search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100652"

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திண்டுக்கலுக்கு எதிராக நம்பிக்கையோடு விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக திருச்சி அணி கேப்டன் இந்திரஜித் கூறியுள்ளார். #TNPL #TNPL2018 #DDvRTW
    நெல்லை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திண்டுக்கலுக்கு எதிராக நம்பிக்கையோடு விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக திருச்சி அணி கேப்டன் இந்திரஜித் கூறியுள்ளார்.

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லையில் நேற்று தொடங்கியது, திண்டுக்கல் டிராகன்ஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. பரப்பான இந்த ஆட்டத்தில் திருச்சி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி குறித்து திருச்சி வாரியர்ஸ் கேப்டன் பாபா இந்திரஜித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    173 ரன் என்பது இந்த ஆடுகளத்தில் சிறந்த ஸ்கோர் தான். இதனால் விக்கெட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் 87 ரன்னில் 5 விக்கெட்டை இழந்து விட்டோம்.

    எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதும் தெரியும். ஆட்டத்தை நெருக்கமாக கொண்டு வந்தவுடன் தோல்வியின் எல்லையை குறைக்க முடியும் என்று நினைத்தோம்.

    கடைசி 5 முதல் 6 ஓவரில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எல்லாம் நல்ல படியாக அமைந்ததால் வெற்றி பெற்றோம். இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.

    சுரேஷ் குமார் நீண்ட காலமாகவே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் தான் வீரர்கள் ஏலத்தில் அவரை விரைவிலேயே எடுத்தோம். அவர் ஒரு அற்புதமான இன்னிங்சை வெளிப்படுத்தினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து திண்டுக்கல் அணி வீரர் ஹரி நிஷாந்த் கூறும் போது 172 ரன் என்பது நல்ல ஸ்கோர் ஆகும். சில முக்கியமான கேட்ச்களை தவறவிட்டோம். எங்களது பீல்டிங் தரத்தை மேம்படுத்த வேண்டும்“ என்றார்.

    இன்று ஒய்வு நாளாகும். நாளைய 2-வது ‘லீக்‘ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL #TNPL2018 #DDvRTW
    பிரபல கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான சச்சின் தெண்டுல்கரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பெரம்பலூர் அருகே தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. #SachinTendulkar

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் ஊராட்சியில் கோல்டன் சிட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்குமாறு, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் கோல்டன்சிட்டி பகுதி ஊராட்சியை சேர்ந்தது என்பதால், அந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகத்தால் லட்சக்கணக்கான ரூபாய் செலவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரின் நண்பர், பிரபல கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் தெண்டுல்கருக்கு பழக்கமானவர். இதனால் அவர் மூலம், கோல்டன் சிட்டி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்குமாறு சச்சின் தெண்டுல்கருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், சச்சின் தெண்டுல்கருக்கு கோரிக்கை மனுவுடன் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதம் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, கோல்டன் சிட்டி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21 லட்சத்து 70 ஆயிரத்தை சச்சின் தெண்டுல்கர் ஒதுக்கீடு செய்தார்.

    அந்த நிதியின் மூலம் கோல்டன் சிட்டி பகுதியில் சுமார் 500 மீட்டர் நீளத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், இந்த சாலையானது 3.75 மீட்டர் அகலத்திலும், 20 செ.மீ. தடிமனிலும் வெட்மிக்ஸ் கொண்டு அமைக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டு அடுக்காக தார்ச்சாலை போடப்பட உள்ளது. இச்சாலை இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைய உள்ளது, என்றார்.


    கோல்டன் சிட்டி பகுதியில் தார்ச்சாலை அமைக்க தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்த சச்சின் தெண்டுல்கருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். #SachinTendulkar #tamilnews

    இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.
    டுப்ளின்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து இடையேயான 20 ஓவர் தொடர் வருகிற 3-ந் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்பு இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டது. அதன்படி இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் டுப்ளின் நகரில் நாளை (27-ந் தேதி) நடக்கிறது.

