search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர்"

    திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்ட்டார். #Vaiko

    கோவை:

    பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் அதே இடத்தில் பிரதமர் மோடியை வரவேற்று இந்து முன்னணி சார்பில் காவிக்கொடி ஏந்தி வரவேற்பு அளிக்கப்படும் என அறிவித்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இன்று அதிகாலை முதலே பஸ் நிலையம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் காலை 11.15 மணி அளவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையம் அருகே ம.தி.மு.க.வினர் கருப்புக் கொடியுடன் திரண்டனர்.

    அப்போது பா.ஜனதாவை சேர்ந்த பெண் உள்பட 2 பேர் கூட்டத்துக்குள் புகுந்தனர். அந்த பெண் ‘பாரத் மாதா கீ ஜே’ என கோ‌ஷம் எழுப்பியபடி செருப்பை தூக்கி வீசினார். அவருடன் வந்தவர் கூட்டத்தை நோக்கி கற்களை வீசினார். இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் உடைந்தது.

    இதனால் ஆவேசமடைந்த ம.தி.மு.க.வினர் அந்த பெண்ணை தாக்கினர் .இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்தது. உடனே அந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு நின்றவர்கள் சிதறியடித்து ஓடினர். பின்னர் போலீசார், அந்த பெண்ணையும், அவருடன் வந்தவரையும் பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

    இதற்கிடையே அங்கு திரண்ட ம.தி.மு.க.வினர் மோடிக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தடைமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ மற்றும் ம.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிடவில்லை. விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால், அரசு திட்டங்கள் என்ற பெயரில் மக்களை சந்திக்க வருவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே தான் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko

    திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் புதிய பஸ் நிலையம் அருகே நடத்தப்படும் என்று அவைத்தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார். #Vaiko #PMModi
    திருப்பூர்:

    ம.தி.மு.க. அவைத்தலைவர் துரைசாமி திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஞாயிற்றுக்கிழமை) அரசு விழா மற்றும் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திருப்பூர் வருகிறார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே நடத்தப்படும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளை பிரதமர் பார்க்க வரவில்லை. ஆனால் அரசு விழா என்ற பெயரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு வருகிறார். எங்களது கருப்புக்கொடி போராட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #PMModi
    திருப்பூர் ரெயில் நிலையத்தில் பெண் சுருண்டு விழுந்து இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலைய 1-வது பிளாட்பாரத்தில் நேற்று இரவு 50 வயது மதிக்க தக்க பெண் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென அவர் சுருண்டு விழுந்தார்.இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ரெயில்வே போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பார்த்தனர்.

    அப்போது அப்பெண் இறந்தது தெரிய வந்தது. அவர் கறுப்பு வெள்ளை மஞ்சள் பூ போட்ட சேலை அணிந்து இருந்தார். அவர் யார் ? எந்த ஊர்? என்பது தெரியவில்லை.இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் அருகே உள்ள ஈங்கூர் ரெயில் நிலையம் அருகே 50 வயது மதிக்க தக்க ஆண் தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.அவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர் யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூரை சேர்ந்த மெக்கானிக் கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் முகேஷ் குமார் (35). மெக்கானிக். இவர் தென்னம்பாளையத்தில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் முகேஷ் குமார் மாயமானார். அவர் தனது மனைவி உஷா ராணிக்கு போன் செய்து தன்னை கடத்தி சென்று விட்டதாகவும், தாராபுரம் அருகே உள்ள காட்டு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நடைபெறும் இடத்தில் விட்டு சென்றதாகவும் கூறி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உஷாராணி தனது தம்பியுடன் தாராபுரம் வந்தார். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தனது கணவரை கடத்தி சென்றது குறித்து புகார் அளித்தார்.

    இது தொடர்பாக திருப்பூரில் தான் புகார் அளிக்க வேண்டும் என முதலில் கூறிய தாராபுரம் போலீசார் பின்னர் தாங்கள் விசாரிப்பதாக கூறினார்கள்.

    அதன்படி மாயமான முகேஷ் குமாரை தேடி வருகிறார்கள்.

