search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோமாளி"

    சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த ஜெனிலியா, தற்போது அவரது போஸ்டரை பார்த்து பாராட்டியிருக்கிறார்.
    சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நடித்த ஜெனிலியா கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. தமிழில் மிகக் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அவர் ஏற்று நடித்த அத்தனை பாத்திரங்களும் முக்கியமானவையாக உள்ளன. 

    2011-ம் ஆண்டு வெளியான வேலாயுதம் படத்திற்கு பின் அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. ஜெனிலியா இந்தி, மராத்தி மொழிகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். 



    கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவி ஒன்பது விதமான தோற்றங்களில் வலம் வர உள்ளார். ஒவ்வொரு தோற்றத்தையும் படக்குழுவினர் போஸ்டர்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர். ஒன்பதாவதாக வெளியான போஸ்டரில் ஜெயம் ரவி பள்ளி மாணவன் போன்ற தோற்றத்தில் உள்ளார். அதைப் பார்த்த ஜெனிலியா, “என்ன இது ஜெயம் ரவி? உங்களுக்கு வயதே ஆகவில்லை. பதினாறு வயது சிறுவனைப் போல் தோற்ற மளிக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்.
    நாட்டின் மிகப்பெரிய கோமாளி ராகுல் காந்தி என்பது அனைவருக்கும் தெரியும் என தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார். #RahulGandhi #Buffon #ChandrasekarRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்ட சில மணி நேரங்களில், அடுத்த தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக சாடினார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கட்டிப்பிடித்ததையும், அதற்கு பின் கண்ணடித்ததையும் ஒட்டுமொத்த நாடும் பார்த்தது. அவர், நாட்டின் மிகப்பெரிய கோமாளி என்பது அனைவருக்கும் தெரியும்’ என்று தெரிவித்தார்.



    டெல்லி காங்கிரஸ் பேரரசின் சட்ட வாரிசான ராகுல் காந்தி, காங்கிரஸ் சுல்தானின் மரபுரிமையை பெற்றுக்கொண்டு இருப்பதாக கூறிய சந்திரசேகர் ராவ், இதனால்தான் டெல்லிக்கும், காங்கிரசுக்கும் அடிமையாக வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

    தனது அரசுக்கு எதிராக ஆதாரமற்ற, மனசாட்சியில்லாத, அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் காங்கிரஸ் கட்சிதான் தெலுங்கானாவின் முதல் மற்றும் மிகப்பெரிய எதிரி என்றும் அவர் கூறினார்.  #RahulGandhi #Buffon #ChandrasekarRao
    ×