search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100684"

    தேனி அருகே கோவில் விழாவில் வீசிய விபூதியால் 300 பேருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. பக்தர்கள் அனைவரும் கண் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தேனி, மே. 29-

    தேனி அருகே கோவில் விழாவில் வீசிய விபூதியால் 300 பேருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.

    தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியில் கடந்த 5 நாட்களாக சவுடாம்பிகை அம்மன் கோவில் திருவிழா நடந்து வந்தது. விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் தங்கள் உடலில் கத்தி போட்டவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

    கத்தி போடும் சமயங்களில் உடலில் அதிக அளவு ரத்தம் வெளியேறாமல் தடுக்க அவர்கள் மீது விபூதி வீசுவது வழக்கம். அதன்படி திருவிழாவில் கத்தி போட்டு ஆடி வந்த பக்தர்கள் மீது விபூதி வீசப்பட்டது.

    இரவு திருவிழா முடிந்ததும் பக்தர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு லேசான கண் எரிச்சல் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல கண்கள் வீங்கி எரிச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதனால் இன்று காலை முதல் தேனியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களுக்கு முதல் கட்டமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் திருவிழாவின் போது பக்தர்கள் மீது வீசிய விபூதியில் ரசாயனக் கலவை கலந்ததால் இது போன்று நடந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த விபூதியை ஆய்வுக்கு அனுப்பி சோதனை நடத்தவும் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

    திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கண் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் குவிந்ததால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews

    தேனி அருகே முன் விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி அலுவலகம் பின்புறம் வசித்து வருபவர் செல்லபாண்டி. இவரது மகன் செல்வம் (வயது 25). இவருக்கும் வீரபாண்டி ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த கணேசன் (24) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணேசனை அரிவாளால் செல்வம் வெட்டினார். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று செல்வம் முல்லையாற்று பகுதியில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது கணேசன், செல்லக்காமு, குட்டக்காமு ஆகியோர் அவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    படுகாயமடைந்த செல்வம் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டிய கும்பலை தேடி வருகின்றனர்.

    போடி அருகே இன்று திருமணம் நடக்க இருந்த புதுமாப்பிள்ளை திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    போடி அருகே தேவாரம் டி.செல்லாயிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டவர். இவது மகன் இளங்கோவன் (வயது 31). இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது.

    இதனால் பத்திரிகை கொடுப்பதற்காக புது மாப்பிள்ளை இயங்கோவன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கிளம்பி சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த ஆண்டவர் உறவினர்களுடன் இளங்கோவனை தேடிப்பார்த்தார்.

    மேலும் அக்கம் பக்கம் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தும் காணாததால் தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணம் பிடிக்காமல் இளங்கோவன் மாயமானாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முத்து சரவணன் (வயது 28). சம்பவத்தன்று பெருமாள் குடும்பத்துடன் வீரபாண்டி கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். அங்கிருந்து முத்துசரவணன் நண்பர்களை பார்ப்பதற்காக கோவிலை விட்டு வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவரை காணாததால் பெருமாள் அவரது நண்பர்களிடம் விசாரித்து பார்த்தார்.

    அவர்களும் முத்து சரவணனை பார்க்கவில்லை என்று கூறியதால் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முத்து சரவணனை தேடி வருகின்றனர். #Tamilnews
    தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தை கண்டித்து உத்தமபாளையத்தில் மருத்துவ சமூக நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #MinisterCVShanmugam

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் புறவழிச்சாலையில் தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கத்தினர் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவர் சமூக நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் திருமலைராஜ் முன்னிலை வகித்தார்.

