search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்சே"

    பிரக்யா சிங் எம்.பி.யை தொடர்ந்து, ‘கோட்சே தேசியவாதி’ என்று பா.ஜனதா பெண் எம்எல்ஏ உஷா தாக்குர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    இந்தூர்:

    மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி.யும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர், மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியதால் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவர் மன்னிப்பு கோரினார்.



    இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் மாவ் தொகுதி பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ.வும், மாநில பா.ஜனதா துணைத்தலைவருமான உஷா தாக்குரிடம் ஒரு செய்தி சேனல் பேட்டி கண்டது. “கோட்சேவை தேசியவாதியாக கருதுகிறீர்களா?” என்று நிருபர் கேட்டதற்கு, “ஆமாம், அவர் தேசியவாதிதான். தனது வாழ்நாள் முழுவதும் அவர் நாட்டைப் பற்றிய அக்கறையுடன் இருந்தார். காந்தியை கொலை செய்ய எந்த சூழ்நிலையில் முடிவு எடுத்தார் என்பது அவருக்குத்தான் தெரியும்” என்று உஷா தாக்குர் பதில் அளித்தார்.

    இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உஷாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அது வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ என்று பா.ஜனதா பதில் அளித்துள்ளது.

    காந்தி படத்தை சுட்டு அவமரியாதை செய்த இந்து அமைப்புகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #Congress

    சென்னை:

    உத்தரபிரதேச மாநிலத்தில் காந்தியின் உருவப்படத்தை சுட்டும், அவரை கொலை செய்த கோட்சே படத்துக்கு மாலை அணிவித்தும் இந்து அமைப்புகள் கொண்டாடியது.

    இந்த சம்பவத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி இன்று பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வடசென்னையில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ்சீவி, இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரஞ்சித்குமார், டி.வி.துரைராஜ், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்து அமைப்புகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. #congress

    தேசத்தந்தை மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே மிக எளிதாக நெருங்கி சுலபமாக சுட்டுக்கொன்றது எப்படி? என்பது தொடர்பாக தகவல்களை தெரிந்து கொள்ளலாம். #Gandhiji #RIPGandhiji #Gandhijiassasination
    புதுடெல்லி:

    தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1948-ம் ஆண்டு இதேநாளில் (ஜனவரி 30-ம் தேதி) நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தியை மிக எளிதாக நெருங்கி, சுலபமாக சுட்டுக்கொல்ல முடிந்தது எப்படி? என்பது தொடர்பாக காந்தியின் உதவியாளராக பணியாற்றிய கல்யாணம்(96) என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

    பிரபல செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டியளித்த கல்யாணம் இதுதொடர்பாக கூறியதாவது:-



    காந்தி கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக டெல்லி போலீசார் எச்சரித்திருந்தனர். அதனால், அவரை தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் முயன்றனர். ஆனால், இதை காந்தி மறுத்து விட்டார்.

    ‘பாதுகாப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு பாதுகாப்பு தேவையும் இல்லை. என்னை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர முயன்றால், நான் டெல்லியை விட்டு வெளியேறி வேறெங்காவது சென்று விடுவேன்’ என காந்தி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

    பாதுகாப்புக்கு காந்தி சம்மதித்து இருந்தால் அவரை சந்திக்க வந்தவர்களை எல்லாம் தகுந்த பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கலாம். அவரது படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

    இவ்வாறு கல்யாணம் கூறினார்.

    காந்தியின் அருங்குணங்களைப் பற்றி மிக குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்றை தெரிவிக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கல்யாணம், ‘நீங்கள் மிகப்பெரிய தலைவர் ரெயிலில் பயணிக்க உங்களுக்கு டிக்கெட் எதற்கு?’ என்று கூறிய ஒரு ஸ்டேஷன் மாஸ்டரை காந்தி அன்புடன் கண்டித்தார்.

    காந்தி பயணம் செய்வதற்காக தனியாக ஒரு பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் என்னிடம் பணத்தை தந்து எங்களது ரெயில் பயணத்துக்கான மூன்றாம் வகுப்பு டிக்கெட்டை வாங்கி வருமாறு கூறினார்’ என தெரிவித்தார்.

    1943-ம் ஆண்டு முதல் காந்தியின் மரணம் வரை அவரது உதவியாளராக பணியாற்றிய வி.கல்யாணம் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



    காந்தியின் உயிர் பிரிந்தபோது அவரது அருகில் இருந்த கல்யாணம் அந்த துயரச்செய்தியை அந்நாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் உள்துறை மந்திரி வல்லபாய் பட்டேல் ஆகியோருக்கு முதல்முதலாக தெரிவித்தார்.

