search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல்"

    வயநாடு தொகுதியில் நாளை முதல் 2 நாட்களுக்கு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #PriyankaGandhi

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் வருகிற 23-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    அங்கு வருகிற 21-ந் தேதியுடன் தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது. அதற்கு இன்னும் 2 நாட்களே அவகாசம் இருப்பதால் வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

    வயநாடு தொகுதியில் மனுதாக்கல் செய்த பிறகு ராகுலும், பிரியங்காவும் சேர்ந்து ரோடு ஷோ நடத்தி னார்கள். அதன் பிறகு சமீபத்தில் ராகுல் மட்டும் வந்து ஒருநாள் சூறாவளி பிரசாரம் செய்தார்.

    அவர் மற்ற மாநிலங்களுக்கும் செல்ல வேண்டி இருப்பதால் மீண்டும் வயநாடு தொகுதிக்கு வர இயலவில்லை. இதைத் தொடர்ந்து அவருக்கு பதில் பிரியங்கா வயநாடு தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 2 நாள் தீவிர பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

     


    பிரியங்கா இன்று உத்தரபிரதேச மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு மே 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள அமேதி தொகுதியில் ராகுலை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இன்று பிற்பகல் அவர் கான்பூரில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்.

    அந்த ரோடு ஷோ முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற இருக்கிறது. ரோடு ஷோ முடிந்ததும் பூல்பக் நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு லக்னோ சென்று டெல்லிக்கு செல்கிறார்.

    மீண்டும் 23-ந்தேதி அமேதிக்கு செல்ல பிரியங்கா திட்டமிட்டுள்ளார்.

    வயநாடு தொகுதிக்கு பிரியங்கா நாளை (சனிக்கிழமை) வருகிறார். வயநாட்டில் அவர் பங்கேற்கும் பிரமாண்ட ரோடு ஷோ நடைபெற உள்ளது.

    அதன் பிறகு 2 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பிரியங்கா பேசுகிறார். நாளை இரவு அவர் வயநாடு தொகுதியில் தங்குகிறார். நாளை மறுநாளும் அவர் வயநாடு தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.

    வயநாடு தொகுதியில் 80 சதவீதம் பேர் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்த பிரியங்கா திட்டமிட்டுள்ளார்.

    அதன்பிறகு வயநாடு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளையும் பிரியங்கா சந்தித்து பேச உள்ளார். 2-வது நாள் நிலம்பூர், மலப்புரம் ஆகிய 2 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    அன்று இரவு அவர் கேரளாவில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு புறப்பட்டு செல்கிறார். #LokSabhaElections2019 #PriyankaGandhi

    மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ஆதரவு தெரிவித்து உள்ளார். #MukeshAmbani #Congress

    மும்பை:

    காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி முரளி தியோரா. கடந்த 2014-ம் ஆண்டு இவர் மரணம் அடைந்தார்.

    இவரது மகன் மிலிந்த் தியோரா. இவரும் மத்திய மந்திரியாக இருந்து உள்ளார்.

    தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் 42 வயதான மிலிந்த் தியோரா மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

    2004, 2009 தேர்தலில் அந்த தொகுதியில் வெற்றி பெற்ற அவர் கடந்த தேர்தலில் சிவசேனாவிடம் தோற்றார். 4-வது முறையாக அவர் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    ரிலையன்ஸ் குழும அதிபரான அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-


    தெற்கு மும்பை என்றாலே தொழில் என்கிறார்கள். மும்பையின் தொழில்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 10 ஆண்டுகளாக மிலிந்த் தியோரா மும்பை தெற்கு தொகுதி எம்.பி.யாக இருந்துள்ளார். தெற்கு மும்பையில் உள்ள பொருளாதாரம், சமூகம், சுற்றுச் சூழல் ஆகியவற்றை ஆழமாக அறிந்தவர். அவரது தலைமையில் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் வளம் பெறும்.

    இவ்வாறு முகேஷ் அம்பானி வீடியோவில் கூறி தியோராவுக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.

    ரபெல் விவகாரத்தில் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது ஆச்சரியமான ஒன்றாகும். அதே நேரத்தில் முகேஷ் அம்பானி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததால் பா.ஜனதாவும், சிவசேனாவும் அதிர்ச்சி அடைந்து உள்ளன.

    இதே போல ஆசியாவின் மிகப் பெரிய கோடீசுவரர்களில் ஒருவரான உதய் கோடக்கும் காங்கிரஸ் வேட்பாளர் தியோராவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். #MukeshAmbani #Congress

    திருவாடானை அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    தொண்டி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பறக்கும்படை அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலுச்சாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று இரவு கோடானூர் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருவாடானையில் இருந்து பாண்டுக்குடி சென்ற காரை மறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த பறக்கும் படை குழுவினர் காரை சோதனை செய்தனர்.