    அ.தி.மு.க. கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    நிர்வாகிகள் போஸ், பாலு உள்பட முடி திருத்தும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரும் வரை தங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர். #MinisterCVShanmugam

    தேனி அரசு அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    தேனி:

    தேனி அன்னஞ்சி விலக்கு என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ஜஸ்டின் சாந்தகுமார் (வயது50). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர்கள் இருவரும் நாகர்கோவிலில் நடந்த ஒரு ஜெபகூட்ட நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர். அப்போது இவர்கள் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இவர்கள் வீடு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்து அவர்கள் வீட்டுக்கு திரும்பினர். அங்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோ லாக்கரும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், ரொக்க பணம், ரூ.5 லட்சத்து 27 ஆயிரத்து 800 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.9 லட்சத்து 800 ஆகும். இது குறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் ஜஸ்டின் சாந்தகுமார் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

    தேனி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வைகைஅணை நீர்மட்டம் 37 அடியை நெருங்கி உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வந்ததால் பெரியாறு அணை நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 113 அடியை எட்டியது. அணைக்கு வரும் 100 கன அடி தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1392 மி. கன அடியாக உள்ளது.

    வைகை அணையில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவிற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 32 அடி வரை குறைந்தது.

    ஆனால் அக்னிநட்சத்திரம் தொடங்கியது முதல் மழை பெய்தததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்ததோடு அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்தது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் தற்போது 36.78 அடி நீர் உள்ளது. நீர்வரத்து 209 கன அடி. மதுரை மாநகர குடிநீருக்காக 48 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு நீர்மட்டம் 36.50 அடி. வரத்து 66 கன அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.34 அடி. வரத்து 12 கன அடி. திறப்பு 3 கன அடி.

    மஞ்சளாறு 1, சோத்துப் பாறை 7, மருதாநதி 10.3, கொடைக்கானல் 33.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    தேனி அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே உத்தமபாளையம் கே.கே.பட்டியை சேர்ந்தவர் சபிதா (வயது30). இவருக்கும் ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறை மந்திச்சுணையை சேர்ந்தவர் வேல்முருகன் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்போது 40 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. அந்த நகைகளை வேல்முருகனின் தாயார் லட்சுமி வாங்கி வைத்துள்ளார்.

    மேலும் வேல்முருகனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சபிதா தனது மாமியாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் எனது மகனுடன் சேர்ந்து வாழவேண்டுமென்றால் மேலும் ரூ.10 லட்சம் வரதட்சணையாக வாங்கி வரவேண்டும். இல்லையென்றால் விவாகரத்து செய்து விடுவதாக கூறி சித்ரவதை செய்துள்ளார்.

    இதற்கு வேல்முருகனின் தந்தை அழகுபாண்டி மற்றும் உறவினர் கேசவன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சபிதா உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வரதட்சணை கொடுமை செய்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம் அருகே 10 வயது சிறுவன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கம்பம்:

    கம்பம் வடக்குபட்டி 5-வது தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கவினேஷ் (வயது 10). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று மாலை வீட்டை விட்டு விளையாட செல்வதாக கூறிச் சென்ற கவினேஷ் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மாயமான மாணவனை தேடி வந்தனர்.

    இன்று காலை காமையகவுண்டன் பட்டியில் டாஸ்மாக் கடை இருந்த பகுதியில் ஒரு சிறுவன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்தது கவினேஷ் என தெரிய வந்தது.

    அவனது கழுத்து அறுக்கப்பட்டு ரத்த காயம் இருந்தது. மேலும் அவனது கால்சட்டை முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் சிறுவன் உடலை கைப்பற்றி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குடும்ப முன் விரோதம் காரணமாக சிறுவனை யாரேனும் கடத்தி கொன்றார்களா? அல்லது பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தேனி அருகே சொத்து பிரச்சனையில் வாலிபரை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே அமச்சியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது34). இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த பூவலிங்கம். இவர்களுக்கு இடையே சொத்து பிரச்சனை தொடர்பாக குடும்ப தகராறு இருந்து வந்தது.

    இதனால் கடந்த 11 வருடங்களாக 2 குடும்பத்தினரும் தனித்தனியாக கோவில் திருவிழாவை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று கோவில் திருவிழா நடந்தபோது அங்கு வந்த ராஜேஸ்வரனிடம், பூவலிங்கம் அவரது மகன்கள் விஸ்வநாதன், தண்டாயுதபாணி ஆகியோர் மீண்டும் சொத்து தொடர்பாக வாக்குவாதம் செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து ராஜேஸ்வரன் க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×