search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா"

    சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற நவீன் பட்நாயக், தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 5-வது முறையாக ஆட்சியை பிடித்தது.

    மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 117 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பா.ஜனதா 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

    இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தின் முதல் - மந்திரியாக நவீன் பட்நாயக் இன்று பதவி ஏற்றார். தலைநகர் புவனேஷ்வரில் உள்ள இட்கோ கண்காட்சி மைதானத்தில் நடந்த விழாவில் அவருக்கு கவர்னர் கணேஷிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


    நவீன் பட்நாயக் முதல் முறையாக பொது மைதானத்தில் பதவி ஏற்றார்.

    அவர் இதற்கு முன்பு 2000, 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் முதல் மந்திரியாக பதவி ஏற்று இருந்தார். தற்போது தொடர்ந்து 5-வது முறையாக ஒடிசா முதல் மந்திரியாக பொறுப்பு ஏற்று உள்ளார்.

    இதற்கு முன்பு 4 முறையும் அவர் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்று இருந்தார்.

    பதவி ஏற்பு விழாவில் நவீன்பட்நாயக்கின் சகோதரரும், தொழில் அதிபருமான பிரேம் பட்நாயக், சகோதரியும், பிரபல எழுத்தாளருமான கீதா மேத்தா உள்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏராளமான பி.ஜு ஜனதா தள தொண்டர்களும் திரண்டு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    ஒடிசா மாநிலத்துக்கு தொடர்ந்து 5-வது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்று சாதனை படைத்த நவீன் பட்நாயக்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஒடிசா மாநிலத்துக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
    பாஜகவிற்கு சற்று பின்னடைவாக உள்ள மேற்கு வங்காளம், ஒடிசா, கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கு கூடுதலாக மத்திய மந்திரி பதவிகளை வழங்க பிரதமர் மோடி தீர்மானித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா மட்டும் தனியாக 303 இடங்களில் வென்றிருக்கிறது.

    மேற்குவங்காளம், ஒடிசா போன்ற மாநிலங்களில் பா.ஜனதா கடந்த காலங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. ஆனால் இப்போது அங்கு ஆழமாக காலூன்றி இருக்கிறது.

    மேற்குவங்காளத்தில் 18 எம்.பி. தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அதேபோல ஒடிசாவிலும் 8 இடங்களில் வென்றுள்ளது. அங்கு இதற்கு முன்பு 2-வது இடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் அந்த இரு மாநிலங்களிலும் இன்னும் ஆழமாக காலூன்றி வரும்காலத்தில் மாநில ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பது பா.ஜனதாவின் திட்டமாக உள்ளது.



    அதேபோல கேரள மாநிலத்திலும் பா.ஜனதா வலுவாக காலூன்ற முடியும் என்று நம்புகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு அங்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. ஆனாலும் பல தொகுதிகளில் கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளது.

    எனவே இன்னும் அதிக கவனம் செலுத்தினால் கேரளாவிலும் ஒரு காலத்தில் மிகப்பெரிய கட்சியாக வளர முடியும் என்று பா.ஜனதா நம்புகிறது.

    இதன் காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா, கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கு இந்த தடவை கூடுதல் மத்திய மந்திரிகளை வழங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். தற்போது மேற்குவங்காளத்தை சேர்ந்த பாபுல்சுப்ரியோ, எஸ்.எஸ். அலுவாலியா ஆகியோர் மத்திய மந்திரிகளாக உள்ளனர். இப்போது 18 இடங்களை கைப்பற்றி இருப்பதால் அங்கு கூடுதலாக மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது.

    2021-ல் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. கூடுதல் மத்திய மந்திரிகளை வழங்கி மாநிலத்தில் அதிக கவனம் செலுத்தினால் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று பா.ஜனதா கருதுகிறது.

    ஒடிசாவில் இந்த தடவை பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் சேர்ந்து நடந்தது. இதில் பாராளுமன்ற தேர்தலில் 8 இடங்களை கைப்பற்றி மாநிலத்தின் 2-வது பெரிய சக்தி என்பதை பா.ஜனதா நிரூபித்துள்ளது.

