search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100652"

    கிரிக்கெட் போட்டியை பொறுத்தமட்டில் கேப்டன்தான் முக்கியமான நபர். பயிற்சியாளருக்கு பின் சீட்டுதான் என கங்குலி தெரிவித்துள்ளார். #Ganguly
    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இடது கை பேட்ஸ்மேனும், தற்போதைய மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் ஆன சவுரவ் கங்குலி ‘A Century is not Enough’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

    இந்த புத்தகத்தின் வெளியிட்டு விழா சிம்பியோசிஸ் இன்டர்நேஷனலில் நடைபெற்றது. அப்போது கங்குலி கூறுகையில் ‘‘கிரிக்கெட் கால்பந்து போட்டி போன்றது அல்ல.



    தற்போதுள்ள பெரும்பாலான பயிற்சியாளர்கள் கால்பந்தை பயிற்சியாளர்கள் இயக்குவது போல் இயக்கலாம் என்ற நினைப்பில் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், கிரிக்கெட் கேப்டன்களின் விளையாட்டு. பயிற்சியாளர் பின் சீட்டில்தான் இருக்க வேண்டும். இதுதான் முக்கியமானது’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ் வாரிய தலைவர் லெவனுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் இந்திய வாரிய தலைவர் அணிக்கு கருண்நாயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #KarunNair

    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. அக்டோபர் 4-ந்தேதி டெஸ்ட் தொடங்குகிறது.

    அதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் வாரிய தலைவர் லெவனுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. வருகிற 29-ந்தேதி பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது. இதற்கான 13 பேர் கொண்ட போர்டு பிரசிடென்ட் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கருண் நாயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    கருண்நாயர் (கேப்டன்), மான்யக் அகர்வால், பிரித் விஷா, ஹனுமா விஹாரி, ஷிரேயாஸ் அய்யர், அங்கீத் பவானே, இஷான கி‌ஷன் (விக்கெட் கீப்பர்), சக்சேனா, சவுரப் குமார், பசில்தம்பி, அவேஷ்கான், விக்னேஷ் இவான் போரல். #KarunNair

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகிறது. #AsiaCup2018 #PAKvIND #INDvPAK

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் 6 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. கடந்த 20-ந்தேதியுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிவடைந்தன.

    இதன் முடிவில் ‘ஏ’பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுத பெற்றன. இலங்கை, ஆங்காங் அணிகள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.

    சூப்பர் 4 சுற்று நேற்று தொடங்கியது. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    ‘சூப்பர் 4’ சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.

     


    துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்காளதேசம் 49.1 ஓவர்களில் 173 ரன்னில் சுருண்டது. ஹசன் மிராஸ் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார். ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், பும்ரா தலா 3 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணி 82 பந்து எஞ்சி இருந்த நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா 83 ரன்னும் (அவுட் இல்லை), தவான் 40 ரன்னும் டோனி 33 ரன்னும் எடுத்தனர்.

    2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை போராடி வென்றது.

    இன்று ஓய்வு நாளாகும். ‘சூப்பர் 4’ களின் 3-வது ஆட்டம் துபாயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    ஏற்கனவே நடந்த ‘லீக்‘ ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி இருந்தது. இதனால் நாளை மீண்டும் தோற்கடிக்க இயலும் என்ற நம்பிக்கையில் இந்தியா உள்ளது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் இந்திய அணி உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (158), தவான் (213 ரன்), அம்பதிராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் புவனேஷ் வர்குமார் (6 விக்கெட்), பும்ரா (5 விக்கெட்), ஜடேஜா (4 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 131-வது போட்டியாகும். இதுவரை நடந்த 130 போட்டியில் இந்தியா 53-ல், பாகிஸ்தான் 73-ல் வெற்றி பெற்றன. 4 ஆட்டம் முடிவு இல்லை. #AsiaCup2018 #PAKvIND #INDvPAK

    இந்தியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. #IndiavsSriLanka
    காலே:

    இலங்கைக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் போட்டியின் முடிவுகள் பெண்கள் சாம்பியன்ஷிப்புக்கு கணக்கில் கொள்ளப்படும்.

