search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்சிகோ"

    மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு தேவையான நிதி ஒப்புதலை நாடாளுமன்றம் அளிக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். #DonaldTrump #MexicoWall
    வாஷிங்டன்:

    மெக்சிகோ நாட்டின் வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பதற்காக 5.7 பில்லியன் டாலர்கள் (ரூ.39 ஆயிரம் கோடி) செலவில் தடுப்புச் சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் மிகவும் ஆர்வமாக உள்ளார்.

    ஆனால் இதற்கான நிதியை நாடாளுமன்றம் ஒதுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப், அரசின் பல்வேறு துறை செலவினங்களுக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் அமெரிக்காவில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக அரசுத் துறைகள் முடங்கி உள்ளன. 22 நாட்களாக அரசுத்துறை ஊழியர்கள் எந்த சம்பளமும் பெறாமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.



    இப்படியொரு நிலைமை அமெரிக்க வரலாற்றில் எப்போதும் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. 1995-96-ம் ஆண்டு பில்கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்தபோது கூட அதிக பட்சமாக 21 நாட்கள்தான் அமெரிக்க அரசுத்துறைகள் முடங்கிக் கிடந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், தடுப்புச் சுவர் கட்டுவதற்கான நிதியை நாடாளுமன்றம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் நாட்டில் அவசர நிலையை அறிவிக்க தயங்கமாட்டேன் என்று அண்மையில் அறிவித்த டிரம்ப் தற்போது தனது குரலை சற்று தளர்த்திக் கொண்டு உள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், “மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே நாட்டில் அவசர நிலையை உடனடியாக அறிவித்து விட மாட்டேன். அவசர நிலையை அறிவிக்கும் உரிமை எனக்கு இருந்தாலும் கூட தடுப்புச் சுவருக்கான போதிய நிதியை நாடாளுமன்றம் முறைப்படி ஒதுக்கீடு செய்துவிடும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

    நாடாளுமன்றம் தனது வழக்கமான பணியை மேற்கொள்ளவேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அதனால் எடுத்த எடுப்பிலேயே அவசர நிலை அறிவிப்பு என்னும் நிலைக்கு போக மாட்டேன். இது நிதியை பெறுவதற்கான எளிதான வழி என்றாலும் கூட அதை விரைவாக கையாள மாட்டேன். அதேநேரம் நாடாளுமன்றம் இதைச் செய்ய தவறும் பட்சத்தில் அவசர நிலை அறிவிக்கப்படும் என்கிற எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.
    மெக்சிகோவில் கேளிக்கை விடுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். #Mexico #CaribbeanResort #ShootingAttack
    மெக்சிகோ:

    மெக்சிகோவின் குவிண்டினா ரோ மாகாணத்தில் கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பிளயா டெல் கார்மன். இங்கு உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானவர்கள் குழுமி இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலன்இன்றி இறந்தார்.

    துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.  #Mexico #CaribbeanResort #ShootingAttack 
    மெக்சிகோவில் மேயர் ஒருவர், பதவியேற்ற சில மணி நேரங்களிலே தனது முதல் பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். #MexicanMayorKilled
    மெக்சிகன் சிட்டி:

    மெக்சிகோவின் ஆக்சகா மாநிலம், டிலாக்சியாகோ நகர மேயராக அலெஜாண்டரோ அபார்சியோ என்பவர் கடந்த ஒன்றாம் தேதி பதவியேற்றார். அவர், பதவியேற்ற சில மணி நேரங்களில், கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அங்குள்ள அரங்கத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

    அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர், மேயரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மேயர் உள்ளிட்ட 4 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேயர் உயிரிழந்தார். மறுநாள் மற்றொரு நபர் உயிரிழந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மெக்சிகோவில், கடந்த 2017 ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 175 அரசியல்வாதிகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #MexicanMayorKilled
    சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார். #MissWorld2018 #Mexico #VanessaPoncedeLeon #ManushiChhillar
    பெய்ஜிங்:

    சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி இன்று நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது.

    இதில், மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார்.  கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. #MissWorld2018 #Mexico #VanessaPoncedeLeon #ManushiChhillar
    மெக்சிகோவை மிரட்டிய வில்லா புயல் வலுவடைந்து கரை கடந்ததையடுத்து, கடற்கரை நகரங்களில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. #HurricaneWilla #Mexico
    மெக்சிகோ சிட்டி:

    பசிபிக் கடலில் நிலைகொண்ட வில்லா புயல், மேலும் வலுவடைந்து மெக்சிகோவை நோக்கி முன்னேறியது. நேற்று அதிதீவிர புயலாக மாறி மெக்சிகோவின் மேற்கு பகுதியை தாக்கியது. சினலோவா மாநிலம் ஐஸ்லா டெல் போஸ்க் பகுதியில் புயல் கரை கடந்ததையடுத்து மணிக்கு 195 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து கனமழையும் பெய்து வருகிறது.

