search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்ஆப்பிரிக்கா"

    இன்று தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்கி ஜூலை 14-ந்தேதி வரை 11 இடங்களில் நடைபெறுகிறது. உலக போட்டியை இங்கிலாந்து நடத்துவது இது 5-வது முறையாகும்.

    2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் 14 அணிகள் கலந்து கொண்டன. ஆனால் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் அதிகரிக்க செய்யும் வகையில் இந்த உலக கோப்பையில் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டு விட்டது. சிறிய அணிகள் அதாவது ஐ.சி.சி. உறுப்புநாடுகள் எதுவும் இடம் பெறாத ஒரு போட்டியாக இது நடக்கிறது.

    இதில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பை பாணியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங் களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.

    முதல் நாளான இன்று போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை லண்டன் ஓவலில் சந்திக்கிறது. அசுர பலம்வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 6 ஒரு நாள் தொடர்களில் 5-ஐ (மற்றொரு தொடர் சமன்) கைப்பற்றி அசத்தி இருக்கிறது. அண்மைகால இங்கிலாந்து அணியின் செயல்பாட்டை பார்த்தால், சகட்டுமேனிக்கு அதிரடி காட்டி எதிரணி பவுலர்களை திக்குமுக்காட வைத்து விடுகிறார்கள்.

    குறிப்பாக ஜோஸ் பட்லர், கேப்டன் மோர்கன், ஜாசன் ராய் ஆகியோர் சந்திக்கும் முதல் பந்தில் இருந்தே ‘கதகளி’ ஆடத் தொடங்கி விடுவார்கள். முதலில் பேட் செய்தால் 300 ரன்கள் மேல் எடுத்து விட வேண்டும் என்பது அவர்களது இலக்கு. அதுவும் இது சொந்த ஊர் என்பதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ‘ராஜ்ஜியம்’ தூக்கலாகவே இருக்கும்.

    தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை கேப்டன் பிளிஸ்சிஸ், குயின்டான் டி காக், வான்டெர் துஸ்சென் மட்டுமே பேட்டிங்கில் திருப்திகரமான பார்மில் உள்ளனர். அதற்காக மற்றவர்களையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. காஜிசோ ரபடா, இம்ரான் தாஹிர், நிகிடி உள்ளிட்டோர் சாதுர்யமாக பந்து வீசி நெருக்கடி கொடுக்கக்கூடிய திறமை சாலிகள். மூத்த வீரர் ஸ்டெயின் தோள்பட்டை காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. இந்த உலக கோப்பைக்கு முன்பு கடைசியாக விளையாடிய மூன்று ஒரு நாள் தொடர்களையும் (ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக) வென்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி கூடுதல் உத்வேகத்துடன் களம் காணும்.

    இங்கிலாந்து அணி மூன்று முறை இறுதி சுற்றுக்கு வந்தும் உலக கோப்பையை வென்றதில்லை. தென்ஆப்பிரிக்க அணியோ அரையிறுதியை தாண்டியதில்லை. தங்களது உலக கோப்பை கனவுக்கு அச்சாரம் போட தொடரை வெற்றியோடு தொடங்குவது மனரீதியாக நம்பிக்கையை அளிக்கும். இரு அணி வீரர்களும் களத்தில் ‘நீயா-நானா’ என்று ஆக்ரோஷமாக ஆடுவார்கள் என்பதால் அனல் பறக்கும். ரசிகர்களுக்கோ குதூகலமான விருந்து கிடைக்கும்.

    போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் பிளங்கெட் அல்லது மார்க் வுட்.

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டுமினி, டேவிட் மில்லர், வான்டெர் துஸ்சென், பிரிட்டோரியஸ் அல்லது கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ, ரபடா, நிகிடி, இம்ரான் தாஹிர்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    முன்னதாக நேற்று லண்டனில் அரண்மனை அருகே உள்ள திறந்தவெளிப்பகுதியில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தொடக்க விழா கோலாகலமாக நடந்தது. இதில் முன்னாள் வீரர்கள் ஜாலியாக சிறிது நேரம் கிரிக்கெட் ஆடினர். ஆடல், பாடல், இசை நிகழ்ச்சியை 4 ஆயிரம் ரசிகர்கள் கண்டுகளித்தனர்.
    தென்ஆப்பிரிக்காவில் காண்டாமிருகங்களை வேட்டையாடுவதற்காக குரூகர் தேசியப் பூங்காவிற்கு சென்ற நபர் சிங்கங்களுக்கு இரையானார். #SouthAfrica #RhinoPoacher
    கேப்டவுன்:

    தென்ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் குரூகர் தேசியப் பூங்கா உள்ளது.

