search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100692"

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வேதிப்பொருட்கள் கலந்த 6 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #ChemicalMixedFish #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோழிக்கோடு அருகே மீன்களில் கலப்படம் செய்வதாக சுகாதாரத்துறைக்கு வந்த புகார்களை அடுத்து, சிறப்பு ஆபரேஷன் ஒன்றை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தினர். அந்த ஆபரேஷனில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 47 வகை மீன்கள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    பரிசோதனைக்கூடத்தில் நடத்திய ஆய்வில் மீன்களில் சோடியம் பென்ஸோயேட், அம்மோனியா ஆகியவை கலந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வகை வேதிப்பொருட்கள் மீன்கள் கெடாமல் இருப்பதற்காக பயன்படுத்தக்கூடியவை. இதன்மூலம் உடலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் எனவும், இந்த வகை வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த வேதிப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்கோடு பகுதியில் உள்ள எல்லைப்பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து வந்த மீன்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்து இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து, வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட 6 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் கேரளாவில் வேதிப்பொருள் கலக்கப்பட்ட 12 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ChemicalMixedFish #Kerala
    முத்துப்பேட்டை அருகே குடும்ப தகராறு காரணமாக மன வேதனை அடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே உள்ள கீழநம்மங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் நடேசன். தொழிலாளி. இவருடைய மனைவி ராணி (வயது 50). சம்பவத்தன்று ராணி, பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மன வேதனை அடைந்த ராணி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 
    ×