search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாப்சி"

    நடிகை நயன்தாரா பற்றி அவதூறு கருத்து தெரிவித்த ராதாரவிக்கு கனிமொழி, நடிகை குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #RadhaRavi #Nayanthara #Khushboo #Kanimozhi
    நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி நயன்தாரா பற்றி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.

    நடிகர், நடிகைகள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து ராதாரவி தி.மு.க. கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ராதாரவிக்கு அரசியல், திரையுலக பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    ராதாரவியின் பேச்சு குறித்து கனிமொழி எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    ‘ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது தொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. செய்யும் பணியை வைத்து ஒரு பெண்ணை விமர்சிப்பதையும் மரியாதை குறைவாக நடத்துவதையும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. தனிமனித சுதந்திரம், உரிமை, தன்மானத்தை பாதிக்கும் எந்த வி‌ஷயத்துக்கும் தி.மு.க. துணை போகாது.’

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ராதாரவியின் பேச்சு குறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தங்கள் அகம்பாவத்தை ஊக்கப்படுத்திக்கொள்ள ஆண்கள் எளிதில் கையாளும் வழி, ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது அல்லது அவளது குணத்தைக் கொச்சைப்படுத்துவது. ஒரு பெண் எப்படி வாழ்கிறாள், என்ன செய்கிறாள் என்பதை பற்றியெல்லாம் யாரும் பேசக்கூடாது. நயன் அகத்திலும் புறத்திலும் அழகானவர். அவரை அவமானப்படுத்துபவரும், அதைக் கைதட்டி ரசித்தவர்களும் திரைத்துறைக்கே அவமானச் சின்னங்கள்.’

    இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

    ராதாரவியின் பேச்சு குறித்து நடிகை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இது வெறுப்பை ஏற்படுத்துகிறது. நடிப்பதற்கான தகுதிகளைப் பற்றி விவரிக்க இவர் யார்? இவர் என்ன நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் அமைப்பின் தலைவரா? இந்தத் துறையின் மிக வலிமையான நடிகையைப் பற்றி இவர் இப்படி பேசுவார் என்றால், மற்றவர்களைப் பற்றி இவர் எப்படி எல்லாம் பேசுவார்?.’

    சாந்தனு பாக்யராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ராதாரவி ஒரு பெண்ணை மேடையில் அவமானப்படுத்துவது இது முதல் முறையல்ல. இப்படி பல சம்பவங்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கின்றன. ஆனால், நயன்தாரா அற்புதமான பெண்மணி, ஏன் அதற்கும் அப்பாற்பட்டவர். அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வைத்தே அவரது வளர்ச்சியைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் இங்கே கூச்சல் போடலாம். ஆனால், சரியானவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.’

    நடிகை லட்சுமி ராம கிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ‘இதைவிடப் பெரிய வி‌ஷயம் ஒன்று இருக்கிறது. ராதாரவியாவது அவரது மனதில் பட்டதைப் பேசிவிடுகிறார். ஆனால், இது போன்ற வி‌ஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு எத்தனை பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?. இவைதானே பொள்ளாச்சி போன்ற எல்லா இடத்திலும் வெளிப்படுகிறது. அவர் பேசினது தப்பான வி‌ஷயம்.

    ஆனால் அந்த தப்பான வி‌ஷயம் தானே நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு நாம் என்ன பண்ணப் போறோம். ஒரு பெண்ணாக நயன்தாரா சூப்பர் ஸ்டார் பதவிக்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார்?. சாதிக்க வேண்டும் என வரக்கூடியப் பெண்களும் அவரை வைத்து இப்படியொரு தவறான வழிகாட்டுதலையா நாம் செய்ய வேண்டும். சினிமாத்துறையில் எத்தனை பேர் பாதியிலேயே காணாமல் போய்விடுகிறார்கள்.

    ராதாரவியைத் தடைப் பண்ணினால் மட்டும் பயன் இல்லை. அங்கே இருந்தப் பெண்களே கைதட்டி சிரிக்கிறார்களே அவங்களுக்கு எப்போது தடை போடப் போகிறீர்கள்?. அவர்கள் ரசித்து சிரிச்சிட்டுத்தானே இருக்கிறார்கள்.


