search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போடி"

    போடி, தேவாரம் பகுதியில் மிரட்டி வரும் ஆட்கொல்லி யானையை பிடிக்க கும்கி யானைகள் வந்தன. #MagnaElephant

    உத்தமபாளையம்:

    போடி மற்றும் தேவாரம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆட்கொல்லி யானை அட்டகாசம் செய்து வருகிறது. நள்ளிரவு சமயத்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்து தாக்கியதில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.

    எனவே மக்னா யானையை பிடித்து இடமாற்றம் செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி கடந்த ஜூலை மாதம் கலீம், மாரியப்பன் 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன.

    இதனை தொடர்ந்து மக்னா யானை கேரளாவில் உள்ள மதிகெட்டான் கானல் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. ஆனால் மீண்டும் தேவாரம் வனப்பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்யத்தொடங்கியது.

    தற்போது அம்பேத்கார்காலனி, மூணான்டிபட்டி ஆகிய குடியிருப்பு பகுதியில் சுற்றி வருகிறது.

    எனவே மக்னா யானையை பிடிக்க சாக்கலூத்து, தாழையூத்து உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் டாப்சிலிப் காப்பகத்திலிருந்து விஜய், வாசிம் ஆகிய 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு கம்பம் வனஅலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

    கேமிராவில் பதிவாகும் மக்னா யானையின் நடமாட்டத்தை வைத்து கும்கி யானைகள் மற்றும் சிறப்பு வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவினர் வனப்பகுதிக்கு சென்று மக்னா யானையை விரட்டும் பணியில் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். #MagnaElephant

    போடி மற்றும் கேரளாவுக்கு அரசு பஸ்சில் கடத்திய 320 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் கண்டக்டர், டிரைவரிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி பஸ்நிலையத்தில் இருந்து முந்தல் வழியாக மூணாறு பகுதிக்கு அரசு பஸ்சில் ரேசன் அரிசி கடத்துவதாக புகார் எழுந்தது.

    அதனடிப்படையில் தேனி பறக்கும்படை தாசில்தார் ஜாகீர்உசேன், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமையில் பறக்கும்படையினர் போடி முந்தல் வாகன சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறி சோதனைபோட்டனர். அப்போது 10 சிப்பம் கொண்ட 320 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் கண்டக்டர், டிரைவரிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    அப்போது அவர்கள் இதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். எனினும் ரேசன் அரிசியை பஸ்சில் கடத்திவந்தவர் யார்? இதற்கு மூளையாகஇருப்பது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    போடி மெட்டு மலைப் பாதையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. #Landslide

    மேலசொக்கநாதபுரம்:

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு ஆகிய மலைச்சாலைகள் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. குமுளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே நேற்று முன்தினம் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் கம்பம் மெட்டு சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டன.

    நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, அடிமாலி, இடுக்கி உள்ளிட்ட இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் குமுளியில் இருந்து கோட்டயம், வண்டி பெரியாறு செல்லும் சாலை முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சரக்குகள் ஏற்றிச் சென்ற லாரிகள் கடந்த 3 நாட்களாக குமுளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

    கன மழை நீடித்து வருவதால் போடி மெட்டு பகுதியிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது. இதே போல் தோண்டிமலை சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள், மரங்கள் சாய்ந்தன.

    இதனால் போடியில் இருந்து மூணாறு செல்லும் வாகனங்கள் முந்தல் சோதனைச்சாவடியில் திருப்பி விடப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகரித்து காணப்பட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

    இதனை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். #Landslide

    போடி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஓட்டல் ஊழியர் தாக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது21). பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இந்த ஓட்டலுக்கு அதே பகுதியை சேர்ந்த பிரதீப், கார்த்திக் மற்றும் மாயவேல் ஆகியோர் உணவு சாப்பிட வந்தனர். சாப்பிட்டு விட்டு அவர்களிடம் உணவுக்கான தொகையை ஊழியர்கள் கேட்டனர். ஆனால் 3 பேரும் பணம் தராமல் தகராறில் ஈடுபட்டனர்.

    முகமது இஸ்மாயில் அவர்களிடம் பணத்தை கொடுத்து விட்டு செல்லுமாறு கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை தாக்கினர். இது குறித்து போடி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயவேலை கைது செய்தனர். தப்பி ஓடிய பிரதீப் மற்றும் கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

    போடி அருகே ரூ.20 லட்சம் மோசடி செய்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி வெள்ளிமலை தெருவை சேர்ந்தவர் சின்னமுத்து (வயது25). இவரிடம் ஆட்டுபண்ணை மற்றும் கோழிபண்ணை வைத்து தருவதாக போடி நந்தவனம் வடக்கு தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் குடும்பத்தினர் கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு தவணையாக வங்கி கணக்கு மூலமும் ரொக்கமாகவும் ரூ.20 லட்சம் வரை வாங்கினர்.

    ஆனால் பண்ணை வைத்து தராமல் இவரை ஏமாற்றி வந்தனர். இதனால் விரக்தி அடைந்த சின்னமுத்து தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் பணம் தர மறுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இது குறித்து போடி டவுன் போலீசில் சின்னமுத்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மோசடியில் ஈடுபட்ட ரஞ்சித்குமார், அவரது மனைவி தீபிகா உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடியில் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது30). இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 2 மகன், 1 மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    அக்கம் பக்கத்தினர் சமரசம் பேசியபோதும் குடும்பத்தில் பிரச்சினை தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கலைச்செல்வி கோவித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மனவேதனையடைந்த அண்ணாமலை தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி அருகே கழிவு நீருடன் கண்மாய் நீர் வயல்களுக்குள் புகுந்ததால் சோள கதிர்கள் சேதம் அடைந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகில் உள்ள திருமலாபுரத்தில் சங்கரப்பன் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் தூர்வாரப்படவே இல்லை. கடந்த 10 நாட்களுக்கு மேலாக போடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கன மழையால் கண்மாய் நிரம்பியது.