    திருப்பூரில் கிளி ஜோசியரை வெட்டிக் கொலை செய்த நபர், சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். #TirupurParrotAstrologer
    சென்னை:

    திருப்பூர் குமரன் சாலையில் கிளி ஜோசியராக இருந்தவர் ரமேஷ் என்னும் குமார். நேற்று முன்தினம் இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்ததார். அப்போது, பின்னால் வந்த ஹெல்மெட் அணிந்த மர்மநபர் ஒருவர் ரமேஷை அரிவாளால் வெட்டினார்.

    கீழே விழுந்த ரமேஷை பலமுறை அரிவாளால் வெட்டிய அந்த மர்மநபர், துண்டு பிரசுரங்களையும் வீசிச் சென்றார். அதில் கிளி ஜோசியர் ரமேஷ், பெண்களை வசியம் செய்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். ரமேஷின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதால் கொலை செய்ததாக அவர் கூறியபடி சென்றார். பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கிளி ஜோசியரை கொலை செய்தது கும்பகோணத்தைச் சேர்ந்த ரகு என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், திருப்பூரில் இருந்து தப்பி வந்த ரகு, சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். அவரை திருப்பூர் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். #TirupurParrotAstrologer
    திருப்பூரில் பட்டப்பகலில் ஜோதிடர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரன் ரோடு பென்னி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். ஜோதிடர். இன்று மதியம் அதே பகுதியில் ஜோதிடம் பார்த்தார்.

    அப்போது மர்ம நபர் கண் இமைக்கும் நேரத்தில் ஜோதிடர் ரமேசை அரிவாளால் தலை, தோள் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டினார். படுகாயம் அடைந்த ஜோதிடர் அலறி சத்தம்போட்டு ரத்தவெள்ளத்தில் மயங்கினார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜோதிடரை பார்த்தபோது அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியையும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பூர் அருகே பனியன் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்தி நகர் இ.பி. காலனியை சேர்ந்தவர் கிருஷ்ண குமார். இவரது மனைவி நித்தா (27). அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் அக்கவுண்டண்ட் ஆக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு நடந்து சென்றார். பழனிசாமி நகரில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நித்தா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர்.உடனே சுதாரித்து கொண்ட நித்தா செயினை இறுக்கி பிடித்தார். இதில் செயின் அறுந்து 3 பவுன் நித்தாவிடமும், மற்ற 3 பவுன் வாலிபர்களிடமும் சிக்கியது. நித்தா சத்தம் போட்டார். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.அதற்குள் 2 வாலிபர்களும் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு நகை பறித்த 2 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள்.

    திருப்பூரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் இளம் பெண்-வாலிபர் பலியானார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் காலேஜ் ரோடு தொங்கனகிரி முதல் வீதியை சேர்ந்தவர் சதிஷ். இவரது மனைவி விஜயா (27). இவர்கள் 2 பேரும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று மாலை விஜயா வேலை முடிந்து தனது கம்பெனியில் வேலை பார்த்து வரும் ரமேஷ் குமார் என்பவரின் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

    பூண்டி பகுதியில் வந்த போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க ரமேஷ் குமார் பிரேக் பிடித்தார். இதனால் நிலை தடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர்.

    விஜயாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் வீரபாண்டி இடுவாய் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் ராஜ் கமல் (19). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மேஸ்திரியை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

    இடுவாய் - திருப்பூர் சாலையில் வஞ்சிப்பாளையம் பிரிவில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருப்பூரில் இருந்து இடுவாம்பாளையம் சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த ராஜ்கமல் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காங்கேயம் ரோடு காங்கேயம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 52). பனியன் தொழிலாளி. இவருடைய 3-வது மகள் பானுப்பிரியா (25). இவர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை தீவிரமாக காதலித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளுடைய காதல் விவகாரம் ஈஸ்வரமூர்த்திக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஈஸ்வரமூர்த்தி அந்த வாலிபரின் பெற்றோரிடம் சென்று மகளின் காதல் விவகாரம் குறித்து பேசி உள்ளார். மேலும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது பற்றியும் பேசியதாக கூறப்படுகிறது.

    ஆனால் பானுப்பிரியாவின் காதலனின் பெற்றோர் அவர்களுடைய காதலை ஏற்கவில்லை. மேலும் திருமணத்திற்கு சம்மதிக்கவே முடியாது என்றும் கூறி உள்ளார். இந்த தகவல் பானுப்பிரியாவுக்கு தெரிந்துவிட்டது.