    இந்த வி‌ஷயங்கள் மாறுவதற்குப் பெண்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் பெண்களை மதிக்கத்தகுந்தவர்களாக நடத்த கண்டிப்பாக பெண்கள் வெளிவர வேண்டும்.

    ஆண்கள் எப்படி காரணமாக இருக்கிறார்களோ அதே போல சில பெண்களும் இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கிறார்கள்.

    அதனால் முழுக்க முழுக்க ஆண்களையே குற்றம்சாட்ட வேண்டியதில்லை என நினைக்கிறேன். எதையும் சமாதானப்படுத்திக் கொள்ளாதீர்கள். பெண்களை கீழ்த்தரமாக காண்பிக்கும் எந்த வி‌ஷயங்களிலும் பங்கு பெறாதீர்கள். பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைக்கும், இப்போது நடக்கும் வி‌ஷயத்துக்கும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.’

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RadhaRavi #Nayanthara #Khushboo #Kanimozhi

    பிங்க் படத்தை தொடர்ந்து அமிதாப்பச்சன் - டாப்சி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பட்லா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Trisha
    அமிதாப்பச்சன் - டாப்சி நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படம் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித்குமார், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கின்றனர். எச்.வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

    இந்த படத்தில் அஜித்குமார் வக்கீல் வேடத்தில் வருகிறார். இந்த நிலையில் இந்தியில் வெற்றி பெற்ற இன்னொரு படமான ‘பட்லா’வும் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்திலும் அமிதாப்பச்சன், டாப்சி இணைந்து நடித்துள்ளனர். ரூ.10 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.90 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.



    இந்த படத்தின் தமிழ் பதிப்பில் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் டாப்சி வேடத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. திரிஷா நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த 96 படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆகிறது. மேலும் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். இப்போது கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, பரமபத விளையாட்டு ஆகிய 4 படங்கள் திரிஷா கைவசம் உள்ளன. #AmitabhBachchan #Taapsee #Trisha

    தெலுங்கு, இந்தி பட உலகில் மிக பிரபலமாகி வரும் டாப்சி, அடுத்ததாக பிரபல இயக்குனருடன் மீண்டும் இணைய இருக்கிறார். #Taapsee
    அனுராக் கஷ்யப் இயக்கத்தில் டாப்சி நடித்த மன்மர்ஜியான் படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், மீண்டும் இருவரும் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளனர். திரில்லர் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. 

    இதுகுறித்து டாப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மன்மர்ஜியான் படத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தைத் தொடர்ந்து மீண்டும் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் நான் பணிபுரிவேன் எனக்கு ஏற்கெனவே தெரியும். ஆனால் அது இவ்வளவு விரைவாக நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. மேலும் பல படங்களில் இணைந்து பணிபுரிவது குறித்து நானும் சுனிரும் அண்மைக்காலமாக ஆலோசித்து வந்தோம். இந்தப் படத்துக்காக நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 



    இந்தப் படத்தை அஜுர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சுனிர் கெதெர்பால் தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் தலைப்பிடப் படவில்லை. இந்த ஆண்டின் கடைசி மாதங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தப் படத்துக்கு லொக்கே‌ஷன் தேடும் பணிகளில் அனுராக் கஷ்யப் பிஸியாக இருக்கிறார்.
    பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகை டாப்சியை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேச அழைக்காததால், அவர் விரக்தியடைந்து பேட்டியளித்திருக்கிறார். #Taapsee #Pink
    அமிதாப்பச்சன், டாப்சி நடித்த படம் பிங்க். இந்த படம்தான் தற்போது தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அமிதாப் வேடத்தில் அஜித் நடிக்கிறார். வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா நடிக்கின்றனர். ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

    பிங்க் இந்தி படத்தில் நடித்தவர்களை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அழைத்து உரையாடினார்கள். ஆனால் முக்கிய வேடத்தில் நடித்த டாப்சியை அவர்கள் அழைக்கவில்லை. பேட்டியை கண்ட ரசிகர்கள் டாப்சியிடம் இதுபற்றி விசாரிக்க தொடங்கினார்கள். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நீங்கள் பேட்டியில் பங்கேற்காதது ஏன்? என்று கேட்டதும் டாப்சி வருத்தமானார்.



