருக்கு தனது மகன்கள் ராணா, அபிராமை ஒழுங்காக வளர்க்க தெரியவில்லை. ராணாவின் தாத்தாவும் பெண்கள் விஷயத்தில் இப்படித்தான் இருந்தார். அவரைப்போன்று பேரன்களும் உள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

    திரிஷாவும், ராணாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் திரிஷாவை காதலிக்கவில்லை என்று ராணா மறுத்து வந்தார். இந்த நிலையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். #SriReddy #RanaDaggupati #AbhiramDaggupati #Trisha

    பேட்ட படத்தை தொடர்ந்து சனந்த் ராகிருஷ்ணன் இயக்கும் ஆக்‌‌ஷன் சாகச படத்தில் சிம்ரனும், திரிஷாவும் இணைந்து நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. #Simran #Trisha #SimTrishsNxT
    பேட்ட படத்தை தொடர்ந்து சிம்ரன், திரிஷா மீண்டும் இணைந்த நடிக்க இருப்பதாக முன்னதாக தெரிவித்திருந்தோம். தற்போது படக்குழு அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ‘பேட்ட’ படத்தில் திரிஷா தன்னுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற குறையை, தனது அடுத்த படத்தில் தீர்க்க உள்ளார். இருவரும் இணைந்து ஒரு ஆக்‌‌ஷன் கலந்த சாகச படத்தில் நடிக்க உள்ளனர். புதுமுக இயக்குநர் சனந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தை கொரில்லா படத்தை தயாரித்த ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்க உள்ளார்.


    சென்னை, கேரளா, பிச்சாவரம், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. #Simran #Trisha #SananthRadhaKrishnan #SimTrishsNxT

    ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் நடிகை திரிஷா ஆக்‌ஷன் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Trisha #Saravanan
    ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘எங்கேயும் எப்போதும்‘. ஏ.ஆர்.முருகதாசின் உதவி இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் உருவானது. 

    இந்த படத்தை தொடர்ந்து ‘இவன் வேறமாதிரி’, ‘வலியவன்’ ஆகிய படங்களை இயக்கினார். அந்த படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்த ‘சக்ரவியூகா’ படத்தை இயக்கினார்.



    இடையே விபத்து ஏற்பட்டதால் சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் இயக்குனர் பணிக்கு திரும்பி உள்ளார். முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை ஒன்றை எழுதி உள்ளார். அந்த கதையில் நடிக்க திரிஷா சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது திரிஷாவுடன் நடிக்க உள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆக்‌‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாக இருக்கிறது. #Trisha #Saravanan

    பேட்ட படத்தை தொடர்ந்து சனந்த் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் ஆக்‌‌ஷன் சாகச படத்தில் சிம்ரனும், திரிஷாவும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Simran #Trisha
    ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமானவர் திரிஷா. 1999-ம் ஆண்டு வெளியான அந்த படத்தில் திரிஷா நடித்தது மிகவும் சின்ன வேடம். ஆனால் அதன் பின் கதாநாயகியாக அறிமுகமாகி 16 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    திருமணமாகி சினிமாவில் இருந்து ஒதுங்கிய சிம்ரன் சில படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடித்தார். பின்னர் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்து இருந்தார்.

    ‘பேட்ட’ படத்தில் திரிஷா தன்னுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற குறையை, தனது அடுத்தபடத்தில் தீர்க்க உள்ளார். இருவரும் இணைந்து ஒரு ஆக்‌‌ஷன் சாகச படத்தில் நடிக்க உள்ளனர். புதுமுக இயக்குநர் சனந்த் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. #Simran #Trisha #Sananth

    விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `96' படத்தின் 100 நாள் வெற்றி கொண்டாட்டத்தில் பேசிய பார்த்திபன், `96' படத்தின் அந்த ஒரு காட்சிக்காக காத்திருந்ததாக கூறினார். #96TheMovie #VijaySethupathi
    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் ‘96’. இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. விழாவில் விஜய் சேதுபதி, திரிஷா, பிரேம் குமார் உட்பட `96’ படத்தின் பிரபலங்கள் பங்கு பெற்றனர். அவர்களுடன் திருமுருகன் காந்தி, சமுத்திரக்கனி, சேரன், பார்த்திபன், லெனின் பாரதி, பி.எஸ்.மித்ரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

    விழாவில் பேசிய பார்த்திபன், 

    ‘காதலிக்கிறதுக்கு காதலியோ, காதலனோ தேவையில்லை. காதல் மட்டுமே போதும். ‘யமுனை ஆற்றிலே’ பாடலோட ஒரிஜினல் பதிப்பைவிட இந்த படத்துல அந்த பாட்டு எப்போ வரும் என்றுதான் காத்துக் கொண்டு இருந்தேன். அந்த காட்சியை பார்த்த பிறகு இயக்குனருடைய காலை தொட்டு கும்பிடணும் என்று நினைத்தேன். படம் முழுக்க நம்மளை ஏமாத்தி காக்க வெச்சு கடைசி வரைக்கும் ஒரு முறையாவது கட்டி பிடிக்கமாட்டாங்களானு ஆர்வமா இருந்தோம். அது இங்கே நடக்க இருக்கு” என்று விஜய் சேதுபதியையும் திரிஷாவையும் மேடைக்கு அழைத்து கட்டிப்பிடிக்கச் சொன்னார்.



