search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல்"

    ஒட்டன்சத்திரம் அருகே வாக்கு பெட்டிக்குள் மை ஊற்றியதால் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது. #CooperativeElection

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பட்டி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

    மொத்தம் 70 பேர் வாக்களிக்க இருந்த நிலையில் 69 நபராக ஓடைப்பட்டி வெங்கடாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வாக்களிக்க வந்தார்.

    அப்போது திடீரென வாக்கு பெட்டிக்குள் மையை ஊற்றினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்தல் அதிகாரி சுப்பிரமணியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இது குறித்து அம்பிளிக்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியை கைது செய்தனர். 68 பேர் வாக்களித்த நிலையில் திடீரென மை வீசப்பட்டதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது. எனவே இந்த தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், மற்றொரு நாள் நடைபெறும் எனவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #CooperativeElection

    தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். #ministerudayakumar

    ராஜபாளையம்:

    அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் சாத்தூரில் தொடங்கிய சைக்கிள் பேரணி ராஜபாளையம் சென்றது. பேரணியில் வந்த அமைச்சர்கள் கே.டி. ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 137 பயனாளிகளுக்கு ரூ. 82.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர்கள் கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி. உதயகுமார் வழங்கினர்.

    பின்னர் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

    சுதந்திரத்திற்காக முதல் முழக்கமிட்ட புலித்தேவன் 303-வது ஆண்டு விழாவில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளோம். அ.தி.மு.க. மனிதனால் ஏற்படுத்தப்பட்டதல்ல. எம்.ஜி.ஆர் என்ற புனிதனால் தொடங்கப்பட்டது. இதை யாராலும் அழிக்க முடியாது. அ.தி.மு.கவுக்கு வீழ்ச்சி 1 சதவிகிதம் என்றால், வளர்ச்சி 99 சதவிகிதம்.

    அம்மா வாக்கு தெய்வ வாக்கு. உங்கள் கட்சி அழிந்து விடும் என விஜயகாந்த் சட்ட மன்றத்தில் சாபமிட்டார். ஆனால் தற்போது அவர் கட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை. அம்மா சொன்னது போல் அவருக்கு பின்னாலும் அ.தி.மு.க. 100 ஆண்டுகள் ஆளும்.

    மற்ற கட்சி போல உருவத்தை பார்த்து பதவி கொடுக்கப்படுவதில்லை. உழைத்தால் தான் முன்னேற முடியும். படிப்படியாக மட்டுமே முன்னேற முடியும். கட்சியில் சில குளறுபடிகள் ஏற்பட்டு விட்டது என எதிர் கட்சியினர் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதை உடைத்து அ.தி.மு.க. கட்சியின் சக்தியை காட்டவே இந்த ஓராண்டு சாதனை விளக்க சைக்கிள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.

    கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி. உயதகுமார், எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கும் இயக்கம் அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பை போற்றும், வணங்கும் தலைமை அ.தி.மு.க.வின் உடையது. அந்த தலைமையை அம்மா வளர்த்தெடுத்தார். தற்போது அதை மருது சகோதரர்களான ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் கட்டி காத்து வருகின்றனர்.

    எதிரணியினர் மாற்றுவோம் என கூறுகின்றனர். அ.தி.மு.க. என்ன பாட புத்தகமா ? மாற்றுவதற்கு ? பலர் முன்னிலையில் புரட்சி தலைவி அம்மாவின் அரசு 17-வது மாதம் முடிந்து 18- வது மாதத்தில் அடி எடுத்து வைக்கிறது.

    இந்த 17 மாத கால ஆட்சியில் ரூ. 23 ஆயிரம் கோடியில், 40 ஆயிரம் திட்டங்களை மக்களுக்காக அர்பணித்திருக்கும் அ.தி.மு.க. அரசின் இந்த சாதனைகளை யாரும் மறுக்க முடியுமா ?

    239 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த காவிரி பிரச்சினையை, அம்மாவின் அருளாசியோடு சட்ட போராட்டத்தில் மருது சகோதரர்கள் ஆனவர்கள் மாபெரும் வெற்றியை உச்ச நீதி மன்றத்தில் பெற்றுள்ளனர்.