    காந்தி மறைந்த பின்னர் லண்டன் நகருக்கு சென்ற கல்யாணம் இந்தியாவின் கடைசி வைசிராய் மவுண்ட்பேட்டன் மனைவியும், ஜவஹர்லால் நேருவின் நெருங்கிய தோழியுமான எட்வினா மவுண்ட்பேட்டனின் செயலாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார்.

    பின்னர் இந்தியாவுக்கு திரும்பி தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ராஜாஜி, தேசியத்தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். #Gandhiji #RIPGandhiji #Gandhijiassasination #Mountbatten
    முந்தைய உலக கோப்பை கால்பந்து போட்டியின் ஹீரோவான கோட்சேவுக்கு தற்போதைய ஜெர்மனி அணியில் ‘கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளது.#MarioGotze
    பெர்லின்:

    32 அணிகள் பங்கேற்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஜெர்மனி அணியின் 27 வீரர்கள் கொண்ட உத்தேச பட்டியலை பயிற்சியாளர் ஜோசிம் லோ நேற்று வெளியிட்டார்.

    ஜெர்மனி அணி 2014-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது. இதில் கூடுதல் நேரத்தில் வெற்றிக்குரிய கோலை அடித்த நடுகள வீரர் 25 வயதான மரியோ கோட்சே இந்த உலக கோப்பைக்கான அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு இருக்கிறார். அவர் போதிய பார்மில் இல்லாததால் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாக பயிற்சியாளர் ஜோசிம் லோ விளக்கம் அளித்தார்.

    அதே சமயம் செப்டம்பர் மாதம் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எந்த போட்டியிலும் ஆடாமல் சில தினங்களுக்கு முன்பு பயிற்சிக்கு திரும்பிய கோல் கீப்பரும், கேப்டனுமான மானுல் நியர் உத்தேச அணியில் 4 கோல் கீப்பர்களில் ஒருவராக தேர்வாகியுள்ளார். ஆனால் பயிற்சி முகாமில் அவர் தனது உடல்தகுதியை நிரூபித்தால் மட்டுமே இறுதி கட்ட அணியில் நீடிப்பார். தாமஸ் முல்லர், மேட்ஸ் ஹம்மல்ஸ், மரியோ கோம்ஸ், சமி கேதிரா, டோனி குரூஸ், மெசூத் ஒஸில் ஆகிய முன்னணி வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    இதற்கிடையே ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோவின் ஒப்பந்த காலம் 2020-ம் ஆண்டில் இருந்து மேலும் இரண்டு ஆண்டுக்கு (2022-ம் ஆண்டு வரை) நீடிக்கப்பட்டு இருக்கிறது. அதை அவரும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

    போர்ச்சுகலின் முதற்கட்ட அணியில் பேபியோ கோயன்ட்ராவ், ரெனட்டோ சாஞ்சஸ் ஆகியோருக்கு இடம் இல்லை. அதே சமயம் நட்சத்திர ஆட்டக்காரர்கள் கிறிஸ்டியானா ரொனால்டோ, நானி, பெப்பெ, வில்லியம் கர்வல்ஹோ, ஜோவ் மவ்டினோ உள்ளிட்டோர் அணியில் தொடருகிறார்கள்.

    இதே போல் அர்ஜென்டினாவின் உத்தேச அணியில் லயோனல் மெஸ்சி, செர்ஜியோ அகுரோ, கோன்சலோ ஹிகுவைன், ஏஞ்சல் டி மரியா போன்ற முன்னணி வீரர்கள் இடத்தை தக்கவைத்து இருக்கிறார்கள்.

    5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பெருமைக்குரிய பிரேசில் அணியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. காலில் ஏற்பட்ட காயத்துக்கு மார்ச் முதல் வாரத்தில் ஆபரேஷன் செய்து கொண்டு ஓய்வு எடுத்து வரும் நம்பிக்கை வீரர் 26 வயதான நெய்மார் அந்த அணிக்கு திரும்பியுள்ளார். கால்முட்டி காயத்தால் விலகிய மூத்த வீரர் டேனி ஆல்வ்சுக்கு பதிலாக டேனிலோ சேர்க்கப்பட்டு இருக்கிறார்.#MarioGotze
    ×