    `காதலே காதலே’ பாடலின் பின்னணி இசையாக வர இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டனர். “இதுதான் படத்துடைய கிளைமாக்ஸ்” என்றார் விஜய் சேதுபதி. #96TheMovie #96TheFilm #100thDayCelebrationOf96 #VijaySethupathi #Trisha #Parthiban

    பார்த்திபன் பேசிய வீடியோவை பார்க்க:

    விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தின் போது விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் இயக்குநர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். #96TheMovie #VijaySethupathi
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் வெளியிட்ட ‘96’ படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

    இதில் விஜய் சேதுபதி, திரிஷா, இயக்குநர் பிரேம் குமார், கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணிதரன், பி.எஸ்.மித்ரன், லெனின் பாரதி மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


    துக்ளக் படத்தை இயக்கும் டெல்லி பிரசாத்

    இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, 

    `இந்த படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘துக்ளக்’ என்ற படத்தில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் நடிக்கிறேன்.' என்றார்.



    இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, விஜய் சேதுபதியும், திரிஷாவும் ஒருவரையொருவர் ஆரத்தழுவியது வருகைத் தந்திருந்த அனைவரையும் கவர்ந்தது. #96TheMovie #96TheFilm #100thDayCelebrationOf96 #VijaySethupathi #Trisha #Thuglak

    விஜய்  சேதுபதி பேசிய வீடியோவை பார்க்க:

    பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படம் 100 நாட்களை கடந்த நிலையில், இதனை படக்குழு பிரம்மாண்ட விழாவாக எடுத்து கொண்டாடுகிறது. #96TheMovie #VijaySethupathy #Trisha
    கடந்த சில ஆண்டுகளாக வெற்றி பெறும் படங்களின் ஆயுளே அதிகபட்சம் 2 அல்லது 3 வாரங்கள் தான் என்ற நிலை உருவாகிவிட்டது. பைரசி, தியேட்டர் எண்ணிக்கை குறைவு, அதிக படங்கள் உருவாகுவது போன்ற காரணங்களால் பெரிய ஹீரோக்களின் படங்களே 50 நாட்களை தொடுவதில்லை.

    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 96. பள்ளி பருவத்தில் உண்டாகும் முதல் காதலை நெகிழ்ச்சியுடன் கூறி இருந்த 96 படம் டிவியில் ஒளிபரப்பான பின்னரும் கூட ரசிகர்களிடையே வரவேற்பு குறையவில்லை. கடந்த ஜனவரி 10-ந் தேதி 96 படம் 100 நாட்களை தொட்டுவிட்டது.



    அதற்கான விழாவை பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். தர்மதுரை, விக்ரம் வேதா வரிசையில், விஜய் சேதுபதிக்கு 3-வது 100 நாட்கள் படமாக 96 அமைந்துவிட்டது. #96TheMovie #VijaySethupathy #Trisha

    பேட்ட படத்தில் என்னை உசுப்பேத்தி, உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் பேட்டியளித்துள்ளார். #Rajinikanth #Rajini #Petta
    ரஜினி நடிப்பில் உருவான ‘பேட்ட’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 20 வருடங்களுக்கு முன்பு பார்த்த ரஜினியை திரையில் பார்த்ததாக பலரும் கூறி வருகிறார்கள். 

    இந்நிலையில், அமெரிக்காவில் ஓய்வை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், ‘பேட்ட திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மிகவும் சந்தோஷம். ரசிகர்களின் சந்தோஷமே எனது சந்தோஷம். பேட்ட திரைப்படம் சிறப்பாக வந்ததற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான் காரணம். என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்’ என்றார்.



    நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு எடுத்து கொள்வதற்காக கடந்த டிசம்பர் 22ந்தேதி அமெரிக்கா சென்றார். மூன்று வாரங்கள் ஓய்விற்கு பிறகு இன்று சென்னை திரும்பியுள்ளார். #Rajini #Petta 
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - சிம்ரன் - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தின் விமர்சனம். #Petta #PettaParaak #Rajinikanth #Rajinified
    ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார் பாபி சிம்ஹா. கல்லூரியையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அராத்து பண்ணுகிறார். இந்த கல்லூரியில் தான் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் படிக்கிறார்கள். இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு வார்டனாக வரும் ரஜினிகாந்த், பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, கல்லூரியையே மிரள வைக்கிறார். 