    இந்தியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி காலேவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 35.1 ஓவர்களில் 98 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் சமாரி அட்டப்பட்டு 33 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் மன்சி ஜோஷி 3 விக்கெட்டுகளும், கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இந்தியா 19.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்மிர்தி மந்தனா 73 ரன்கள் (76 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது. #IndiavsSriLanka 
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #RPSingh
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங். 2005ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பின்னர் அனைத்து வகை போட்டிகளிலும் விளையாடினார். 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

    அவர் மொத்தம் 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளும், 14 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளார்.



    இந்நிலையில், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆர்.பி.சிங் அறிவித்துள்ளார். தன்னுடைய கிரிக்கெட் பயணம் இனிமையானதாகவும் மறக்க முடியாத நினைவுகள் கொண்டதாகவும் இருக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். #RPSingh
    கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் என்ஜினீயரை தாக்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டணம், வளையல்காரத் தெருவைச் சேர்ந்த அபுபக்கர் மகன் காஜா (வயது 27), என்ஜினீயர். இவர் பக்ரீத் பண்டிகைக்காக மதுரையில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் நண்பர்களுடன் டவுன்ஹால் ரோட்டில் உள்ள பெருமாள் கோவில் தெப்பத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்றார்.

    அப்போது அங்கு ஏற்கனவே கிரிக்கெட் விளையாடிய சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் எதிர் தரப்பினர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் காஜா, குல்முகமதீன், பைசூல் வகிதின் ஆகியோர் காயமடைந்ததாக திடீர் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து திடீர்நகரைச் சேர்ந்த இப்ராகிம்ஷா (22), பகத்சிங் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். #tamilnews
    தம்புல்லாவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. #ENGvIND
    தம்புல்லா:

    இலங்கைக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2-வது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா (69 ரன்), கேப்டன் மேத்யூஸ் (79 ரன்) அரைசதம் அடித்தனர். தென்ஆப்பிரிக்க தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நிகிடி, பெலக்வாயோ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.



    தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குயின்டான் டி காக் 87 ரன்களும் (78 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் பிளிஸ்சிஸ் 49 ரன்களும், அம்லா 43 ரன்களும் விளாசினர்.

    வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது ஆட்டம் வருகிற 5-ந்தேதி கண்டியில் நடக்கிறது.  #SriLanka #SouthAfrica #2ndODI  #கிரிக்கெட்  #தென்ஆப்பிரிக்கா #இலங்கை 
    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நத்தத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #ChepaukSuperGillies #KanchiVeerans
    நத்தம்:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நத்தம் (திண்டுக்கல்), நெல்லை, சென்னை ஆகிய 3 ஊர்களில் நடக்கிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தலா ஒருமுறை மற்ற அணியுடன் மோத வேண்டும். லீக் சுற்றுகளின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த தொடரின் 21-வது ஆட்டம் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் வி.பி.காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்டன.



    இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறது. எனினும், முதல் வெற்றியை பதிவு செய்யவில்லை. எனவே, அந்த அணியினர் முதல் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக உள்ளனர். அந்த அணியின் கேப்டன் கோபிநாத், சசிதேவ், கார்த்திக், எம்.அஸ்வின் நன்றாக ஆடி வருவதால், மற்ற வீரர்களும் திறமையை நிரூபித்தால் வெற்றி பெறலாம்.