    இந்த நிலையில் பானுப்பிரியா தனது காதலனிடம் கேட்டபோது அவரும் சரியான பதில் கூறிவில்லை என்று தெரிகிறது. இதனால் மனம் உடைந்த பானுப்பிரியா வேலை செய்யும் அலுவலகத்திலேயே அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார்.

    சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பானுப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    திருப்பூர் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 2 மாதத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காட்டை சேர்ந்த கிருஷ்ணராஜ் (வயது 58). விவசாயி. இவர் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனையடுத்து கிருஷ்ணராஜ் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு கிருஷ்ணராஜ் பரிதாபமாக இறந்தார்.

    திருப்பூரில் நடுரோட்டில் கிடந்த ரூ.2 லட்சம் பணத்தை, நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த தொழிலாளியை போலீசார் பாராட்டினர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34). பனியன் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    அப்போது, வழியில் இருந்த, டாஸ்மாக் மதுக்கடை அருகே சென்ற போது நடுரோட்டில் ஒரு கவர் கிடந்தது. அதைப்பார்த்து சந்தேகம் அடைந்த செந்தில்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கவரை எடுத்து பிரித்து பார்த்தார். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. பணத்தை கண்டெடுத்தது குறித்து திருப்பூர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணத்தை ஒப்படைக்குமாறு கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து ரூரல் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனிடம், பணம் இருந்த கவரை செந்தில்குமார் ஒப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் கவரை பெற்று பணத்தை எண்ணிப்பார்த்தபோது அதில் ரூ.2 லட்சம்இருந்தது.

    நடுரோட்டில் கிடந்த பணத்தை, நேர்மையுடன் போலீசிடம் ஒப்படைத்த, செந்தில்குமாரை போலீசார் பாராட்டினர். மேலும், அவருக்கு பரிசு வழங்கி கவுரவப்படுத்த, போலீசார் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு, பரிந்துரைத்தனர்.

    பணத்தை கண்டெடுத்த செந்தில்குமார் கூறும்போது, யாரோ உழைத்து சம்பாதித்த பணம். தவறவிட்டனர் என்பதற்காக நான் வைத்துக்கொள்வது நியாயமில்லை. இதனால் பணத்தை போலீசில் ஒப்படைத்தேன் என்று கூறினார். ரூ.2 லட்சம் தவற விட்டவர்கள் உரிய ஆதாரங்களை திருப்பூர் ரூரல் போலீசில் காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று போலீசார் அறிவித்து உள்ளனர்.
    கோவை, திருப்பூரில் பன்றி, டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    கோவை:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 வாரத்தில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் சுகாதார துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    மேலும் காய்ச்சல் அதிகமுள்ள பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் நேரடியாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையாக சிகிச்சையை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல், சளி, மூச்சு திணறல் பாதிப்புடன் ஏராளமானோர் தினசரி சிகிச்சைக்கு வருகின்றனர்.

    இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் டாக்டர்கள் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    டாக்டர்கள் காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்து பாதிப்பு இருந்தால் அவர்களை சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்கை அளித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் திருப்பூர் தாசப்ப நகரை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி வசந்தா (வயது 63) என்பவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    அங்கு டாக்டர்கள் வசந்தாவின் ரத்தமாதிரியை சோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 31-ந் தேதி அனுப்பி வைத்தனர். வசந்தாவை டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு வசந்தா பரிதாபமாக இறந்தார்.

    திருப்பூர் மங்கலம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (57). கேபிள் ஆப்ரேட்டர். இவர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல், சளி மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் கணேசனின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கணேசன் பரிதாபமாக இறந்தார்.

    கோவை வெரைட்டிஹால் ரோட்டை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் அமுதன் (5) என்பவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் கடந்த 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அமுதனின் ரத்தத்தை டாக்டர்கள் சோதனை செய்த போது அமுதனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவரை டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அமுதன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுமித்ரா (35). இவர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை உறவினர்கள் கடந்த 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு சுமித்ரா பரிதாபமாக இறந்தார்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 11 பேரும், டெங்கு காய்ச்சலக்கு 4 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 58 பேர் என மொத்தம் 73 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Swineflu #Dengue

    ×