    அண்டை மாநிலங்களில் இல்லாத எய்ம்ஸ் மருத்துவ மனை தமிழகத்தில் வர வேண்டும் என விதை விதைத்தார் அம்மா. ரூ. 2 ஆயிரம் கோடியில் அதை சத்தமில்லாமல் மருது சகோதரர்கள் அறிவிப்பாக பெற்று தந்துள்ளனர்.

    பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான தலை நகரம் என சென்னை தேசிய விருதை பெற்றுள்ளது. இது போல மக்கள் நல்வாழ்வு துறை, விவசாய துறையில் பரிசு, பள்ளி கல்வி துறையில் மறு மலர்ச்சி போன்ற நலத்திட்டங்களை வழங்கியது அம்மாவின் அரசு.

    ஆவின் பால் இது வரை இந்தியாவிற்குள் மட்டும் கிடைக்கப் பெற்றது. ஆனால் தற்போது ஆவின் பால் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அம்மாவின் அரசின் சாதனைகளை அமெரிக்கா என்ன ? நிலவு வரை எடுத்து செல்வோம். ஆனால் அங்கு சைக்கிள் செல்லாது.

    மேற்கண்டவாறு அவர் பேசினார். #ministerudayakumar

    2021-ம் ஆண்டு வரை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும், எந்த முறையில் தேர்தல் வந்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #EdappadiPalaniswami
    சேலம்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- முதுகெலும்பில்லாத ஆட்சி, ஊழல் ஆட்சி என்று எதிர்க்கட்சி குற்றம் சாட்டுவது குறித்து...

    பதில்:- அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியை நாம் எட்டியிருக்கின்றோம். வேண்டுமென்று திட்டமிட்டு, இந்த அரசின் மீது வீண்பழி சுமத்துவதற்காக, அரசியல் காரணத்திற்காக, அவர்கள் இந்த ஆட்சியை பற்றி விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள். மாணவச் சமுதாயத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்து இருக்கிறோம். உள்கட்டமைப்பு வசதியை பொறுத்தவரைக்கும், இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் ஒரு முன்மாதிரியாக சுகாதாரத்துறை விளங்கி கொண்டிருக்கிறது. ஆகவே, ஒவ்வொரு துறையிலும் நாம் முத்திரையை பதித்திருக்கின்றோம்.

    கேள்வி:- முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?


    பதில்:- பருவ காலங்களிலே பெய்கின்ற மழை நீரை முல்லைப் பெரியாறு அணை கேட்ச்மெண்ட் பகுதியில் வருகின்ற நீரை முல்லைப் பெரியாறு அணையிலே தேக்கி வைப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக, 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்துவதற்காக அணை பலப்படுத்துகின்ற பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதை அவர்கள் திட்டமிட்டு, அந்த 142 அடியிலிருந்து 152 அடி உயர்த்தக்கூடாது என்பதற்காக தற்போது கேரள பகுதியிலே கனமழையின் காரணமாக அந்த மாநிலத்திலுள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி உபரி நீராக வெளி வந்த காரணத்தினால் கேரளாவிலே வெள்ளம் ஏற்பட்டது. அதை வைத்துக் கொண்டு, தற்போது முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற தவறான செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையில்லை.

    வெள்ளம் ஏற்கனவே சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்ட பிறகு தான், ஒரு வாரத்திற்கு பிறகு தான், முல்லைப் பெரியாறு அணை நிரம்பி, அந்த முல்லைப் பெரியாறு அணை நிரம்பியவுடன் பல்வேறு எச்சரிக்கைகள் விடப்பட்ட பிறகு தான், படிப்படியாக நீர் விடப்பட்டது. நாம் 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தக்கூடாது என்ற அடிப்படையிலே இப்படிப்பட்ட செய்தியை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள். கோர்ட்டை அவர்கள் நாடி இருக்கின்றார்கள். கோர்ட்டில் நம்முடைய நியாயமான கருத்துகளை ஆணித்தரமான கருத்துகளை ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலே நம்முடைய வாதங்களை எடுத்து வைக்க இருக்கின்றோம்.

    கேள்வி:- மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே நேரத்திலே தேர்தல் வைக்க வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறதே?.