    புயல் தாக்கியதால் மெக்சிகோவின் பசிபிக் கடற்கரை நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது புயல் வலுவிழக்கத் தொடங்கினாலும், தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



    வில்லா புயல் வலுப்பெற்று மெக்சிகோவை தாக்கி, பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தலாம், பெரிய அளவில் மண் சரிவை ஏற்படுத்தலாம் என ஏற்கெனவே வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த மாத துவக்கத்தில் அமெரிக்காவை தாக்கிய மைக்கேல் புயல், பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. புயல், மழை தொடர்பான விபத்துகளில் 27 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #HurricaneWilla #Mexico
    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் மெக்சிகோவில் களமிறங்க முடிவு செய்துள்ளது. இதற்கென அந்நிறுவனம் டொரினோ மோட்டார்ஸ் உடன் ஒப்பந்தமிட்டுள்ளது. #TVS



    தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனம் டி.வி.எஸ். ஆகும். இக்குழும நிறுவனங்களில் ஒன்றான டி.வி.எஸ். மோட்டார்ஸ் ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள், ஆட்டோ இவற்றை தயாரிக்கிறது. இந்நிறுவனத்துக்கு உற்பத்தி ஆலைகள் ஓசூர் மற்றும் மைசூருவில் உள்ளன. 

    இந்நிறுவனம் மோட்டார் சைக்கிள் விற்பனையில் இன்றளவும் மிகச் சிறப்பான பெயருடன் தனக்கென வாடிக்கையாளர்களை இந்தியா முழுவதும் கொண்டுள்ளது. இப்போது மெக்சிகோவிலும் தனது விற்பனையைத் தொடங்க டி.வி.எஸ். முடிவு செய்துள்ளது. இதற்காக மெக்சிகோவில் உள்ள டொரினோ மோட்டார்ஸ் என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்நிறுவனம் குரூப்போ ஆட்டோபின் எனும் குழும நிறுவனத்தின் அங்கமாகும்.

    இதன் மூலம் மெக்சிகோவில் டி.வி.எஸ். தயாரிப்புகள் விற்பனை செய்யும் அங்கீகாரம் பெற்ற டீலராக டொரினோ மோட்டார்ஸ் திகழும். முதலாண்டில் டொரினோ மோட்டார்ஸுடன் சேர்ந்து மத்திய அமெரிக்க நாடுகளில் 40 டீலர்களை டி.வி.எஸ்ஸூடன் இணைந்து டொரினோ மோட்டார்ஸ் அமைக்கும்.

    இங்கு டி.வி.எஸ். அபாச்சியின் அனைத்து மாடல்கள், டி.வி.எஸ். ஸ்டிரைக்கர், டி.வி.எஸ். ராக்ஸ் மற்றும் நியோ மாடல் ஸ்கூட்டரெட் (ஸ்டெப் த்ரூ), டி.வி.எஸ். என்டார்க் 125, வெகோ ஆகிய ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும்.

    இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது அபாச்சி. இது கடந்த மாதம்தான் 30 லட்சம் இலக்கைத் தொட்டது. மெக்சிகோவில் கிளை பரப்பியதன் மூலம் இந்நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை வளர்ச்சி அபரி மிதமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

    40 ஆண்டுகளாக மெக்சிகோவில் மிகவும் புகழ்பெற்றுத் திகழும் டொரினோ மோட்டார்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூலமாக டி.வி.எஸ். தயாரிப்புகள் மெக்சிகோவில் கிடைக்கும். இதன் மூலம் இந்நிறுவனத் தயாரிப்புகள் விற்பனை அதிகரிக்கும்.

    டி.வி.எஸ். தயாரிப்புகள் ஏற்கனவே 60 நாடுகளில் விற்பனையாகின்றன. இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிளை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக டி.வி.எஸ். மோட்டார்ஸ் திகழ்கிறது.
    மெக்சிகோவில் மரியோ கோமஸ் என்ற பத்திரிகையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Mexico #Journalist
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாடு பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக விளங்குகிறது. 2017-ம் ஆண்டு அங்கு 11 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். 2016-ம் ஆண்டும் 11 பத்திரிகையாளர்கள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இல்லை.

    இந்த நிலையில் அங்கு சியாபஸ் மாகாணத்தின் யாஜலான் நகரில் மரியோ கோமஸ் என்ற பத்திரிகையாளர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி விட்டு அங்கிருந்து தப்பினர்.

    மரியோவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த படுகொலைக்கு அங்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.  #Mexico #Journalist
    மெக்சிகோவில் உள்ள சுற்றுலா தலத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். #MexicoFiring
    மெக்சிகன் சிட்டி:

    மெக்சிகோவில் உள்ள கரிபால்டி சுற்றுலா தலத்தில் ஏராளமானோர் நேற்று திரண்டிருந்தனர். அங்கு வார விடுமுறையை உற்சாகமாக கழித்துக் கொண்டிருந்தனர்.
     