    ஆனாலும் சிரித்தபடி சமாளித்தவர், ‘நல்ல கேள்வி... எனக்கு அந்த பேட்டியில் பங்கேற்கும் தகுதி இன்னும் வரவில்லை. அதற்கான தகுதிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று விரக்தியாக பதில் அளித்தார். இந்த பதிலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, ‘எல்லாவற்றிலும் நீங்கள் புத்திசாலி. எல்லா தகுதியும் உங்களுக்கு உண்டு’ என ஆறுதல் கூறத் தொடங்கின. உடனே டாப்சி ‘உங்களிடமிருந்து நான் ஜாலியான பதிலைத்தான் எதிர்பார்த்தேன். மற்றபடி எனக்கு எந்த வருத்தமும், விரக்தியும் இல்லை’ என்றார்.
    பாலிவுட் சினிமாவில் பிசியாகி இருக்கும் நடிகை டாப்சி, இந்தியில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் விடமாட்டேன் என்று கூறியிருக்கிறார். #Taapsee #GameOver
    தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்த டாப்சி, தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் அவர் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது தமிழில் `கேம் ஓவர்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் டாப்சி அளித்த பேட்டியில் கூறியதாவது,

    “நான் கதாநாயகியாக அறிமுகமானது தென்னிந்திய மொழி படத்தில் தான். பெரிய ஹிட் படங்கள் அமையாமல் போனாலும் முதலில் கதாநாயகியாக அறிமுகம் கிடைத்தது இங்குதான். தென்னிந்தியாவில் என்னை அவர்கள் வீட்டு பெண் மாதிரி ஏற்றுக்கொண்டனர். இந்தியில் வாய்ப்புகள் வந்தன. அங்கு நல்ல படங்களில் நடித்தேன். பெயரும் புகழும் கிடைத்தது.



    எவ்வளவு இந்தி படங்களில் நடித்தாலும் தமிழ், தெலுங்கு படங்களை மட்டும் விட மாட்டேன். எனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து வைத்ததே தென்னிந்திய திரையுலகம் தான். இந்தியில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நல்ல வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

    எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தேதி ஒதுக்கி கொடுத்து நடிக்க தயாராக இருக்கிறேன். இந்த புத்தாண்டில் இருந்து தென்னிந்திய மொழிகளில் வருடத்துக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று உறுதி எடுத்து இருக்கிறேன்.”
     
    இவ்வாறு டாப்சி கூறினார். #Taapsee #GameOver

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சியை பிரபல செல்போன் நிறுவனம் கோபப்படுத்தி இருக்கிறது. #Taapsee
    ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்சி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர். இந்தி சினிமாவுக்கு சென்றார். அங்கு முன்னணி கதாநாயகியாக விளங்குகிறார். டாப்சி சரியாக சிக்னல்கள் கிடைப்பதில்லை என்றும் அதிக விலை வைத்து ஏமாற்றுவதாகவும் முன்னணி செல்போன் நிறுவனத்தை கடுமையாக டுவிட்டரில் சாடியுள்ளார்.

    அவர் அந்த நிறுவனத்தை குறிப்பிட்டு அவர்கள் தங்கள் சேவையை நிறுத்திவிட்டுக் கிளம்பும் நேரம் வந்துவிட்டது அல்லது அவர்கள் அதிக விலை வைப்பதை நிறுத்தவேண்டும். சிக்னல்கள் எங்கும் கிடைக்காத நிலையை மாற்ற வேண்டும். நாம் இப்போது போன்களை அதிக அளவு சார்ந்து இருப்பதால் எப்படியெல்லாம் வாடிக்கையாளராகிய நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.” என்று டுவிட்டரில் பதிவிட்டார்.



    இது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் விரைவில் தங்கள் குழு தொடர்புகொண்டு பிரச்சனையை தீர்க்கும் என்றும் அந்த நிறுவனம் பதிலளித்தது. இந்த டுவிட்டுக்கு கீழே மக்கள் பலரும் தாங்களும் இதைப் போன்று பாதிக்கப்பட்டதாக தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்தனர். பலர் மற்ற நிறுவனங்களையும் டேக் செய்து பிரச்சினைகளை பதிவிட்டு வருகின்றனர்.
    தமிழில் ஆடுகளம் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை டாப்சி, தற்போது இந்தி படத்தில் இருந்து விலகி இருக்கிறார். #Taapsee #Bollywood
    டாப்சி இந்தி சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகிறார். அனுராக் பாசு இயக்கும் புதிய படத்தில் இணைந்து இருந்த அவர் தற்போது அந்த படத்தில் இருந்து விலகி உள்ளார்.

