search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுஜிசி"

    நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்ட பி.எச்.டி. ஆய்வு கட்டுரைகளை பல்கலைக்கழக மானியக்குழு மறுஆய்வு செய்யத் தொடங்கி உள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் பி.எச்.டி. பட்டம் பெற வேண்டி விண்ணப்பித்தவர்கள் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரைகளின் அசல் தன்மை மற்றும் தரத்தின் மீது சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது.

    இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அவர்கள் சமர்பித்த ஆய்வு கட்டுரைகளை மறுஆய்வு செய்து வருகிறது. மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக் கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழங்களில் கடந்த 10 ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள், ஆய்வுக்கான நோக்கத்தில் இருந்து வேறுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    எனவே ஆய்வு கட்டுரைகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாக யு.ஜி.சி. தெரிவித்துள்ளது. இந்த பணிகள் அடுத்த 6 மாதத்துக்குள் முடிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-

    இந்தியாவில் உயர் கல்வியின் தரத்தை விரிவுப்படுத்தி நீண்டகாலம் ஆகிவிட்டது. எனவே மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி தரமான மாணவர்களாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
    ×