    அப்போது அங்கு ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் பைக்கில் வந்தது. அவர்கள் இசைக்கலைஞர்கள் போன்று வேடமணிந்திருந்தனர்.

    அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கிகளால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இந்த திடீர் தாக்குதலில் ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். என்ன காரணத்துக்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #MexicoFiring
    நகரும் விமானத்தில் இருந்து இறங்கிய பெண் பைலட்கள் இருவர் கிகி நடனம் ஆடி சவால் விடும் வீடியோ வைரலாகி வருகிறது. #kikichallenge #KiKiDance
    சமூக வலைதளத்தில் தற்போது ‘கிகி’ நடனம் சவால் பிரபலமாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும்.

    இந்த சவாலை ஏற்று ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய நடிகர்- நடிகைகள், இளைஞர்கள் பலர் என ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனால் ‘கிகி’ நடனம் வெளிநாடு முதல் கிராம பகுதி வரை பிரபலமாகி இருக்கிறது.

    இந்நிலையில், நகரும் விமானத்தில் இருந்து இறங்கிய பெண் பைலட்கள் இருவர் கிகி நடனம் ஆடி சவால் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவில் மெக்சிகோ நகரத்தை சேர்ந்த அலிஜ்னெட்ரா மாண்ட்ரிகுயிஸ் என்ற பெண் பைலட், தனது உதவியாளருடன் டிரேக் என்பவரது மை பீலிங்ஸ் எனும் பாடலுக்கு கிகி நடனம் ஆடியுள்ளார்.

    நகரும் விமானத்தின் அருகில் இவர்கள் இருவரும் துள்ளி குதித்து நடனமாடும் வீடியோ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. #kikichallenge #KiKiDance
    அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் ஊடுருவல், போதை மருந்து கடத்தலை தடுப்பதற்காக சுவர் கட்டப்படும் நிலையில், போதை மாபியா பயன்படுத்திய 80 மீட்டர் சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. #US #Mexico
    நியூயார்க்:

    போதை மாபியா கும்பல் அதிகம் உள்ள மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை மருந்துகள் கடத்தப்படுவதாகவும், சட்ட விரோதமாக ஊடுருவி வருபவர்களை தடுக்கவும் எல்லையில் மிக நீண்ட மதில் சுவர் கட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்க போலீசாருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் போதை மாபியா பயன்படுத்தி வந்த சுரங்கம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அரிசோனா மாகாணத்தில் உள்ள சான் லூயிஸ் நகரில் பழைய ஓட்டல் ஒன்றின் அடியில் இந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.



    சுமார் 180 மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கம் எல்லையை கடந்து மெக்சிகோவில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறையில் முடிகிறது. அந்த பழைய ஓட்டல் இருந்த கட்டிடத்தின் உரிமையாளர் சமீபத்தில் போலீசில் சிக்க, அந்த கட்டிடத்தில் சோதனை நடத்திய பின்னர் இந்த சுரங்க விவகாரம் வெளியே வந்துள்ளது.

    இந்த சுரங்கத்தின் மூலம் போதை மருந்துகள் கடத்தப்பட்டு வந்ததாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். 
    மெக்சிகோ நாட்டில் பத்திரிகையாளர்களை குறிவைத்து மீண்டும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #JournalistKilled
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் கான்கன் நகரில் உள்ள குயிண்டானா ரூ என்ற பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்தவர் ரூபன் பாட். இவர் அதே பகுதியில் இணைய தள பத்திரிகையை நடத்தி வந்தார்.

    இந்நிலையில், ரூபன் பாட் நேற்று ரிசார்ட்டில் தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியல் ரூபனை சரமாரியாக சுட்டனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் ரூபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கடந்த ஒரு மாத காலத்தில் பத்திரிகையாளர் மீது நடைபெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாகும். ஏற்கனவே ரூபன் பாட்டுக்கு கொலை மிரட்டல்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. #JournalistKilled
    மெக்சிகோ நகரில் உள்ள பட்டாசு சந்தையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #FireworksExplosions
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் மிகப் பெரிய பட்டாசுச் சந்தை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பட்டாசு விற்பனை அதிகளவில் நடைபெற்று வந்ததால் பட்டாசுகளை வாங்க மக்கள் குவிவது வழ்க்கம்.

    இந்நிலையில், மெக்சிகோ பட்டாசு சந்தையில் நேற்று காலை 9.15 மணியளவில், அங்கு திடீரென்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அங்கு கடைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

    இந்த வெடி விபத்தில் 17 பேர் உடல் சிதறி பலியாகிளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படை அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ×