search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100684"

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவானதன் காரணமாக கோவை, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைபெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவானதன் காரணமாக கோவை, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைபெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடமேற்கு வங்கக்கடலில் குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த தாக்கத்தாலும், கர்நாடகத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதாலும் தமிழகத்தில் மேற்கு திசை காற்று வலுப்பெற்று உள்ளது.

    இதன் காரணமாக கோவை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) சில இடங்களில் கனமழை பெய்யும். இது தென்மேற்கு பருவமழைதான்.

    தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வானம் மேக மூட்டமாக இருக்கும். மாலை அல்லது இரவு நேரத்தில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். மீனவர்கள் வட மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மத்திய பகுதிக்கும், அந்தமான் பகுதிகளுக்கும் அடுத்த 2 நாட்களுக்கு போகவேண்டாம்.

    கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் இதுவரை தமிழகத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை 143 மில்லி மீட்டர். ஆனால் பெய்த மழை 125. எனவே தமிழகத்தில் மழை குறைவுதான். ஆனால் சில மாவட்டங்களில் வழக்கத்தை விட மிக கூடுதலாக பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    பொள்ளாச்சி 10 செ.மீ., சின்னக்கல்லார் 9 செ.மீ., வால்பாறை 8 செ.மீ., தேவலா 7 செ.மீ., நடுவட்டம் 6 செ.மீ., கூடலூர் பஜார் 5 செ.மீ., பாபநாசம்(திருநெல்வேலி), கன்னியாகுமரி, குந்தாபாலம் தலா 3 செ.மீ., ஊட்டி, பெரியாறு, குழித்துறை, பூதப்பாண்டி, மைலாடி, தக்கலை, பேச்சிப்பாறை தலா 2 செ.மீ., இரணியல், கொளச்சல், நாகர்கோவில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    வீடுகளில் பிரசவம் பார்ப்பது தவறு. அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். #HomeMaternity #OPanneerselvam
    தேனி:

    தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கண்ணன் (29). என்ஜினீயரிங் படித்து முடித்தவர். எலக்ட்ரிக்கல் வேலையை ஒப்பந்தம் எடுத்து செய்து கொடுத்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (25). எம்.பி.ஏ. பட்டதாரி.

    இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மகாலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால் கணவன், மனைவி இருவரும் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றே விரும்பினர். தொடர்ந்து மகாலட்சுமி, மருத்துவமனைக்கு செல்ல மறுத்தார்.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் மகாலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கண்ணன் தனது வீட்டில் வைத்தே மகாலட்சுமிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இரவு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அவர் குழந்தையின் தொப்புள் கொடியுடன் இணைந்துள்ள நச்சுக் கொடியை அகற்றாமல் வைத்துள்ளதாக போலீசாருக்கும், மருத்துவத்துறைக்கும் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து 2 ஆம்புலன்சுகளுடன் மருத்துவத் துறையினர் அங்கு சென்று நச்சுக் கொடியை அகற்ற வேண்டும். குழந்தையின் உடல் நிலையை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    ஆனால் தம்பதியின் வேண்டுகோளின்படி, அரசு ஆரம்ப சுகாதாரநிலைய சித்த மருத்துவக் குழுவினர் அங்கு வந்து குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்து, நச்சுக் கொடியை பாதுகாப்பாக அகற்றினர்.

    இதையடுத்து தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினர் கூறியும் அந்த தம்பதியினர் ஏற்கவில்லை. இதனால் சுமார் 9 மணிநேரம் அங்கிருந்த மருத்துவ துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