    டாப்சி பன்னு, ராஜ்குமார் ராவ், பாத்திமா சனா சாகித், ஆதித்யா ராய் கபூர், அபிஷேக் பச்சன் எனப் பெரிய நட்சத்திர கூட்டணியை உருவாக்கி அனுராக் பாசு புதிய படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

    இப்படத்தில் நடிக்க டாப்சி எந்தத் தேதிகளில் தனது கால்ஷீட் வேண்டும் எனப் படக்குழுவிடம் கேட்டதற்கு முறையான தகவல்கள் கிடைக்காததால் படத்திலிருந்து விலகியுள்ளார். டாப்சி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மன்மஸ்ரியான், முல்க் ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாகின.



    இந்த ஆண்டு இவர் நடிப்பில் அடுத்தடுத்து சில படங்கள் வெளியாக உள்ளன. அவர் நடித்துள்ள தாட்கா, பாடியா ஆகிய இந்திப்படங்களின் படப்பிடிப்பு நிறைவுற்று இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கில் நடித்த கேம் ஓவர் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்தது.

    இது தவிர துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும் புதிய படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக டாப்சி நடிக்க உள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாகி இருக்கும் டாப்சி, தன்னைப் பற்றிய வலைத்தளத்தில் தவறாக விமர்சித்தவருக்கு உறைக்கும் விதமாக பதிலடி கொடுத்ததற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. #TaapseePannu
    ‘ஆடுகளம்‘ படம் மூலம் அறிமுகமானவர் டாப்சி. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிப் படங்களிலும் தனக்கென தனிச்சிறப்பான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தியில் இவர் நடித்த ‘பிங்க்‘ திரைப்படம் இவருக்கு பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. அது பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் சம்பந்தமான படம்.

    தொடர்ந்து இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். டாப்சி அதிரடியான கருத்துகளை தெரிவித்து பரபரப்புகளையும் ஏற்படுத்துவார். டாப்சியின் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் தவறான எண்ணத்தில் ’உங்களுடைய உடல் அங்கங்கள் எனக்குப் பிடிக்கும்’ எனப் பதிவிட்டிருந்தார்.

    இதற்கு டாப்சி தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார். “வாவ்.. எனக்கும் ரொம்பப் பிடிக்கும். எனக்கு குறிப்பாக எனது மூளையில் உள்ள செரிப்ரம் ரொம்பப் பிடிக்கும். உங்களுக்குப் பிடித்த அங்கம் எது?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். செரிப்ரம் என்பது பெருமூளை.


    தன்னைப் பொதுவெளியில் கேவலமாக வர்ணித்த நபருக்கு பெருமூளை வேலை செய்யவில்லை என்பதை உணர்த்தும் வகையிலேயே டாப்சி இந்த டுவிட்டைப் பதிவு செய்திருக்கிறார். டாப்சியின் பதிலுக்கு சமூகவலைதளங்களில் வரவேற்பு கிடைத்து வருகிறது. #TaapseePannu

    பாலிவுட்டுக்கு சென்று அங்கு பிசியாகியிருக்கும் டாப்சி, கேம் ஓவர் படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ள நிலையில், சினிமா நிரந்தரம் கிடையாது என்று கூறியிருக்கிறார். #TaapseePannu #GameOver
    டாப்சி இந்தியில் அறிமுகமாகி முன்னணி நடிகையான பிறகு தமிழ், தெலுங்கு பக்கம் கவனம் செலுத்துவதில்லை. கதை கேட்கக்கூட மறுக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் விதமாக தென் இந்திய சினிமா பக்கம் மீண்டும் திரும்பியுள்ளார்.

    இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘நிறைய படங்களில் நடிக்கிறதைவிட, தரமான சில படங்கள்ல நடிச்சாலே போதும், தமிழ் மக்கள் மனசுல இடம் பிடிச்சிடலாம்னு நினைக்கிறேன். `கேம் ஓவர்’ அப்படிப்பட்ட படம்தான். தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆகுற இந்தப் படத்துக்கு நானும் ஒரு தயாரிப்பாளர். வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கேரக்டர்.