    காரில் ரூ.11½ லட்சம் ரொக்கம் இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரில் வந்த தொண்டி தளிர் மருங்கூரைச் சேர்ந்த சிவா (வயது29), நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி செந்தூர்பாண்டி (39), சென்னை சாலிகிராமம் ராஜேஷ் (36) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதா? என்ற அடிப்படையில் 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. #LokSabhaElections2019

    தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் கூறினார். #LokSabhaElections2019 #MuralidharRao
    சென்னை:

    பா.ஜ.க. பொதுச் செயலாளரும், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளருமான முரளிதர்ராவ் சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின்போது தேசத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த தேர்தலில் பா.ஜ.க. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தை பொறுத்தமட்டில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் வெற்றியை விட இந்த தேர்தலில் வெற்றி அதிகமாக இருக்கும்.

    காங்கிரஸ் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் ஒற்றுமை, வலிமை, அரசியல் நாகரீகம் போன்றவற்றுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

    தேசம் பாதுகாப்பாக இருக்காது. நாட்டின் நலனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் நாட்டின் முக்கிய பிரச்சினைகளை கூட கவனத்தில் கொள்ள முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.



    இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மறுநாளே தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்றும் கூறுகிறார். இது எதை காட்டுகிறது.

    தேர்தல் இல்லாமல் ஆட்சி எப்படி மாறும். தேர்தல் இல்லாமலோ அல்லது வேறு வழியிலோ ஆட்சியை பிடிக்கலாம் என்ற தி.மு.க.வின் நோக்கத்தை தான் இது காட்டுகிறது. இதற்காக தான் தி.மு.க., காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறது. ஊழல், இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ் தான் காரணம்.

    நாட்டின் வளர்ச்சி, ஊழலை ஒழிப்பது போன்றவற்றை மக்கள் விரும்புகின்றனர். இதை பா.ஜ.க.வால் மட்டுமே தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தமட்டில் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்ற ஒற்றை கோஷம் மட்டுமே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது பா.ஜ.க. மாநில ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத் உடன் இருந்தார்.  #LokSabhaElections2019 #MuralidharRao
    சாத்தூர் தொகுதியில் வளர்ச்சி பணிகள் தொடர்ந்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மன் பிரசாரம் செய்தார்.
    சாத்தூர்:

    சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் போட்டியிடுகிறார்.

    சாத்தூர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் தெர்டர்ந்து செயல்படுத்திட வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்க ளியுங்கள் என்று அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ். ஆர். ராஜவர்மன் கேட்டு கொண் டார்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு அங்கீ காரம் அளிக்கும் வகையில் நடை பெறும் இந்த தேர்த லில் வாக்காளர்கள் ஒட்டு மொத்தமாக அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். சாத்தூர் தொகுதியில் அனைத்து சாலைகளும் சீரமைக்கப் பட்டுள்ளன. சாத்தூரில் அரசு கலைக்கல்லூரி, வைப் பாற்றில் ரூ. 13 கோடியில் மேம்பாலம், தாலுகா அலுவலகத்திற்கு தனியாக புதிய கட்டிடம், நீதிமன் றத்திற்கு புதிய கட்டிடம், வெம்பக்கோட்டைக்கு புதிய வட்டாட்சியர் அலுவலகம், புதிய வருவாய் கோட்டம், புதிய ஐ.டி.ஐ. கல்லூரி, சாலைகள் விரிவாக்கம், ஏராளமான பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்தியது.

    ரூ.3 கோடியில் இருக்கன் குடி குடிநீர் திட்டம் உட்பட ஏராளமான திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் முடிந்து ஆய்வு பணிகள் நடை பெறுகிறது.

    இன்னும் ஒருசில வாரங்க ளில் அனைத்து கிராமங் களுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்கப்படும். சாத்தூர் தொகுதியில் தொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்திட வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்க ளிக்க வேண்டும்.

    பட்டாசு ஆலைகள் இன்று திறந்து இருப்பதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம். தமிழக முதல்வர் சரியான வழக்கறிஞரை வைத்து வாதாடியதால் பட்டாசு ஆலைகள் திறக்க முடிந்தது என்றார். #ADMK
    போர் குற்றங்கள் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கை முன்னாள் ராணுவ மந்திரி கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என இன்று அறிவித்துள்ளார். #GotabhayaRajapaksa #presidentialpolls #Lankapresidentialpolls
    கொழும்பு:

    இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தமிழர்களை கொன்று குவித்த உச்சக்கட்ட போரை நிகழ்த்தியபோது அவரது தம்பி  ராணுவ மந்திரி கோத்தபய ராஜபக்சே அந்நாட்டின் ராணுவ மந்திரியாக பொறுப்பு வகித்தார்.