    பதில்:- ஒரே நேரத்திலே தேர்தல் வைப்பது பொறுத்தவரைக்கும், 2021-ம் ஆண்டு வரை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடர்ந்து செயல்பட வேண்டுமென்று ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். நம்முடைய கருத்தை தெரிவித்திருக்கின்றோம். அதுமட்டுமல்லாமல், ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டுமென்று என்பதற்கு தேவையான கருத்துறு எட்டப்படவில்லை என்று தான் கருதுகின்றேன். ஆகவே, எந்த முறையில் தேர்தல் வந்தாலும், நாங்கள் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

    கேள்வி:- தேர்தல் வாக்குசீட்டு முறையை நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்களா?

    பதில்:- வாக்குசீட்டு முறை வந்தாலும் சரி, ஏற்கனவே இருக்கின்ற மின்னணு மூலமாக வாக்களிக்கின்ற முறையாக இருந்தாலும், எங்களை பொறுத்தவரைக்கும், எதிலும் சந்தேகம் கிடையாது. மக்கள் எஜமானர்கள். மக்கள் நீதி வழங்குவார்கள். அவர்களுடைய நீதியை தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோமே தவிர, வாக்குசீட்டோ, மின்னணு மூலமாகவோ, எந்த தவறும் நடைபெறுவதாக எங்களுக்கு தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் எது இருந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார். #EdappadiPalaniswami
    எந்த தேர்தல் நடந்தாலும் கமல்ஹாசன் போட்டியிட மாட்டார். ஏனென்றால் தேர்தலில் போட்டியிட அவரது கட்சியில் ஆட்கள் இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். #kamal #ministerrajendrabalaji

    சிவகாசி:

    சாத்தூரில் அரசின் சாதனைகளை விளக்கி சைக்கிள் பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்மா வழியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் அரசு மீது வீண் பழி சுமத்தி பொய் பிரசாரம் செய்கிறது. அதனை முறியடிக்கவே அ.தி.மு.க. சைக்கிள் பேரணி நடத்துகிறது. இதனால் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட வில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் இந்த தேர்தலில் மட்டுமல்ல, எந்த தேர்தல் நடந்தாலும் போட்டியிட மாட்டார். ஏனென்றால் தேர்தலில் போட்டியிட அவரது கட்சியில் ஆட்கள் இல்லை.


    நடிகர்கள் ஆசைப்பட்டு அரசியலுக்கு வருகிறார்கள். எத்தனை நடிகர்கள் கட்சிகளை தொடங்கி னாலும் தமிழகத்தை திராவிட கட்சிகள்தான் ஆளும்.

    எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு தற்போதுள்ள நடிகர்களுக்கு இல்லை.

    அழகிரி திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிட்டால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனென்றால் அது அம்மாவின் கோட்டை. அங்கு அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும். தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #kamal #ministerrajendrabalaji

    ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவராவிட்டால் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடிதம் எழுதி உள்ளார். #RajThackeray #election
    மும்பை :

    நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்யப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

    இந்த நிலையில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலேயே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்விக்குறி எழுந்தது.

    பல தொகுதிகளில் எனது கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களும், எம்.எல்.ஏ.க்களும் தீவிரமாக உழைத்தனர். அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது. சில தொகுதிகளில் எங்களது வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. இது எப்படி சாத்தியமாகும்?



    அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற முன்னேறிய நாடுகள் தற்போதும் ஓட்டுச்சீட்டு முறையை தான் கடைப்பிடிக்கின்றன.

    இந்தியா, நைஜீரியா, வெனிசுலா உள்ளிட்ட சில நாடுகளே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துகின்றன. இந்த முரண்பாடான முறையை நாம் ஏன் கடைப்பிடிக்க வேண்டும்?

    இதுகுறித்து அரசியல் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்தவில்லை என்றால், நாம் ஜனநாயக நாடு என்ற பெருமையை இழக்க நேரிடும்.