    இங்குள்ள காண்டாமிருகங்களை சட்டவிரோதமாக வேட்டையாடி அதன் கொம்புகளை கடத்தி விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது. இந்த காண்டாமிருகங்களின் கொம்புகளுக்கு ஆசிய நாடுகளில் அதிக பணம் கிடைக்கிறது.

    இந்த நிலையில், லிம்போபோ மாகாணத்தை சேர்ந்த 5 பேர் காண்டாமிருகங்களை வேட்டையாடுவதற்காக குரூகர் தேசியப் பூங்காவுக்கு சென்றனர்.

    அப்போது அவர்களில் ஒருவர் காட்டு யானையிடம் சிக்கிக்கொண்டார். அவரை யானை காலால் மிதித்து நசுக்கி கொன்றது. பின்னர் அவரது உடலை சிங்கக் கூட்டம் ஒன்று இழுத்து சென்றது.

    இதையடுத்து, அவருடன் வந்திருந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்று, வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, கொல்லப்பட்டவரின் மண்டையோடு மட்டுமே கிடைத்தது. அவரது உடல் முழுவதையும் சிங்கங்கள் தின்றுவிட்டன.

    இறந்தவரின் உறவினர்களுக்கு தேசியப் பூங்கா அதிகாரிகள் தங்களின் இரங்கலை தெரிவித்தனர்.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில், 196 ரன்களை சேஸிங் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வரலாறு படைத்துள்ளது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 222 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் மார்க்கிராம் 60 ரன்களும், விக்கெட் கீப்பர் டி காக் 86 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ, ரஜிதா தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    அதன்பின்னர், இலங்கை முதல் இன்னிங்சை விளையாடியது. தென்ஆப்பிரிக்காவின் ரபாடா பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 154 ரன்னில் சுருண்டது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா தாக்குப்பிடித்து 42 ரன்கள் அடித்தார். ரபாடா 4 விக்கெட்டும், ஆலிவியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
     
    இதையடுத்து, 68 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 2-வது இன்னிங்சிலும் தென்ஆப்பிரிக்கா மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது. டு பிளிசிஸ்-ஐ தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 128 ரன்னில் சுருண்டது. இலங்கை சார்பில் லக்மல் 4 விக்கெட்டும், டி சில்வா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    தென்ஆப்பிரிக்கா அணி ஒட்டுமொத்தமாக 196 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இலங்கை அணியின் ஒஷாடா பெர்னாண்டோவும், குசால் மெண்டிசும் பொறுப்புடன் ஆடினர். இருவரும் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தனர். இறுதியில் 45.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெர்னாண்டோ 75 ரன்னும், மெண்டிஸ் 84 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
      
    இந்த வெற்றி மூலம் தென்ஆப்பிரிக்காவை 2-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது இலங்கை அணி. மேலும், தென்ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையையும் இலங்கை அணி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #SAvSL
    இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா அணி 222 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. #SAvSL
    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டீன் எல்கரும், மார்கிராமும் களமிறங்கினர்.

    மார்கிராம் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். அவர் 60 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து, குயின் டி காக் நிதானமாக ஆடினார். அவர் 86 ரன்னில் வெளியேறினார்.



    மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால், தென்ஆப்பிரிக்கா அணி 61.2 ஓவரில் 222 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
     
    இலங்கை அணி சார்பில் விஷ்வா பெர்னாண்டோ, காசன் ரஜிதா ஆகியோர் 3 தலா விக்கெட்டும், தனஞ்செயா டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை எடுத்துள்ளது. #SAvSL
    இலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் இன்று தொடங்குகிறது. #SLvsSA
    டர்பன்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மோசமான பார்ம் காரணமாக கேப்டன் சன்டிமால் கழற்றி விடப்பட்டதால் இலங்கை அணியை தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னே வழி நடத்த இருக்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவிடம் 0-2 என்ற கணக்கில் உதை வாங்கிய இலங்கை அணி, ஸ்டெயின், பிலாண்டர், ரபடா, டுனே ஆலிவர் ஆகிய தென்ஆப்பிரிக்காவின் புயல்வேக கூட்டணியிடம் தாக்குப்பிடிப்பது சந்தேகம் தான்.

    பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையில் களம் இறங்கும் தென்ஆப்பிரிக்க அணி உள்ளூரில் தொடர்ச்சியாக 7 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இருக்கிறது. அண்மையில் பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியதும் இதில் அடங்கும். அந்த வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்பில் உள்ளது.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #SLvsSA

    பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேப்டவுனில் இன்று நடக்கிறது. #Pakistan #SouthAfrica #SAvPAK
    கேப்டவுன்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 4 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2-ல் வெற்றி கண்டுள்ளன.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேப்டவுனில் இன்று நடக்கிறது. முந்தைய ஆட்டத்தில் வெறும் 164 ரன்னில் அடங்கிய பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. கடந்த வாரம் உள்ளூர் முதல்தர போட்டியில் சதம் அடித்து கலக்கிய ஆல்-ரவுண்டர் வியான் முல்டெர் தென்ஆப்பிரிக்க அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் களம் காண வாய்ப்புள்ளது.

    அதே சமயம் 4-வது ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் பாகிஸ்தான் வீரர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இந்த ஆட்டத்திலும் அந்த அணியை சோயிப் மாலிக் வழிநடத்துவார். மொத்தத்தில் சவால்மிக்க இரு அணிகள் மல்லுகட்டுவதால்ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #Pakistan #SouthAfrica #SAvPAK
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இமாம் உல் ஹக்கின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. #SAvPAK #Usmankhan #imamUlHaq
    ஜோகனஸ்பெர்க்:

    தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஜோகனஸ்பர்கில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லாவும், டி காக்கும் களமிறங்கினர். ஆம்லாவும் டு பிளசிசும் பொறுப்புடன் ஆடினர். ஆம்லா 59 ரன்னிலும், டு பிளசிஸ் 57 ரன்னிலும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி 41 ஓவரில் 164 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் கான் 4 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிதி, ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.



    இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக 
    இமாம் உல் ஹக்கும், பகர் சமானும் இறங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 70 ஆக இருந்தபோது பகர் சமான் 44 ரன்களில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய இமாம் உல் ஹக் அரை சதமடித்து அசத்தினார். அவர் 71 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில் பாகிஸ்தான் அணி 31.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. பாபர் அசாம் 41 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் 2 - 2 என சமனிலை வகிக்கிறது. #SAvPAK #Usmankhan #imamUlHaq
    பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் உஸ்மான் கான் பந்துவீச்சில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா அணி 164 ரன்னில் சுருண்டது. #SAvPAK #Usmankhan
    ஜோகனஸ்பெர்க்:

    பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த மூன்று போட்டிகளில் 2 - 1 என தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஜோகனஸ்பர்கில் இன்று நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லாவும், டி காக்கும் களமிறங்கினர்.

    ஆம்லாவும் டு பிளசிசும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். ஆம்லா 59 ரன்னிலும், டு பிளசிஸ் 57 ரன்னிலும் அவுட்டாகினர்.

    மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி 41 ஓவரில் 164 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் கான் 4 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிதி, ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். #SAvPAK #Usmankhan
    பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. #SAvPAK #ImamUlHaq
    செஞ்சூரியன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக், பகர் சமான் ஆகியோர் களமிறங்கினர்.

    பகர் சமான் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய பாபர் அசாம் இமால் அல் ஹக்குடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். 2வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தனர். 

    பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த பாபர் அசாம் 69 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய மொகமது ஹபீசும் அரை சதமடித்தார். அவர் 52 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் இமாம் உல் ஹக் நிலைத்து நின்று ஆடி ஐந்தாவது சதத்தை பதிவுசெய்தார். அவர் 116 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கடைசி கட்டத்தில் இமாத் வாசிம் அதிரடியாக ஆட பாகிஸ்தான் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. வாசிம் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா சார்பில் ஸ்டெயின், ரபடா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்பின் சிறிது நேரத்தில் மீண்டும் மழை பெய்தது. 

    தென் ஆப்ரிக்க அணி 33 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தபோது பலத்த மழை பெய்தது. அப்போது ஆப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 102 பந்தில் 131 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால் தொடர்ந்து மழை நீடித்ததால் அத்துடன் ஆட்டத்தை முடித்துக்கொள்ள நடுவர்கள் முடிவு செய்தனர். பின் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்ரிக்க அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் குவித்த ரீஸா ஹென்றிக்ஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். #SAvPAK #ImamUlHaq
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. #SAvPAK
    டர்பன்:

    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. 

    இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறினார்கள். பாகிஸ்தானின் ஹசன் அலி 59 (45) மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் கண்டார். இவர் 5 பவுண்டரிகளும், 3 சிக்சர்களையும் விளாசினார். கேப்டன் சர்ப்ராஸ் அகமது 41 (59) ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ரன்கள் எடுத்தது.



    தென்ஆப்பரிக்கா சார்பில் பெலுக்வாயோ 4 விக்கெட்டுகளும், ஷம்சி 3 விக்கெட்டுக்களையும், ரபாடா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

    204 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ஹெண்ட்ரிக்ஸ், அம்லா களமிறங்கினர். ஷகின் ஷா அப்ரிடி வீசிய இரண்டாவது ஓவரை எதிர்கொண்ட அம்லா 8 (5) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். ஷகின் ஷா அப்ரிடி வீசிய நான்காவது ஓவரில், 5 ரன்கள் எடுத்திருந்த ஹெண்ட்ரிக்ஸ் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். கேப்டன் பேஃப் டு பிளசிஸ் 8 ரன்னில் வெளியேறினர். 



    இதையடுத்து ஹி வேன் டெர் டுசன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 42 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பொறுப்புடன் விளையாடிய டுசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 (123) ரன்கள் சேர்த்தார். மில்லர் 31 (26) ரன்னில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் சார்பில் ஷகின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுக்களும், ஷதப் கான் 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.



    4 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்ஆப்பிரிக்காவின் பெலுக்வாயோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், 1-1 என தென்ஆப்பிரிக்க அணி சமன் செய்தது. 3-வது ஒருநாள் போட்டி 25-ந் தேதி செஞ்சூரியனில் நடைபெற இருக்கிறது. #SAvPAK

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. #SAvPAK
    ஜோகனஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி ஆம்லா, டி புருயின், மார்கிராமின் பொறுப்பான ஆட்டத்தால் 77.4 ஓவரில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் பாஹிம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமீர், மொகமது அப்பாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் இமாம் உல் ஹக், பாபர் அசாம், சர்ப்ராஸ் அகமதின் நிதான ஆட்டத்தால் 49.4 ஓவரில் 185 ரன்களில் ஆல் அவுட்டானது.

    தென்ஆப்பிரிக்கா சார்பில் டுயான் ஆலிவர் 5 விக்கெட்டும், பிலெண்டர் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் டி காக் அசத்தால் சதம் மற்றும் அம்லாவின் அரை சதத்தால் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



    இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 381 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் அல் ஹக், ஷான் மசூதும் களமிறங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 67 ஆக இருக்கும்போது இமாம் அல் ஹக் 35 ரன்னில் வெளியேறினார். ஷான் மசூத் 37 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய அசார் அலி 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் இறங்கிய ஆசாத் ஷபிக் மற்றும் பாபர் அசாம் ஜோடி நிதானமாக ஆடியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில்
    பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. ஆசாத் ஷபிக் 48 ரன்னுடனும், பாபர் அசாம் 17 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தென்ஆப்பிரிக்கா சார்பில் ஸ்டெயின் 2 விக்கெட்டும், ஆலிவர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இன்னும் இரு தினங்கள் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற போராடி வருகிறது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #SAvPAK
    ஜோகனஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்க்கில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் ஆம்லா 41 ரன்னிலும், டி புருயின் 49 ரன்னிலும் அவுட்டானார். மார்கிராம் பொறுப்புடன் ஆடி 90 ரன்னில் வெளியேறினார்.

    தேனீர் இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கிய தென்ஆப்பிரிக்கா 77.4 ஓவரில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


    5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆலிவர்

    பாகிஸ்தான் தரப்பில் பாஹிம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமீர், மொகமது அப்பாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 41 ரன்னிலும், பாபர் அசாம் 49 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் சர்ப்ராஸ் அகமது அரை சதமடித்து அசத்தினார். அவர் 40 பந்தில் 50 ரன் எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 185 ரன்களில் ஆல் அவுட்டானது.

    தென்ஆப்பிரிக்கா சார்பில் டுயான் ஆலிவர் 5 விக்கெட்டும், பிலெண்டர் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் எடுத்தனர். #SAvPAK
    ×