search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தியானம்"

    நீங்கள் தொடர்ந்து பிராணாயாமம் பயிற்சி செய்துவரும்போது நாள் முழுவதுமே உங்கள் சுவாசம் வித்தியாசமாக இருப்பதை உணர முடியும்.
    பிராணாயாமம் என்றால் மூச்சுப்பிடித்து செய்வது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், நம் அடிப்படை சக்திகளை கட்டுப்படுத்துவதே பிராணாயாமம். பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. சும்மா சில விஷயங்களைச் செய்வதன் மூலமே சக்தியை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் எடுத்து வரமுடியும். கட்டுப்பாடு என்றால் என் உடலில் மட்டுமல்ல, எனக்கு எங்கு வேண்டுமோ அங்கு சக்தியை செலுத்த முடியும், உலகில் எங்கு வேண்டுமானாலும் என் சக்தியை எடுத்துச் செல்லலாம். துவக்கத்தில் மூச்சினை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றோம். அதன்பின் சக்தியின் மீது முழுமையான ஆளுமை எடுத்து வருகிறோம்.

    மூச்சு ஒரு கருவி மட்டுமே. சுவாசத்தை பயன்படுத்தாமலேயே சக்தியை நாம் கட்டுப்படுத்த முடியும். சக்திநிலையின் மீது கொண்டுவரும் கட்டுப்பாட்டிற்கும் மூச்சிற்கும் சம்பந்தம் இல்லை. ஆரம்பக் கட்டத்தில் சுவாசத்தை ஒரு கருவியாக நாம் பயன்படுத்துகிறோம். அதனால், பிராணாயாமம் என்பது காலையிலும் மாலையிலும் மட்டும் செய்யும் மூச்சுப் பயிற்சி மட்டுமல்ல. நீங்கள் தொடர்ந்து இந்தப் பயிற்சி செய்துவரும்போது நாள் முழுவதுமே உங்கள் சுவாசம் வித்தியாசமாக இருப்பதை உணர முடியும்.

    பிராணாயாமம் செய்யத் துவங்கியவுடன் சிலருக்கு எடை குறையும் வேறு சிலருக்கோ எடை கூடும். இதை நீங்கள் கவனித்திருக்க முடியும்.

    உங்கள் ஜீரண சக்தி மந்தமாக இருந்தால் உணவை உடலாக மாற்றக்கூடிய திறன் குறைப்பாட்டுடன் உள்ளது என்று அர்த்தம். பிராணாயாமப் பயிற்சி துவங்கியவுடன் ஜீரண சக்தி அதிகரிப்பதை உணரலாம். இதனால் உணவை சதையாக மாற்றும் உங்கள் திறனும் அதிகரிக்கலாம். உணவினை வெறுமனே கழிவாக வெளியேற்றும் தேவை குறைந்து போகலாம். இதனால் உங்கள் உடல் எடை கூடலாம். அதுவே உங்கள் ஜீரண மண்டலம் நன்றாக செயல்படும்போது நீங்கள் பிராணாயாமம் செய்யத் துவங்கினால் தாங்கள் உண்ணும் உணவு வேறொரு சூட்சும சக்தியாக உருமாற்றம் அடையும். இப்போது நீங்கள் உடல் எடையை இழக்கத் துவங்குவீர்கள். எத்தனை உணவு உண்டாலும் உடல் எடை குறைவதை கவனிக்க முடியும்.

    சாதாரண பலன்கள் தொடங்கி, நாடிகளைச் சுத்தம் செய்தல், மனதை ஆரோக்கியமாக மாற்றுதல் என்று மிக அரிய சக்திகளை பிராணாயாமம் மூலம் பெறமுடியும். தியானத்திற்கும் வாழ்வின் தெளிவான பார்வைக்கும் பிராணாயாமம் காரணமாக இருக்க முடியும்.

    பிராணாயாமத்தைச் சரியாக எப்படிச் செய்வது? ஒரு மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடுவதோ செய்ய வேண்டும். அப்போது அந்த மூக்கு பாதி மூடியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு-வெளிமூச்சின் அளவு நன்கு நீளும்; மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ-வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சு களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம்.
    பிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம்.
    பிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். சிலர் பிராணனை தெய்வீக சக்தியாகவும் பார்ப்பதுண்டு. ஆகவே நமது தெய்வீக சக்தியில் வேலை செய்வது என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

    மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம். பெரும்பாலும் மூக்குவழிதான் மூச்சைப் பயன்படுத்தினாலும், சிலநேரப் பயிற்சியில் மூச்சு, தொண்டையை மையமிட்டு இருக்கும். மிக அரிதாகவே வாய்வழியாக மூச்சை எடுப்பதோ அல்லது வெளிவிடுவதோ நடக்கும்.

    ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். மூச்சை உள்ளெடுப்பது-வெளியே விடுவது தவிர, உள் மூச்சுக்குப்பின் நிறுத்துவது, வெளி மூச்சுக்குப்பின் நிறுத்துவது, மூச்சின்போது எண்ணிக்கையைப் பயன்படுத்துவது, அதை மெல்ல மெல்ல அதிகப்படுத்துவது, மூச்சின்போது ஒலியைப் பயன்படுத்துவது, மூச்சோடு மந்திரங்களைப் பயன்படுத்துதல்… என்று நிறைய முறைகள் உள்ளன.

    சாதாரண பலன்கள் தொடங்கி, நாடிகளைச் சுத்தம் செய்தல், மனதை ஆரோக்கியமாக மாற்றுதல் என்று மிக அரிய சக்திகளை பிராணாயாமம் மூலம் பெறமுடியும். தியானத்திற்கும் வாழ்வின் தெளிவான பார்வைக்கும் பிராணாயாமம் காரணமாக இருக்க முடியும்.

    நபருக்கு ஏற்பவும், பயிற்சிக்கு ஏற்பவும், காலத்திற்கு ஏற்பவும், ஏன்… நேரத்திற்கு ஏற்பவும் கூட பிராணாயாமத்தைத் தேர்வு செய்து பலன் பெறலாம்.

    பிராணாயாமத்தில் சுத்தப்படுத்தல், குளிர்ச்சி தருதல், உடலை சூடாக்குதல், தியானத்திற்குத் தயார்செய்யும் பிராணாயாமம் என்று அதன் இயல்பை வைத்து, பலவாறு பிரிக்கப்பட்டுள்ளது.

    முதலில் செய்யும்போது, உடலை - மூச்சுப்பாதைகளைச் சுத்தம் செய்வது முக்கியம். அப்போது உடலில் இறுக்கம் இருக்கலாம். பயிற்சிக்கு முழுவதும் உடல் தயாராக இல்லாமல் இருக்கலாம்.

    அவ்வாறு மெல்ல மெல்ல தயார் செய்து கொண்டபின்பு பிராணாயாமப் பயிற்சியை நன்றாகச் செய்ய முடியும்; தரமானதாக இருக்கும். பிறகு அடுத்தடுத்த கட்டங்கள் என்பது எளிதாகவும் சரியாகவும் நடக்கும்.

    மூச்சை நன்கு நீட்டிக் கொண்டு, உடலையும் மூச்சுக் குழாயையும் சுத்தம் செய்து கொண்டபின்பு நுட்பமான நாடி சோதனை போன்ற பிராணாயாமத்திற்குப் போகும்போது, அந்த அனுபவத்தை எளிதில் மறக்க முடியாது. சுயத்தைப் பற்றிய அறிவு கூடும்; தெளிவு அதிகமாகும். அமைதியின் ஆழம் மேலும் அதிகரிக்கும். இதனால் பலன்கள் நிறைய இருக்கும்.

    பிராணாயாமத்தைச் சரியாக எப்படிச் செய்வது?

    ஒரு மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடுவதோ செய்ய வேண்டும். அப்போது அந்த மூக்கு பாதி மூடியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு-வெளிமூச்சின் அளவு நன்கு நீளும்; மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ-வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சு களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம். 
    தியானம் இருப்பதற்கு சில வழிமுறைகளை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தியானம் இருப்பதற்கு சில வழிமுறைகளை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

    உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம்.

    தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் தியானத்தில் அமர வேண்டும்.

    வீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

    அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.

    சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்தும்.

    இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணுங்கள்.

    இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும்.

    ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்துங்கள்.

    பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜெபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் ‘ராம.. ராம' என்று தொடர்ந்து ஜெபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜெபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108-ன் மடங்காக இருக்கட்டும்.

    இப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும்.

    முடிவாக தியானத்தின் பலன்களை இஷ்ட தெய்வத்தின் திருவடிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

    மனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானமும், ெஜபமும் உதவுகின்றன. 
    கபால பாத்தி பயிற்சியில் மண்டை ஓட்டிற்குள் இருக்கும் மூளையில் இருந்து கரியமில வாயுவை அகற்றி பிரணாவாயுவான ஒளியை மூளைக்கு செல்ல உதவுவதால் கபால பாத்தி என்று அழைக்கப்படுகிறது.
    ‘கபால’ என்றால் மண்டை ஓடு, பாத்தி என்றால் ஒளி என்று பொருள். கபால பாத்தி பயிற்சியில் மண்டை ஓட்டிற்குள் இருக்கும் மூளையில் இருந்து கரியமில வாயுவை அகற்றி பிரணாவாயுவான ஒளியை மூளைக்கு செல்ல உதவுவதால் கபால பாத்தி என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: முதலில் அர்த்த பத்மாசனத்தில் அமரவும். கைகளை நீட்டி வைத்து முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின்முத்திரை செய்யவும். கண்களை மூடவும், உடலை தளர்வாக வைத்துக் கொள்ளவும். புருவ நடுவில் கவனம் செலுத்தவும்.