    எனவே பழைய ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவரவேண்டும் அல்லது வாக்களித்ததற்கான ஒப்புகை சீட்டு அளிக்கும் எந்திரத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RajThackeray #election
    தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
    தென்காசி:

    ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தென்காசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை தடுத்து நிறுத்தியதும். அப்போது அவரை நடத்திய விதமும் முறையற்ற செயல். தமிழகத்தின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கினை விசாரணை செய்த சென்னை உயர்நீதி மன்றம் வருகிற 4-ந் தேதிக்குள் அ.தி.மு.க. அரசு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும். தமிழகத்தில் தி.மு.க கூட்டணி தான் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை தி.மு.க. தலைவராக அடிமட்ட தொண்டன் முதல் தலைமை கழக நிர்வாகிகள் வரை அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஏகமனதாக தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

    தி.மு.க.வை மு.க.ஸ்டாலின் சிறப்பாக வழிநடத்துவார். தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் தி.மு.க. கூட்டணியே அமோக வெற்றி பெறும். தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பார். தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி சாதனைகளை செய்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தேர்தலில் கிரிமினல்களை போட்டியிட அனுமதிக்கும் கட்சிகளின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னத்தைத் திரும்பப் பெறலாம் என சுப்ரீம் கோர்ட்டு யோசனை கூறியுள்ளது. #Supremecourt #criminal #election
    புதுடெல்லி:

    கிரிமினல் குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சிகள் நிறுத்திய வேட்பாளர்களில் சுமார் 20 சதவீதம் பேர் கிரிமினல் குற்றவாளிகள் என்று தெரிய வந்தது.

    கடந்த சில ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களின் போதும் நிறைய கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட்டனர். இதையடுத்து தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதைத் தடுக்க சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் கர்நாடகா மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட 2655 வேட்பாளர்களில் 883 பேர் தீவிர கிரிமினல் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்று தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள், “கிரிமினல்களை போட்டியிட அனுமதிக்கும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கட்சிகளின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னத்தைத் திரும்பப் பெறலாம்” என்றனர்.

    இதற்கு மத்திய அரசு தலைமை வக்கீல் கே.கே.வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், “அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளின் சின்னத்தை மறுப்பது புதிய சட்ட சிக்கல்களை உருவாக்கும். மேலும் இது பற்றி பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தங்கள் செய்ய முடியும். இதில் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை” என்றார்.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இதை ஏற்க மறுத்தனர். கிரிமினல் குற்றவாளிகளால் அரசியலில் துர்நாற்றம் வீசுகிறது. அது சரி செய்யப்பட வேண்டும் என்றனர்.

    நீதிபதிகள் மேலும் கூறுகையில், “அரசியல் கட்சிகள், தங்களது வேட்பாளர்களிடம் கிரிமினல் குற்றச்சாட்டு ஏதேனம் உள்ளதா என்பது பற்றிய முழு தகவல்களையும் வெளிப்படையாக அறிவிக்க கேட்டுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார்-யார் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்பதை வாக்காளர்கள் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இதை தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவாக வெளியிட கோர்ட்டு பரிசீலனை செய்து வருகிறது” என்றனர்.



    நீதிபதிகளின் இந்த கருத்துக்கு மத்திய அரசு வக்கீல் வேணுகோபால் ஆட்சேபம் தெரிவித்தார். இது சட்டத்துக்கு எதிரானது என்றார். அவர் மேலும் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டு இப்படியொரு உத்தரவை பிறப்பிப்பதால் அரசியல்வாதிகள் தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வேண்டும் என்றே கிரிமினல் குற்ற வழக்குகளை தொடுப்பார்கள். இது அரசியலில் அபாயகரமானதாக மாறி விடும்” என்றார்.

    ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இதை ஏற்கவில்லை. உரிய நடவடிக்கைகள் எடுத்தால்தான் தேர்தலில் போட்டியிடும் கிரிமினல் குற்றவாளிகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்று கூறினார்கள்.

    நீதிபதி ரோகிண்டன் நாரிமன் கூறுகையில், “இந்த விவகாரத்தில் பாராளுமன்றம் ஒரு முடிவு எடுக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. எனவே அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் நடைமுறையில் கூடுதலாக ஒரு நிபந்தனையை சேர்க்க எங்களால் உத்தரவிட முடியும். அதன்படி ஒரு வேட்பாளர் கிரிமினல் குற்ற வழக்குகளுடன் இருப்பது தெரிய வந்தால், அவருக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிசின்னம் கிடையாது என்று அறிவிக்கலாம்” என்றார்.