    இனிவரும் காலங்களில் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியும் என்று கருதுகிறது. இதனால் அங்கும் கூடுதல் மந்திரிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

    கேரளாவில் கடந்த 2014 தேர்தலிலும் ஒரு இடமும் பா.ஜனதாவுக்கு கிடைக்கவில்லை. ஆனால் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கன்னன் தானத்தை ராஜஸ்தான் மேல்சபை எம்.பி. ஆக்கி மந்திரி பதவி வழங்கினார். இன்னும் அவருடைய எம்.பி. பதவி காலம் உள்ளது. எனவே அவருக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது.

    இவர் தவிர இன்னும் ஒருவரை மந்திரியாக்கலாம் என்ற திட்டம் பா.ஜனதாவுக்கு உள்ளது. கேரள மாநில பா.ஜனதா தலைவர் முரளிதரன் மகாராஷ்டிர மாநில மேல்சபை எம்.பி.யாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லை என்றால் வேறு ஒரு நபரை மந்திரியாக்கி பின்னர் ஏதாவது ஒரு மாநிலத்தில் மேல்சபை எம்.பி. ஆக்கும் திட்டமும் உள்ளது.

    2021-ல் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மத்திய மந்திரி பதவியை அதிகமாக வழங்கி கூடுதல் கவனம் செலுத்தினால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சில இடங்களை கைப்பற்ற முடியும் என்று கருதுகிறார்கள்.

    கடந்த மந்திரிசபையில் சிவசேனாவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டிருந்தது. இப்போது 2 மந்திரி பதவி வழங்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 2 மந்திரி பதவி வழங்க உள்ளனர்.

    தற்போது உள்ள மந்திரி சபையில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மந்திரியாக உள்ளார். ஆனால் இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக அவரது மகன் ஜிராக் பஸ்வானுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று ராம்விலாஸ் பஸ்வான் கேட்கிறார்.

    ஆனால் ராம்விலாஸ் பஸ்வானே மந்திரி பதவியில் தொடர வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. அசாம் மாநிலத்தில் விரைவில் 2 எம்.பி. இடங்கள் காலியாக உள்ளன. அதில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு ஒரு எம்.பி. பதவியை ராம்விலாஸ் பஸ்வானுக்கு கொடுத்து அதன் மூலம் அவரை மந்திரியாக தொடர வைக்க பா.ஜனதா திட்டமிட்டிருக்கிறது.
    ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மனநோயாளி தனது இரு மனைவிகளை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் தடாகிசோலா கிராமத்தை சேர்ந்தவர் ஷியாமா பட்டி. உறவுக்கார பெண்களான அக்கா தங்கை இருவரையும் திருமணம் செய்துகொண்டு இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த இவர் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு ஷியாமா பட்டி இன்று பிணமாக தொங்கினார். இதைக்கண்ட கிராம மக்கள் சடார் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தனர்.

    விரைந்துவந்த போலீசார் ஷியாமா பட்டியின் பிரேதத்தை தூக்கில் இருந்து இறக்கி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த வேளையில், ஷியாமா பட்டியின் வீட்டினுள் அவரது மனைவிகள் இருவரும் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    அங்கு கிடந்த ரத்தம் தோய்ந்த சுத்தியலை கண்டெடுத்த போலீசார், மனநோயாளி ஷியாமா பட்டி தனது இரு மனைவிகளை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.10 கோடி நிதியை தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளரிடம் வழங்கினார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஒடிசா மாநிலத்தில் பானி புயலால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு ஒடிசா மாநில அரசுக்கும் ஒடிசா மக்களுக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் மக்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 10 கோடி நிவாரண நிதி உதவியை வழங்க 5-5-2019 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டார்.


    அதன்படி இன்று (13-ந் தேதி) ரூ. 10 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம் சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளர் ரஞ்சித்குமார் மொஹந்தியிடம் வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    டெல்லியில் இருந்து புவனேஷ்வர் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    புவனேஷ்வர்:

    தலைநகர் டெல்லியில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் இடையே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் இன்று மதியம் 1 மணியளவில் ஒடிசாவின் பாலாசோர் மற்றும் சோரா ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள காந்தபடா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென ரெயிலின் ஒரு பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது. இதை கவனித்த டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார். 

