search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100684"

    வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #FloodAlert
    தேனி:

    தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக, நேற்று மாலையில், வைகை அணையின் நீர்மட்டம்  68.50 அடியை எட்டியது. இதையடுத்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டது.



    இந்த நிலையில், அந்தப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம், இன்று காலை 5 மணி நிலவரப்படி 69 அடியை எட்டியது.

    அணைக்கு தற்போது 3 ஆயிரத்து 865 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏழு பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. #FloodAlert
    தேனி அருகே மது குடித்ததை கண்டித்ததால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே தேவாரம் லெட்சுமிநாயக்கன்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 74). மது பழக்கத்துக்கு அடிமையானவர். மது குடிப்பதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கருப்பசாமி மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே மணியக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 30). கட்டிட தொழிலாளி. நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த சுந்தர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    போடி அருகே சங்கராபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 31). இவரும் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக 66 அடியை எட்டியிருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #VaigaiDam
    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது வைகை அணை. நீர்பிடிப்பு பகுதியான மூலவைகையாறு, வருசநாடு, வெள்ளிமலை வனப்பகுதி, கொட்டக்குடி ஆறு மற்றும் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வைகை அணையில் தேக்கப்படுகிறது.

    இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    கேரளாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக 7 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது. இந்த நிலையில், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியிருக்கிறது.



    இதையடுத்து, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #VaigaiDam

    தேனி அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி அருகே ஆண்டிப்பட்டி மற்றும் அதன் மலை கிராமங்களில் அதிக அளவு கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் உள்பட இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சிறு வயதிலேயே கஞ்சாவுக்கு அடிமையாகி சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    இது குறித்து போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. சென்னையில் இருந்து நுண்ணறிவு போலீசார் 3 மாதத்துக்கு ஒரு முறை சோதனை மேற்கொண்ட போதும் கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை.

    மயிலாடும்பாறை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் தாணிப்பாறை பிரிவு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 பேரை நிறுத்தினர். ஆனால் அவர்கள் நிறுத்தாமல் சென்றனர்.

    போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து சோதனையிட்டதில் 1¼ கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கணேசன், தர்மர், ஜெயபிரபு என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கருப்பசாமி கோவில் அருகே கஞ்சா விற்ற செல்லத்துரை மனைவி பொன்னுத்தாய் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டத்தில் 400 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.
    தேனி:

    இந்தியா முழுவதும் ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு ஊக்குவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மருந்து கடை உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர்.

    தமிழகத்தில் 12 மணி நேரம் மருந்து கடைகள் அடைக்கப்படும் என்று மருந்து வணிகர் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மருந்து கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டம் செய்தனர்.

    தேனி மாவட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் உள்ளன. நகர் பகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.

    நெல்லை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார். #Rain #MeteorologicalDepartment
    சென்னை:

    தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை போதிய அளவுக்கு பெய்யவில்லை. இயல்பான அளவுக்கு சற்று குறைவாகவே பெய்துள்ளது. அதாவது 30 செ.மீ.க்கு பதில் 26 செ.மீ. மழைதான் பெய்துள்ளது.

    தேனி மாவட்டத்திலும், நெல்லை மாவட்டத்திலும் வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்துள்ளது. தேனி மாவட்டத்தில் இயல்பாக பெய்யவேண்டிய மழை 14 செ.மீ., ஆனால் 41 செ.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 13 செ.மீ., ஆனால் 31 செ.மீ. மழை பெய்துள்ளது. 20 மாவட்டங்களில் குறைவாக மழை பெய்துள்ளது. 9 மாவட்டங்களில் இயல்பான அளவுக்கு பெய்துள்ளது.

    இந்த நிலையில் சென்னை வானிலை மைய அதிகாரி கூறுகையில், “வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். ஆனால் நெல்லை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்” என்றார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    கோபிசெட்டிபாளையம் 8 செ.மீ., சத்திரப்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்) 6 செ.மீ., உளுந்தூர்பேட்டை, தாளவாடி தலா 5 செ.மீ., அரண்மனை புதூர், ஆயிக்குடி, தாராபுரம், பொள்ளாச்சி, போடிநாயக்கனூர், காங்கேயம் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 35 இடங்களில் குறைந்த அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.  #Rain #MeteorologicalDepartment
    தேனியில் வாலிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே கீழக்கூடலூர் சாமாண்டிபுரத்தை சேர்ந்தவர் ரகு(வயது31). இவர் தேனியில் அலுவலகம் வைத்துள்ளார். அப்போது கோவை கே.கே.புதூர் சாய்பாபா காலனியை சேர்ந்த வெற்றிவேல், அவரது மனைவி கலைவாணி ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர்.