    இரு அணிகளும் 2009-ம் ஆண்டு நாட்டிங்காமில் மோதிய ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணி வீரர்கள் விவரம்:- இந்தியா: விராட் கோலி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, ரெய்னா, டோனி, தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்ட்யா, உமேஷ் யாதவ், யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், பும்ரா, சித்தார்த் கவூல், புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், ராகுல்.

    அயர்லாந்து: கேரி வில்சன் (கேப்டன்), பால்பிரின், வில்லியம் போர்ட்டர் பீல்டு, கெவின் ஓபிரையன், ஜேம்ஸ் ‌ஷனான், ஷிமிசிங், பால் ஸ்டிர்லிங், ஸ்டூவர்ட் தாம்சன், ரேன்கின், ஸ்டூவர்ட் பாய்ன்டர், மெக்பிரின், ஜோசுவா லிட்டில், டாக்ரெல், பீட்டர் சேஸ்
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் கடைசி கட்டத்தில் டோனியை மனதில் நினைத்து களத்தில் சாதித்ததாக ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். #MSDhoni #JosButtler
    மான்செஸ்டர்:

    மான்செஸ்டரில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுக்கு 114 ரன்களுடன் ஊசலாடிய போதிலும் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் (110 ரன், 122 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) தனி வீரராக போராடி 48.3 ஓவர்களில் இலக்கை எட்ட வைத்தார்.



    நெருக்கடிக்கு மத்தியில் பொறுமையாக ஆடியது போன்று தெரிந்ததே என்று ஜோஸ் பட்லரிடம் நிருபர்கள் கேட்ட போது ‘விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் நான் பொறுமையை கடைபிடிக்க வேண்டி இருந்தது. நெருக்கடியை தணிக்க முயற்சித்தேன். அப்போது இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்திய விக்கெட் கீப்பர் டோனி எந்த மாதிரி சமாளிப்பார் என்பதை கற்பனை செய்து பார்த்தேன். அவர் பதற்றத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாக ஆடியிருப்பார். அதைத் தான் நானும் களத்தில் செய்தேன்’ என்றார். #MSDhoni #JosButtler
    சில நாட்களுக்கு முன்னதாக நடந்த யோ-யோ டெஸ்டில் பங்கேற்காதது குறித்து வெளியான தகவல்களுக்கு ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் தற்போது யோ-யோ டெஸ்டில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பிடித்திருந்தார். இவர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா இடம்பிடித்தார். அதேபோல் முகமது ஷமி (ஆப்கானிஸ்தான் டெஸ்ட்) மற்றும் சஞ்சு சாம்சன் (இந்தியா ஏ) ஆகியோரும் வாய்ப்பை இழந்தனர்.

    இந்திய அணியில் உள்ள எல்லோருக்கும் யோ-யோ டெஸ்ட் நடைபெற்று முடிந்த நிலையில் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மாவிற்கு யோ-யோ டெஸ்ட் நடைபெறாமல் இருந்தது. இவருக்கு ஐபிஎல் தொடரின்போது இரண்டு முறை யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட்டது அப்போது தோல்வியடைந்தார்.

    இதனால், முகம்மது சமி மற்றும் சாம்சன் ஆகியோரை போல ரோகித் சர்மாவும் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாமல் போயிருக்கலாம் எனவும் அவருக்கு பதிலாக ரகானேவை மாற்று வீரராக தயார் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற யோ-யோ டெஸ்டில் ரோகித் சர்மா தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் மூலம் இவர் அணியின் சக வீரர்களுடன் இங்கிலாந்து செல்ல உள்ளார். இந்நிலையில், தனது குறித்தான செய்திகள் தொடர்பாக ட்வீட்டர் பக்கத்தில் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், “தேவையில்லாமல் சில சேனல்களும் மீடியாவும் தவறான தகவல்களை பரப்புகின்றன. நான் எங்கே போயிருந்தேன், எங்கு நேரத்தை செலவிட்டேன். ஏன் குறிப்பிட்ட நாளில் யோ-யோ தேர்வில் பங்கேற்கவில்லை என்பதை எல்லாம் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்க தேவையில்லை. அது எனது சொந்த விவகாரம். செய்திகளை வெளியிடும் முன் ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து வெளியிடுவது நல்லது” என காட்டமாக கருத்து பதிவிட்டுள்ளார். 
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஒன்றரை மாதம் ஓய்வு அளிக்கப்படுள்ளது. #jamesAnderson #England
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் வலது தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார். ஆகஸ்டு 1-ந்தேதி முதல் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டி இருப்பதை கருத்தில் கொண்டு, ஆண்டர்சனுக்கு ஒன்றரை மாதம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.