    இவ்வாறாக பேட்ட ரஜினியின் ஆட்டம் ஆரம்பமாக, ரஜினி மீது கோபமாக இருக்கும் பாபி, சந்தர்ப்பம் வரும் போது ரஜினியை பழிவாங்க எண்ணுகிறார். இதற்கிடையே நவாசுதீன் சித்திக்கின் ஆட்கள் சனத் ரெட்டியை கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றுகிறார்.



    இவ்வாறாக தனது பேட்டயை விட்டுவிட்டு, வார்டனாக வரும் ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றினாரா? ரஜினி ஏன் வார்டனாக வந்தார்? அவரது முன்கதை என்ன? சனத் ரெட்டி யார்? நவாசுதீன் சித்திக் ஏன் சனத்தை கொல்ல நினைக்கிறார்? அதன் பின்னணியில் என்ன? நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    சூப்பர் ஸ்டார் என்பது வெறும் வார்த்தை இல்லை என்பதை காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார் ரஜினி. பயமறியா சிங்கமாக, படத்தில் எந்த இடத்தில், எந்த நேரத்திற்கு, என்ன வேண்டுமோ அதை மட்டும் கொடுத்து ரசிக்க வைத்துச் செல்கிறார். பழைய ரஜினியை பார்க்க ஆசைப்படுவோருக்கு இந்த படம் ஒரு மெகா விருந்து என்று தான் சொல்ல வேண்டும். கிராமத்து கெட்-அப், இளமையான தோற்றம் என மாஸ் காட்டிச் செல்கிறார்.



    நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி இருவருமே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். ரஜினியின் நண்பனாக சசிகுமார் மதுரைக்காரராக சிறப்பாக நடித்துள்ளார். சிம்ரன், திரிஷா ரஜினி ஜோடியாக முதல்முறை திரையில் தோன்றினாலும், இருவருமே ரஜினிக்கு சிறந்த ஜோடிதான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். அதிலும் சிம்ரன் கொஞ்சும் பேச்சில் ரசிகர்களின் இதங்களை கொள்ளை அடிக்கிறார். மாளவிகா மோகனனுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம். படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்.

    கல்லூரியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் காட்சி, ரஜினியிடம் அடங்கும் காட்சி என பாபி சிம்ஹா சிறப்பாக நடித்துள்ளார். மேகா ஆகாஷ் அழகாக வந்து செல்கிறார். கதையின் ஓட்டத்திற்கு சனத் ரெட்டி முக்கிய காரணமாக வருகிறார். முனிஸ்காந்த், நரேன், ராமசந்திரன் உள்ளிட்ட மற்ற அனைத்து கதாபாத்திரங்களுமே கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார்கள்.



    தான் ஒரு ரஜினி ரசிகர் என்பதை கார்த்திக் சுப்புராஜ் அப்பட்டமாக நிரூபித்திருக்கிறார். ரசிகர்கள் ரஜினியை எப்படி எல்லாம் பார்க்க எண்ணினார்களோ அப்படியே திரையில் காட்டியிருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கு பாராட்டுக்கள். தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை கார்த்திக் சுப்புராஜ் நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுத்திருக்கிறார். ரஜினியின் ஆட்டம், பேச்சு, நடை, உடை, ஸ்டைல், வசனம், சிரிப்பு என அனைத்திலும் முழு ரஜினியிசத்தை உணர வைக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையுமே சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். எனினும் படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். சிறப்பான முயற்சி.



    அனிருத் இசையில் பாடல்கள் வேற லெவல். பின்னணி இசையின் மூலம் ரஜினியிசத்தை உணர வைக்கிறார். திருவின் ஒளிப்பதிவு அபாரம். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார்.

    மொத்தத்தில் `பேட்ட' சூப்பர்ஸ்டார் படம். #Petta #PettaReview #Rajinikanth #PettaFromToday #PettaParaak #Rajinified #PettaFDFS #Simran #Trisha #Sasikumar #VijaySethupathi #NawazuddinSiddiqui

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் நாளை திரைக்கு வரும் நிலையில், மலேசியாவிலும் பேட்ட படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘பேட்ட’ படம் நாளை வெளியாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன், இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடுகிறது. 

    சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) கார் ரேசில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட கார் ரசிகர்களை கவர்ந்தது.

    மலேசியாவில் பல கார்கள், பேருந்துகளில் பேட்ட படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது மலேசியாவின் முக்கிய வீதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீடியோக்கள் ஒளிபரப்பட்டு வருகிறது. மலேசியாவில் இதுவரைக்கும் செய்யாதளவிற்கு ‘பேட்ட’ படத்திற்கு விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. 



    பேட்ட அங்கு 3 கோடி வெள்ளிக்கு வசூல் சாதனை படைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் மாலிக் தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடைபெற்ற விழாவில் ‘பேட்ட’ படங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

    மலேசியாவில் 140 திரையரங்குகளில் பேட்ட திரைப்படம் வெளியாக உள்ளது. #Petta #Rajinikanth

    ×