    அவர்கள் தாங்கள் ஆஸ்பத்திரிக்கு உபகரணங்கள் சப்ளை செய்யும் ஏஜென்சி வைத்துள்ளதாகவும், அதற்கு பணம் கொடுத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். இதனைநம்பி ரகு பல்வேறு தவணைகளில் ரூ.7,21,040 பணம் கொடுத்துள்ளார்.

    அதன்பின்பு ரூ.27,135 பணத்தை மட்டும் லாபத்தொகை எனக்கூறி ரகுவிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அசல் பணத்தை திருப்பித்தரவில்லை. பலமுறை கேட்டும் தம்பதியினர் பணத்தை கொடுக்காததால் இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.

    எஸ்.பி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர்.

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. #PetrolPriceHike
    திண்டுக்கல்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. தமிழகத்தில் இந்த போராட்டத்திற்கு தி.மு.க., கம்யூனிஸ்ட்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    திண்டுக்கல்லில் இன்று காலை முதலே பஸ் நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் இயல்பான நிலை காணப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது.

    பஸ் நிலையத்தில் பெரிய ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. சிறு ஓட்டல்கள் மற்றும் டீ கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன. கடை வீதி, மெயின்ரோடு, நாகல்நகர், பழனிரோடு, காட்டாஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தது.

    அரசியல் கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரம் வழங்கி கடைகளை அடைக்க வலியுறுத்தி இருந்தனர். இருந்தபோதும் இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை.

    பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டதால் குறைந்த அளவு ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. இதேபோல் பழனி, கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    திண்டுக்கல், தேனி, மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 950-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் காலையிலேயே டெப்போவில் இருந்து கிளம்பியது.

    தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. கம்பம் நகரில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தேனி மாவட்டத்தில் இருந்து அதிக அளவு வாகனங்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு செல்கிறது. கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து சென்ற வாகனங்களும் கம்பம்மெட்டு, போடி மெட்டு, குமுளி வரை மட்டுமே இயக்கப்பட்டன.

    கேரளாவிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் கேரளாவில் இருந்து எந்த வாகனங்களும் தமிழக எல்லைக்குள் வரவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டது. #PetrolPriceHike
    செல்போன் மூலம் காவல்துறை அதிகாரிகளை மிரட்டி வந்த பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் தேனி பெரியகுளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். #BulletNagarajan
    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜன் என்ற ‘புல்லட்’ நாகராஜன். போலீஸ் தரப்பில் இவரை பிரபல ரவுடி என்று சொல்லப்படுகிறது. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதையடுத்து, பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், ‘புல்லட்’ நாகராஜன் ஆடியோ வெளியிட்டு இருந்தார். இவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அவருடைய மற்றொரு ஆடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்தது. இந்த முறை தேனி மாவட்ட கலெக்டரையும், மாவட்ட போலீசாரையும் விமர்சித்து பேசி இருந்தார்.

    தினம் தினம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ரவுடி நாகராஜன், தேனி பெரிய குளம் டி.எஸ்.பி. ஆறுமுகத்தால் விரட்டிச் சென்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நாகராஜன் தென்கரை காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #BulletNagarajan
    கம்பத்தில், 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். #Policeman #TheniSuicide
    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் புதுப்பள்ளிவாசல் அருகே உள்ள சமையன்தெருவை சேர்ந்தவர் அழகுதுரை (வயது 34). இவர், கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயமணி (28). இவர்களுடைய மகள் தேஜாஸ்ரீ (8), மகன் கார்த்தி விஸ்வநாதன் (3). அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேஜாஸ்ரீ 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அழகுதுரை, வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அழகுதுரை கதவை தட்டிப்பார்த்தார். இருப்பினும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அழகுதுரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டின் விட்டத்தில் ஜெயமணி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் குழந்தைகளை தேடியபோது காணவில்லை. வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தேஜாஸ்ரீயும், கார்த்தி விஸ்வநாதனும் பிணமாக மிதந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ஜெயமணி உள்பட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு ஜெயமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    சிறைத்துறை, போலீஸ் பெண் அதிகாரிகளை தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டரை விமர்சித்து ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். #BulletNagarajan
    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜன் என்ற ‘புல்லட்’ நாகராஜன். போலீஸ் தரப்பில் இவரை பிரபல ரவுடி என்று சொல்லப்படுகிறது. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், ‘புல்லட்’ நாகராஜன் ஆடியோ வெளியிட்டு இருந்தார். இவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில், அவருடைய மற்றொரு ஆடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. இந்த முறை தேனி மாவட்ட கலெக்டரையும், மாவட்ட போலீசாரையும் விமர்சித்து பேசி இருக்கிறார்.