    இருநாசிகளின் வழியாக மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும், இழுக்கவும். உடனே வேகமாகவும் பலமாகவும் மூச்சுக்காற்றை இரு நாசிகளின் வழியாக வெளியே விடவும், இது ஒரு சுற்று பயிற்சியாகும்.

    ஆரம்பப் பயிற்சியில் சில நாட்கள் வரை 3 சுற்று பயிற்சி செய்து வந்து தொடர்ந்து பயிற்சியை அதிகரித்துக் கொண்டு போய் 5 சுற்றுவரை செய்யலாம்.

    தடைக்குறிப்பு: இருதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், தலை கிறுகிறுப்பு, காக்கா வலிப்பு, பக்கவாதம், முகவாதம் போன்ற வாத நோய்கள், குடவிறக்கம், மற்றும் வயிற்றில் புண் உள்ளவர்கள் செய்யக் கூடாது. பயிற்சியின் போது தலை சுற்றுவது போல் ஆனால் பயிற்சியை உடனே நிறுத்த வேண்டும்.

    பயன்கள்: தலையின் உட்புற கழிவுகளை அகற்றி மூளையின் செயல் திறனை அதிகப்படுத்துகிறது. ரத்தம் சுத்தமாகும், நரம்பு மண்டலம் வலுப்பெறும்.
    நாசித்துவாரம், சுவாச குழாய் மற்றும் நுரையீரலை சுத்தப்படுத்துவதால் ஆஸ்துமா, மார்ச்சளி நோய் போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு பயனுள்ளது. ஜீரண கருவிகள் நன்கு இயங்கத் தூண்டுகிறது. சிறுநீரகம் பலம் பெறும். 
    நுரையீரல், சுவாசக்குழாய், இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு அனுலோம விலோம பிராணாயாமம் மிகவும் நன்மை அளிக்கிறது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    பெயர் விளக்கம்: உள்மூச்சிலே காற்றை மேல் நோக்கியும் வெளிமூச்சிலே காற்றை கீழ் நோக்கியும் அலைகளைப் போல காற்றை இழுத்து விடுவதால் அனுலோம விலோம பிராணாயாமம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: சுகாசனம் அல்லது பத்மாசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி மணிக்கட்டுகளின் ஓரப் பகுதியை அந்தந்த முழங்கால் முட்டிகளின் மேல் வைக்கவும். இரு கை விரல்களாலும் சின் முத்திரையை செய்யவும். இரு கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். இரு நாசிகளின் வழியாக மூச்சை வெளியே விட்டு நுரையீரலில் இருக்கும் காற்று முழுவதையும் வெளியேற்றவும்.

    இரு நாசிகளின் வழியாக ஒரே சீராக மூச்சுக் காற்றை ஆழமாகவும் நிதானமாகவும் உள்ளே இழுக்கவும். பிறகு அதே போல் இரு நாசிகளின் வழியாக மூச்சுக்காற்றை ஒரே சீராக நிதானமாகவும், ஆழமாகவும் வெளியே விடவும். இப்படிச் செய்தால் அது அனுலோம விலோம பிராணாயாமத்தின் ஒரு சுற்று பயிற்சி ஆகிறது.



    மூச்சை உள்ளே இழுக்கும் போது மார்பையும், வயிற்றையும் நன்கு விரிக்கவும், மூச்சை வெளியே விடும் போது மார்பை சம நிலைக்கும், அடி வயிற்றை ஓரளவு உள்ளுக்கும் சுருக்கவும்.

    ஆரம்பப் பயிற்சியில் சில வாரங்கள் 10 முதல் 15 சுற்று பயிற்சி என செய்து வந்து தொடர்ந்து பயிற்சியினால் சுற்றுக்களை அதிகரித்துக் கொண்டு போய் 30 சுற்றுகள் வரை காலை மாலை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்:- வயிறு, மார்பு மற்றும் மூச்சின் மீதும் மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக்குறிப்பு: மூச்சை உள்ளுக்கு இழுக்கும் போதும், வெளியே விடும் போதும் மூச்சுக்காற்றில் சப்தம் வராதபடி செய்யவும்.

    பயன்கள்: நுரையீரல், இருதயம், வயிறு சுத்தமாக்கப்பட்டு அவ்வுறுப்புகள் நல்ல ஆரோக்கியத்தை அடையும். ரத்தத்தில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு ரத்தம் தூய்மையாகும். மூச்சின் வேகமும் இருதயத்தின் வேகமும் குறைந்து சம நிலைக்கு வரும். நுரையீரல், இருதயம் சீராக இயங்கும். நுரையீரல், சுவாசக்குழாய், இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு இந்த பயிற்சி மிகவும் நன்மை அளிக்கிறது.
    ×