என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புறக்கணிப்பு"
- விசாரணையின் அடிப்படையில் பிரசவம் பார்த்த டாக்டர் ரம்யாவை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- டாக்டர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
குத்தாலம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா மரத்துறையைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 28) என்பவருக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை சுயநினைவின்றி இருந்தது.
இதனால் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் குழந்தை இறந்தது என்று கூறி பெற்றோர், உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பெற்றோர் உறவினர்களிடம் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பானுமதி விசாரணை நடத்தினார். பின்னர் விசாரணையின் அடிப்படையில் பிரசவம் பார்த்த டாக்டர் ரம்யாவை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
டாக்டர்களிடம் உரிய விசாரணை செய்யாமல் பெற்றோர்கள் உறவினர்களிடம் விசாரணை செய்ததன் அடிப்படையில் டாக்டர் ரம்யா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று மயிலாடுதுறையில் புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் 21 டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் டாக்டர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து அவசர சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகிறது. ஆனால் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவம் பார்ப்பதற்காக நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் காலை 7:00 மணி முதல் தற்போது வரை நோயாளிகள் காத்து கிடைக்கின்றனர்.
மேலும் சிகிச்சைக்கு வந்த முதியவர்கள் என ஏராளமானோர் டாக்டர்கள் இல்லாததால் திரும்பி வேறு மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். பதவியேற்பு விழா என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வு என்பதால் கலந்துகொள்வதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிய மம்தா, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். எனினும், தவறான தகவலை பாஜகவினர் பரப்பி வரும் சூழ்நிலையில், பதவியேற்பு விழாவில் என்னால் பங்கேற்க இயலாது.
மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறையால் 54 பேர் கொல்லப்பட்டதாக பாஜகவினர் கூறுவதாக ஊடகங்களில் செய்தியை பார்த்தேன். அவர்கள் கூறுவதில் உண்மையில்லை. 54 பேரும் அரசியல் ரீதியாக கொல்லப்படவில்லை; தனிப்பட்ட பிரச்சினையால் கொல்லப்பட்டனர். பதவியேற்பு விழாவை அரசியல் ஆதாயத்திறக்காக எந்த கட்சியும் பயன்படுத்தக் கூடாது.” என கூறியுள்ளார்.
இதேபோல் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும், மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டார். இத்தகவலை கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் அடுத்த திருமலைக்கோடி விஸ்வநாதன் நகர், சரஸ்வதி நகர், அண்ணா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இலவச வீட்டு மனை பட்டா கேட்டு அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இது வரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி பொதுமக்கள் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாசில்தார் ரமேஷ் பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் தேர்தல் முடிந்து 4 மாதகாலத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இதை கண்டித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஐகோர்ட்டுக்கு வந்திருந்த சுப்பிரமணியசாமி மீது வக்கீல்கள் சிலர் முட்டை வீசினர். இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் வக்கீல்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அது மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. இந்த சம்பவம் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி நடந்தது.
அன்று போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தில் நீதிபதிகள், வக்கீல்கள், பொதுமக்கள் படுகாயமடைந்தனர். ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கோர்ட்டு அறைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
குடும்பநல கோர்ட்டில் உள்ள டியூப் லைட் உள்பட ஏராளமான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. வளாகத்தில் நின்று கொண்டிருந்த நீதிபதிகள், வக்கீல்கள் கார்கள் அடித்து உடைக்கப்பட்டன.
இந்த தடியடி சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் வக்கீல்கள் பலர் படுகாயமடைந்தனர். நீதிபதிகள், வக்கீல்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டித்து, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 19-ந்தேதி கருப்பு தினமாக வக்கீல்கள் கடை பிடித்து வருகின்றனர்.
இன்று அந்த கருப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் தலைமையில் வக்கீல்கள் இன்று காலை ஒன்று கூடினர்.
இந்த சங்கத்தின் துணை தலைவர் சுர்.சுதா, செயலாளர் கிருஷ்ணகுமார், பெண் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் நளினி, செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி உள்பட நூற்றுக்கணக்கான வக்கீல்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசாரை கண்டித்து ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் ஊர்வலமாக வக்கீல்கள் சென்றனர். பின்னர் ஐகோர்ட்டு முன்புள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில், வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது தடியடி நடத்தியதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோஷம் போட்டனர்.
வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட கோர்ட்டுகளில் வக்கீல்கள் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இதனால், வழக்கு விசாரணை பெரிதும் பாதிக்கப்பட்டன.
ஐகோர்ட்டு வளாகத்தில் 8 குடும்பநல கோர்ட்டுகள் உள்ளன. அதில், 5 கோர்ட்டுகளில் மட்டுமே நீதிபதிகள் உள்ளனர். இவர்கள் முன்பு வக்கீல் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, ‘போராட்டத்தின் காரணமாக வக்கீல்கள் கோர்ட்டில் ஆஜராகாததால், வழக்காடிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படும் விதமான எதிர்மறைவான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டாம்’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘வக்கீல்கள் கஷ்டம் எங்களுக்கும் தெரியும். எதிர்மறையான உத்தரவுகள் எதையும் பிறப்பிக்க போவது இல்லை’ என்று பதில் அளித்தனர்.
நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் குறித்த பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு எப்படி? அளிக்க வேண்டும் என்பது தொடர்பான பயிற்சி நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து அரசு பள்ளி முதுகலை ஆசிரியை, ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி மையங்கள் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரி, நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 285 முதுகலை ஆசிரியை, ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இன்று காலை 10 மணிக்கு அவர்கள் திடீரென பயிற்சி வகுப்புகளை புறக்கணித்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் நின்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் திரண்டு சென்று முதன்மை கல்வி அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு கற்பித்தல், மாணவர்களை ஆயத்தப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு ஆசிரியர்கள் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது.
மேலும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி போன்ற கூடுதல் பணிச்சுமை ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுவதால் வாரத்தில் 7 நாள்கள் ஓய்வின்றி விடுமுறையின்றி பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் உடல் நலம் மற்றும் குடும்ப நலன் பாதிக்கும்.
எனவே, ஆசியர்களுக்கு முழு பணிப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். நீட் மற்றும் ஜே.இ.இ. போட்டித் தேர்வுகளுக்கு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும்.
நீட், ஜே.இ.இ. பயிற்சிக்கு விரிவான கையேடுகள் வழங்க வேண்டும். ஜே.இ.இ. தேர்வுக்கு தமிழ்வழியில் வினாத்தாள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறியிருந்தனர்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அந்த நாட்டு அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் எதுவும் கொடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த இலங்கை தொடரில் இருந்து ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கு போட்டி கட்டணம் கூட வழங்கப்படவில்லை. இதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வருகிற 25-ந் தேதிக்குள் வழங்காவிட்டால், ஜிம்பாப்வேயில் அடுத்த மாதம் (ஜூலை 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை) நடைபெறும் 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை புறக்கணிக்க போவதாக ஜிம்பாப்வே அணி வீரர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த போட்டி தொடருக்கான பயிற்சி முகாமை வீரர்கள் ஏற்கனவே புறக்கணித்து விட்டனர். வீரர்களின் பிரச்சினையை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரி சட்டசபையை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்து வருகிறார்கள்.
நேற்று அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூட்டம் நடத்தினார்கள். இதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தவிர அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ், தமிமுன்அன்சாரி ஆகியோர் உள்பட 97 பேர் கலந்து கொண்டனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஏ.வ.வேலு ஆகியோர் பங்கேற்கவில்லை.
இதனால் சட்டசபையில் ஆளும் அ.திமு.க. எம்.எல்.ஏ.க்கள் தவிர தனியரசு, டி.டி.வி. தினகரன் உள்பட 116 பேர் கலந்து கொண்டனர். பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாமல் சட்டசபை கூட்டம் நடந்தது. அவ்வாறு சட்டசபையை நடத்தலாமா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து சட்டசபை செயலக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 234 ஆக இருக்கும் பட்சத்தில் குறைந்தது 24 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே சபையை நடத்தலாம். அதாவது 10-ல் 1 பங்கு உறுப்பினர்கள் சபையில் இருந்தாலே போதுமானது. சபையை நடத்த முடியும். எதிர்க்கட்சிகள் இல்லாமல் சபையை நடத்த முடியுமா? என்ற கேள்வியே எழாது.
ஓட்டெடுப்பு என்று வரும் போது சபையில் எத்தனை பேர் பங்கேற்கிறார்களோ அதில் பெரும்பான்மையை கணக்கிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபையில் பங்கேற்ற டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டசபையில் நேற்று பங்கேற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஸ்டெர்லைட் பிரச்சனையை காரணம் காட்டி தொடரை முழுவதும் புறக்கணிப்பதாக கூறியிருப்பது நல்ல விஷயமாக தெரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசாணை மட்டும் பிறப்பித்தால் போதாது. அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று காரணம் கூறி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #TNAssembly
புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது.
மோதல் அவ்வப்போது விஸ்வரூபம் எடுப்பதும், பின்னர் சுமூகமாவதுமாக இருந்து வருகிறது.
கிரண்பேடி புதுவை கவர்னராக பொறுப்பேற்று இன்றோடு (செவ்வாய்க்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனையொட்டி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு நேற்று மாலை விருந்து அளித்தார்.
இந்த விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி தவிர்த்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இதனால் ஆவேசமான முதல்-அமைச்சர் நாராயணசாமி, “தன்மானம் இல்லாதவர்கள் மட்டுமே கவர்னரின் விருந்தில் பங்கேற்பார்கள்” என்று கூறினார்.
இதனையடுத்து நேற்று மாலை நடந்த விருந்து நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
அதே நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அசோக் ஆனந்த், திருமுருகன், செல்வம், சுகுமாரன், கோபிகா, சந்திரபிரியங்கா ஆகியோர் பங்கேற்றனர். பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர், தலைமை செயலாளர் அஸ்வின் குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். #governorkiranbedi #narayanasamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்