    அப்போதே தண்ணீரை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது கண்மாய் உடைந்து அருகில் உள்ள வயல்களுக்குள் புகுந்தது. இதனால் சோளகதிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியது.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில், போடி பகுதியில் நெல், சோளம், கரும்பு ஆகியவை பயிரிட்டு வருகிறோம். சங்கரப்பன் கண்மாய் தூர்வாரச்சொல்லி மனு அளித்து நடவடிக்கை எடுக்க வில்லை.

    தற்போது கண்மாய் நீரில் சாக்கடை நீரும் கலந்து வயல்களுக்குள் தேங்கி நிற்கிறது. இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அருகில் உள்ள மதிமுகம் கண்மாயிலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. ஆனால் அதனை திறக்க நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த கண்மாய் நீரை நம்பி 800 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

    மீன் பிடி குத்தகை உரிமம் எடுத்தவர்கள் கண்மாய் நீரை திறக்க விடாமல் செய்கின்றனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

    போடியில் சமோசா வியாபாரி மர்ம சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி பெருமாள் கோவில் அருகே அரசமர தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). இவர் தள்ளுவண்டியில் வடை, சமோசா வியாபாரம் செய்து வந்தார். இவரது குடும்பத்தினர் திருப்பூரில் உள்ளனர். தனியாக வசித்து வந்த அவர் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார். அங்கிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் போடி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

    தகவல் அறிந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர் உடல் அழுகிய நிலையில் கிடந்தார். அந்த உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    எனினும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்துடவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி அருகே பிளாஸ்டிக் பை தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் கணபதி. இவர் போடி மீனா விலக்கு பகுதியில் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்கூடம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் தொழிற்கூடத்தை பூட்டி விட்டு தொழிலாளர்கள் அனைவரும் சென்று விட்டனர்.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் யாரும் அங்கு இல்லை. அதிகாலை நேரத்தில் தொழிற்கூடத்தில் இருந்து திடீரென புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது. இதனை அறிந்த அங்குள்ளவர்கள் உரிமையாளர் கணபதி மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் எந்திரங்கள், அங்குள்ள பிளாஸ்டிக் பைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

    போடி அருகே கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்ட ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி பரமசிவன் கோவில் தெருவில் சாத்தாவுராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது வைகாசி திருவிழா மணிகண்டன் (வயது 55) என்பவர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுரளி (33), ராமச்சந்திரன் (36), முருகதாஸ் (33) ஆகியோர் காவடி எடுக்க சென்றனர்.

    அப்போது அவர்களுக்கும் அங்கிருந்த மேளவாத்திய கலைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை மணிகண்டன் தட்டிக் கேட்டார். அப்போது காவடி எடுக்க சென்ற 3 பேரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் திருவிழாவுக்காக கட்டப்பட்டு இருந்த அலங்கார வளைவுகளையும் டியூப் லைட்டுகளையும் உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்து மணிகண்டன் போடி நகர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுரளி உள்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான ராமச்சந்திரன் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    போடியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 160 கிலோ ரேசன் அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டம் கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி மலைச்சாலை வழியாக அதிக அளவு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. போலீசார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தாலும் இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடிவதில்லை.

    போடி முந்தல் சோதனைச் சாவடியில் தாசில்தார் ஆர்த்தி தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் மருதுபாண்டி, வருவாய் ஆய்வாளர் ராமர் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது போடியில் இருந்து மூணாறு நோக்கி சென்ற அரசு பஸ்சில் சோதனை நடத்தினர்.

    பயணிகள் அமரும் இருக்கைக்கு அடியில் 3 பைகளில் ரேசன் அரிசி இருந்தது. ஆனால் அதற்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனையடுத்து 3 பைகளில் இருந்த 160 கிலோ ரேசன் அரசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி அருகே இன்று திருமணம் நடக்க இருந்த புதுமாப்பிள்ளை திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    போடி அருகே தேவாரம் டி.செல்லாயிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டவர். இவது மகன் இளங்கோவன் (வயது 31). இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது.

    இதனால் பத்திரிகை கொடுப்பதற்காக புது மாப்பிள்ளை இயங்கோவன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கிளம்பி சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த ஆண்டவர் உறவினர்களுடன் இளங்கோவனை தேடிப்பார்த்தார்.

    மேலும் அக்கம் பக்கம் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தும் காணாததால் தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணம் பிடிக்காமல் இளங்கோவன் மாயமானாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முத்து சரவணன் (வயது 28). சம்பவத்தன்று பெருமாள் குடும்பத்துடன் வீரபாண்டி கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். அங்கிருந்து முத்துசரவணன் நண்பர்களை பார்ப்பதற்காக கோவிலை விட்டு வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவரை காணாததால் பெருமாள் அவரது நண்பர்களிடம் விசாரித்து பார்த்தார்.

    அவர்களும் முத்து சரவணனை பார்க்கவில்லை என்று கூறியதால் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முத்து சரவணனை தேடி வருகின்றனர். #Tamilnews
    ×