    முள்ளிவாய்க்காய் போரின்போது பல்லாயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட சதியில் கோத்தபய ராஜபக்சேவின் சதி முக்கியமானதாக கருதப்பட்டது. அவருக்கு எதிராக பல்வேறு போர் குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

    தற்போது கனடா நாட்டில் வாழும் பாதிக்கப்பட்டவர் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது.



    மேலும் தனது தந்தையை கோத்தபய ராஜபக்சே கொன்று விட்டதாக பிரபல பெண் பத்திரிகையாளரான அஹிம்சா விக்ரமதுங்கா என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    இலங்கையை சேர்ந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு அமெரிக்காவிலும் நிரந்தர குடியுரிமை உண்டு. இலங்கை அதிபர் பதவிக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சமீபகாலமாக அமெரிக்காவில் தங்கியிருந்த கோத்தபய ராஜபக்சே இன்று இலங்கை திரும்பினார்.

    தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அதிபர் தேர்தலில் போட்டியிடுதற்கு வசதியாக எனது அமெரிக்க குடியுரிமை விட்டுத்தருவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறேன் கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார். #GotabhayaRajapaksa #presidential polls #Lankapresidentialpolls
    முகப்பேர்-கும்மிடிப்பூண்டியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஏ.டி.எம். பணம் ரூ. 3 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    அம்பத்தூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம், தங்கம் உள்ளிட்டவையை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மேற்கு முகப்பேர் பகுதியில் தேர்தல் அதிகாரி செந்தில்குமார் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு வேனில் ரூ. 2 கோடியே 34 லட்சம் ரொக்கம் இருந்தது. அவை ஏ.டி.எம். எந்திரத்துக்கு நிரப்ப கொண்டு செல்லப்பட்ட பணம் என்று அதில் இருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் அவர்களிடம் பணத்துக்கான ஆவணம் இல்லை. இதையடுத்து ரூ. 2 கோடியே 34 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வளசரவாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணத்தை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

     


    கும்மிடிப்பூண்டியை அடுத்த பொம்மாஜிகுளத்தில் உள்ள சோதனைச்சாவடியில் நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கவரைப்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் சத்யவேடு நோக்கிச் சென்ற மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்காக தனியார் நிறுவனம் மூலம் ரூ. 80 லட்சம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    இதற்கு உரிய ஆவணம் இல்லாததால் ரூ. 80 லட்சத்தை பறிமுதல் செய்து கும்மிடிப்பூண்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு ரொக்கப்பணம் திரும்ப ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மதுரவாயல் அருகே மேட்டுக்குப்பம் மெயின் ரோட்டில் நேற்று இரவு கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜெயராமன், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன், மற்றும் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜ்கமல் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த மினி வேனை மடக்கி சோதனை நடத்தினர் அதில் ரூ. 65 லட்சத்து 74 ஆயிரம் இருந்தது. வேனில் இருந்தவர்களிடம் விசாரித்த போது தனியார் பால் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் என்பதும் கடைகளில் வசூல் செய்யப்பட்ட மொத்த பணம் என்றும் தெரிவித்தனர்.

    ஆனால் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் ரூ. 65 லட்சத்து 75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். #LokSabhaElections2019

    ஓமலூரில் அதிமுக பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். #GKVasan #ADMK

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சேலம் மாவட்டத்தை பொருத்த வரையில் இரும்பாலை விரிவாக்க திட்டம், ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கொண்டு வந்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதாக மத்திய அரசு உறுதி கொடுத்துள்ளது. மாநில அரசை பொருத்தவரை முதல்வர் சேலம் மாவட்டத்தை பாலம் மாவட்டமாக மாற்றியுள்ளார்.

    பெங்களூர் பேருந்து நிலையம் போல் தமிழகத்தில் முதன் முதலாக இரண்டு அடுக்கு பஸ் போர்ட் அறிவித்துள்ளார், விவசாய கால் நடை ஆராய்ச்சி நிலையம் 300 கோடி செலவில் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரை ஏரிகளில் நிரப்பும் உபரி நீர் திட்டம் கொண்டு வர ஆலோசனைகள் பெற்று வருகிறார்.

    தற்போது மத்திய மாநில அரசுகள் இணக்கமான ஒத்த கருத்துடைய அரசாக உள்ளது. மத்தியில் உள்ள அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றும்.