    இதில், குழந்தைக்கு நச்சுக் கொடியை அகற்றி சிகிச்சை அளிப்பதற்காக சென்ற போது, கண்ணன் அவரது பெற்றோரான தனுஷ்கோடி, அழகம்மாள், ஆகியோர் மருத்துவ குழுவினரை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    அதன்பேரில் 3 பேர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி வழக்குப்பதிவு செய்தார். இதில் கண்ணனின் தந்தை தனுஷ்கோடியை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு விதிகளின்படி மருத்துவமனையிலேயே பிரசவம் பார்க்க வேண்டும். சட்ட விதிகளை மீறி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறு.  இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். #HomeMaternity #OPanneerselvam
    தேனி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 3½ பவுன் செயினை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள கோவிந்தநகரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் இளைய ஆழ்வார். இவரது மனைவி பத்மாவதி. இவர் அதே பகுதியில் பால்பூத் வைத்துள்ளார். சம்பவத்தன்று அதிகாலை பால்பூத்தை திறப்பதற்காக பத்மாவதி நடந்து சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர் திடீரென அவரது கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இது குறித்து கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் பத்மாவதி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் செயினை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    தேனி அருகே தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.

    தேனி:

    தேனி அருகே வயல்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சுருளிமணி (வயது 53). இவர் சம்பவத்தன்று வீட்டின் மேல் மாடியில் தூங்கச் சென்றார். அப்போது தனது 5½ பவுன் செயினை ஒரு பையில் வைத்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்கி விட்டார்.

    அதிகாலையில் எழுந்து பார்த்தபோது செயினை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் சுருளிமணி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் செயினை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி அருகே குழந்தைகளை கணவன் பிரித்து அழைத்து சென்றதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி மல்லிகா (வயது 38). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மல்லிகாவுக்கு ஏற்கனவே 15 வருடங்களுக்கு முன்பு விருமாண்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    மல்லிகா விருமாண்டியை விவாகரத்து செய்து பின்பு குணசேகரனை திருமணம் செய்து கொண்டார். இதனால் மல்லிகாவின் தாய் குழந்தைகளை விருமாண்டியிடம் விட்டு விட்டு வந்து விட்டார். இதனால் அதிர்ச்சிடைந்த மல்லிகா குழந்தைகளை பார்க்க அழைத்து செல்லுமாறு தாயிடம் கூறினார்.

    ஆனால் அவரது தாய் குழந்தைகளை பார்க்க அழைத்து செல்ல மறுத்து விட்டார். இதனால் மன வேதனை அடைந்த மல்லிகா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உத்தம பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயமானதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலன். இவரது மகள் நந்தினி (வயது 17). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தனது புகாரில் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த தர்மேந்திரன் மகன் சந்தோஷ் என்ற வாலிபர்தான் கடத்திச் சென்றிருக்க கூடும் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி அமராவதி பள்ளித் தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (26). டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மகள் சுஷ்மிதா (21) என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுஷ்மிதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    தேனி அருகே தொழில் போட்டியில் தம்பதியை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள பூதிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஆண்டவர். இவரது மனைவி பஞ்சு (வயது35). ஆண்டவர் அதே பகுதியில் பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது கடை அருகே அதே ஊரைச் சேர்ந்த பொன்னாங்கன் என்பவரும் கடை வைத்துள்ளார். இருவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    சம்பவத்தன்று கடையில் இருந்த பஞ்சுவிடம் பொன்னாங்கன், அவரது மகன் தங்கபாண்டி, அல்லிநகரத்தை சேர்ந்த கோபி ஆகியோர் தகராறு செய்து தாக்கினர். இதை தட்டிகேட்ட ஆண்டவரையும் தாக்கி காயம் ஏற்படுத்தினர்.

    மேலும் கடையை காலி செய்யாவிட்டால் தீ வைத்து கொளுத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஆண்டவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பொன்னாங்கன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முகநூலில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை அவதூறாக விமர்சித்த கம்பம் தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கம்பம் தி.மு.க. நகர துணைச் செயலாளராக இருப்பவர் கராத்தே ராமகிருஷ்ணன். இவர் கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தூத்துக்குடி உள்பட பல்வேறு சம்பவங்களில் சரியாக செயல்படவில்லை என்று தனது முகநூலில் பதிவு செய்திருந்தார்.