    என் முதல் தெலுங்கு படத்தோட தயாரிப்பாளர் நடிகை லக்ஷ்மி மஞ்சு மட்டும்தான் எனக்கு இருக்குற ஒரே தோழி. நண்பர்களோட எமோ‌ஷனலா நெருக்கம் ஆகிவிட்டால், சினிமாவை விட்டு வெளியேறுவது கஷ்டமா இருக்கும். அதனால், நானும் அதிகமா அதுக்கு மெனக்கெடுறதில்லை. ஏன்னா, சினிமா நிரந்தரம் கிடையாது’ என்று கூறி இருக்கிறார். #TaapseePannu #GameOver
    தமிழில் ஆடுகளம் படம் மூலம் மிகவும் பிரபலமான டாப்சி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். #Taapsee #GameOver
    தமிழ் சினிமாவில் சரியான இடம் கிடைக்காமல் தவித்த டாப்சி தெலுங்கு, இந்திக்கு சென்றார். இந்தியில் அவருக்கு நல்ல இடம் கிடைத்தது. அங்கு முன்னணி நடிகையாகி விட்ட டாப்சி தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் தமிழில் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படத்தில் நடிக்க உள்ளார். நயன்தாரா முன்னிலை கதாபாத்திரம் ஏற்று நடித்த ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இதை இயக்குகிறார். படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.



    இந்தப் படத்துக்கு ‘கேம் ஓவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காலில் கட்டுப் போடப்பட்டு சக்கர நாற்காலியில் டாப்சி அமர்ந்திருப்பதுபோல காட்டப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
    பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்து வரும் டாப்சி, சினிமாவுக்காக எதையும் செய்ய தயார் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். #Taapsee
    தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமான டாப்சி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    “சினிமாவில் எனக்கென்று தனி பாணியை உருவாக்கி நடிக்கிறேன். பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமானால் மற்றவர்களை பின்பற்றுவதை விட எனக்கென்று புதிய பாணி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறேன். வீணாக மேக்கப் போடுவது அதற்காக நேரத்தை செலவிடுவது எனக்கு பிடிக்காது.

    ஆடை அணிவதில் மட்டும் கொஞ்சம் அக்கறை எடுப்பேன். எப்போதாவது சோர்வாக இருந்தால் ஷாப்பிங் செல்வேன். அது எனக்கு புதிய தெம்பை கொடுக்கும். சினிமாவுக்காக எதையும் செய்ய தயார். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் என்ன தேவையோ அதை செய்ய தயாராக இருக்கிறேன்.

    துப்பாக்கி சுடும் வீரர்கள் பற்றி அனுராக் காஷ்யப் எடுக்கும் உண்மை கதையில் நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள படம். அந்த படத்துக்காக துப்பாக்கி சுட கற்று வருகிறேன். இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அதற்கு நூறு சதவீதம் உழைப்பை கொடுக்க வேண்டும். நடிப்பு இயற்கையாக இருக்க வேண்டும். எந்த காரணத்துக்காவும் டூப் நடிகையை வைத்து காட்சிகளை எடுக்க நான் சம்மதிக்க மாட்டேன். நானே எல்லா காட்சிகளிலும் நடிக்கிறேன். கதாபாத்திரமாக மாறி நடித்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்று டாப்சி கூறினார்.
    ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகமான டாப்சி, தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் தீவிர ஆர்வம் காண்பித்து வருகிறார். #Taapsee
    தமிழில் பெரிய வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறிய டாப்சி இந்தி சினிமாவில் முன்னணி நாயகியாகி விட்டார். பின்க், பேபி படங்களை தொடர்ந்து அனுரக காஷ்யப் இயக்கத்தில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக நடித்த மன்மர்சியான் படமும் வெற்றியடைந்து இருக்கிறது.

    டாப்சியின் திறமையை பார்த்த அனுராக் தனது தயாரிப்பில் அடுத்து உருவாக இருக்கும் படத்திலும் டாப்சியையே நாயகியாக்கி உள்ளார்.

    உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்தில் டாப்சி துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடிக்கிறார். துசார் ஹீரா நந்தினி இயக்குகிறார். ஜனவரியில் தொடங்க இருக்கும் இந்த படத்துக்காக துப்பாக்கி சுடும் பயிற்சியை டாப்சி இப்போதே தொடங்கி விட்டார்.
    ×