    இந்த யோசனைக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், தேர்தல் கமி‌ஷனுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது. #Supremecourt #criminal #election
    அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி வருகிற தேர்தலை சந்திப்போம் என்று பா.ம.க. கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். #PMK #AnbumaniRamadoss #GKMani
    மதுரை:

    மதுரையில் இன்று பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.

    வருகிற செப்டம்பர் மாதம் 1,2-ந் தேதிகளில் ‘வைகையை காப்போம், விழிப்புணர்வு கொள்வோம்’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது.

    இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்கிறார். இந்த பிரசாரம் வைகை அணையில் தொடங்கி ராமநாதபுரத்தில் முடிவடைகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து தற்போது 40 டி.எம்.சி. நீர் கடலில் வீணாக கலக்கிறது. இதற்கு அணையை பராமரிக்காததும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததும் தான் காரணம்.

    வைகை நதியை பராமரித்து பாதுகாத்தால் தேனி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 3.46 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் எந்த அணையும் கட்டப்படவில்லை. இருக்கின்ற அணையையும் பராமரிக்கவில்லை. இதனால் தான் மழை காலங்களில் 40 டி.எம்.சி. நீர் வீணாக கடலில் கலக்கிறது.

    கொள்கை சார்ந்த கூட்டணி என்பது தற்போது தமிழகத்தில் இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் அறிவிப்புக்கு பின் ராமதாஸ் முடிவு எடுப்பார்.


    மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து கூட்டணி அமைப்போம். அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி வருகிற தேர்தலை சந்திப்போம்.

    ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்துவது சாத்தியமா? என்பது தெரியவில்லை.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடுமா என்பதை தற்போது கூற முடியாது. விரைவில் இது தொடர்பாக ராமதாஸ் முடிவு எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #AnbumaniRamadoss #GKMani
    ஈராக்கில் நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா கட்சி வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #Iraqpoliticalalliance #IraqElection #IraqElectionRecourt
    பாக்தாத்: 

    ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இந்த நிலையில் திடீரென ஐஎஸ் பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர். தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். எனவே அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர். 

    அதைத் தொடர்ந்து ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணியை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணியும், பதே கட்சி கூட்டணியும் மோதின. 

    இந்த தேர்தலில் 44.5 சதவீதம் வாக்குகள் பதிவாகிய நிலையில், ஓட்டு எண்ணிக்கையில் மதகுரு மக்தாதா தலைமையிலான சயிரூன் கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது. இவருக்கு அடுத்தபடியாக பதே கட்சி 47 இடங்கள் வந்துள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் அபாடி தலைமையிலான நசார் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கட்சி 42 இடங்கள் பிடித்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 

    தேர்தல் நடைமுறைகளில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளும் தரப்பினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து முறைகேடுகள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் விசாரணை நடத்தி, 1000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளின் வாக்கு எண்ணிக்கையை செல்லாது என அறிவித்தது. 

    இவ்வாறு பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், வாக்குகளை எந்திரங்கள் மூலம் எண்ணாமல், நேரடியாக கைகளால் எண்ணும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, வாக்குகள் அனைத்தையும் கைகளால் எண்ண வேண்டும் என பாராளுமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், ஈராக் அதிபர் தேர்தலில் நடத்தப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. விரைவில் சதார் தலைமையில் ஆட்சி அமையவுள்ளது என தெரிவித்துள்ளனர். #Iraqpoliticalalliance #IraqElection #IraqElectionRecourt
    பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பத்து சதவீதத்துக்கும் குறைவாக பெண்களின் வாக்குகள் பதிவான இரு தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. #ECPvoidpolls #femalevoterslowturnout
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமைகள் நிலநாட்டப்பட வேண்டும் என்னும் அந்நாட்டு தேர்தல் விதிமுறைகளின்படி,  பத்து சதவீதத்துக்கும் குறைவாக பெண்கள் வாக்களிக்கும் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த மாதம் 25-ம் தேதி பாராளுமன்றத்துக்கும் 4 மாகாணங்களுக்கான சட்டசபைக்கும் நடைபெற்ற தேர்தலில் ஷங்லா மற்றும் வடக்கு வசிரிஸ்தான் பாராளுமன்ற தொகுதிகளில் மிக குறைவான எண்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். 