    மேலும், நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம் சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு ராசியான மைதானம் என்ற கருத்து டி.என்.பி.எல். கிரிக்கெட் ரசிகர்களிடையே உள்ளது. அந்த நம்பிக்கையோடும், முதல் வெற்றியை பதிவு செய்யும் உத்வேகத்தோடும் அவர்கள் களம் இறங்குவார்கள். அதேநேரம் தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்தாலும், 5-வது ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியுடன் காஞ்சி வீரன்ஸ் அணியினர் உற்சாகத்தில் உள்ளனர். அந்த உற்சாகத்தோடு 6-வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    இது அந்த அணிக்கு பலமாகும். மேலும் கேப்டன் அபராஜித், விஷால்வைத்யா, மோகித் போன்றோர் சவால் அளிக்க கூடியவர்கள். எனவே, 2 அணியினரும் திறமையை நிரூபித்து காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்காக 2 அணியின் வீரர்களும் நத்தத்தில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இன்றைய ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 தமிழ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.   #TNPL2018 #ChepaukSuperGillies #KanchiVeerans 
    தூத்துக்குடி அணிக்கு எதிராக தோல்வி அடைந்த நிலையில் தோல்விகளில் இருந்து பாடம் படித்து, வரும் போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டியுள்ளது என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறியுள்ளார். #TNPL2018
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் 20 ஓவர் போட்டியில் நேற்று சென்னையில் நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய தூத்துக்குடி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தோல்வி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் ஹேமங்பதானி கூறியதாவது:-
     

    இதற்கு முன் நடந்த 4 போட்டிகளை விட இந்த போட்டியில் பவர்பிளேயில் சிறப்பாக பேட்டிங் செய்தோம். பவர் பிளேயில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்தோம். இதுவே முந்தைய போட்டிகளில் நிறைய விக்கெட்டுகளை இழந்திருக்கிறோம். எதிர்பார்த்த ரன் குவிக்க முடியவில்லை.

    சேப்பாக்கம் மைதானத்தில் 180 ரன்களுக்கு மேல் குவித்தால் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. கடுமையாகப் போராடியும் அந்த ஸ்கோரை எங்களால் எட்ட முடியவில்லை.

    முருகன் அஸ்வின் விளையாடுவது மிக நன்றாக உள்ளது. இந்த சீசன் முழுக்க அவர் எங்களுக்கு மிகவும் சிறப்பான பங்களிப்பு தருகிறார். இதுபோல, எம்.சித்தார்த் பந்து வீச்சில் முடிந்தவரை ஆதரவாக இருக்கிறார். ஒரு குழுவாக நாங்கள் இன்னும் ஒத்துழைக்க வேண்டும். தோல்விகளில் இருந்து பாடம் படித்து, வரும் போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டியுள்ளது. முதல் போட்டியில் இருந்தே வெற்றி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இதனை சரி செய்வோம்.

    போட்டி முடியும் நேரத்தில், பந்து வீசுவது மிக சிரமமாக இருந்தது. மழை வந்து நின்ற உடனே போதிய ஓய்வின்றி உடனே மீண்டும் போட்டியை தொடங்கிவிட்டனர்.

    ஆடுகளத்தில் ஈரம் நன்றாக காயவில்லை. இதனால் பந்து வீச்சாளர்களுக்கு நல்ல கிரிப் கிடைக்கவில்லை. இது வெற்றியை கணிசமாக பாதித்தது. தூத்துக்குடி அணி நன்றாக ஆடினாலும் எங்கள் வெற்றி பாதிக்க, மழையும் ஒரு முக்கிய காரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPL2018 #JTPvCSG
    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகள் இன்று (வெள்ளிகிழமை) முதல் 29 வரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. #Statejuniorcricket

    மொடக்குறிச்சி:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகள் இன்று (வெள்ளிகிழமை) முதல் 29 வரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

