search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100652"

    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை ருசித்தது. #India #Australia #WomenWorldT20
    கயானா:

    பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் கயானாவில் நேற்று இரவு நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை சந்தித்தது. ஏற்கனவே இரு அணிகளும் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில் தனது பிரிவில் முதலிடத்தை பிடிப்பது யார்? என்பதற்காக மல்லுக்கட்டின.

    ‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் மிதாலி ராஜ், மான்சி ஜோஷி நீக்கப்பட்டு அனுஜா பட்டீல், அருந்ததி ரெட்டி சேர்க்கப்பட்டனர். முதலில் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை தனியா பாதியா 2 ரன்னிலும், ரோட்ரிக்ஸ் 6 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.



    3-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மந்தனாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 11.5 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்னை எட்டியது. அதிரடியாக விளாசிய ஹர்மன்பிரீத் கவுர் 27 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் கிம்மின்சி பந்து வீச்சில் ராச்சல் ஹானேஸ்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அடுத்து களம் கண்ட வேதா கிருஷ்ணமூர்த்தி 3 ரன்னிலும், ஹேமலதா 1 ரன்னிலும் நடையை கட்டினார்கள். அபாரமாக அடித்து ஆடிய மந்தனா (83 ரன்கள், 55 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன்) மெகன் ஸ்குட் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து அருந்ததி ரெட்டி 6 ரன்னிலும், தீப்தி ஷர்மா 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள். 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. ராதா யாதவ் 1 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் எலிசி பெர்ரி 3 விக்கெட்டும், கிம்மின்சி, ஆஷ்லிக் கார்ட்னெர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 119 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது. கேட்ச் பிடிக்க முற்படுகையில் சக வீராங்கனையுடன் மோதி காயம் அடைந்த விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி பேட்டிங் செய்யவில்லை. அதிகபட்சமாக எலிசி பெர்ரி ஆட்டம் இழக்காமல் 39 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அனுஜா பட்டீல் 3 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்திய வீராங்கனை மந்தனா ஆட்டநாயகி விருது பெற்றார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நேரில் சந்தித்த விக்னேஷ் சிவன், தனது கனவு குறித்து ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். #VigneshShivan
    இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தோனி. இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், தற்போதும் இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்து வருகிறார். இதுதவிர, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனிக்கு, தமிழகத்தில் ரசிகர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர். 

    அந்த வகையில், தமிழ் திரைப்பட இயக்குனரான விக்னேஷ் சிவனும் தோனியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். தற்போது அவர் தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் அவர் குறித்து பல்வேறு பதிவுகளைப் பதிவு செய்துள்ளார். 

    ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தோனியை சந்திப்பது எனது வாழ்நாள் கனவு. எனது வாழ்வின் மிகவும் சந்தோஷமான மன நிறைவான நாள். இதற்கு காரணமான கடவுளுக்கும் உலகத்திற்கும் நன்றி. ஒருநாள் இவர் நம் நாட்டை வழிநடத்துவதைப் பார்க்க காத்துக்கொண்டு இருக்கிறேன். இது என்னுடைய கனவு’ என தெரிவித்துள்ளார்.
    இலங்கை சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயா பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இதனால் பரிசோதனைக்கு உட்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. #ICC
    இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தனஞ்ஜெயா இன்னும் 14 நாட்களுக்குள் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஐசிசியின் ஆய்வு முடிவு வெளிவரும் வரை சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது.
    உத்தர பிரதேச இளம் சுழற்பந்து வீச்சாளரான ஷிவா சிங் 360 டிகிரியில் சுற்றி பந்து வீசியதை நடுவர் நோ-பால் என்று அறிவித்ததால், விவாதம் கிளம்பியுள்ளது. #Cricket
    இந்தியாவில் 23 வயதிற்கு உட்பட்டோருக்கான நான்கு நாட்கள் கொண்ட முதல்தர போட்டியான சிகே நாயுடு டிராபியில், கொல்கத்தா கல்யாணியில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் உத்தர பிரதேசம் - பெங்கால் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது.

