search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர்"

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிளஸ்-2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பெற்றுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 114 மாணவர்களும், 13 ஆயிரத்து 466 மாணவிகளும் என 24 ஆயிரத்து 580 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள்.

    இவர்களில் 23 ஆயிரத்து 640 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 10 ஆயிரத்து 530 பேரும், மாணவிகள் 13 ஆயிரத்து 110 பேரும் ஆவார்கள். மொத்த தேர்ச்சி விகிதம் 96.18 ஆகும்.

    மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி கூறியதாவது-

    திருப்பூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 580 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். இவர்களில் 23 ஆயிரத்து 640 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.18 ஆகும்.

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 8-வது இடத்தில் இருந்தது.

    திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடிக்க காரணமான முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.

    கடந்த ஆண்டு அரசு பள்ளியில் சிறந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தரமான ஆசிரியர்களை கொண்டு ஐ.ஐ.டி, என்.ஐ.டி. போன்ற உயர் கல்விக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் 5 மாணவர்கள் ஐ.ஐ.டி. முதல் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருப்பூரில் நண்பர்களுடன் குளித்தபோது குளத்தில் மூழ்கி பனியன் தொழிலாளி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் கல்லம்பாளையம் நத்தகாட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). பனியன் தொழிலாளி. நேற்று மாலை வேலை முடிந்து நண்பர்களுடன் ஆண்டிப்பாளையம் குளத்தில் குளிக்க சென்றார்.

    நண்பர்கள் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். அரைகுறையாக நீந்த தெரிந்த பழனிசாமி ஆர்வத்தால் இவரும் ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மூழ்க தொடங்கினார். அதை அறிந்த அவர் அலறி சத்தம்போட்டார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பழனிசாமியை காப்பாற்ற முயன்றனர். பழனிசாமியை கண்டு பிடிக்க முடியவில்லை. அதன்பின்னர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூரில் இன்று காலை மின்சாரம் தாக்கியதில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    திருப்பூர்:

    கோவையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ராஜாமணி என்பவருடன் திருப்பூர் சாமுண்டிபுரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை செய்து வந்தார்.

    இன்று காலை வழக்கம்போல் வேலை செய்தனர். தகரத்தால் ஆன டேப் கொண்டு கட்டிட துளைக்குள் அளவீடு செய்தனர். ஒரு துளைக்குள் தகர டேப்பை நுழைத்து அளவீடு செய்தபோது கட்டிடத்திற்குள் இருந்த மின்வயரில் கசிந்த மின்சாரம் அவர்களை தாக்கியது.

    இதில் கிருஷ்ணமூர்த்தியும், ராஜாமணியும் தூக்கி வீசப்பட்டனர். அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் அவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். #Tamilnews
    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் 3 நாட்கள் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின்சார வசதி கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மரம் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சார வினியோகம் தடைபட்டது.

    குறிப்பாக கடந்த சனிக்கிழமை மாலை பலத்த சூறாவளியுடன் 2 மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் மரங்கள், மின்சார கம்பங்கள் முறிந்தன. இதனையடுத்து மின்தடை ஏற்பட்டது.

    இந்நிலையில் திருப்பூர் மங்கலம் குள்ளேகவுண்டன் பாளையம் பிரிவு பகுதியில் 100-க்கணக்கான மரம் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் தடை ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குறை கூறினர். இந்நிலையில் பொதுமக்களே மரங்களை வெட்டி அகற்றினர். ஆனால் மின்சாரம் இன்று காலை வரை வினியோகம் செய்யப்படவில்லை.

    இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக மின்தடையை சரிசெய்ய வில்லை எனக்கூறி இன்று காலை மங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அதிகாரிகள் பொதுமக்களிடம் கூறும்போது. இங்கு மட்டுமல்ல. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரம் மற்றும் மின் கம்பங்கள் முறிந்ததால் மின் வினியோகம் தடை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொன்றாக சரிசெய்து வருகிறோம். இன்டைக்குள் இந்த பகுதிக்கு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ஓட்டல் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மேலும் ஒரு பெண் பலியானார்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள நியூ திருப்பூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது.

    இந்த நிறுவனத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சரஸ்வதி (22), சுனிதா (24) விழுப்புரம் மாவட்டம் டி. குன்னத்தூரை சேர்ந்த ரம்யா (19), உளுந்தூர்பேட்டை பிரியா ஆகிய 4 பேரும் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 பேரும் அவினாசி வந்தனர். அங்கு கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள்.