    திருவாரூர் மாவட்டதில் நடைபெறும் முதல் சுற்று லீக் போட்டியில் ஈரோடு மாவட்ட இளையோர் 14 வயதுக்குட்பட்டோர் அணி வீரர்கள், நாமக்கல் திருவாரூர் மற்றும் வேலூர் மாவட்ட அணிகளுடன் விளையாட உள்ளனர். இதற்கான ஈரோடு மாவட்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    கே.அபிஷேக் அணித்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் மேலும் எஸ் தரணீதர், கே.ராகுல், பி.ராகுல், எம்.ஹரிஸ் மணிகண்டன், ஏ.அபிஜித், எம்.ஹரிஹரன், எம்.நித்தின், ஜெ.அஸ்வத், ஜெ.ஸ்வனித், கி.மோகனரமேஷ் முகமது ரபான், எம்.பிரனேஷ்குமரன், டி.கே.சோமேஸ் கந்தன் கீதாஞ்சலி ஆகியோரும் அணி பயிற்சியாளராக வி.மோகன்ராஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இத்தகவலை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஜாபர்ஆசிக்அலி தெரிவித்துள்ளார். #Statejuniorcricket

    நார்வே பெண்கள் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #DanushkaGunathilaka
    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்கா குணதிலகா.

    ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சஸ்பெண்டு செய்து அதோடு அவரது வருமானத்தில் 20 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

    குணதிலகாவின் நண்பர் ஒருவர் லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் ஆடுகிறார்.

    இவர் தனது தந்தையை பார்க்க சமீபத்தில் இலங்கை சென்றார். அவர் இலங்கைக்கு சுற்றுலா வந்த நார்வே நாட்டு பெண்கள் 2 பேரை குணதிலகா தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    வீரர்கள் தங்கும் அறைக்கு மற்றவர்களை அழைத்து செல்லக்கூடாது என்பது விதியாகும். இதன் காரணமாகவே குணதிலகா சஸ் பெண்டு செய்யப்பட்டார்.

    நார்வே பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குணதிலகாவின் நண்பரை இலங்கை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் நார்வே பெண்கள் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.ஆனால் அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் போலீசார் இன்னும் சுமத்தவில்லை.

    தான் அறையில் தூங்கி கொண்டு இருந்ததாகவும், தனது நண்பருக்கும், நார்வே பெண்ணுக்கும் இடையே என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என்று போலீசாரிடம் குணதிலகா தெரிவித்து இருக்கிறார். #DanushkaGunathilaka
    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நெல்லையில் இன்று இரவு நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கோவை கிங்சை எதிர்கொள்கிறது. #TNPL2018 #ChepaukSuperGillies #KovaiKings
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் நெல்லை சங்கர் நகரில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கோவை கிங்ஸ் அணியை சந்திக்கிறது.

    கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை ஆடிய 3 லீக் ஆட்டங்களிலும் (திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், காரைக்குடி காளைக்கு எதிராக) தோல்வியையே சந்தித்துள்ளது. அதே சமயம் அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி முதல் லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணியை வென்றது. அடுத்த 2 ஆட்டங்களில் திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகளிடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 8 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி கோவை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது.



    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை பொறுத்தவரை எஞ்சிய 4 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். எனவே இன்றைய ஆட்டம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு வாழ்வா?-சாவா? போட்டியாகும். அதனால் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த முயற்சிக்கும்.

    நெல்லை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. எனவே முந்தைய ஆட்டத்தில் நன்றாக செயல்பட்ட மணிகண்டன், அஜித்ராம், ராஜேஷ் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் கோவை கிங்ஸ் அணி களம் இறங்கும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அலெக்சாண்டர், எம்.அஸ்வின் ஆகிய சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே இந்த ஆட்டத்தில் சுழலுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கலாம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பீல்டிங் மற்றும் பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    இந்திய ‘ஏ’ அணிக்கு தேர்வாகியிருந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் முதல் 3 ஆட்டங்களில் ஆடவில்லை. தற்போது தாயகம் திரும்பி விட்டாலும் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்திலும் அவர் விளையாட வாய்ப்பில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 முறையும், கோவை கிங்ஸ் அணி ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளன. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #TNPL2018 #ChepaukSuperGillies #KovaiKings
    ×