    மாநில அரசை பொருத்த வரையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் சாமானியர்களுடன் பழகி வருவதால் அனைத்து தரப்பினர்களின் எண்ணங்களை உணர்ந்து அனைத்து துறைகளிலும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். எனவே தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்,

    சேலம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும், தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்ட மன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், காங்கிரஸ் கட்சி வட மாநிலங்களில் கடுமையாக சரிவை சந்தித்து வருகிறது. இதனால் ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார். #GKVasan #ADMK

    முதல்முறையாக வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை ‘‘செல்பி’’ எடுத்து அனுப்பினால் ரூ.7000 பரிசு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #LokSabhaElections2019 #Voters

    கவுகாத்தி:

    இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி இருக்கிறது. இந்த தொகுதியில் வருகிற 11-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மிசோரம் மாநிலத்தில் 7 லட்சத்து 2,189 வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 63 சதவீதம் பேர் வாக்களித்தனர். பழங்குடி இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த தனித் தொகுதியில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு சுமாராகவே இருந்தது.

    எனவே இந்த தடவை ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மிசோரமில் இந்த தடவை 83 வயது காங்கிரஸ் வேட்பாளர் ரூபா உள்பட 6 பேர் களத்தில் உள்ளனர்.

     


    கடந்த ஆண்டு (2018) மிசோரம் மாநில சட்ட சபைக்கு தேர்தல் நடந்த போது சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. தற்போது பாராளுமன்ற தேர்தலில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 663 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேரை வாக்களிக்க வைக்க மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆசிஷ்குந்த்ரா முயற்சிகளில் ஈடுபட்டார்.

    இதற்காக அவர் இளைஞர்களுக்கும், முதன்முறையாக வாக்களிக்க உள்ளவர்களுக்கும் செல்பி போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். முதல்முறை வாக்காளர்கள் ஓட்டுபோட்டு முடித்ததும் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள ‘மை’யை செல்பி படம் எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

    வாக்களித்ததை உறுதி செய்ததை காட்டும் மிகச் சிறந்த செல்பிக்கு முதல் பரிசாக ரூ.7ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது சிறந்த செல்பிக்கு ரூ.3 ஆயிரம் பரிசும், 3வது சிறந்த செல்பிக்கு ரூ.2 ஆயிரம் பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #Voters

    கோபி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் இரும்பு வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019 #LSpolls

    கோபி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற் கொண்டு வருகிறார்கள்.

    கோபி அருகே உள்ள கெட்டி செவியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை பிரிவு அதிகாரி அசோக், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குட்டியண்ணன், சுந்தர வடிவேல் மற்றும் போலீசார், அதிகாரிகள் வாகன சோதனை மேற் கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.

    கோபியில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் சென்றதாகவும், கேராளாவுக்கு பழைய இரும்பு சாமான்கள் வாங்க செல்வதாகவும் தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததது தெரிய வந்தது.

    இதையடுத்து உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து சென்றதாக கூறி 2 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என தெரிவித்தனர்.

    பறிமுதல் செய்த பணத்தை கோபி ஆர்.டி.ஓ. அசோகனிடம் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019 #LSpolls

    தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. #LokSabhaElections2019 #Nizamabad #BallotPaper
    நிஜாமாபாத்:

    பாராளுமன்றத் தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 200க்கும் அதிகமான வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனை முடிந்து மனுக்களை வாபஸ் பெறுவது நேற்று மாலை 4 மணியுடன் முடிவடைந்தது. அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 185 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இவ்வாறு அதிக அளவிலான வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.



    இந்த தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்பியாக உள்ளார். அவர் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் மது யாஷ்கி கவுடா, பாஜக சார்பில் தர்மபுரி அரவிந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    இதற்கு முன்பு 1996ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, நல்கொண்டா மாவட்டத்தில் புளோரைடால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, 480 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனால், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது.

    ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகபட்சமாக 16 வேட்பாளர்களின் பெயர்களை சேர்க்க முடியும். ஒரு கண்ட்ரோல் யூனிட்டுடன் 4 இயந்திரங்களை இணைக்கலாம். எனவே நோட்டாவுடன் சேர்த்து 64 வேட்பாளர்களின் பெயர்களை சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Nizamabad #BallotPaper
    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. #TNgovernment #publicholiday #LSpolls
    சென்னை:

    தமிழ்நட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 18-4-2019 அன்று தேர்தல் நடைபெறுகிறது. அதேநாளில் திருவாரூர் உள்பட 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், இந்த தேர்தல்களில் மக்கள் பணிச்சுமையின்றி வாக்களிக்கும் வகையில் ஏப்ரல் 18 -ம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. #TNgovernment #publicholiday #LSpolls
    ×