    பெங்கால் அணி பேட்டிங் செய்யும்போது உத்தர பிரதேச அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ஷிவா சிங், பந்தை வீசும்போது 360 டிகிரியில சுற்றி பந்து வீசினார். அந்த பந்தை பேட்ஸ்மேன் ஸ்ட்ரோக் வைத்து தடுத்தார்.

    ஆனால் நடுவர் நோ-பால் என்று அறிவித்தார். இதனால் ஷிவா சிங் நடுவரிடம் நோ-பால் கொடுத்ததற்கான விளக்கத்தை கேட்டறிந்தார். நான் ஏற்கனவே இதேபோன்று வீசியுள்ளேன். அப்போது நடுவர்கள் நோ-பால் என்று அறிவிக்கவில்லை என்றார்.

    ஆனால் நடுவர் ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் அப்படியே வீசினால் நோ-பால் இல்லை. அல்லது நோ-பால்தான் என்றார். இந்த வீடியோவை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிஷன் பெடி பதிவிட்டுள்ளார். இதனால் இந்த பந்து ஐசிசி விதிமுறைப்படி நியாயமற்றதா? அல்லது பேட்ஸ்மேனை ஏமாற்ற தந்திரத்திற்காக வீசப்பட்டதா? என்ள விவாதம் கிளம்பியுள்ளது.
    கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை தவிர்த்து மற்ற அனைத்து சாதனைகளையும் விராட் கோலி முறியடித்து விடுவார் என்று கருதுவதாக ஸ்டீவ்வாக் தெரிவித்தார். #SteveWaugh #ViratKohli #DonBradman
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டை நேசித்து விளையாடுகிறார். தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற வெறி, உத்வேகம், ஆர்வம், ஆக்ரோஷம், உடல்தகுதி எல்லாமே அவரிடம் இருக்கிறது. கடுமையான காயங்கள் ஏதும் அடையாமல் இருந்தால் அவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை தவிர்த்து மற்ற அனைத்து சாதனைகளையும் முறியடித்து விடுவார் என்று கருதுகிறேன்.



    டெஸ்ட் கிரிக்கெட்டில் பிராட்மேன் வைத்துள்ள சராசரியை (99.94) அவரால் எட்ட முடியாது’ என்றார். 29 வயதான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 73 டெஸ்டில் ஆடி 24 சதங்கள் உள்பட 6,331 ரன்களும் (சராசரி 54.57), 216 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 38 சதங்கள் உள்பட 10,232 ரன்களும் (சராசரி 59.53) குவித்துள்ளார்.

    சூப்பர் பார்மில் உள்ள விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளையும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) சேர்த்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் 7,824 ரன்கள் குவித்து, இந்த காலக்கட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரராக திகழ்கிறார். அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (6,371 ரன்) உள்ளார். #SteveWaugh #ViratKohli #DonBradman
    பெர்த்தில் இன்று நடக்கும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. #ODI #SouthAfrica #Austrialia #Perth
    பெர்த்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி குறுகிய கால சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்கிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று நடக்கிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் செயல்பாடு மோசமாக இருந்து வருகிறது. அதுவும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலியா மிகவும் பலவீனமாகி விட்டது. கடைசியாக மழை பாதிப்பின்றி முழுமையாக நடந்த 18 ஒரு நாள் போட்டிகளில் 16-ல் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்துள்ளது. தற்போது புதிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் எழுச்சி பெறும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

    பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் காயம் காரணமாக அம்லா, டுமினி இடம் பெறவில்லை. என்றாலும் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் அந்த அணி வலுவாகவே காணப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின், இந்த தொடரில் அசத்தினால் உலக கோப்பைக்கான அணியில் இடத்தை சிக்கலின்றி தக்க வைத்துக்கொள்ளலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 96 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 47-ல் ஆஸ்திரேலியாவும், 45-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் ‘டை’ ஆனது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஷான் மார்ஷ், கிறிஸ் லின், கிளைன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் காரி, மிட்செல் ஸ்டார்க் அல்லது நாதன் கவுல்டர்-நிலே, பேட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், எய்டன் மார்க்ராம், ரீஜா ஹென்ரிக்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டேவிட் மில்லர், பெஹர்டைன், பெலக்வாயோ அல்லது பிரிடோரியஸ், ஸ்டெயின், காஜிசோ ரபடா, நிகிடி, இம்ரான் தாஹிர்.

    இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங் கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.  #ODI #SouthAfrica #Austrialia #Perth 
    ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள தமிழக அணியின் புதிய கேப்டனாக பாபா இந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார். #RanjiTrophy #BabaIndrajith #RanjiCaptain
    சென்னை:

    2018-2019-ம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் 1-ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது. இதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி, நவம்பர் 1-ம் தேதி தனது முதல் போட்டியில் மத்திய பிரதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. பி பிரிவில் டெல்லி, பஞ்சாப், பெங்கால் ஆகிய அணிகளும் உள்ளன.

    இந்நிலையில் 2018-2019-ம் ஆண்டுக்கான தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பாபா இந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த சரத் தலைமையிலான சீனியர் தேர்வு குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    கடந்த  சீசனில் அபினவ் முகுந்த் கேப்டனாக செயல்பட்டால். இந்த சீசனில் அவருக்குப் பதிலாக இந்திரஜித் கேப்டனாக தேர்வாகி உள்ளார். ரஞ்சி டிராபிக்காக தமிழக அணி நாளை அறிவிக்கப்படுகிறது.

    உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திரஜித், 42 முதல்  தர போட்டிகளில் 2662 ரன்கள் குவித்துள்ளார். 7 முறை சதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 200 ரன்கள் எடுத்துள்ளார். #RanjiTrophy #BabaIndrajith #RanjiCaptain
    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 21-ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது. இப்போட்டியில் இடம் பெற்றிருந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ் விலகியுள்ளார். #evinlewis #indvswi
    கவுகாத்தி:

    இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 21-ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ், தனிப்பட்ட காரணத்துக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். 

    ஏற்கனவே கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, சுனில் நரின் ஆகியோர் இல்லாத நிலையில் லீவிஸ் விலகல், வெஸ்ட் இண்டீசுக்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது. அவருக்கு பதிலாக ஒரு நாள் போட்டி அணிக்கு கீரன் பவெலும், 20 ஓவர் போட்டி அணிக்கு நிகோலஸ் பூரானும் சேர்க்கப்பட்டுள்ளனர். #evinlewis #indvswi
    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்விக்கு இந்திய மூத்த வீரர் கம்பீர் பதில் அளித்தார். #GautamGambhir #IndianTeam #Retirement
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்த கவுதம் கம்பீர் 2016-ம் ஆண்டுக்கு பிறகு ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஆனாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். டெல்லியை சேர்ந்த கம்பீர், விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் சில தினங்களுக்கு முன்பு அரியானாவுக்கு எதிரான கால்இறுதியில் 72 பந்தில் 104 ரன்கள் விளாசி அசத்தினார்.

    2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (75 ரன்), 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (97 ரன்) கம்பீரின் பங்களிப்பை யாரும் மறந்து விட முடியாது.

    இந்த நிலையில் 37 வயதான கம்பீர் அளித்த ஒரு பேட்டியில், ஓய்வு பெறுவது எப்போது, அதற்கு முன்பாக கிரிக்கெட்டில் ஏதேனும் இலக்கு வைத்து இருக்கிறீர்களா? போன்ற கேள்விகள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து கம்பீர் கூறியதாவது:-

    குறிப்பிட்ட இலக்கு என்பது எல்லாம் இல்லை. இப்போது வரைக்கும் தொடர்ந்து ரன்கள் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே விளையாடுகிறேன். அது தான் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. ரன்கள் குவிப்பது, வெற்றி பெற வைப்பது, வீரர்கள் ஓய்வறையில் மகிழ்ச்சியாக இருப்பது இவை தான் என்னை உற்சாகப்படுத்தும்.

    இந்த நாள் வரைக்கும் எனக்குள் கிரிக்கெட் உணர்வு முழுமையாக பரவி இருக்கிறது. எப்போதும் ஓய்வறையில் சந்தோஷமான சூழலில் இருக்க விரும்புகிறேன். அதைத் தொடர்ந்து செய்கிறேன். தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. கிரிக்கெட் விளையாட்டு மீதான ஆர்வமும், ஆக்ரோஷமும் எப்போது குறைகிறதோ? அப்போது விடைபெறுவேன்.