    பின்னர் அவினாசி பத்திரப்பதிவு அலுவலகம் எதிரில் உள்ள அமிர்தம் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அந்த ஓட்டலின் முகப்பு பகுதி மேற்கூரை இரும்பு ஷெட்டால் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த மேற்கூரையின் கீழ் சரஸ்வதி, சுனிதா, ரம்யா, பிரியா ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டலின் மேற்கூரை ஷெட் மொத்தமாக இடிந்து விழுந்தது.

    இதில் 4 பேரும் சிக்கி கொண்டனர். அவர்கள் அலறினார்கள். சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து மேற்கூரை ஷெட்டை தூக்கி காப்பாற்ற முயன்றனர்.

    ஆனால் முடியவில்லை. இதனை தொடர்ந்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மேற்கூரையை அப்புறப்படுத்தினார்கள்.

    ஆனால் சரஸ்வதி இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாகி இருந்தது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலத்த காயம் அடைந்த சுனிதா, ரம்யா, பிரியா ஆகியோர் மீட்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி இளம்பெண் ரம்யா இரவு பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

    பல்லடத்தில் நேற்று முன்தினம் இரவு பஸ்நிலைய கழிவறை ஷெட் இடிந்து கொத்தனார் பலியான சம்பவம் நடைபெற்றது. தற்போது மேலும் 2 பெண்கள் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    திருமண செலவுக்கு பணம் இல்லாததால் புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருப்பூர்:

    திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்தவர் ரூபேஷ் குமார் (31). இவர் திருப்பூர் கே.வி.ஆர். நகரில் அறை எடுத்து தங்கி எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் உறவினர் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. வருகிற 20-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர். திருமண செலவுக்காக ரூபேஷ் குமார் சிலரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனையில் இருந்து வந்தார். தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருப்பூர் மத்திய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரூபேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    திருப்பூர் பிரிண்டிங் பட்டறை உரிமையாளர் கொலை வழக்கில் சென்னையை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் ஜோநோபல் (35). இவர் திருப்பூர் கருவம்பாளையம் அக்கரை தோட்டத்தில் பனியன் பிரிண்டிங் பட்டறை நடத்தி வந்தார்.

    பட்டறை அருகே வீடு எடுத்து தங்கி இருந்தார். இவருடைய பட்டறையில் தென்னம்பாளையம் தமிழ் செல்வி, மதுரையை சேர்ந்த பாண்டிய ராஜன், சுமன் ராஜ், சென்னையை சேர்ந்த லோகேஷ், சதிஷ், ஸ்டீபன் (19) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.

    கடந்த 5-ந் தேதி பட்டறையில் இரவு பணி நடைபெற்றது. தமிழ் செல்வி மற்றும் சென்னையை சேர்ந்த 3 பேர் பணியில் இருந்தனர். திடீரென சென்னையை சேர்ந்த 3 பேரும் சேர்ந்து பிரிண்டிங் பட்டறை உரிமையாளர் ஜேநோபலை கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்து விட்டு அவர் வைத்திருந்த ரூ. 10 ஆயிரத்தை எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து திருப்பூர் மத்திய போலீசில் புகார் செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பட்டறை உரிமையாளர் ஜோநோபல் கொலை தொடர்பாக அவரது பட்டறையில் வேலை பார்த்த சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஸ்டீபனை திருப்பூர் ரெயில் நிலையத்தில் தனிப்படையினர் கைது செய்தனர்.

    அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-

    சென்னையை சேர்ந்த 3 பேர் ஜேநோபல் பிரிண்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தோம். நாங்கள் அவரிடம் அட்வான்ஸ் கேட்டோம். அவர் கொடுக்கவில்லை. எனவே மீண்டும் கேட்டோம். அதற்கு அவர் நீங்கள் வேலையை விட்டு நின்று கொள்ளுங்கள் என்றார்.

    எனவே வேலையை விட்டு நின்று விடலாம். இரவு அங்கு தங்கி விட்டு செல்லலாம் என முடிவு செய்து வேலை பார்த்தோம். அப்போது தான் அவரை கொலை செய்தோம்.

    அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினோம்.

    மோட்டார் சைக்கிளை திருப்பூர் ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு சென்னை சென்று விட்டோம். நான் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தேன். அப்போது போலீசார் கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி உள்ளார்.

    தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #Tamilnews
    திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.2 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
    திருப்பூர்:

    திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கூடுதல் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி கல்லூரி வளாகத்தில் 3 ஆய்வகங்கள், 8 வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் சு.குணசேகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.

    இந்த கட்டிடம் ஒரே நேரத்தில் சுமார் 1000 மாணவிகள் பயன்பெறும் வகையில் கட்டப்படுவதாகவும், மேலும், இதுபோன்ற கல்லூரி மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்(பொறுப்பு) இந்திராணி, பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×