    தற்போது வெளியாகி உள்ள ஆடியோவில் ‘புல்லட்’ நாகராஜன் பேசியுள்ளதாவது:-

    தேனி போலீசுக்கு ஒன்று சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் தான் பெரிய அறிவாளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்களை போல் முட்டாள் யாரும் கிடையாது. பெண்களை கற்பழிப்பது நீங்கள் தான். நான் எஸ்.பி., கலெக்டரையே மாற்றிய ஆள். இப்போது வந்துள்ள கலெக்டர் பல்லவி பல்தேவ் அம்மா வந்து எதுவும் செய்யவில்லை.



    என்னை எந்த காரணத்தை கொண்டு ‘புல்லட்’ நாகராஜன் என்று பட்டப்பெயர் வைக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? முதலில் அது தெரிய வேண்டும். நான் கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறுகிறீர்களே, எங்க அண்ணனை நாயை அடிப்பது போல் அடித்து இருக்கிறார்களே.

    ஊர்மிளாவுக்கு சூப்பிரண்டாக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது. ஆஸ்பத்திரியில் டாக்டர் காத்திருக்கலாம், நோயாளி காத்திருந்தால் உயிர் போய்விடும். என் அண்ணன் ஊசி போட சொல்லி இருக்கான். ஊசிபோட முடியாது என்றால் போட முடியாது என்று சொல்ல வேண்டியது தானே. அடிப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?

    என்னுடைய வக்கீல்கள் எல்லாம் நன்றி உள்ளவர்கள். நான் வக்கீல் சாதி. நான் சட்டத்தை விரல் நுனியில் வைத்துள்ளேன். என் வீட்டுக்கு சென்று சோதனை நடத்துவதாக இருந்தால், கோர்ட்டில் உத்தரவு வாங்காமல் எதுவும் செய்தீர்கள் என்றால் அம்புட்டு பேரும் ஜெயிலுக்கு போவது உறுதி. குணா, நீ ஒரு முட்டாள். உன்னை யார் சி.பி.சி.ஐ.டி.யில் சேர்த்தது. என்னைப் பொறுத்தவரை நீ ஒரு முட்டாள்.

    அண்ணன் இப்போ எங்கேயோ போயிட்டேன். டாப் லெவலுக்கு. என் முடியை கூட உன்னால் கண்டுபிடிக்க முடியாது. நீ உலகம் முழுவதும் தேடினாலும் என்னை தொட முடியாது. நானாக விரும்பினால் தான் உன் முன்னால் வருவேன்.

    நான் சட்டம் படித்தவன். நான் எப்படி கொலை செய்வேன். தண்டிப்பேன் என்று சொல்லலாம். அது கோர்ட்டில் வைத்து தண்டிக்கலாம். இந்த நாகராஜனுக்கு என்று ஒரு கோர்ட்டு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன். நான் பிறந்த மண்ணை விட்டு ஓடிப் போய்விட்டேன் என்று தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள். என்னை பாதுகாத்துக் கொண்டால் தானே உங்கள் எல்லாருக்கும் ஆப்பு வைக்க முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   #BulletNagarajan
    வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால், வைகை நதிக்கரையோரம் வாழும், மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. #FloodAlert #Madurai #VaigaiDam
    மதுரை:

    கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் அதிகப்படியான கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அதே போல், கேரள மாநிலத்தில் உள்ள முல்லை பெரியாறு அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டது. இதையடுத்து தற்போது வைகை அணைக்கு 4 ஆயிரத்து 941 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இன்று அதிகாலை நிலவரப்படி, வைகை அணை 66 அடியை எட்டியுள்ளது. அதன் முழு கொள்ளளவு 71 அடியாக இருக்கும்பட்சத்தில், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தற்போது விடப்பட்டுள்ளது.

    வைகை நதிக்கரையோரம் வாழும் மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை சுத்தம் செய்யவோ வேண்டாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கிடைக்கும் நீரை உரிய முறையில் சேமித்து வைக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #FloodAlert #Madurai #VaigaiDam
    ×