    இதனால் அடுத்து வரும் கவுண்டி போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். ‘சவாலான இந்திய தொடருக்கு ஆண்டர்சன் முழு உடல்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்’ என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் குறிப்பிட்டார். #jamesAnderson #England
    ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. #IndiaVsPakistan #WomensAsiaCupT20Final
    கோலாலம்பூர்:

    ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் விக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மலேசியா, தாய்லாந்து, ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

    இப்போட்டி தொடரில் இன்று கடைசி லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 72 ரன் எடுத்தது. இந்திய தரப்பில் எக்தா பிஸ்ட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்து 73 ரன் இலங்கை விளையாடிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 5 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது. மிதாலிராஜ், தீப்தி சர்மா டக் அவுட் ஆனார்கள்.

    அதன்பின் ஜோடி சேர்ந்த மந்தனா- ஹர்மன்பிரித் கவூர் சிறப்பாக விளையாடிய ரன் சேர்த்தனர். மந்தனா 38 ரன் எடுத்து அவுட் ஆனார். இந்திய அணி 16.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 75 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    இதன்மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா 5 ஆட்டத்தில் 4 வெற்றி, 1 தோல்வி என 8 புள்ளியுடன் முதல் இடத்தை பிடித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் தாய்லாந்து அணியிடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது.

    வங்காளதேசம்- மலேசியா இடையேயான ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு நுழையும். ஒரு வேளை வங்காளதேசம் தோல்வி அடைந்தால் 6 புள்ளியுடன் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். #IndiaVsPakistan #WomensAsiaCupT20Final
    மலேசியாவில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி, இலங்கை அணியை 7 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #WomenAsiaCup #WAC2018 #INDvSL

    இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொள்ளும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தியது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வங்காளதேச அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

    இந்நிலையில், இந்திய அணி தனது 4-வது லீக் போட்டியில் இலங்கை அணியை இன்று எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யசோதா மெண்டிஸ், நிபுனி ஹன்சிகா ஆகியோர் களமிறங்கினர். நிபுனி 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் யசோதா உடன், ஹாசினி பெரேரா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். யசோதா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹாசினி 46 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி பந்துவீச்சில் எக்தா பிஷிட் 2 விக்கெட் வீழ்த்தினார்.



    இதையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மிதாலி ராஜ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். மந்தனா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர் களமிறங்கினார். மிதாலி ராஜ் 23 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் வேதா கிருஷ்ணமூர்த்தி களமிறங்கினார்.

    கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அதைத்தொடர்ந்து அனுஜா பட்டேல் களமிறங்கினார். இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி நாளை தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. #WAC2018 #INDvSL
    ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி பந்துவீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான், மொழி முக்கியமல்ல, கிரிக்கெட் தான் எனது மொழி என கூறியுள்ளார். #MujeebUrRahman

    டேராடூன்:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக வளர்ந்து வருபவர் முஜீப் உர் ரஹ்மான். 17 வயதாகும் அவர் இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும் சிறப்பாக விளையாடினார்.

    இந்நிலையில், தனது பந்து வீச்சு குறித்து முஜீப் உர் ரஹ்மான் மனம் திறந்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் சிறு வயதில் என் மாமாவிற்கு பந்துவீசுவேன். அப்போதே சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறேன் என்று மனநிலையுடன் பந்து வீசுவேன். ஆரம்பத்தில் இருந்தே, சர்வதேச வீரர்களுக்கு பந்து வீச எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. என் கிரிக்கெட் அறிவைப் பற்றிக் கூறுகிறேன். மொழி முக்கியமல்ல, கிரிக்கெட் தான் எனது மொழி. கிரிக்கெட் சம்பந்தமாக எனக்கு என்ன கூறப்படுகிறதோ, அது எனக்கு புரிகிறது. நான் கிரிக்கெட் விஷயங்களை புரிந்துகொள்கிறேன். அஜந்தா மெண்டிஸ், சுனில் நரைன், ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் பல்வேறு வகையான பந்துகள் வீசுவதை பார்த்துள்ளேன். அது என்னை கவர்ந்தது. நான் அந்த வீடியோக்களைப் பார்த்து, அதனுடன் வளர்ந்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MujeebUrRahman
    மலேசியாவில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேச அணி, இந்திய அணியை 7 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #WomenAsiaCup #WAC2018 #BANWvINDW

    இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொள்ளும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தியது. இந்நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி, வங்காளதேச அணியை எதிர்கொண்டது.

    இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மிதாலி ராஜ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். மந்தனா 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மிதாலி ராஜ் 15 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அதன்பின் பூஜா வஸ்த்ரகர் - ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

    இருவரும் நிதானமாக விளையாடினர். பூஜா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து தீப்தி சர்மா களமிறங்கினார். சிறப்பாக விளையாடிவந்த ஹர்மன்பிரீத் கவுர் 42 ரன்னிலும், தீப்தி சர்மா 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி பந்துவீச்சில் ருமானா அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். 



    இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷமிமா சுல்தனா, ஆயஷா ரஹ்மான் ஆகியோர் களமிறங்கினர். ஆயஷா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து பர்கானா ஹக் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய ஷமிமா 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.

    அதன்பின் வந்த நிகார் சுல்தானா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து பர்கானா உடன் ருமானா அகமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. ஒரு கட்டத்தில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 3 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. ஜூலன் கோஸ்வாமி 18-வது ஓவரை வீசி 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் வங்காளதேச அணிக்கு 12 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

    சிறப்பாக விளையாடி வந்த பர்கானா 44 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் வங்காளதேச அணிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இறுதியில் வங்காளதேச அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பர்கானா 52 ரன்களுடனும், ருமானா 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி நாளை தனது 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. #WAC2018 #BANWvINDW

    தென்ஆப்ரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #ABDeVilliers #ABDRetires #Mr360

    ஏபி டிவில்லியர்ஸ் தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி விரைவாக 50, 100, 150 ரன்கள் அடித்த தென்ஆப்ரிக்கா வீரர் எனும் சாதனையையும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவிரைவாக 50 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனைகளைப் படைத்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவர் மட்டையாளராகவும் , விக்கெட் கீப்பராகவும் துவக்கத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கினார். மத்திய வரிசையில் இறங்கும் இவர் பல திசைகளிலும் அடித்து விளையாடும் வல்லமை படைத்தவர். நவீன காலத் துடுப்பாட்டப் போட்டிகளில் புதுமையான பேட்ஸ்மேன் என அறியப்படுகிறார். மேலும் விக்கெட் கீப்பர் மற்றும் பல திசைகளிலும் அடித்து விளையாடும் சில வித்தியாசமான முறைகளால் இவர் மிஸ்டர் 360 எனும் புனைபெயரால் அழைக்கப்படுகிறார். 

    2004-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். 2005-ம் ஆண்டின் துவக்கத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். 2006-ம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் இவர் அறிமுகமானார். அவரின் பேட்டிங் சராசரி இரு வடிவங்களிலும் 50-ற்கும் அதிகமாக உள்ளது.

    தென்ஆப்ரிக்கா டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயத்தினால் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக நீடித்து வருகிறார். பின் 2017 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஆகியவற்றின் தோல்விகளால் ஒருநாள் போட்டி கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார்.



    டிவில்லியர்ஸ் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். ஆனால் அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. 

    இந்நிலையில், 123 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ், அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். #ABDeVilliers #ABDRetires #Mr360
    தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் மகளிர் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #AishwaryaRajesh
    நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்திய  படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 15-ஆம் தேதி (நாளை) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். 



    இந்த படத்தின் கதை இதுவரை யாரும் தொடாத, பெண்கள் கிரிக்கெட்டை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

    திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். #ArunRajaKamaraj #AishwaryaRajesh #SivakarthikeyanProductions

    ×