    ஆனால், வாக்குப்பதிவு நிலவரப்படி  வடக்கு வசிரிஸ்தான் தொகுதியில் வாக்குரிமை பெற்றுள்ள மொத்தம் 77 ஆயிரத்து 537 பெண்களில் வெறும் 6 ஆயிரத்து 364 பேர் (8.91 சதவீதம்) மட்டுமே வாக்களித்திருந்தனர்.

    இதேபோல், ஷங்லா தொகுதியில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 49 பெண் வாக்காளர்களில் 12 ஆயிரத்து 663 பேர் மட்டுமே வாக்களித்தனர். இந்த எண்ணிக்கையும் மொத்த பெண் வாக்காளர்களில் பத்து சதவீதத்துக்கும் குறைவு என்பதால்  இந்த இரு  தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டின் தலைமை தேர்தல் கமிஷன் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

    இதைதொடர்ந்து, அங்கு மறுதேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டு, மீண்டும் வேட்புமனு தாக்கலும், வாக்குப்பதிவும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த இரு தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஷங்லா தொகுதியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வேட்பாளர் இபாதுல்லா கான்,  வடக்கு வசிரிஸ்தான் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் மோஹ்சென் ஜாவெத் வெற்றி பெற்றதாக முன்னர் முடிவுகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம். #ECPvoidpolls #femalevoterslowturnout 
    பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரிவிக்கும் கருவி பயன் படுத்தப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #Parliamentelection #ElectionOfficer

    சென்னை:

    அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு முன்னதாக பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாமா என்று அரசியல் கட்சிகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டது.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் குறித்து கிண்டியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாசாகு கலந்துகொண்டு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், துணை தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவியை இயக்க பற்றிய கருத்தரங்கம் நடந்தது. இதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் சவுமியாஜித் கோஷ், தேசிய அளவிலான தலைமை பயிற்சியாளர் என்.டி.பர்மர், பெங்களூர் பி.எச்.இ.எல். தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சி அளித்தனர்.

    பின்னர் தமிழக தலைமை அதிகாரி சத்தியபிரதாசாகு நிரூபர்களிடம் கூறியதாவது:-

    வாக்குப் பதிவின்போது பயன் படுத்தக் கூடிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களையும் சோதனை செய்யப்படும் பணிகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே நடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விதிமுறை கொடுத்துள்ளது.


    இதுபோன்ற பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில் தேர்தல் அதிகாரிகளான 32 மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம். ஆணையம் தேதியை அறிவித்த பின் தேர்தல் நடத்தப்படும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரிவிக்கும் கருவி பயன் படுத்தப்படும். அதற்கான பயிற்சி தேர்தல் அதிகாரிகளுக்கு அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    ஜிம்பாப்வேக்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மனங்கக்வா மற்றும் நெல்சன் சமிசா ஆகியோர் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. #Zimbabwe #PresidentialElection
    ஹராரே:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ராபர்ட் முகாபே கடந்த நவம்பர் மாதம் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளரான எம்மர்சன் மனங்கக்வா (வயது 75) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த நிலையில் ஜிம்பாப்வேக்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. முகாபே ஆட்சிக்காலத்துக்கு பிறகு நடைபெறும் இந்த முதல் தேர்தலில் மனங்கக்வா மற்றும் நெல்சன் சமிசா (40) ஆகியோர் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. பிரபல வக்கீலான சமிசா, பாதிரியாராகவும் உள்ளார்.



    உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடந்தது. நேற்றைய வாக்குப்பதிவில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெறாவிட்டால், செப்டம்பர் 8-ந் தேதி அடுத்த சுற்று வாக்குப்பதிவு நடைபெறும். எனினும் இந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மனங்கக்வா வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.

    அதேநேரம் சமிசா வெற்றி பெற்றால் நாட்டின் மிக இளம் அதிபர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். முகாபே ஆட்சியால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஜிம்பாப்வே, புதிய ஆட்சியில் முன்னேற்றம் காணும் என மக்களிடையே நம்பிக்கை உள்ளது. #Zimbabwe #PresidentialElection #tamilnews 
    ×