    மேலும் அவர்களைப் பற்றி தரக்குறைவாகவும், விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் உத்தமபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

    இது குறித்து கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் தெரிவிக்கையில், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. முகநூலில் தனது கருத்தை பதிவு செய்ததற்காக தி.மு.க. நிர்வாகியை கைது செய்திருப்பது கண்டனத்துக்கு உரியது. எனவே இது குறித்து செயல் தலைவரிடம் எடுத்து கூறி தேனி மாவட்டத்தில் போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார். #Tamilnews

    தொடர் மழை காரணமாக கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது.

    தென்மேற்கு பருவமழை காரணமாக தேனி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து வரத்தொடங்கி உள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.90 அடியாக உள்ளது. வரத்து 270 கன அடியாகவும், திறப்பு 52 கன அடியாகவும் உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 36.61 அடியாக உள்ளது. வரத்து 6 கன அடியாகவும், திறப்பு 60 கன அடியாகவும் உள்ளது. மஞ்சளாறு நீர்மட்டம் 41 அடி. வரத்து 34 கன அடி. திறப்பு 10 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 3.4, தேக்கடி 2.8, கூடலூர் 1.5, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 18, வைகை அணை 5.4, மஞ்சளாறு 4, மருதாநதி 22, கொடைக்கானல் 28.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் 26 கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தொடர் மழை காரணமாக கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    தேனி அருகே கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள பள்ளியின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு வாலிபர் அவரை வழிமறித்தார். பின்பு கத்தியை காட்டி மிரட்டி அய்யப்பனிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார்.

    அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் அல்லிநகரம் வடக்கு தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 29) என தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து ஈஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் கே.ஏ.கே.முகில், என்.சதன், செவ்வை மு.சம்பத்குமார், காஞ்சீபுரம் மத்திய மாவட்ட மாணவர் அணி செயலாளர் க.பாலகுமார், திருச்சி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் டி.டி.கிருஷ்ணன், மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல், பெரம்பலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் உதயம் எஸ்.ரமேஷ் ஆகியோர் அவர்கள் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து இன்று (நேற்று) முதல் விடுவிக்கப்படுகிறார்கள்.

    ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளர்களாக கே.ஏ.கே.முகில், டாக்டர் ஜெ.ஜெயவர்தன் எம்.பி., என்.சதன், செவ்பை மு.சம்பத்குமார், மா.இளங்கோவன் ஆகியோரும், துணைச் செயலாளர்களாக டி.ரமேஷ், சி.பி.மூவேந்தன், க.பாலகுமார், பா.வெற்றிவேல் மற்றும் பெரும்பாக்கம் இ.ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக சா.ரமேஷ், திருச்சி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக டி.டி.கிருஷ்ணன், பெரம்பலூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உதயம் எஸ்.ரமேஷ், மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக எஸ்.எஸ்.சரவணன், தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக பி.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அ.தி.மு.க.வினர் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பி.ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஆவார். இவர் முன்னதாக தேனி மாவட்ட அ.தி.மு.க. இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் எம்.பி., மறைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி மகன் கே.ஏ.கே.முகில் ஆகியோருக்கு ஜெயலலிதா பேரவையின் மாநில இணைச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களின் மகன்கள் 3 பேருக்கு ஜெயலலிதா பேரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. #ADMK
    உத்தமபாளையம் அருகே குடும்ப பிரச்சனையில் மருமகனை கத்தியால் குத்திய மாமனார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தேனி:

    உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 31). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் சோபனா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    சில நாட்களிலேயே கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் சமரசம் செய்து வைத்த போதும் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று பிரச்சனை முற்றவே ஷோபனா கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

    மகள் கோபத்துடன் திரும்பி வந்ததால் முருகேசன் ஆத்திரத்தில் இருந்தார். சாலையில் நடந்து சென்ற பாண்டியராஜை வழி மறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருமகன் என்றும் பாராமல் குத்தினார். இதில் காயமடைந்த பாண்டியராஜன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×