    உடனடியாக அந்த பெட்டியின் இணைப்பு அகற்றப்பட்டதால் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு தலா ரூ.10 ஆயிரம் முதல் மந்திரி நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று ஐ.ஏ.எஸ். சங்கத்தினர் அறிவித்துள்ளனர். #CycloneFani
    புவனேஷ்வர்:

    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதியை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு அம்மாநில ஐஏஎஸ்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் முதல் மந்திரி நிவாரண நிதியில் அளிக்க உள்ளோம் என ஐ.ஏ.எஸ். சங்கத்தினர் அறிவித்துள்ளனர். #CycloneFani
    ஒடிசா மாநிலத்தை அசுர வேகத்தில் தாக்கி துவம்சம் செய்த பானி புயலின் தாக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. #Fanitoll #CycloneFani
    புவனேஸ்வர்: 

    வங்கக் கடலில் உருவான பானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது.  அப்போது 175 முதல் 230 கி.மீ. வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தது.

    ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை பானி புயல் புரட்டிப்போட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது.  வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

    இதற்கிடையே, பானி புயலின் தாக்கத்துக்கு 29 பேர் உயிரிழந்ததாக ஒடிசா மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

    இந்நிலையில், பானி புயல் தாக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 41 ஆக அதிகரித்துள்ளது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும். அடுத்த 3 தினங்களுக்குள் நிவாரண பொருள்களை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Fanitoll #CycloneFani
    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். #CycloneFani #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதியை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு கேரளா அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அளிக்கப்படும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். #CycloneFani #PinarayiVijayan
    ஒடிசா மாநிலம் கோராபுட் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பெண்கள் உள்பட 5 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #Maoistskilled
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள பதுவா பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்த மாவோயிஸ்ட்கள் அதிரடி படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிரடி படையினரும் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பெண்கள் உள்பட 5 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ஏற்கனவே, சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடாவில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Maoistskilled
    ஒடிசா மாநிலத்தின் புரியில் பானி புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று பார்வையிட்டார். #CycloneFani
    புவனேஷ்வர்:

    வங்கக் கடலில் உருவான பானி புயல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. அப்போது வீசிய பலத்த காற்றால் மாநிலம் முழுவதும் மரங்கள், மின் கம்பங்கள் கீழே விழுந்தன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பானி புயலால் பாதிப்பு அடைந்த ஒடிசா மாநிலத்துக்கு பல்வேறு மாநிலங்கள் நிடி அளித்து வருகின்றன.



    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரியில் பானி புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று பார்வையிட்டார்.

    இன்று ஒடிசாவின் புரி நகருக்கு வந்த மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான். புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். #CycloneFani
    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 25 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது. #CycloneFani #AdaniGroup
    புவனேஷ்வர்:

    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதியை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 25 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது.



    அதானி குழுமம் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பல்வேறு சுரங்க பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #CycloneFani #AdaniGroup
    பானி புயல் நாளை காலை அதிதீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா நோக்கி நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #FaniStorm
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள ‘பானி’ புயல் அதிதீவிர புயலாக இன்று காலையில் வலுப்பெற்றது.

    சென்னையில் இருந்து சுமார் 650 கி.மீ. தொலைவிலும் மசூதிப்பட்டினத்தில் இருந்து சுமார் 750 கி.மீ. தொலைவிலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

    இந்த புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்கிறது. பானி புயல் 1-ந்தேதி காலை அதிதீவிர புயலாக வலுப்பெறுகிறது. ஒடிசா நோக்கி நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இதன் காரணமாக சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிலை அதிகாரி கூறியதாவது:

    பானி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்கிறது. இதனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்று 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். கடலுக்கு சென்றவர்கள் உடனடியாக கரை திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #FaniStorm
    ×