    உங்களது பயணத்தில் ஏதேனும் வெற்றிடம் இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். கிரிக்கெட்டை பொறுத்தவரை எப்போதும் நீங்கள் ஏதாவது ஒரு வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டு இருக்கலாம். அதற்கு முடிவே கிடையாது. விரும்பிய இலக்கை அடைந்து விட்டேன் என்று உணரும் போது கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திக் கொள்வேன்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி முன்பை விட இப்போது மிக கடினமாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கின்றன. நிறைய புதிய வீரர்கள் வருகிறார்கள். அதனால் சவால்களும் வித்தியாசப்படுகின்றன. அணிகளின் உரிமையாளர்களும் வீரர் களை தேர்வு செய்வது உள்ளிட்ட விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள். எந்த ஒரு விளையாட்டு வீரர்களுக்கும் இதுபோன்ற சவால்கள் தான் தேவையாகும். அந்த சவால்களோடு பயணிக்கும் போது நமது ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.   #GautamGambhir #IndianTeam #Retirement
    ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டி போட்சேபிஸ்ட்ரூம் நகரில் நடந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. #T20 #zimvsa

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி நேற்று போட்சேபிஸ்ட்ரூம் நகரில் நடந்தது.

    முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தது. சீன் வில்லியம்ஸ் 41 ரன் எடுத்தார். நிசிடி, பேட்டர்சன், பிரைலிங்க் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா 15-4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 135 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டுமினி 33 ரன்னும், டி.சாஜ் 26 ரன்னும் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் மூன்று போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது. #T20 #zimvsa

    மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது தொடர்பாக 3 ஹாங்காங் வீரர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ‘சஸ்பெண்டு’ செய்துள்ளது. #ICC #MatchFixing
    துபாய்:

    ஹாங்காங் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நதீம் அகமது, இர்பான் அகமது (சகோதரர்கள்), ஹசீப் அம்ஜத் ஆகியோர் சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கி உள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது உறுதியானது. இதை தொடர்ந்து இந்த 3 வீரர்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ‘சஸ்பெண்டு’ செய்துள்ளது.

    2015-ம் ஆண்டு உலக கோப்பை தகுதி சுற்றில் கனடா, ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 3 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.



    இர்பான், நதீம் ஆகியோர் 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பையிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதில் நதீம் அகமது சமீபத்தில் நடந்த ஆகிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியவர் ஆவார்.

    பாகிஸ்தானை சேர்ந்த இந்த 3 வீரர்களும் 2 வார காலத்துக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். #ICC #MatchFixing
    நீக்கத்துக்கான காரணம் முரளி விஜய் தெரிவிக்காததால் அந்த புகாருக்கு தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மறுப்பு தெரிவித்துள்ளார். #MuraliVijay #Indianteamselectioncommittee

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்ற தொடக்க வீரர் முரளி விஜய் சரியாக விளையாடாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறும்போது, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு என்னிடம் தேர்வு குழு தலைவரோ, உறுப்பினர்களோ பேசவில்லை. நீக்கத்துக்கான காரணத்தை வீரர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

    ஆனால் முரளி விஜய்யின் கருத்தை இந்திய அணி தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

    முரளி விஜய் அணியில் இருந்து ஏன் நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறித்து எனது சக தேர்வாளர் தேவங்காந்தி அவரிடம் தெளிவாக தெரிவித்து விட்டார். அதன்பிறகு முரளி விஜய் இப்படியொரு கருத்து தெரிவித்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. 

    ஷிகர் தவான் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் அவர் ஒரு நாள் போட்டியில் விளையாடும் ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்தவில்லை. அவருக்கு நாங்கள் நிறைய வாய்ப்புகள் கொடுத்த பின்புதான் நீக்கும் முடிவை எடுத்தோம் என்றார். #MuraliVijay #Indianteamselectioncommittee

    ×